ஷிவானி ராஜசேகர்..
பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் இதோ..
ஷிவானி ராஜசேகர்..
பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் இதோ..
நடிகை பூமிகா..
நடிகை பூமிகா, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த பிரபலம். சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம், பத்ரி படங்கள் மூலம் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார்.
தமிழ் மட்டுமில்லாது போஜ்புரி, பஞ்சாபி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் 24 வருடங்களாக நடித்து வருகிறார். நாயகியாக நடித்து அசத்தி வந்தவர் இப்போது அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் திரைப்படத்தில் அவரின் அக்காவாக நடித்திருந்தார். இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, சிறு வயதில் தனக்கு நடந்த கேலி மற்றும் கிண்டல் குறித்து பேசி உள்ளார்.
அதில், என் உதடுகள் பெரியதாக இருந்ததால் சிறுவயதில் என்னை பலர் கேலி, கிண்டல் செய்தார்கள். இதனால் மன வேதனை அடைந்து பல நாட்கள் அழுது இருக்கிறேன், ஆனால், இப்போது அந்த பெரிய உதடுகள் தான் என்னுடைய அடையாளமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
சோபிதா துளிபாலா..
தமிழில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் வானதி என்ற ரோலில் நடித்து இருந்தவர் சோபிதா துளிபாலா. இந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நாக சைதன்யாவுக்கு சோபிதா இரண்டாவது மனைவி. முதலில் இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின் பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சோபிதா சில வித்தியசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ,
இந்துஜா ரவிச்சந்திரன்..
மேயாத மான் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் இந்துஜா ரவிச்சந்திரன். அந்த படத்தில் வைபவ்வுக்கு தங்கையாக நடித்திருந்த அவர் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த தங்கச்சி பாடல் மாஸ் ஹிட் ஆனது.
அதன் பிறகு இந்துஜா மெர்க்குரி, மகாமுனி மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இப்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இவர் தான் நடித்த படங்கள் அனைத்திலும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாகக் கொடுத்த ஒரு நடிகையாக அறியப்படுகிறார்.
ஆனாலும் அவருக்கு இன்னும் வெற்றி கிடைத்து முன்னணி நடிகையாக முடியவில்லை. சமீபத்தில் தனுஷோடு அவர் நடித்த நானே வருவேன் திரைப்படத்தில் கூட அவருக்கு மிகப்பெரிய கேரக்டர் கிடைக்கவில்லை. ஆனாலும் வெற்றிக்காக காத்திருக்ககிறார் அவர்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும், இப்போது வெளியிட்டுள்ள லேட்டஸ் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
ஆண்ட்ரியா..
நடிகை ஆண்ட்ரியாவுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
அவர் நடிப்பது மட்டுமின்றி பாடல்கள் பாடியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கும் அவர் தற்போது கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.
லாஸ்லியா..
பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா.
அவர் தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
சேலையில் ஹாட் போஸ் கொடுத்த ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ராஷி கண்ணா..
சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.
வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.
ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன
தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.
தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன. இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
ரித்து வர்மா..
தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆன ரீத்து வர்மாவை தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பின்னர்தான் அவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானார்.
அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தில் ஒரு கான் வுமனாக ரீத்து நடித்திருந்தார். அவரின் இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியவில்லை.
அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.
தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.
பூஜா ஹெக்டே..
சினிமாவில் ‘முகமூடி’ என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளார்.
தற்போது, இவர் தளபதி 69 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில், அவருடைய படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அவரே அறிவித்திருந்தார்.
தற்போது, பூஜா பட விழாவுக்கு ரெட் நிற உடையில் வந்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ,
நடிகை ஸ்ரீலீலா..
சில நடிகைகள் படங்கள் நடித்து பிரபலமாவார்கள், ஆனால் ஒரு சிலர் தான் நடனம் மூலம் பிரபலமாவார்கள் அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஸ்ரீலீலா.
இவர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பார்.
இந்த படத்தில் இவரது நடனம் பலரால் பாராட்டப்பட்டது. தற்போது, இவர் ட்ரெண்டியான உடையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ,