விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். காவியா அறிவுமணி மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோவையும் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார். குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார். பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.
தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் “நான் நான்கு மாதங்களுக்கு முன்னால் அழுதேன். நான் எல்லோர் முன்னாலும் அழமாட்டேன். தனியாக ரூமுக்கு சென்று அழுதுவிடுவேன். என் அம்மா முன்னால் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் நான் எப்போதுமே தனிமையில் இருக்கும்போதுதான் அழுவேன்” எனக் கூறியுள்ளார்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.
முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.
அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது முன்னழகை காட்டி புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.
குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். ஒருசில படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் நபரானா லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார்.
ரம்யா பாண்டியனின் கணவர் யோகா மாஸ்டர் என்பது அனைவருக்கும் தெரியும்தான். தொடக்கத்தில் யோகா கிளாஸுக்கு சென்ற ரம்யா பாண்டியனுக்கும் தவானுக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது வாழ்த்துக்களையும் பெற்றார். தற்போது கணவருடன் பாங்காக்கில் இருக்கும் ரம்யா பாண்டியன், ஜிம் ஒர்க்கவுட் செய்து எடுத்த மிரர் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.