பிக்பாஸ் நிகழ்ச்சி பல போட்டியாளர்களின் வாழ்க்கையில் புது மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், ஆரம்பத்தில் இருந்ததைவிட ஆடை, அணிகலன் விஷயத்தில் சற்று வேறுபட்டு மாறிவிடுவார்கள்.
அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார் ஜூலி.
நிகழ்ச்சியில் சில விஷயங்களால் மக்கள் வெறுப்பை சம்பாதித்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பல இடங்களில் அவமதிக்கப்பட்டார். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத ஜூலி, மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.
இதன்பின் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய ஜூலி, டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் சிடெடல் என்ற வெப் தொடரில் நடித்து பிரபலமாகி வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு படங்களில் சமீபகாலமாக நடித்து வந்த நடிகை சமந்தாவிற்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தான் வெளியானது.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், படமும் ஹிட் கொடுக்கல, வாய்ப்பும் வரல ஆனா, தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பு இன்னும் கிடைப்பதாக பெருமையாக இருக்கிறது. சீக்கிரமே தமிழில் நடிக்கிறேன் என்று கூறியிருந்தார் சமந்தா.
இந்நிலையில் பாலிவுட்டில் Grazia Fashion Awards 2025 என்ற விருதினை வாங்கியிருக்கிறார் நடிகை சமந்தா. அந்த விருதுவிழாவில் கருப்பு நிற கவர்ச்சியாடை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்கு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.
முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார்.
அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.
இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது தொப்புளில் ஸ்டட் அணிந்து இடையழகை மறைக்காத மினி டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.
தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன.
எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா
சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் . அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது.
தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.
தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.
பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் “நான் நான்கு மாதங்களுக்கு முன்னால் அழுதேன். நான் எல்லோர் முன்னாலும் அழமாட்டேன். தனியாக ரூமுக்கு சென்று அழுதுவிடுவேன். என் அம்மா முன்னால் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் நான் எப்போதுமே தனிமையில் இருக்கும்போதுதான் அழுவேன்” எனக் கூறியுள்ளார்.
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். இவர் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த சீரியல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுமட்டுமின்றி வேற மாறி ஆபிஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார். தற்போது சில கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஜனனி.
தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங்.இந்த திரைப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமாவில் அறிமுகமான ஒரு குத்துச் சண்டை வீராங்கனையாக கூடுதல் கவனம் பெற்றார் ரித்திகா.
ரித்திகா சிங் நிஜத்தில் குத்துசண்டை வீராங்கனை ஆவார்.இவர் தனது முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதனால் அந்த படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக காட்சியளித்தன. அந்த படத்துக்காக அவர் தேசிய விருதும் பெற்றார். ஸ்பெஷல் ஜூரி பிரிவில் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
ஹிந்தியில் 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரித்திகா சிங் .இவர் 2009 ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளிலும் மற்றும் 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார்.பின்னர்இவர் சூப்பர் ஃபைட் லீகில் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் நடித்த சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தை பார்த்து இயக்குனர் கொங்கரா இவரை இறுதிச்சுற்று படத்தில் நடிக்க வைத்தார்.இவரின் நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவரது பெயர் இடம்பெற்றது. பின்னர் இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற சில படங்களில் நடித்தார்.பின்னர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஓ மை கடவுளே படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையடுத்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றன. அதைப் போல இப்போது அவர் வெளியிட்டுள்ள வொர்க் அவுட் வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஜிம் ஃப்ரீக் ஆன இவர் அடிக்கடி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
திறமையான வேடங்களை ஏற்று நடித்தும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கிளா மர் போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்குகிறார். ஆனால் இப்போது அவர் உடல் எடை எக்கச்சக்கமாக எகிறிக் கொண்டே போகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஆளே அடையாளம் தெரியாத வகையில் இருப்பதாக பலரும் கமண்ட் செய்து வருகின்றனர்.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.
வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.
தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.
தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.
சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.