தளபதி விஜய் குறித்து ராஷ்மிகா மந்தனா கூறிய ஒரே ஒரு வார்த்தை! அ திர்ச்சியில் ரசிகர்கள் !!

ராஷ்மிகா……..

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவரது படம் வெளியாகும்போதும் அவரது பிறந்த நாளின் போதும் சமூக வலைதளம் ஸ்தம்பிக்கும் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி தினமும் சமூக வலைதளங்களில் தளபதி விஜய் குறித்த செய்திகள் வெளியாகாத நாளே இல்லை என்றும் கூறலாம்

இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகிலும் பலர் தளபதி விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர் என்பதும் அவ்வப்போது அளிக்கும் பேட்டிகளில் விஜய் உடன் பணிபுரிந்த அனுபவம் மற்றும் விஜய் எளிமை, நடிப்பு, நடனத்திறமை ஆகியவை குறித்தும் பேசி வருவார்கள் என்பதும் தெரிந்தது

அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தற்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகிறார்.

அப்போது ரசிகர் ஒருவர் ’தளபதி விஜய் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறுங்கள்’ என்று கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா மந்தனா ’தளபதி’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதில் தற்போது வைரலாகி வருகிறது

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன

அடுத்த படம் குறித்து செல்வராகவனின் முக்கிய தகவல்!!

செல்வராகவன்…………

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் இயக்காத நிலையில் தற்போது அடுத்தடுத்து தனது படங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

ஏற்கனவே ’சாணிக்காகிதம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் செல்வராகவன் தொடர்ச்சியாக இரண்டு படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார் என்பதும் அந்த இரண்டு படங்களிலும் தனுஷ் தான் நாயகன் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தனுஷ் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்கும் படத்தை செல்வராகவன் முதலில் இயக்க இருப்பதாகவும் இது செல்வராகவன் இயக்கும் 12வது படம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் ஆரம்பமாகிவிட்டது என செல்வராகவன் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் பணிகளும் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. செல்வராகவனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

 

நான் லேடி விஜய்சேதுபதியாக விரும்புகிறேன்: பிரபல நடிகை பேட்டி!

நிவேதா…..

தினேஷ் நடித்த ’ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’பொதுவாக என் மனசு தங்கம்’ ஜெயம் ரவி நடித்த ’டிக் டிக் டிக்’ விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ பிரபுதேவா நடித்த ’பொன்மாணிக்கவேல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தமிழில் பார்த்து ’ஜெகஜால கில்லாடி’ உள்பட ஒருசில படங்களிலும் தெலுங்கில் ’ரெட்’ உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் அவர் தனது திரையுலக பயணம் பற்றி நிவேதா பெத்துராஜ் கூறுகையில் ’நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதாகவும், கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக தற்போது கடினமான முகத்தை வைத்துக்கொண்டு போலீஸ் கேரக்டரில் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் முதலில் கஷ்டப்பட்டாலும் பின்னர் தனக்கு பழகி விட்டதாகவும் அவர் கூறினார்

இந்த நிலையில் ஒரே விதமான கேரக்டரில் நடிக்காமல் அனைத்துவித கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் குறிப்பாக விஜய் சேதுபதி வில்லன் உள்பட அனைத்து விதமான கேரக்டர்களில் நடிப்பது போல் நான் ’லேடி விஜய்சேதுபதி’ போல வித்தியாசமான அனைத்து கேரக்டர்களிலும் நடிக்க வேண்டுமென விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

ஒரு நடிகரால் அனைத்து விதமான கேரக்டரில் நடிக்கும்போது ஒரு நடிகையாலும் ஏன் அனைத்து விதமான கேரக்டரிலும் நடிக்க முடியாது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். நிவேதா பெத்துராஜ் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது

பிக்பாஸ் வீட்டில் மறைக்கப்பட்ட உண்மைகள்: அனிதாவின் அ திர்ச்சி தகவல்கள்!!

அனிதா………..

 

பிக்பாஸ் வீட்டில் தான் பேசிய முக்கிய தகவல்கள் ஒளிபரப்பாகவில்லை என்று ஏற்கனவே கஸ்தூரி உள்பட ஒருசில போட்டியாளர்கள் கு.ற்.ற.ஞ்.சாட்டி உள்ளனர். இந்த நிலையில் தற்போது அ னிதாவும் அதே கு.ற்.ற.ச்.சா.ட்டை தனது சமூக வ லை த் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனிதா கூறியபோது ’நான் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு டாப்பிக் குறித்து பேசினேன். ஆனால் அது எதுவுமே டெலிகாஸ்ட் ஆ க வில்லை. மற்ற போட்டியாளர்களுடன் நான் பேசிய மு க் கிய நிகழ்வுகளும் ஒளிபரப்பாகவில்லை.

திங்கட்கிழமை பெ ண் க ள் மற்றும் கு ழ ந் தைகளு க்கு எ தி ரான பா.லி.ய.ல் வ.ன்.கொ.டுமை பற் றி யு ம், செவ்வாய்க்கிழமை மா.ற்.று.த்.தி.ற.னா.ளி.களின் தரம் உ.ய.ர்.வது பற்றியும், புதன்கிழமை பி.ச்.சை.க்.கா.ர.ர் இ ல் லா த மா நி ல மாக மா ற் றுவது குறித்தும், வியாழக்கிழமை வி வ சா யம் மற்றும் விவசாயிகள் குறித்தும், வெள்ளிக்கிழமை வி த வை க ளின் ம று மண ம் குறித்தும் நான் பேசினேன். ஆனால் இவை எதுவுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒ ளி ப ர ப்பா க வில்லை.

இருப்பினும் விரைவில் நான் சமூகவலைதளங்கள் மூலம் இது குறித்து பேச விரும்புகிறேன். இதற்காக எனக்கு உ த வி க்கு சில நபர்களும் தே வை ப் ப டுகிறார்கள். என்னுடன் க ல ந்து  கொ ள் ள வி ரு ப் பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வரும் பிப்ரவரியில் இருந்து இதை நாம் தொடங்குவோம் என்று அனிதா ச ம் ப த் கூ றி யு ள்ளார்.

அனிதாவின் இந்த சமூக வலைதள பதிவுக்கு வா ழ் த் துக்களும் பா ரா ட் டுக்களும் கு வி ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரனை அடுத்து பொங்கல் விருந்தில் இணையும் தனுஷ் படம்!

ஜகமே தந்திரம்…….

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ம் தேதியும், சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதியும் பொங்கல் விருந்தாக வெளிவர உள்ளது என்பதும் இந்த இரு படங்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளன என்பதும் தெரிந்ததே.

ha

இந்த நிலையில் நேற்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் கூட வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த இரு படங்களின் வசூல் சாதனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் மற்றும் சிம்புவின் ’ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களை எடுத்து பொங்கல் விருந்தாக தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் படத்தின் டீஸர் ஒன்றும் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தின் டீசர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள முக்கிய ஸ்டூடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும், இந்த டீசர் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டில் இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தனுஷின் ’ஜகமே தந்திரம்’ ட்ரெய்லர் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது தனுஷின் இன்னொரு படத்தின் டீசரும் வெளியாவது அவரது ரசிகர்களூக்கு இரட்டை பொங்கல் விருந்தாக இருக்கும் குறிப்பிடத்தக்கது.

மோகன் ராஜா படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் நயன்தாரா?

நயன்தாரா…

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக உள்ள ரீமேக் படத்தில், பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

இதன் ரீமேக் உரிமையை ராம் சரண் கைப்பற்றியுள்ளார். இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளார். இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கதைப்படி அது ஒரு பெண் அரசியல்வாதி கதாபாத்திரம்.

இந்தக் கூட்டணி உறுதியானால், சிரஞ்சீவியும் நயன்தாராவும் இணையும் இரண்டாவது படமாக இது அமையும். அவர்கள் இருவரும் ஏற்கனவே சைரா படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அதேபோல் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஏற்கனவே தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கமலை தொடர்ந்து வாரிசு நடிகரின் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

லோகேஷ் கனகராஜ்…

கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ், அதன்பின் வாரிசு நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம்.

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். பின்னர் அவர் இயக்கிய கைதி படம், மாபெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் லோகேஷ் கனகராஜ்.

கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இந்த படம் பொங்கலையொட்டி வருகிற ஜனவரி 13-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு பிற மொழி படங்களை இயக்கவும் அழைப்பு வருகிறதாம். அதன்படி மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரணை வைத்து படம் இயக்க லோகேஷ் கனகராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்ப்பிணி கோலத்தில் ஒரு புகைப்படம்! அதிகம் லைக் செய்யப்பட்ட போட்டோ!

அனுஷ்கா ஷர்மா…

கிரிக்கெட் துறையில் கேப்டனாக பல சாதனைகள் செய்து வந்த விராட் கோலி, பாலிவுட் சினிமா நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டது உலகம் அறிந்ததே.

அவர்கள் இருவரும் தங்கள் முதல் குழந்தையை தற்காலத்தில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அனுஷ்கா தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படம் மூலம் ரசிகர்களுக்கு ஏற்கனவே பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதுவே அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக இருந்தது. இந்நிலையில் விராட் கோலி வரவிருக்கும் இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிக்கு இடைவெளி விட்டு பிரசவ கால விடுப்பு எடுத்து தன் மனைவியை நன்கு கவனித்து வருகிறார்.

இதற்கிடையில் அனுஷ்கா ஷர்மா ஆங்கில இதழுக்கு முன்பக்க அட்டை படத்தின் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

மீண்டும் இணையும் ரவுடி பேபி காம்போ!

தனுஷ்…

தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ரவுடி பேபி பாடல் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் நடின இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல அனுபவங்களைக் கொண்டவர் பிரபு தேவா.

பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது வரை 26 கோடி ரசிகர்களை சென்று அடைந்து இருக்கிறது.

மேலும் இணையத்தில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தப் பாடல் என்ற அடையாளத்தையும் இது பெற்று தந்திருக்கிறது. இந்தப் பாடலில் நடிகர் தனுஷ் – நடிகை சாய்பல்லவி ஆகிய இரண்டு பேரும் சிறந்த நடனத்தை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் பிரபுதேவாவுடன் அரட்டை அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரவுடி பேபி காம்போ மறுபடியும் உருவாக போகிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல நடிகருக்கு ஜோடியாகின்றாரா ஜனனி?

ஜனனி…

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

பரத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காளிதாஸ் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 8, நடுவண், ராதே, 6 ஹவர்ஸ், ஷணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் இந்தி மற்றும் மலையாள படங்களும் அடங்கும். அடுத்து முழுநீள காதல் படமாக உருவாகும் யாக்கை திரி படத்தில் நடிக்கிறார்.

பரத் மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பரத் மற்றும் ஜனனி ஐயர் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.

சோனாக்‌சி சிங் ராவட் என்ற பாலிவுட் நடிகையும் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மீரகி புரடக்‌ஷன் சார்பில் சபரீஷ் குமார் தயாரிக்கிறார். உணர்ச்சிப்பூர்வமிக்க கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகிறது.

மேலும் பகவதி பெருமாள், நிரஞ்சனி, பிரதாப் போத்தன், பாண்டியராஜன், சுதா சந்திரன், கு.ஞானசம்பந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பல்லு ஒளிப்பதிவு செய்ய அரோல் கரோலி இசையமைக்கிறார். இயக்குனர் பரத் மோகன் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற இக்லூ படத்தை இயக்கியவர்.