வீட்டிலேயே மகளோட திருமணத்தை நடத்திய நடிகர்!!

நடிகர் ரமேஷ் அராவிந்த்……….

நடிகர் ரமேஷ் அராவிந்த் தனது மகளின் திருமணத்தை வீட்டிலேயே நடத்தி அனைவரது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.

மனதில் உருதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ் அரவிந்த். உன்னால் முடியும் தம்பி, பெண்மணி அவள் கண்மணி, கேளடி கண்மணி, சதிலீலாவதி, பாட்டு வாத்தியார், கண்டேன் சீதையை, அவ்வை சண்முகி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகரோடு மட்டுமல்லாமல், பல படங்களை இயக்கவும் செய்துள்ளார். கமல் ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தின் மூலம் தமிழில் தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்து கொண்டுள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களை இயக்கியுள்ளார்.

இப்படி தன்னை ஒரு ஜாம்பவான காட்டிய ரமேஷ் அரவிந்த் தனது மகளின் திருமணத்தை ஒரு வார நிகழ்வாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். முதலில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக மிகவும் எளிமையாக நடத்தியுள்ளார். ஆனால், அதனையே ஒரு வார விழாவாக நடத்தி முடித்துள்ளார்.

ரமேஷ் அரவிந்தின் மகளும், தயாரிப்பு மேலாளருமான நிஹாரிகா, டிஜிட்டல் வடிவமைப்பாளர் அக்‌ஷய் என்பவரை கரம் பிடித்துள்ளார். நிஹாரிகா – அக்‌ஷய் திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை ரமேஷ் அரவிந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கடைசில என்னையும் நடிக்க வச்சிட்டாரு: மாஸ்டர் விஜய் குறித்து இயக்குநர் ஓபன் டாக்!

மாஸ்டர்………

மாஸ்டர் படத்தில் விஜய் இயக்கத்தில் நடித்தது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். கார்த்தியின் கைதி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சூப்பர் படம் மாஸ்டர். தளபதி விஜய்யின் 64ஆவது படம்.

இந்தப் படத்தில், விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, பிரிகிதா, கௌரி கிஷான், நாசர், சஞ்சீவ், சாந்தணு என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழைத் தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளதாகவும், அவரது காட்சிகளை விஜய் இயக்கியுள்ளதாகவும் தகவல் வந்தது. தற்போது இது குறித்து, லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.
நீ எல்லோரையும் நடிக்க வைத்து டார்ச்சர் பண்ணுற, நீயும் ஒரு சீன்ல நடிக்கணும் என்று சொன்னார்.

அவர் சும்மாதான் சொல்லுறாரு, அப்புறம் மறந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், கடைசி நாள் ஷூட்டிங் வரை அவர் அதனை மறக்கவில்லை. சரி, நான் நடிக்க வேண்டுமென்றால், நீங்கதான் டைரக்ட் பண்ண வேண்டும் என்று சொன்னேன்.
அப்படி சொன்னா விட்டுவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், டைரக்ட் பண்ணுவதற்கு அவர் ஓகே சொல்லிவிட்டார். அப்புறம் என்ன, விஜய் தான் ரெடி ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் என்று சொன்னார். நான் நடித்தேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு-நயன்தாரா?

சிம்பு மற்றும் நயன்தாரா…………..

சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டில் சிம்பு நடித்து இயக்கிய ’வல்லவன்’ திரைப்படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து 2016ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய ’இது நம்ம ஆளு’ என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.

இந்த நிலையில் ‘கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’, உள்பட ஒருசில படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு, நயன் தாரா மூன்றாவது முறையாக இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிறந்த நாளில் ப்ரியா பவானிசங்கருக்கு அடித்த ஜாக்பாட்!!

பிரியா பவானி சங்கர்………

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சமீபத்தில் அவர் சிம்புவின் ’பத்துதல’ படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’ருத்ரன்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ’ருத்ரன்’ என்று சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர் தான் என இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் அவரது பிறந்த நாளில் கிடைத்த ஜாக்பாட் ஆகவே கருதப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்த உடன் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பு வெளிவரும் போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிக்கும் அடுத்த படமான ’ருத்ரன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எ தி ர் பார் ப்பு இருப்பதால் இந்தப்படமும் சூப்பர் ஹிட்டாகும் என்று எ தி ர் பா ர் க்கப்படுகிறது

லீக் ஆன ‘வலிமை’ ஸ்டில்: அஜித்தின் அம்மா வேடத்தில் இவரா?

வலிமை..

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கடந்த ஒரு வருடமாக எந்தவித அப்டேட்டும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் அஜித்தின் மேனேஜர் தக்க சமயத்தில் ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்து இருந்தார். இதனை அடுத்து வரும் புத்தாண்டு தினத்திலாவது ‘வலிமை’ படத்தின் அப்டேட் வரும் என்ற எதிர்பார்ப்பில் அஜித் ரசிகர்கள் உள்ளனர்

இந்த நிலையில் நேற்று இரவு முதல் திடீரென ‘வலிமை’ படத்தின் புதிய ஸ்டில் ஒன்று வைரலாகி வருகிறது. சற்று மங்கலாக இருந்தாலும் இந்த புகைப்படத்த்தில் அஜித்துடன் ‘வலிமை’படத்தில் நடித்த சில நட்சத்திரங்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இந்த படம் அம்மா சென்டிமென்ட் கதையம்சம் கொண்டது என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த புகைப்படத்தில் அஜீத்தின் அம்மாவாக நடித்து இருப்பது பழம்பெரும் நடிகை சுமித்ரா என்று தெரியவந்துள்ளது.

’பணக்காரன்’ திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும், ‘சிங்காரவேலன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாகவும் நடித்தவர் சுமித்ரா என்பதும் தற்போது அவர் தல அஜீத்துக்கும் அம்மாவாக ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

திரௌபதி இயக்குனர் படத்தில் நாயகியாக நடிக்கும் சின்னத்திரை பிரபலம்!

தர்ஷா குப்தா…

‘பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரௌபதி’ படங்களை இயக்கிய மோகன்ஜி இயக்கும் அடுத்த படத்தில் பிரபல சின்னத்திரை பிரபலம் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

‘பழைய வண்ணாரப்பேட்டை, ‘திரௌபதி’ படங்களின் இயக்குனர் மோகன்ஜி அடுத்து ‘ருத்ரதாண்டவம்’ படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார், இப்போது நாயகியாக தர்ஷா குப்தா இணைந்துள்ளார்.

பிரபல மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பர படங்களிலும், குக் வித் கோமாளியில் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் தர்ஷா குப்தாவிற்கு நாயகி வாய்ப்பு தேடி வந்துள்ளது.

இதுகுறித்து தர்ஷா குப்தா கூறும்போது, ‘ருத்ரதாண்டவம் படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன. திரௌபதி பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த மோகன் ஜியின் அடுத்த ருத்ரதாண்டவம் படத்திற்கு, இப்போதே கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மோகன்ஜி படத்தில் நடிப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை தருகிறது. இந்தப்படமும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இருக்கும். என் சினிமா கேரியரில் முதல் படமே தமிழ் சினிமாவின் கவனிக்கப்பட்ட படைப்பை கொடுத்த, மோகன் ஜியுடன் என்பதை நினைக்கவே நான் சந்தோஷம் கொள்கிறேன்’ என்றார்.

மாஸ் லுக்கில் விக்ரம் பிரபு…. வைரலாகும் ‘புலிக்குத்தி பாண்டி’ பர்ஸ்ட் லுக்!

புலிக்குத்தி பாண்டி…

முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்துள்ள புலிக்குத்தி பாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கிய முத்தையா, அடுத்ததாக இயக்கி உள்ள படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வந்தது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படத்துக்கு ‘புலிக்குத்தி பாண்டி’ என பெயரிட்டுள்ளனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதுவரை பார்த்திராத புதுவித கெட்டப்பில் விக்ரம் பிரபுவின் தோற்றம் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி : தந்தை மறைவு பற்றி அனிதா உருக்கம்!

அனிதா…

செய்திவாசிப்பாளரான அனிதா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். தனித்து விளையாடி 80 நாட்களுக்கு மேல் போட்டியில் தாக்குபிடித்து கடந்தவாரம் வெளியேறினார். வெளியே வந்த இரண்டொரு தினங்களில் அவரின் தந்தையும், எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் இறந்துவிட்டார்.

சீரடி சென்ற இடத்தில் அவருக்கு இப்படியொரு நிகழ்வு நேர்ந்தது. ரயில் மூலம் சென்னை வந்த அவரின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர். பிக்பாஸ் போட்டியில் சக போட்டியாளர்களாக இருந்த ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ச்சனா, நிஷா ஆகியோர் அனிதாவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

முன்னதாக நேற்றுமுன்தினம் தனது தந்தையின் உடலை பார்த்து அனிதா கதறிய வீடியோ பார்ப்போரை கண்கலங்க செய்தது. ”நான் தான் உன்னை கூட்டிப்போறேன்னு சொன்னேன்ல, ஏன் என்கிட்ட சொல்லாம போன, சொல்லியிருந்தால் விமானத்தில் கூட டிக்கெட் போட்டு உன்னை சீரடிக்கு அனுப்பி வச்சுருப்பேன்ல…” என கதறினார்.

அவரை கணவர் பிரபா உள்ளிட்ட குடும்பத்தார் சமாதானம் செய்தனர். சம்பத்தின் இறுதிச்சடங்கு நேற்றுமுன்தினம் நடந்தது. இந்நிலையில் தந்தை, தாய் உடன் எடுத்த செல்பி போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ”அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன்.

பிக்பாஸ் தனிமைப்படுத்தலுக்கு போகும்போது எடுத்தது. அப்பானா எனக்கு உயிரு. எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன். எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி. ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன். உன்ன வழியிலயே மருத்துவமனை கூட்டிட்டு போய் இருப்பேன்.

நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப. அப்பா மன்னிச்சிடு. என்னால உன்ன காப்பாத்த முடியல, வாழ்நாள் முழுவதும் இந்த குற்ற உணர்ச்சி என்ன விட்டு போகாது. எங்க போன ராசா…!” என அனிதா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்த வாரம் வெளியேறுபவர் யார் தெரியுமா? இந்த பெண் போட்டியாளரா? ஷாக்கான ரசிகர்கள்!!

பிக்பாஸ்……….

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும் பொழுது மக்களின் எண்ண ஓட்டத்தை நான் சரியாக கணித்திருந்தால் இந்த வாரம் சோம் மற்றும் ஷிவானி ஆரம்பத்திலேயே காப்பாற்றப்படுவார்கள். ரம்யா போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்” என்று கூறியுள்ளார்.

இதை பார்த்த ரம்யாவின் ரசிகர்கள் ஷா க் காகி உள்ளனர். மேலும் அவர் கூறும் பொழுது “பிக்பாஸை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தான் இது. மற்றவர்களுக்கு இது புரியாது.

நேற்றைய தின நிகழ்ச்சியை முதல் 30 நிமிடங்களை நீங்கள் பார்க்கவில்லை என்றால் தயவு செய்து திரும்ப மறுஒளிபரப்பில் பாருங்கள். அதுவும் முக்கியமாக18 வயதுக்கு மேலான இளம்பெண்கள்” என்று கூறியுள்ளார்.

அருண் விஜயின் சினம் படம் குறித்த ருசிகர தகவல் !

அருண் விஜயின் சினம்……

அருண் விஜயின் சினம் படத்தின் புத்தம் புதிய போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தை GNR குமரவேலன் இயக்கியுள்ளார் Movie Slides Pvt ltd சார்பில் R.விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

2021 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் உலகளவில் படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், முன்னதாக உலகம் முழுக்க பல்வேறு திரைப்பட விழாக்களில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் சிறப்பு பதிப்பை படத்தொகுப்பு செய்து வரும் குழு தீவிரமாக தயாரித்து வருகிறது.

இது குறித்து நடிகர் அருண் விஜய் கூறியதாவது…
“சினம்” படத்தின் கரு உலகளவில் அனைத்து ரசிகர்களையும் கவரும் தன்மை கொண்டது. அதனால் உலக ரசிகர்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட நினைத்தோம். படத்தில் ஆக்‌சனும், உணர்வுகளும் சரிபாதியாக கலந்திருக்கும். அது ரசிகர்களை படமுழுக்க பரபரவென வைத்திருக்குமென நான் நம்புகிறேன். இப்படத்தை 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

நடிகர் அருண்விஜய் ஏற்கனவே இயக்குநர் நவீன் இயக்கத்தில் “அக்னி சிறகுகள்” படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். மேலும் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் AV31 படமும் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கு பிறகு உடனடியாக இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

அருண் விஜய் இப்படத்தில் பாரி வெங்கட் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். பாலக் லால்வானி அவரது மனைவியாகவும் தேஷினி அவர்களது மகளாகவும் நடிக்கிறார்கள். சபீர் இப்படத்திற்கு இசையமைக்க சில்வா சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.