அரசியல் கட்சி தொடங்க போவதில்லை, கதம்! கதம்!! – ரஜினிகாந்த் அதிகாரபூர்வ அறிவிப்பு!

ரஜினிகாந்த்…

அ ர சியல் க ட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்ததால் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் டிசம்பர் 30ஆம் தேதியன்று கட்சி தொடங்கும் நாள் அறிவிக்கப்படும் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், அதன்பின் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றார்.

தினமும் படப்பிடிப்பில் கொரோனா பரிசோதிக்கபட்ட பிறகே அனைவரும் படப்பிடிப்பிற்கு அனுமதிக்கப்பட, திடீரென 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்திய படக்குழுவினர், ரஜினியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொரோனா தொற்று பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருந்தாலும், ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூன்று நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய ரஜினிகாந்த், நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் “உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

உடற்பயிற்சியின் போது மாரடைப்பு: விஜய்யின் மாஸ்டர் பட நடிகர் மரணம்!

அருண் அலெக்சாண்டர்…

டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளார்.

சினிமா துறைக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக, சினிமா தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருந்தாலும், சினிமா பிரபலங்களின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இயக்குநரும், நடிகருமான விசு, நடிகர் சேது, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வடிவேலு பாலாஜி, சின்னத்திரை நடிகை சித்ரா, சுசாந்த் சிங் ராஜ்புத், இர்பான் கான், நடிகர் பெரைரா, தவசி என்று பல பிரபலங்கள் மரணம் அடைந்தது சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளார். உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 48. கடந்த 10 ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில், கைதி, கோலமாவு கோகிலா, ஜடா, மாநகரம், பிகில் என்று பல படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் அலெக்சாண்டர் மறைவு பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் மாஸ்டர் பட ரிலீஸிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்- கடும் சோகத்தில் ரசிகர்கள்!

மாஸ்டர்…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் எப்போதோ தயாராகி விட்டது.

படத்தின் ரிலீஸ் வரும் ஜனவரி 13ம் தேதி என படக்குழுவே நேற்று அதிகாரப்பூர்வமாக போஸ்டர்களுடன் அறிவித்துள்ளனர்.

ரசிகர்கள் இப்போதே அந்த நாளுக்காக ஆவலாக எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த நேரத்தில் பட ரிலீஸிற்கு பிரச்சனை ஏற்படும் வகையில் ஒரு தகவல்.

அதாவது வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த சிலருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்துள்ளனர். எனவே மக்கள் மத்தியில் கொரோனா இரண்டாவது அலை பயம் அதிகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகும் இல்லை ரிலீஸ் ஆகாதா என்ற குழப்பத்திலும் சோகத்திலும் ரசிகர்கள் உள்ளன.

கொரோனாவில் இருந்து குணமான சூர்யா-கார்த்தி பட நடிகை!

ரகுல் ப்ரீத்தி சிங்…

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை ஒருவர் தான் குணம் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தனர் என்பதை பார்த்து வந்தோம். அந்த வகையில் சூர்யா நடித்த ’என்ஜிகே’ கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’தேவ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.

இவர் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார் என்றும் மருத்துவர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சைகளை அளித்து வந்தனர் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ரகுல் ப்ரீத்திசிங், கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டார்.

அவருக்கு கோவிட் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து ரகுல் ப்ரீத்திசிங் தனது சமூக வலைத்தளத்தில் ’எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது முழுமையாக குணம் அடைந்து விட்டதாக உணர்கிறேன்.

எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2021ஆம் ஆண்டு நல்ல பாசிடிவ் எண்ணத்துடனும் நல்ல உடல்நலத்துடனும் தொடங்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையாள நடிகர் பகத் பாசிலை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் இணைந்த முக்கிய நடிகர், வெளியான சூப்பர் அப்டேட்..!

விக்ரம்…

உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் டைட்டில் டீஸர் வெளியாகி இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்டானது, முழுக்க அக்ஷன் படமாக உருவாகவுள்ள விக்ரம் இப்பொழுதே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் வில்லனாக நடிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் நடிகர் பிரபு தேவாவும் இணையவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

காதலா காதலா திரைப்படத்திற்கு மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

சவாலான பணியை செய்து முடித்தாரா ஜாக்கி சான்? – வேன்கார்ட் விமர்சனம்!

வேன்கார்ட்…

ஜாக்கிசான் ‘வேன்கார்ட்’ என்கிற செக்யூரிட்டி கம்பெனியை நடத்தி வருகிறார். விஐபி-களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இந்த செக்யூரிட்டி கம்பெனியின் முக்கியமான பணி. அந்த வகையில் தொழில்முனை போட்டி காரணமாக தொழிலதிபர் ஒருவரின் மகளை வில்லன் கடத்தி விடுகிறார். அந்த தொழிலதிபர், வேன்கார்ட் செக்யூரிட்டி கம்பெனியின் உதவியை நாடுகிறார்.

தொழிலதிபரின் மகளை காப்பாற்ற தனது குழுவினருடன் ஜாக்கிசான் களத்தில் இறங்குகிறார். இறுதியில் வில்லனிடம் இருந்து தொழிலதிபரின் மகளை பத்திரமாக ஜாக்கிசான் மீட்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வழக்கமாக பறந்து பறந்து எதிரிகளை துவம்சம் செய்து ஒவ்வொரு காட்சியிலும் அதகளப்படுத்தும் ஜாக்கிசானை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இந்த படத்தில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. அவருக்கு படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் குறைவாகவே வைத்துள்ளனர்.

ஜாக்கிசானுக்கு வயதான காரணத்தால் பெரியளவில் அனல்பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை. இருப்பினும் ஸ்டைலிஷான வேடத்தில் வந்து நம்மை கவர்கிறார். ஜாக்கிசானுடன் நடித்துள்ள மியா முகி, யாங் யாங் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஸ்டான்லி டாங் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய மைனசாக அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே தோனுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் லீ-யின் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியையும் கலர்புல்லாக காட்சிபடுத்தி உள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரின் ஒளிப்பதிவு வேற லெவல். பின்னணி இசையும் கதையின் விறுவிறுப்புக்கு வலுசேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘வேன்கார்ட்’ ஜாக்கிசான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

அ.டி.ச்சு வி ரட்டிய ஹேமந்த்! சித்ராவின் த.ற்.கொ.லை கு றித்து வெளியான தி டுக்கிடும் தகவல்! உண்மையை உடைத்த முக்கிய நபர்!

சித்ரா…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். இச்ச ம் பவத்தில் சித்ராவின் கணவர் ஹேமந்த் தான் த.ற்.கொ.லை.க்கு தூ.ண்.டியதாக கூ.றப்பட்டதால் கை.து செ.ய்.து சி.றையில் அ.டை.க்கப்பட்டுள்ளார்.

சித்ராவின் ம.ர.ண.ம் கு றித்து அவரது பெற்றோர், உறவினர்கள், படக்குழுவினர், நட்பு வட்டாரம், ஹேமந்தின் குடும்பத்தினர் என பலரிடமும் வி.சா.ரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சித்ராவின் ரசிகரும் முன்னாள் உதவியாளருமான சலீம் தற்போது பல விசயங்களை கூறியுள்ளார். இதில் சித்ரா மற்றும் ஹேமந்த் இருவரும் டி நகர் வீட்டில் தங்கியிருந்தபோது அவர்களுக்கிடையே மிகப்பெரிய ச.ண்.டை வந்தது.

ஹேமந்த் எந்த வேலையும் செ ய்யமாட்டார். சித்ரா ஷூட்டிங்கில் இருக்கும் போதும் அவருக்கு போன் பண்ணிக்கொ.ண்.டே இருப்பார். என்னை ஆரம்பத்திலிருந்தே அவர் வி ல் லனாக பார்த்தார்.

சித்ராவை வீடியோ எடுப்பது, புகைப்படங்கள் என செய்து வந்த என்னை அவர் தவறாகவே நினைத்தார். நான் சித்ராவின் புகைப்படங்களை வைத்து சம்பாதிக்கிறேனோ என்று ச ந்தேகித்தார், த வ றாக பு ரிந்து கொ ண் டார்,

ஒரு கட்டத்தில் என் செல்போனை பிடுங்கி சித்ராவின் வீடியோவை, புகைப்படங்களை அ ழித்துவிட்டதுடன் என்னை அ டி த்து வி ர ட்டினார் என சலீம் கூறியுள்ளார். சித்ரா மற்றும் ஹேமந்த் தங்கியிருந்த வீட்டில் சலீம் தங்கியிருந்தாராம்.

சிம்பு படத்துக்கு இசையமைக்கிறாரா ஏ.ஆர்.ரகுமான் ?

சிம்பு….

சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த ஏ.ஆர்.ரகுமான், தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளாராம்.

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக்கையும் அவரே இயக்கி வந்தார். தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடித்தனர்.

விறுவிறுப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சிம்புவுக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தாமல் கிடப்பில் போட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, படத்துக்கு ‘பத்து தல’ என பெயரிட்டிருப்பதாகவும், சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் கிருஷ்ணா, ஏ.ஆர்.ரகுமானின் நெருங்கிய நண்பர் என்பதால் இப்படத்துக்கு அவர் இசையமைக்க ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கிருஷ்ணா இயக்கிய சில்லுனு ஒரு காதல் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூது கவ்வும் 2-பாகம்…. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர்?

சூது கவ்வும் 2…

சூது கவ்வும் 2-பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட் படங்களை போன்று தமிழிலும் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. எந்திரன், பில்லா, சாமி, வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, சாமி, சண்டக்கோழி, உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. காஞ்சனா, சிங்கம் ஆகிய படங்கள் 3 பாகங்களாக வந்தன.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இப்படத்தை சிவி குமார் தயாரிக்கிறார்.

முதல் பாகத்தை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கவில்லையாம். அவருக்கு பதிலாக யங் மங் சங் படத்தை இயக்கிய அர்ஜுன் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்சரணைத் தொடர்ந்து அவரது சகோதரர் வருண் தேஜுக்கும் கொரானோ!

வருண் தேஜ்…

தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவுக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டு அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அது பற்றிய தகவலை அவரே நேற்று காலை டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

தன்னுடன் கடந்த சில நாட்கள் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, ராம் சரணின் சகோதரர் நடிகர் வருண் தேஜ், தனக்கு கொரானோ தொற்று ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு ராம் சரண், அல்லு அர்ஜுன், வருண் தேஜ், அல்லு சிரிஷ், சாய்தரம் தேஜ் என சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த இளம் நடிகர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒன்றாக இருந்த புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் வருண் தேஜ்.

ஒருவேளை அந்த கொண்டாட்டம் கூட கொரானோ பரவலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள்.

சிரஞ்சீவி குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு பேருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது தெலுங்குத் திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.