கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், மம்முட்டியை வைத்து தான் இயக்கிய பேரன்பு படம் மூலம் ரசிகர்களை நெகிழ வைத்தார் இயக்குனர் ராம்,.
அதேசமயத்தில் அவரது இயக்கத்தில் வெளியான தரமணி படம் வேறுவிதமான களத்தில் இளைஞர்களை மிரள வைத்தது.
இந்தநிலையில் ராம் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில், மலையாள முன்னணி நடிகர் நிவின்பாலி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் ரிச்சி என்கிற படம் மூலம் நிவின்பாலி அறிமுகமானாலும் அந்தப்படம் அவருக்கு வெற்றியையும், தமிழில் வரவேற்பையும் பெற்றுத்தர தவறிவிட்டது.
ரிச்சி, மூத்தோன் ஆகிய படங்களில் நடித்தான் மூலம், வித்தியாசமான கலைப்படைப்புகளில் நடிக்க ஆர்வம் காட்டும் நிவின்பாலி, இயக்குனர் ராம் டைரக்சனில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றால் அதில் ஆச்சர்யப்பட தேவையில்லை.
இந்த கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கும், பலவிதமான உதவிகளை செய்ததில், பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், மக்கள் மத்தியில் நிஜமான ஹீரோவாக மாறிவிட்டார்.
இதை தொடர்ந்து அவர் ஏற்கனவே வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வரும் படங்களில் கூட அவரது இமேஜ் கெட்டுவிட கூடாது என, காட்சிகளில் மாற்றம் செய்து வருகிறார்கள். சிரஞ்சீவியுடன் சோனு சூட் நடித்துவரும் ஆச்சார்யா படத்தில் கூட அப்படி ஒரு மாற்றம் சமீபத்தில் நடந்தது..
இன்னொரு பக்கம் சோனு சூட்டை கதையின் நாயகனாகவும், கதையை தாங்கிப்பிடிக்கும் குணச்சித்திர நடிகராகவும் முன்வைத்து சில இயக்குனர்கள் கதைகளை உருவாக்கி வருகிறார்கள்.
இந்தநிலையில் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என சோனு சூட்டும் அறிவித்துள்ளார். மேலும் தானும் ஒரு தயாரிப்பாளராக மாறி, படங்களை தயாரிக்கப்போவதாக தற்போது அறிவித்துள்ளார் சோனு சூட்.
இதுபற்றி அவர் கூறும்போது, “அடுத்தமுறை எனது படத்தில் நடிகர் -தயாரிப்பாளர் என்கிற அடைமொழியுடன் வருவேன் என நம்பலாம்.. மக்களை உற்சாகப்படுத்துகின்ற விதமான, எனக்கு நம்பிக்கை தரும் கதைகளை, நான் எதிர்பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.
நடிகர் ரமேஷ் அரவிந்த் ஒரு இந்திய நடிகர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொ குப் பாளர், தி ரைக் கதை எழுத்தாளர், ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் எழு த்தா ளர் ஆவர். ரமேஷ் அரவிந்த் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பொ ழுது போக்கு து றையில் பணியாற்றி வருகிறார். மேலும் ஆறு மொழிகளில் ப டைப் புகளைக் கொண்டுள்ளார்.
140 க்கும் மேற்பட்ட திரை ப்பட ங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் கன்னடத்தில் பணியாற்றியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களிலும் தோ ன்றி னார் என்பது குறிப்படத்தக்கது. சிவாஜி சூரத்கல், புஷ்பக விமனா, ராம ஷாமா பாமா, சத்தி லீலவதி, டூயட், அமெரிக்கா அமெரிக்கா, துட்டா முட்டா, நம்மூரா மந்தாரா ஹூவ், ஓ மல்லிகே, அப்தாமித்ரா, உல்டா பால்டா, ஹூமலே, முங்கராமி மாகுராசின் என்ற பல படகளியில் நடித்துள்ளார்.
அவர் தனது தொழில் வா ழ்க் கையில் பல விருதுகளைப் பெற்றார் மற்றும் பரி ந்துரை க்கப் பட்டார். இதில் சிறந்த நடிகருக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளும், சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநில விருதுகளும், ஹூமாலில் அவரது தி ரைக் கதை க்காக சிறந்த கதையும், உதய டிவி மற்றும் சுவர்ணா டிவி விருதுகளும் அடங்கும்.
அவர் BHIVE பணியிடம், சைக்கிள் அகர்பாட்டிஸ், டர்போ ஸ்டீல் மற்றும் விட்வத் மொபைல் பயன்பாட்டின் பிராண்ட் தூதராகவும் உள்ளார். ஜீ கன்னடத்தில் நான்கு வெற்றிகரமான சீசன்களைக் கொண்ட வீக்கெண்ட் வித் ரமேஷ் நி கழ்ச் சியின் தொ குப்பா ளராக உள்ளார்.
மேலும் ஹூ வாண்ட்ஸ் டு பி மில்லியனரின் கன்னட பதிப்பான கன்னடட கோட்டியதிபதியின் சீசன் 3 ஐ தொ குத்து வழ ங்கி னார்.நடிகர் ரமேஷ் அரவிந்த் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் யு.வி.சி.இ.யில் பொறியியல் இள ங்கலை பட்டம் பெற்றவர்.
அரவிந்திற்கு நான்கு உ டன் பிறப் புகள் உள்ளனர். அவர் அர் ச்ச னாவை ம ணந் தார். அவர்களுக்கு ஒரு மகள் (நிஹாரிகா) மற்றும் மகன் (அர்ஜுன்) உள்ளனர். இவர் தமிழ் சினிமாவிற்கு மனதில் உறுதி வேண்டும் என்ற தி ரைப்ப டத்தின் மூ லம் அ றிமுக மானார்.
அதனை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான திரை ப்படங் களில் நடித்து வந்தார்.இவர் குறிப்பாக பஞ்சதந்திரம், சதிலீலாவதி, ஜோடி, ரிதம், டூயட் உள்ளிட்ட தி ரைப்ப டங்கள் ரசி கர்க ளிடையே மிகவும் பி ர ப லம். கடைசியாக இவர் கமல் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் தி ரைப் படத்தில், ஒரு சிறிய க தாபா த்திர த்தில் வந்து நடித்து போனார்.
இந்நிலையில் இன்று அவரின் மகள் நிஹாரிகாவுக்கு அக்ஷய் என்பவருடன் தி ரும ண மாகி உள்ளதாக புகைப்படத்துடன் அறி வித்து ள்ளார் நடிகர் ரமேஷ் அரவிந்த் அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களை வாழ்த்தி உள்ளார்கள்..
சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாத்துறையில் நடிக்க வருவது வழக்கமான ஒன்றே. அதிலும் ஒரு சிலரே தங்கள் கடினமான உழைப்பாலும், முயற்சியாலும் நிலைத்து நிற்கிறார்கள்.
அவரின் புகழ் இன்னும் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இவ்வளவு ஏன் நடிகர் விஜய்யும் இந்த விசயத்தில் ஒரு நல்ல எடுத்துக்காட்டு எனலாம்.
குழந்தை நட்சத்திரமாக 6 படங்களில் நடித்து அப்பாவின் இயக்கத்திலேயே ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகி கடும் விமர்சனங்களுக்கு இடையில் தொடர்ந்து போராடி தற்போது அவர் உச்சம் அடைந்துவிட்டார்.
இந்நிலையில் அவரின் மகன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. வெளிநாட்டில் படிக்கும் அவரின் மகன் சஞ்சீவ் குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறாராம். தற்போது அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகை குஷ்பூ அ ர சியல், சினிமா என பிசியாக இருக்கிறார். சிவா இயக்கத்தில் சூப்பர்ட் ஸ்டார் ரஜினி, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் நடிக்கும் நடிகை குஷ்பூவும் இணைந்துள்ளார்.
அண்மையில் கா ங் கி ரஸ் க ட் சியில் இ ருந்து வி ல கி பா ஜ க வில் இணைந்து குஷ்பூ பல விசயங்கள் குறித்து பேசினார். ரஜினியின் அ ர சி யலில் வருகை ஆர்வத்துடன் எதிர்பார்த்தவர்களில் அவரும் ஒருவர்.
ரஜினியின் அ ர சி யல் வருகை குறித்து அவர் அன்புள்ள ரஜினி சார், ஒரு வழியாக நீங்கள் அ ர சியலில் இ ற ங்குகிறீர்கள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் புதிய பாத்திரத்துக்கு வாழ்த்துகள். உங்கள் முழு முயற்சியை இதில் காட்டுவீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும் என வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினி உடல் நிலை காரணத்தால் கட்சி தொடங்கவில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை. என்னை மன்னியுங்கள் என கூறியுள்ளார்.
இதனால் பலரும் தங்களது கருத்தை தெரிவிக்கும் வேளையில் குஷ்பூ டிவிட்டரில் அன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது. ஆனால் உங்களுடைய ஆரோக்யம் மற்றும் உடல்நலத்திற்கு முன்பு வேறெதுவும் பெரிதல்ல என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
உங்களுடைய நலம்விரும்பியாக, ஒரு தோழியாக உங்களுடைய முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நீங்கள் எனக்கு விலைமதிப்பற்ற, மிக முக்கியமான ஒருவர். நன்றாக மகிழ்ச்சியாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவிற்கு சொந்தமான அனைத்து பொருட்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை வடபழனியில் உள்ள சாலிகிராமத்தின் பிரசாத் ஸ்டூடியோவில் தான் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளாக பாடல்கள் ஒலிப்பதிவு, பின்னணி இசை என்று அனைத்து பணிகளையும் செய்து வந்துள்ளார்.
பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜாவின் மற்றொரு வீடாகவும் இருந்துள்ளது. பாடல் ஒலிப்பதிவு கூடத்துடன் இளையராஜாவிற்கு என்று பிரத்யேகமாக 5 அறைகளும் இருந்துள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டூடியோவிற்கு வாடகை கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இடத்தை காலி செய்ய வேண்டும் என்று பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஸ்டூடியோ நிர்வாகத்திடன் மீது இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தனது அறையை மட்டும் பூட்டிய அவர் அதன் பிறகு அங்கு செல்லவில்லை.
இந்த நிலையில், நீதிமன்றம் நியமித்த ஆணையர்களின் முன்னிலையில் இளையராஜாவுக்கு சொந்தமான அனைத்து பொருட்களும் அவரது தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அ ர சியல் க ட்சி ஆரம்பிக்க போவது இல்லை என்று ரஜினிகாந்த் அறிவித்ததால் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் டிசம்பர் 30ஆம் தேதியன்று கட்சி தொடங்கும் நாள் அறிவிக்கப்படும் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், அதன்பின் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றார்.
தினமும் படப்பிடிப்பில் கொரோனா பரிசோதிக்கபட்ட பிறகே அனைவரும் படப்பிடிப்பிற்கு அனுமதிக்கப்பட, திடீரென 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்திய படக்குழுவினர், ரஜினியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொரோனா தொற்று பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருந்தாலும், ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூன்று நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய ரஜினிகாந்த், நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் “உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் மரணம் அடைந்துள்ளார்.
சினிமா துறைக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் காரணமாக, சினிமா தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருந்தாலும், சினிமா பிரபலங்களின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இயக்குநரும், நடிகருமான விசு, நடிகர் சேது, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வடிவேலு பாலாஜி, சின்னத்திரை நடிகை சித்ரா, சுசாந்த் சிங் ராஜ்புத், இர்பான் கான், நடிகர் பெரைரா, தவசி என்று பல பிரபலங்கள் மரணம் அடைந்தது சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்சாண்டர் மரணமடைந்துள்ளார். உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 48. கடந்த 10 ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில், கைதி, கோலமாவு கோகிலா, ஜடா, மாநகரம், பிகில் என்று பல படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அருண் அலெக்சாண்டர் மறைவு பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் எப்போதோ தயாராகி விட்டது.
படத்தின் ரிலீஸ் வரும் ஜனவரி 13ம் தேதி என படக்குழுவே நேற்று அதிகாரப்பூர்வமாக போஸ்டர்களுடன் அறிவித்துள்ளனர்.
ரசிகர்கள் இப்போதே அந்த நாளுக்காக ஆவலாக எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த நேரத்தில் பட ரிலீஸிற்கு பிரச்சனை ஏற்படும் வகையில் ஒரு தகவல்.
அதாவது வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த சிலருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்துள்ளனர். எனவே மக்கள் மத்தியில் கொரோனா இரண்டாவது அலை பயம் அதிகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகும் இல்லை ரிலீஸ் ஆகாதா என்ற குழப்பத்திலும் சோகத்திலும் ரசிகர்கள் உள்ளன.
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை ஒருவர் தான் குணம் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தனர் என்பதை பார்த்து வந்தோம். அந்த வகையில் சூர்யா நடித்த ’என்ஜிகே’ கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ ’தேவ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்.
இவர் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார் என்றும் மருத்துவர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சைகளை அளித்து வந்தனர் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ரகுல் ப்ரீத்திசிங், கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டார்.
அவருக்கு கோவிட் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து ரகுல் ப்ரீத்திசிங் தனது சமூக வலைத்தளத்தில் ’எனக்கு கோவிட் பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது முழுமையாக குணம் அடைந்து விட்டதாக உணர்கிறேன்.
எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2021ஆம் ஆண்டு நல்ல பாசிடிவ் எண்ணத்துடனும் நல்ல உடல்நலத்துடனும் தொடங்க விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.