விக்ரம் பிரபு படத்தில் திடீர் மாற்றம்!

விக்ரம் பிரபு….

முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி மாற்றம் செய்திருக்கிறார்கள்.

‘தேவராட்டம்’ படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.

இதன் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகிறார்.

முதலில் ‘பேச்சி’ எனத் தலைப்பிட்டு இருந்த இந்தப் படத்தைப் பொங்கல் பண்டிகை அன்று சன் டிவியில் ஒளிபரப்பவும், அடுத்த நாள் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியிடவும் திட்டமிட்டார்கள்.

ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ‘பேச்சி’ என்ற பெயர் பொருத்தமாக இல்லை என்றும், அதனால் ‘புலிக்குட்டிப் பாண்டி’ என்று படத்தின் பெயரை மாற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

என் தங்கைக்கு ஊர்க்காரர்கள் இப்படி செய்வார்கள் என்று நினைக்கவில்லை- மனம் திறக்கும் சாய் பல்லவி!

சாய்பல்லவி…

ரவுடி பேபி, மலர் டீச்சர் என எத்தனை அடையாளங்கள் தான் சாய்பல்லவிக்கு. பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி எல்லோருடைய ட்ரீம் காதலராக வலம் வந்தார்.

இவர் வருகைக்குப் பின்னால் டீச்சரை ரூட்டு விடும் பழக்கத்தை பசங்க பழகி கொண்டார்கள். அதன் பிறகு என்ஜிகே, மாரி 2 படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

இவர் முதன்முதலில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மலையாளத்தில் பிரேமம், கழி போன்ற படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். இவர் நடித்த ரவுடி பேபி பாடல் பெரும் சாதனை பெற்றது. சமீபத்தில் வெளிவந்த பாவக்கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் சிறப்பான நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார்.

இவருக்கு ஒரு தங்கை இருக்கிறார், அவரின் பெயர் பூஜா. கிட்டத்தட்ட இவரைப் போல தோற்றம் கொண்ட பூஜா, காரா என்ற படத்தில் நடித்தார். அவரது தங்கை பற்றி ஒரு பேட்டியில் சாய் பல்லவி கூறியிருந்தார்.

அதில் “என் தங்கை, அவளை விட நான் தான் அழகாக இருப்பதாக கருதுகிறார், அவரை விட நான் கொஞ்சம் நிறமாக இருப்பதால் அவர் இவ்வாறு நினைக்கிறாள். தங்கையின் கலரை பற்றி மற்றவர்கள் பேசுவதால் அவர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட தயங்குவது உண்டு.

சிறு வயது இருக்கும்போது அவள் விளையாட வெளியே செல்வாள், அப்போது, ஏற்கனவே நீ கருப்பு இதில் வெளியே விளையாட போறியா என ஊர்க்காரர்கள் பலமுறை கேட்டு இருக்கிறார்கள்.

இதைக் கேட்டு கேட்டு பலமுறை மனதால் பாதிக்கப்பட்டதாக அவள் கூறியிருக்கிறார்” என்று கூறினார். என்னது இது கலர் கம்மியா என நெட்டிசன்கள் தங்களை கண்ணாடியில் பார்த்து பெருமூச்சு விட்ட வண்ணம் உள்ளனர்.

4 மாசம் ஆச்சு: செத்தால் தான் ஆக்‌ஷன் எடுப்பீங்களா? பாயல் கோஷ் ஆவேசம்!

பாயல் கோஷ்…

இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பா.லி.ய.ல் பு.கா.ர் கொ.டுத்து 4 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று நடிகை பாயல் கோஷ் கு.ற்.ற.ம் சா.ட்டியுள்ளார்.

நயன் தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் வந்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர், இயக்குநர் அனுராக் காஷ்யப். பாலிவுட்டில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

தற்போது கோஸ்ட் ஸ்டோரிஸ், ஜோக்குடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். AK vs AK மற்றும் Bansuri: The Flute ஆகிய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில், அனுராக் காஷ்யப் மீது அண்மையில், நடிகை பாயல் கோஷ் பா.லி.ய.ல் பு.கா.ர் கொ.டு.த்திருந்தார்.

அதில், அனுராக் காஷ்யப் வீட்டிற்கு பட வாய்ப்பு கேட்டு சென்ற போது த.காத முறையில் ந.ட.ந்ததாக கு.ற்.ற.ம் சா.ட்.டியிருந்தார். மேலும், 200 க்கும் மேற்பட்ட பெ.ண்க.ளுடன் அவர் ப.டு.க்கையை ப.கி.ர்ந்துள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் மீது வ.ழக்கு ப.திவு செ.ய்.யப்பட்டது. இந்த நிலையில், பு.கா.ர் அளித்து 4 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மே.ற்கொ.ள்.ள.ப்படவில்லை என்று கு.ற்.ற.ம்சா.ட்.டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பு.கா.ர் கொடுத்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. அனுராக் காஷ்யப்பிற்கு எதிரான ஆதாரங்களையும் கொடுத்துவிட்டேன். ஆனால், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஒருவேளை நான் செத்தால் தான் அவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்தின் சென்சார் Update ! U‌ – ஆ ?‌ U/A – ஆ ? A – ஆ ?

மாஸ்டர்..

மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் கரோனா பிரச்னையால் தேதி சொல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அநேகமாக வரும் பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்தநிலையில், மாஸ்டர் படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும்,

போ .தை, ச.ர.க்.கு ச.ம்.மந்தப்பட்ட காட்சிகள் இருப்பதால் இதற்கு A சர்டிஃபிகட் கொடுக்கப்பட்டதாகவும்,

அதன் பிறகு சென்சார் குறிப்பிட்டு சொன்ன இடங்களை எல்லாம் வெட்டிவிட்டு U/A கொடுத்தார்கள் என்று தகவல்கள் வந்தது.

தற்போது மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக U/A கொடுத்துள்ளதாக Tweet போட்டு உறுதி செய்திருக்கிறார்கள்.

கேப்ரில்லாவை விடாமல் கட்டிப்பிடிக்கும் ரியோ ! விளாசும் நெட்டிசன்கள் !

கேப்ரில்லா…

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கேப்ரில்லா அங்க இருக்குற கேமை நன்றாக விளையாடுகிறார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாத நிலையில் Big Boss நிகழ்ச்சியில் நுழைந்து உள்ளார்.

இதுக்கு இடையில கேப்ரில்லாவை விடாமல் துரத்தி, துரத்தி ரியோ கட்டி பிடிப்பது ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பியுள்ளது.

எல்லா சீசன்களிலும் இந்த மாதிரி ஆட்களை இறக்கி இளைஞர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள். அந்த வகையில் சினேகனை தொடர்ந்து தற்போது ரியோ அந்த பிரச்சனையில் மாட்டி உள்ளார்.

நான்காவது முறையாக ஒத்தி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது: புதிய தேதி அறிவிப்பு!

ஆஸ்கர் விருது…

உலக அளவில் திரையுலகினர்கள் பெருமையாக கருதும் ஆஸ்கர் விருது கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

92 ஆண்டுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் 93ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்த திட்டமிட்டிருந்த இந்த விழா தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் வரலாற்றில் இதுவரை மூன்று முறை விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முதல்முறையும், 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட சம்பவத்தால் இரண்டாம் முறையும்,

1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கொலை முயற்சி சம்பவத்தால் மூன்றாம் முறையும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியல் நடிகை மிருதுளாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- அவரும் நடிகர் தானாம், அழகிய ஜோடியின் புகைப்படம்!

மிருதுளா…

மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மிருதுளா.

இவருக்கும் நடிகர் யுவ கிருஷ்ணாவுக்கும் நேற்று முன்தினம் சிம்பிளான முறையில் திருவனந்தபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இருவரும் ஒரே துறையில் இருந்தாலும் காதலிக்கவில்லை.

தெரிந்தவர்கள் மூலம் இருவரின் ஜாதகங்கள் அவரவர் வீட்டாரின் கையில் கிடைக்க இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட சதீஷ் இவர்களது திருமணம் அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்! அதிரடியாக கூறிய முக்கிய பிரபலம்! இவரே சொல்லிட்டாரா?

பிக்பாஸ் சீசன்4…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்4 தற்போது 80 ம் நாளை நெருங்கிவிட்டது. இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் தற்போது ஆரி, அனிதா, ரியோ, ஷிவானி, பாலாஜி, கேப்ரியல்லா, ஆஜித், ரம்யா, சோம் சேகர் ஆகியோர் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க் விசயத்தில் இவர்களுக்குள் போட்டி வலுத்துவிட்டது. அண்மையில் கூட ரேங்க்கிங் டாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ரியோ மற்றும் ஆரிக்கு இடையே ஒன்றாம் இடத்தை பிடிப்பதில் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆரியிடம் வாக்குவாதம் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் போல.

அண்மையில் ஆரியிடம் அனிதா நடந்து கொண்ட விதம் பெரும் முகம் சுளிப்பை உண்டாக்கியுள்ளது. மரியாதை குறைவாக நடந்து கொண்டது போல தெரிந்தது. ஆரிக்கு ஆரம்ப நாட்கள் முதலே ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் ஆரிக்கு பல திசைகளிலிருந்து தாக்குதல் வருகிறது. ஆனாலும் அவர் தனக்கு எதிராக வரும் சவால்களை கடந்து இரும்பு மனிதராகி விட்டார்.

எனவே அவர் தான் டைட்டில் வின்னர் என கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.’

மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்ற நடிகர்! அதிரடியான முடிவு! பயத்தில் ஆழ்த்திய சம்பவம்!

யஷ்…

கன்னட சினிமாவின் பிரபல நடிகரான யஷ் தற்போது கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் அதிக பொருட் செலவில் இந்த ஆக்‌ஷன் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் பாகம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மறுவடிவம் பெற்று வெளிநாடுகளில் மேலும் தாக்க தொடங்கியுள்ள வந்த செய்தியின் எதிரொலியாலும்,

வெளிநாட்டிலிருந்து கர்நாடகா வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கர்நாடகாவில் மீண்டும் இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பிலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கே.ஜி.எஃப் 2 கதாநாயகன் யஷ் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் குடும்பத்தை விட்டு பிரிந்து, விலகி இருந்து, வெளியே தனியாக ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினாராம்.

தன்னோடு பணியாற்றிவர்களையும் விடுதியிலேயே தங்க வைத்ததோடு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என தெரிந்த பின்னரே மனைவி, குழந்தைகள் குடும்பத்தினரை சந்தித்தாராம்.

மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வெளியான புதிய போஸ்டர், எதிர்பார்க்காத நேரத்தில் வெளியானதால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி போனது, ஆனால் அடுத்த மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் 19 நாட்களே இருக்கும் நிலையில், இப்படம் வெளியீடு குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பிரபல போஸ்டர் டிசைனரான கோபி பிரசன்னா தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் மாஸ்டர் படத்தின் புதிய பேன் மேட் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.