கேப்ரில்லாவை விடாமல் கட்டிப்பிடிக்கும் ரியோ ! விளாசும் நெட்டிசன்கள் !

கேப்ரில்லா…

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கேப்ரில்லா அங்க இருக்குற கேமை நன்றாக விளையாடுகிறார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாத நிலையில் Big Boss நிகழ்ச்சியில் நுழைந்து உள்ளார்.

இதுக்கு இடையில கேப்ரில்லாவை விடாமல் துரத்தி, துரத்தி ரியோ கட்டி பிடிப்பது ரசிகர்களுக்கு கடுப்பை கிளப்பியுள்ளது.

எல்லா சீசன்களிலும் இந்த மாதிரி ஆட்களை இறக்கி இளைஞர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள். அந்த வகையில் சினேகனை தொடர்ந்து தற்போது ரியோ அந்த பிரச்சனையில் மாட்டி உள்ளார்.

நான்காவது முறையாக ஒத்தி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது: புதிய தேதி அறிவிப்பு!

ஆஸ்கர் விருது…

உலக அளவில் திரையுலகினர்கள் பெருமையாக கருதும் ஆஸ்கர் விருது கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

92 ஆண்டுகளாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் 93ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்த திட்டமிட்டிருந்த இந்த விழா தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் வரலாற்றில் இதுவரை மூன்று முறை விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முதல்முறையும், 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட சம்பவத்தால் இரண்டாம் முறையும்,

1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கொலை முயற்சி சம்பவத்தால் மூன்றாம் முறையும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியல் நடிகை மிருதுளாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- அவரும் நடிகர் தானாம், அழகிய ஜோடியின் புகைப்படம்!

மிருதுளா…

மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மிருதுளா.

இவருக்கும் நடிகர் யுவ கிருஷ்ணாவுக்கும் நேற்று முன்தினம் சிம்பிளான முறையில் திருவனந்தபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இருவரும் ஒரே துறையில் இருந்தாலும் காதலிக்கவில்லை.

தெரிந்தவர்கள் மூலம் இருவரின் ஜாதகங்கள் அவரவர் வீட்டாரின் கையில் கிடைக்க இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்ட சதீஷ் இவர்களது திருமணம் அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர் தான்! அதிரடியாக கூறிய முக்கிய பிரபலம்! இவரே சொல்லிட்டாரா?

பிக்பாஸ் சீசன்4…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்4 தற்போது 80 ம் நாளை நெருங்கிவிட்டது. இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் தற்போது ஆரி, அனிதா, ரியோ, ஷிவானி, பாலாஜி, கேப்ரியல்லா, ஆஜித், ரம்யா, சோம் சேகர் ஆகியோர் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க் விசயத்தில் இவர்களுக்குள் போட்டி வலுத்துவிட்டது. அண்மையில் கூட ரேங்க்கிங் டாஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் ரியோ மற்றும் ஆரிக்கு இடையே ஒன்றாம் இடத்தை பிடிப்பதில் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆரியிடம் வாக்குவாதம் செய்யாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் போல.

அண்மையில் ஆரியிடம் அனிதா நடந்து கொண்ட விதம் பெரும் முகம் சுளிப்பை உண்டாக்கியுள்ளது. மரியாதை குறைவாக நடந்து கொண்டது போல தெரிந்தது. ஆரிக்கு ஆரம்ப நாட்கள் முதலே ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் ஆரிக்கு பல திசைகளிலிருந்து தாக்குதல் வருகிறது. ஆனாலும் அவர் தனக்கு எதிராக வரும் சவால்களை கடந்து இரும்பு மனிதராகி விட்டார்.

எனவே அவர் தான் டைட்டில் வின்னர் என கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.’

மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்ற நடிகர்! அதிரடியான முடிவு! பயத்தில் ஆழ்த்திய சம்பவம்!

யஷ்…

கன்னட சினிமாவின் பிரபல நடிகரான யஷ் தற்போது கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் அதிக பொருட் செலவில் இந்த ஆக்‌ஷன் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் பாகம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மறுவடிவம் பெற்று வெளிநாடுகளில் மேலும் தாக்க தொடங்கியுள்ள வந்த செய்தியின் எதிரொலியாலும்,

வெளிநாட்டிலிருந்து கர்நாடகா வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கர்நாடகாவில் மீண்டும் இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படப்பிடிப்பிலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கே.ஜி.எஃப் 2 கதாநாயகன் யஷ் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் குடும்பத்தை விட்டு பிரிந்து, விலகி இருந்து, வெளியே தனியாக ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினாராம்.

தன்னோடு பணியாற்றிவர்களையும் விடுதியிலேயே தங்க வைத்ததோடு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என தெரிந்த பின்னரே மனைவி, குழந்தைகள் குடும்பத்தினரை சந்தித்தாராம்.

மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வெளியான புதிய போஸ்டர், எதிர்பார்க்காத நேரத்தில் வெளியானதால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி போனது, ஆனால் அடுத்த மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் 19 நாட்களே இருக்கும் நிலையில், இப்படம் வெளியீடு குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பிரபல போஸ்டர் டிசைனரான கோபி பிரசன்னா தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் மாஸ்டர் படத்தின் புதிய பேன் மேட் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சக்தி வாய்ந்த கல்லால் நடக்கும் விபரீதம்…. வொண்டர் உமன் 1984 விமர்சனம்!

வொண்டர் உமன் 1984…

நாயகி கிறிஸ் பைன் மியூசியத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஆங்காங்கே நடக்கும் தவறுகளை சண்டைபோட்டு சரி செய்து வருகிறார்.

இந்நிலையில் எஸ்பிஐ, ஒரு கல்லை பற்றி தகவல் கொடுக்கிறார்கள். மேலும் இந்த கல்லை அபகரிக்க ஒரு கூட்டம் செயல் படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

கல்லை பற்றி ஆராய்ச்சி செய்யும் போது விவரம் இல்லாத ஒரு பெண்ணும் வேலைக்கு சேர்கிறார். ஆராய்ச்சியில் இந்த கல்லை வைத்துக் கொண்டு மனதில் நினைத்தால் அது நிஜத்தில் நடக்கும் என்பதை அறிகிறார்கள்.

இந்நிலையில், ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விவரம் இல்லாத பெண், கிறிஸ் பைன் போல் சக்தி வாய்ந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். கிறிஸ் பைன் இடம் உள்ள சக்தி எல்லாம் விவரம் இல்லாத பெண்ணுக்கு செல்கிறது.

இதே சமயம் வில்லனும் கல்லை அபகரித்து விடுகிறார். இறுதியில் கிறிஸ் பைன், இழந்த சக்தியை பெற்றாரா? வில்லனிடம் இருந்து சக்தி வாய்ந்த கல்லை மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

டிசி சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் வொண்டர் உமன் 1984 என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. 1984 ஆம் ஆண்டு பின்னணியில் நடக்கும் கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

டிசி படங்களில் எப்போதும் முதல் பாதி மெதுவாகவும் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் இருக்கும். அதேபோல் இந்த படத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏற்றவாறு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் திரைப்படம் நகர்கிறது.

கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசையும், ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் ‘வொண்டர் உமன் 1984’ வொண்டர்ஃபுள்.

தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் டி.ராஜேந்தர் !

டி.ராஜேந்தர்…

புதிய தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கிய டி.ராஜேந்தர் தற்போது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தே ர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதில் டி.ராஜேந்தர் போ ட் டியிட்டு தோ ல்வியை தழுவினார்.

பின்னர் புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்ட நிலையில் அதன் தலைவராக டி.ராஜேந்தர் பொறுப்பேற்றார்.

ஏற்கனவே திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக டி.ராஜேந்தர் இருந்து வரும் நிலையில் அதன் வி திமுறைகளின்படி வேறு எந்த சங்கத்திலும் ப தவி வகிக்க கூடாது.

இதனால் தற்போது டி.ராஜேந்தர் புதிய தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் புதிய தயாரிப்பாளர் சங்க தலைவர் யார் என்பது குறித்து விரைவில் தெரிய வரும்.

நடிகை கீர்த்தி சுரேஷை கதற விடும் முன்னணி நடிகர்கள்.. நடிகை கதறல்!

கீர்த்தி சுரேஷ்…

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில், முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய நடிகர்களும், தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதே நிலைமை தற்போது தமிழிலும் ஏற்பட்டு வருவதாக சில கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. இது ஏனென்றால், நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டாராம்.

ஆனால் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றால், கீர்த்தி மறுபடியும் உடல் எடை கூடி, கும்முனு மாறவேண்டுமாம்.

அப்போது தான் அவருடன் ரொமான்ஸ் செய்வோம் என்று முன்னணி நடிகர்கள் அடம் பிடிக்கிறார்களாம்.

“இனிமே சிம்பு Time-தான்” தெறிக்கவிடும் MUFTI தமிழ் ரீமேக்கின் Title !

சிம்பு…

Talk Of The Town என்னன்னா சிம்பு உடம்பை குறைத்து, ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு போவதுதான். 30 நாட்களில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் சிலம்பரசன்.

Chart போட்டு பெண்டிங்கில் இருக்கும் எல்லாம் படங்களையும் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த இவர், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பாக நடிக்க ஒற்றுகொண்ட மப்டி படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு.

கன்னட Blockbuster ஆன இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இதில் சிம்புடன் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘பத்து தல’ என்று மாஸ் Title வைத்துள்ளார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” இனி சிம்பு Time- தான்” என்று Comment அடிக்கிறார்கள். பாதி ஷூட்டிங்கில் நின்ற இந்த படம், மீண்டும் படு ஸ்பீடாக துவங்க காத்திருக்கிறார்கள். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார்.