மீண்டும் இணையும் முப்பெரும் வெற்றி கூட்டணியில் தனுஷ்!

தனுஷ்…

தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இணைந்து துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ‘மயக்கம் என்ன’’ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ், செல்வராகவன் மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளனர் என்பதும் அந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த செய்தியை தற்போது செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையவுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏற்பதாகவும் செல்வராகவன் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து தனுஷ் செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய முப்பெரும் கூட்டணி வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சக்தி வாய்ந்தவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை – தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் விமர்சனம்!

தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ்..

ஹாலிவுட்டில் வெளியான தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் என்ற திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.

மனித இனமும், மனித இனத்தில் சக்தி வாய்ந்தவர்கள் என இரண்டு பிரிவுகளாக இருக்கிறார்கள். மனிதர்கள், சக்தி வாய்ந்தவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுத்தி அதை டி.வி.யில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.

இதில் புரட்சி ஏற்பட்டு சக்தி வாய்ந்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இறுதியில் சக்தி வாய்ந்தவர்கள் தங்களுக்குள் நடைபெற்று வந்த சண்டையை முடித்துக் கொண்டார்களா? இவர்களுக்குள் சண்டை ஏற்பட காரணமாக இருந்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஹாலிவுட் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் கதை அம்சம் கொண்ட படங்கள் வரிசையில் தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால், மற்ற படங்களுக்கு நிகராக இந்த படம் அமையாதது வருத்தம்.

தமிழ் சினிமாவில் வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் போல், இந்த படம் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் ஓரளவிற்கு ரசிக்க வைத்தாலும், சுவாரஸ்யம், விறுவிறுப்பு இல்லாமல் படம் நகர்கிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பின்னணி இசையும், சண்டைக் காட்சிகளையும் ஆங்காங்கே ரசிக்க முடிகிறது. மற்ற ஹாலிவுட் படங்கள் போல் இப்படம் இருக்கும் என்று நம்பி சென்றால் ஏமாற்றமே…
மொத்தத்தில் ‘தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ்’ சுவாரஸ்யம் இல்லை.

கொட்டும் வருமானம்! பணத்தை வாரி இறைத்த பிரபல மாடலிங் நடிகை! ஒருவருக்கு எவ்வளவு தெரியுமா?

கிம் கர்தாசியன்…

ஹாலிவுட் சினிமாவின் நடிகையான கிம் கர்தாசியன் விளம்பரங்கள், சினிமா என மிகவும் பிரபலமானவர்.

சமூக நல ஆர்வலர் தொழில் முனைவோர் என கலக்கும் இவர் புகைப்படத்தின் மட்டும் ரூ 2 கோடி முதல் ரூ 3.5 கோடி வரை சம்பாதிக்கிறாராம்.

இணையதளம், டிக் டாக் என கலக்கி வந்த இவர் அண்மையில் தன் குழந்தையை பொது இடத்தில் தொலைத்துவிட்டு தேடினார்.

மாடலிங்க் துறையில் இருக்கும்அவர் இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாராம் இழந்த சுமார் 500 பேருக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ரூ 37 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாராவுக்கு ராதிகா வாழ்த்து: ஏன் தெரியுமா?

ராதிகா…

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ’கூழாங்கல்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்போவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் அசத்தலாக இருப்பதாக பார்வையாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிலும் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து ராதிகா கூறுகையில் ’நல்ல சினிமாவின் உணர்வை ஊக்குவிக்கும் உங்களுக்கும், நயன்தாராவுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வினோத்ராஜ் என்பவர் இயக்கிய ’கூழாங்கல்’ படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர் என்பதும் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் அடுத்த படம்: டைட்டில், இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த அதிகாரபூர்வ தகவல்!

சிம்பு..

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை பொங்கல் தினத்தன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் ’மாநாடு’ திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிம்புவின் அடுத்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் 20வது படமான இந்த படத்தை கிருஷ்ணா இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சூர்யா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ ஆரி நடித்த ’நெடுஞ்சாலை’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு உடன் இளம் ஹீரோ கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’முப்தி’ என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டைட்டில் வரும் 24ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பை முடித்த உடன் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

4 பேருக்கு மட்டுமே கொரோனா… அண்ணாத்த படக்குழு அறிவிப்பு!

அண்ணாத்த…

கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், படக்குழுவினர் 4 பேருக்கு மட்டுமே கொரோனா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அண்ணாத்த. அடுத்த மாதம் ரஜினி தனி கட்சி தொடங்க இருப்பதால் படப்பிடிப்பை விரைவாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 4 பேருக்கு மட்டுமே கொரோனா,

ரஜினி மற்றும் இதர படக்குழுவினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்கள்.

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் வரலட்சுமி!

வரலட்சுமி…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் டேனி, கன்னிராசி திரைப்படங்கள் வெளியானது. தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காட்டேரி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் டிசம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம் படங்களை இயக்கிய டீகே ‘காட்டேரி’ படத்தை இயக்கியுள்ளார். இதில் வரலட்சுமியுடன் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ஆத்மிகா, சோனம் பஜ்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படம் குறித்து வரலட்சுமி மாலைமலருக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, காட்டேரி திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. தியேட்டரில் எல்லோரும் ரசிக்கும் விதமாக டீகே இயக்கி இருக்கிறார்.

நான் இந்த படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளமே மிகவும் ஜாலியாக இருந்தது. இயக்குனர் டீகே, கதை சொன்ன விதமும், எடுத்த விதமும் எனக்கு பிடித்தது. டீகே இயக்கும் அடுத்த படத்திலும் நான் நடிப்பேன் என்று கலகலப்பாக கூறினார்.

மாஸ்டர் படக்குழு மீது ஆண்ட்ரியா அதிருப்தி?

ஆண்ட்ரியா…

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா, அப்படக்குழு மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சில தினங்களுக்கு முன் ஆண்ட்ரியாவின் பிறந்தநாளன்று மாஸ்டர் படக்குழுவினர் ஆண்ட்ரியா-விஜய் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதேபோல் மிஷ்கினின் பிசாசு 2 படக்குழுவும் ஆண்ட்ரியாவின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டனர்.

இதில் பிசாசு 2 பட போஸ்டரை மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள ஆண்ட்ரியா, மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புகைப்படத்தை லைக் கூட செய்யவில்லை.

இதனை பார்த்த ரசிகர்கள் மாஸ்டர் படக்குழு மீது ஆண்ட்ரியா அதிருப்தியில் இருக்கிறாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஆண்ட்ரியா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்திக்குச் செல்லும் ராஷ்மிகா மந்தானா!

ராஷ்மிகா மந்தானா…

தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகிறார்.

விஜய், சூர்யா அடுத்து நடிக்க உள்ள படங்களில் கதாநாயகியாக நடிக்க வைக்க ராஷ்மிகாவிடம் பேசி வருகிறார்கள் என்ற தகவல் வெளியானது. ஆனால், அவரோ பாலிவுட் பக்கம் தாவ முடிவு செய்துவிட்டார்.

ஷாந்தனு பாக்ச்சி இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா கதாநாயகனாக நடிக்கும் ‘மிஷன் மஜ்னு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாக உள்ளார் ராஷ்மிகா.

“நண்பர்களே, உங்களுக்கு ஒரு செய்தி, இதில் பங்கெடுப்பது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது.

ஒரு புதிய பயணம். பாகிஸ்தானுக்குள் ‘ரா’வின் துணிச்சலான மிஷன், நிஜ சம்பவங்களின் தாக்கத்தால் உருவாகும் ‘மிஷன் மஜ்னு’ என தனது டுவிட்டர் பதிவில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.

சங்கீதாவுக்கு முன் தளபதி விஜய் காதலித்த பெண் ! தோல்வியில் முடிந்த காதல் !

தளபதி விஜய்..

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியானது. தற்போது பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதனை அடுத்து முருகதாஸ் விஜய் படத்தை இயக்குவார், சுதா கொங்கரா விஜய் படத்தை இயக்குவார், வெற்றிமாறன் விஜய் படத்தை இயக்குவார், அருண் காமராஜ் விஜய் படத்தை இயக்குவார் என பல பெயர்கள் அடிபட்டு வந்தாலும் விஜய் டிக் செய்த டைரக்டர் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய வளர்ந்து வரும் நெல்சன் அவர்கள்தான்.

தற்போது அதிகம் பேட்டி கொடுக்காத விஜய் ஒரு காலத்தில் இவர் பேட்டி கொடுக்காத சேனல்களே இருக்காது. இந்த நிலையில் Industryக்கு வந்த புதிதில் ஒரு முன்னணி சேனலில் கொடுத்த பேட்டி ஒன்றில், அவரது முந்தைய காதலை பற்றி பல சுவாரஸ்ய விஷயங்களை கூறினார்.

அதில், “நான் 8ஆம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு பெண்ணை காதலித்தேன். அதன்பின் 12ஆம் வகுப்பிலும், கல்லூரியிலும் காதலித்தேன். எனக்கு காதல் தோல்விகள் இருக்கிறது”

இவ்வளவு கூறிய அவர் அந்த பெண்களின் பெயரை கூற மறுத்துவிட்டார். இதற்கிடையில் சினிமா துறைக்கு வந்த புதிதில் நடிகை சங்கவியை காதலித்தார் தளபதி என்பது கூடுதல் தகவல்.