தனுஷ் – செல்வராகவன் இணையும் புதிய படம் – முதல் அப்டேட் வெளியானது !

தனுஷ் – செல்வராகவன்…

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

கடைசியாக சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கிய செல்வராகவன், அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதனை அவரே சமீபத்தில் டுவிட்டர் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், அப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி கேமரா அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள செல்வராகவன், ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டதாக கூறி உள்ளார்.

மேலும் இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் நயன்தாரா!

நயன்தாரா…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறாராம்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் நயன்தாரா தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா, இவர் கைவசம் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் போன்ற படங்கள் உள்ளனர். இதில் மிலிந்த் ராவ் இயக்கும் நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதன் படப்பிடிப்பை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என ரஜினி திட்டமிட்டுள்ளதால், படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். நயன்தாராவும் இதற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.

அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடந்து வருவதால், அந்த படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறாராம்.

இந்த இரண்டு படங்களுக்கு ஒரே சமயத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளதால் நயன்தாரா இங்கும் அங்குமாக சென்று நடித்து வருகிறாராம்.

மிஷ்கின் படத்தில் பாடிய சூப்பர் சிங்கர் பிரபலம் !

சூப்பர் சிங்கர் பிரபலம்..

சைக்கோ படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகி ஒருவர் பாடி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். இவர் சைக்கோ படத்திற்குப் பிறகு பிசாசு 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார்.

இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான பிரியங்கா ஒரு அற்புதமான பாடலைப் பாடி இருப்பதாக மிஸ்கின் கூறியிருக்கிறார்.

பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

C/O காதல் படத்தின் ட்ரைலர் வெளியானது!

C/O காதல் ட்ரைலர்…

தனுஷின் இந்திப் பட படப்பிடிப்பு துவங்கியது!

தனுஷ்…

நடிகர் தனுஷை கடந்த 2013ல் வெளியான ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றவர் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆனந்த் எல்.ராய். அந்த படத்தை தொடர்ந்து தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘அட்ரங்கி ரே’ என்கிற படத்தில் மீண்டும் தனுஷ் ஆனந்த் எல்.ராய் இணைந்துள்ளனர்.

இது தனுஷ் நடிக்கும் மூன்றாவது இந்தி படம் ஆகும். அதுமட்டுமல்ல பாலிவுட் முன்னணி நடிகர் அக்சய் குமாரும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சாரா அலிகான் நடிக்கிறார் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 1ஆம் தேதி துவங்கிய நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இடையிலேயே நிறுத்தப்பட்டது. ஸ்காட்லாந்தில் நடைபெற்று வந்த பெல்பாட்டம் படப்பிடிப்பில் நடித்து வந்த அக்சய் குமார், சமீபத்தில் மும்பை திரும்பிய நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் உடன் நடித்தவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்?.. நயன்தாராவிற்கு நடந்தது இதுதானா?

நயன்தாரா…

தென்னிந்திய சினிமாவில் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க பல நடிகைகள் போராடி வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 14 ஆண்டுகளாக தன் நடிப்பு திறமையாக் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன் தாரா.

நடிகைகள் சிலர் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள், கவர்ச்சி காட்டும் சில நடிகைகள் சரியாக நடிக்க மாட்டார்கள். நயன் தனது திரை மற்றும் சொந்த வாழ்வில் பல துயரங்களை கடந்து வந்தும் கூட, இந்த மூன்றிலுமே டாப் கியரில் கொடி கட்டி பறக்கிறார்.

சோசியல் மீடியா பக்கமே வராமல் இருந்த நயன்தாரா, தற்போது சமூல வலைத்தளங்களில் செம்ம ஆக்டீவாக இருக்கிறார். காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு எங்கு போனாலும் சரி, கோவில், கோவிலாக ஆன்மீக பயணம் போனாலும் சரி சுட, சுட செல்ஃபி எடுத்து சோசியல் மீடியாவில் பதிவேற்றி விடுகிறார்.

தற்போது விளம்பர படங்களில் நடித்து வரும் நயன்தாரா. அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி ரசிகர்களை பித்துபிடிக்க வைக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் நயன்தாராவிடம் பிரபல இணையதளம் நடத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் நடித்ததற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

கொலையுதிர் காலம் படத்தில் நடித்ததை நினைத்து மிகவும் வெட்கப்படுவதாகவும், அந்த படத்தின் ஸ்க்ரிப்டை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டது தான் அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா.

தர்ஷனின் முன்னாள் காதலியின் சுயரூபத்தை உடைத்த பாலாஜி! அடுத்த ஜூலி இவங்க தானோ?

பாலாஜி..

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இரட்டை சண்டை பிடிப்பு தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த ஒற்றுமை இப்போது முற்றிலும் இல்லாமல் இருக்கிறது.

தற்போது புதிதாக சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ் அவர்கள் சண்டை செய்துள்ளானர், அதாவது கிச்சனில் ஜூஸ் போடும் போது கை படாமல் ஜூஸை போடுங்கள் என்று சனம் ஷெட்டி முஞ்சில் அடித்த படி கூறியுள்ளார்.

அப்படின குடிக்காதீங்க என்று பாலாஜி முருகதாஸ் கூறி விட்டார். இதனை மனதில் வைத்துக்கொண்டு பாலாஜி முருகதாஸ் எல்லோரும் கர்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் போது சமூக வலைத்தளத்தில் வரும் ஒரு விளம்பரப்பக்கம் போலியானது என்றும் விவாதம் செய்கிறார்.

உடனே சனம் ஷெட்டி அதில் நடித்திருந்ததால் அங்கிருந்து சென்று விடுகிறார், டின்னிங் ஏரியாவில் வைத்து மீண்டும் இந்த பிரச்சனை தொடங்குகிறது.

சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்படுகிறது, முடிவில் பாலாஜி முருகதாஸ் நான் அடித்து கூறுகிறேன் அந்த சமூக வலைதள பக்கம் போலியானது தான்.

அதில் செய்யப்படும் விளம்பரங்களும் போலியானது என்பதை வெளியே வந்து நான் நிரூபிக்கிறேன் என்றும் ஆணித்தனமாக தெரிவித்துவிட்டார். இதனால் சனம் ஷெட்டியின் மூக்கு உடைந்த தான் மிச்சம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தண்ணீரில் இளம் பெண்ணை தூக்கி பிக்பாஸ் பாலாஜி செய்த அட்டகாசம்- வீடியோ!

பாலாஜி…

பிக்பாஸ் வீட்ல சும்மா பிட்டான பையனா வந்திருக்கிறவரு பாலாஜி.

இவரு என் அப்பா குடிகாரன், அம்மாவும் குடிகாரனு தேம்பி தேம்பி அழ நம்ம பிக்பாஸ் ஆளுங்க அவர கட்டிபிடிச்சு அப்படியே தண்ணீர் மழையே வரவெச்சிட்டாங்க.

ஆனா இங்க வெளியில பாத்தா நம்ம தம்பி பாலாஜி தண்ணில செய்யாத அட்டகாசம் இல்ல.

சும்மா பீர கல்பா அடிக்கிறாரு, இப்ப பாத்தா தண்ணீல ஒரு இளம் பெண்ண அலேக்கா தூக்கி விளையாடுறாரு.

சரியான நேரத்தில் இணையும் ஹரி – அருண்விஜய்: ஆக்சன் விருந்து நிச்சயம் !

ஹரி – அருண்விஜய்..

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண்விஜய் இணைந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பும் தொடங்கவுள்ளது.

ஹரி மற்றும் அருண்விஜய் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்றாலும் இருவரும் பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் தற்போதுதான் முதல்முறையாக ஒரு திரைப்படத்தில் இணைகின்றனர். இருவரும் ஒருசில ஆண்டுகளுக்கு முன்னரே இணைய முயற்சி செய்தபோதிலும் தற்போதுதான் காலம் கனிந்துள்ளது.

அருண் விஜய் தற்போது ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து வந்துள்ளதும், அவர் தற்போது ஹரியின் படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கருதுவதாலும் தற்போது இருவரும் இணைந்துள்ளனர். எனவே இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இந்த படத்தின் வலிமையான கான்செப்ட் கொண்ட கதைக்கு அருண்விஜய் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் ஹரி கருதியதால் இந்த படத்தில் அருண்விஜய்யை அவர் பயன்படுத்துகிறார்.

இந்த படத்தின் கதை ஒரு எமோஷனல் ஃபேமிலி சப்ஜெக்ட் என்றும், ஆக்சன் மற்றும் காமெடி இணைந்த இந்த படம் தமிழ், தெலுங்கு திரையுலகில் வெற்றி பெறும் வகையில் இருக்கும் என்றும் இந்த படம் அருண்விஜய்க்கு தெலுங்கிலும் ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்தி தரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பல பிரபல நடிகர்களும் இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பாக காரைக்குடி, ராமநாதபுரம், தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும், ஒருசில காட்சிகள் சென்னையிலும் படமாக்க ஹரி திட்டமிட்டுள்ளார்.

விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் இன்று மாஸ் நடிகர்களாக இருப்பதற்கு ஹரியின் இயக்கத்தில் கிடைத்த வெற்றிப்படங்களும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் ஹரியின் இயக்கத்தில் நடிக்கும் அருண்விஜய்யின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது.

கல்லூரி நாட்களில் நடிகர் சிவகார்த்திகேயன் இப்படியா? இணையத்தில் பரவி வரும் காணொளி..!

நடிகர் சிவகார்த்திகேயன்………

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் திரையில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் விளம்பரங்களில் நடித்தும் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் ஆதரவை பெற்ற இவர், தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.

சிவகார்த்திகேயன் தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். பின்னர் மிமிக்ரி போன்ற தனித்திறமை கொண்டு மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு‘ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர். பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளான ‘சூப்பர் சிங்கர்’, ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்று தனது திறமை மூலம் மக்களின் கவனத்தை பெற்று பிரபலமானவர்.

‘அது இது எது‘ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வந்துள்ள இவர், இயக்குனர் அட்லீயின் ‘முகப்புத்தகம்‘ என்ற குறும்படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானார். பின்னர் நடிகர் அஜித் நடித்த ‘ஏகன்‘ திரைப்படத்தில் ஒரு குறிப்பிடப்படாத நடிகராக நடித்துள்ளார் மற்றும் தமிழ் திரைத்துறையில் சில விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

2012-ம் ஆண்டு வெளியான ‘மெரினா‘ படத்தில் நாயகனாக நடிக்க இயக்குனர் பாண்டிராஜ் அழைப்பினை தொடர்ந்து அப்படத்தில் நாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நடிகனாக அறிமுகமானவர்.

பின்னர் மெரினா படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடிக்க வாய்ப்புகளை பெற்று தற்போது தமிழ் திரைத்துறையில் ஒரு முன்ணிய நடிகராக உள்ளார்.

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒரு சில வருடங்களிலேயே கோலிவுட்டில் மிகச் சிறந்த நடிகர் என்று பெயர் பெற்றதோடு, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியவர். இவருக்கு இளைஞர்களை விட குழந்தை ரசிகர்கள்தான் அதிகம் என கூறலாம்.

கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்த வீடியோகள் இன்று வரை வைரலாகி வருகிறாது. அந்த வீடியோவில் சிறு பையனாக தோற்றமளிக்கும் சிவா… எப்படி சின்னத்திரையில் மிகவும் கலகலப்பாக இருப்பாரோ அதே போல அட்டகாசம் செய்து நண்பர்களுடன் சேர்ந்து அவருக்கு மிகவும் பிடித்த ஹீரோவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசனத்தை பேசி கலக்கியுள்ளார். இந்த காட்சி சிவாகார்த்திகேயன் வளர்ந்து வந்த நினைவின் அடையாளமாக இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் இதில் சிவா கைகட்டி மிகவும் பவ்யமாக இவர் நண்பர்களுடன் கொடுத்துள்ள போஸ்.. ரசிகர்களுக்கே இது சிவ கார்த்திகேயனா என்கிற ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.