அந்தகாரம் திரைவிமர்சனம்..!

அந்தகாரம்….

கதைக்களம்

அர்ஜுன் தாஸிற்கு ஒரு போன் கால் வந்துக்கொண்டே இருக்கிறது. அது அவரை மிகவும் டிஸ்ட்ர்ப் செய்கிறது. அந்த குரல் யார் என்று தேட ஆரம்பிக்கின்றார்.

அதே நேரத்தில் தன் கண் பார்வைக்காகவும், தன் அப்பா வாழ்ந்த வீட்டை காப்பாற்ற போராடுகிறார் வினோத்.

இதை காட்டும் அதே நேரத்தில் ஒரு மனநல மருத்துவர் தன் ஒரு பேஷண்டால் தன் குடும்பத்தை இழந்து, மீண்டும் தன் புதிய பேஷண்டுகளை ஏதோ செய்ய முயற்சிக்கிறார்.

இந்த மூன்று விஷயங்களும் ஒரு புள்ளியில் எப்படி சந்திக்கிறது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்..

அர்ஜுன் தாஸ் கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு நல்லா வரவு, தன் கனத்த குரலில் மிரட்டியும், அதே வேளையில் பயந்தும் நடிப்பில் அசத்தியுள்ளார்.

வினோத்தும் கண் தெரியாத இளைஞராக பேய் ஓட்டும் நபராக அவர் செய்யும் விஷயங்கள் நம்மை திகிலடைய செய்கிறது.

டெக்னீக்களாக படம் செம்ம வலுவாக உள்ளது, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்ன அனைத்தும் பிரமாதம்.

இயக்குனருக்கு இன்னும் பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதே வேளையில் எல்லோருக்கும் இது புரியுமா என்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது.

க்ளாப்ஸ்

நடிகர்களின் பங்களிப்பு

டெக்னீக்கள் விஷயங்கள்

கிளைமேக்ஸ் டுவிஸ்ட்

பல்ப்ஸ்

படத்தின் நேரத்தை குறைத்து இருக்கலாம்.

மொத்தத்தில் அந்தகாரம் முழுதிருப்தி சினிமா ரசிகர்களுக்கு.

 

என்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை?

சரவணன்…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சர்ச்சையான போட்டியாளர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் தான்.

ஏனென்றால், சனம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் டைட்டில் வின்னர் ஆனார் என குற்றம் சாட்டி இருந்தார். அதை சனம் ஒரு டாஸ்கில் கடிதத்தின் மூலமும் தெரிவிக்க அந்த ப்ரோமோவை விஜய் டிவி நீக்கி இருந்தது.

இதனால், கடுப்பான அந்த நிறுவனமான ஜே மைக்கல் என்பவர் பாலாஜி மீது வழக்கு தொடர்வதாகவும், மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் ஒரு கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான சரவணன், பாலாஜிக்கு ரெட் கார்டு அளிக்கப்படாதது குறித்து பேசியுள்ளார்.

அதில், உங்களுக்கு கொடுத்தது போல பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுப்படவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

அதற்கு, எனக்கு ஏன் நடந்தது என்பது எனக்கு இதுவரை தெரியவில்லை. நான் பிக்பாஸில் இருந்து வெளியே வந்து உடன் பேட்டி எடுத்தபோது அப்போதே சொல்லிவிட்டேன் பிக்பாஸ் பற்றி கேட்காதீர்கள் என்று.

அதனால், விஜய் டிவி பற்றியும் பிக்பாஸ் பற்றியும் நான் எங்கேயும் எப்போதும் பேசுவதில்லை. பாலாஜியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு ஏன் ரெட்கார்டு கொடுக்கவில்லை என்று கமல் சார் மற்றும் அவர்களது டீம் கிட்ட தான் கேட்க வேண்டும்.

என்னை பற்றியே எனக்கே தெரியவில்லை.. ஏன் அனுப்பினாங்க என்று, ஆனால் 46 நாள் நான் உள்ளே இருந்தவரை சந்தோஷமாக இருந்தேன் என கூறினார்..

மேலும், திரும்ப பிக்பாஸிற்கு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் போகவே மாட்டேன் என அதிரடியாக கூறியுள்ளார்.

Accident ஆவதற்கு முன்பு அஜித் செய்த மாஸ் Bike Wheelie ! வைரலாகும் புகைப்படம் !

அஜித்…

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு கார் பைக் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம். இந்த போட்டியில் கலந்து கொண்ட போது விபத்து ஏற்பட்டு இதனால் தனது முதுகில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார் அஜித்.

யார் வைத்த சூனியமோ தெரியல அவ்வபோது படப்பிடிப்பில், அப்போ அப்போ இவருக்கு Accident ஆகிறது. இருந்தாலும் ஷூட்டிங் நிற்க கூடாது என்பதால் தள்ளிப்போடமல் தொடர்ந்து அந்த வலியில் நடிக்கிறார். தற்போது கூட வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் Bike – இல் இருந்து கீழே விழுந்து, Just Miss-ல தப்பித்துவிட்டார்.

ஆனாலும் வலியோடு ஷூட்டிங் நிறுத்தாமல் கலந்து கொண்டார்.
இதனால் ரசிகர்கள் பெரும் வேதனை அடைந்தனர், தற்போது அவர் Bike Wheelie செய்வது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

சூரரை போற்று படத்தில் வரும் காட்டு பயலே பாட்டை Cute ஆக பாடிய Big Boss அபிராமி ! வைரல் வீடியோ !

அபிராமி வெங்கடாச்சலம்…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காக என்ன என்னவோ குட்டிக்கரணம் அடிக்கிறார்கள்.

இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் முகேன்னுடன் சுற்றி கொண்டிருந்தார்.

வெளியே வந்த பிறகு தல அஜித்திடம் பேசுவதற்கு Wait செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சூரரை போற்று படத்தில் இடம் பெற்ற காட்டுப்பயலே பாடலை பாடுகின்றேன் என கூறி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.

https://vimeo.com/484367477

 

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை திடீர் மரணம் ! கோலிவுட் இரங்கல் !

சிறுத்தை சிவா தந்தை..

மாஸ் மசாலா இயக்குநரான சிறுத்தை சிவா, முதலில் ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பலமுகம் கொண்டவர். சிறுத்தை என்னும் தெலுகு ரீமேக் படத்தின் மூலமாக சிறுத்தை சிவா என்றும் அழைக்கப்படுகிறார். தல அஜித் குமார் நடிப்பில் இவர் இயக்கிய வீரம் திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

பின்னர் இவர் மீண்டும் தொடர்ந்து 3 படங்கள் அஜித் குமார் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

விஸ்வாசம் படத்துக்கு பின் சிறுத்தை சிவா – அஜித் கூட்டணி பரவலாக பேசப்பட்டது. காரணம் அந்த படத்தின் வெற்றி.

அதிலும் நெஞ்சை நக்கும் அளவுக்கு சென்டிமெண்ட் காட்சிகளை மழைச்சாரல் போல தூவி சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் சிவா. இப்போது அண்ணாத்த படத்தில் ரஜினியை இயக்குகிறார்.

இப்படி ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் சிவாவின் வாழ்க்கையில் நேற்று அவரது தந்தை, ஜெயக்குமார் தி டீரென்று உடல்நலக்குறைவால் கா லமானார்.

இதனால் தமிழ் சினிமா உலகம் முழுவதும் இயக்குனர் சிவாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறது.

விஷாலின் ‘எனிமி’யில் இணைந்த பிரபல நடிகர்!

விஷால்…………

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ஒன்றை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார் என்ற செய்தி இணைய ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் எனிமி என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை விஷால் ஆர்யா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர் என்பதும் இந்த டைட்டில் போஸ்டருக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார்

ஏற்கனவே இந்த படத்தில் விஷால் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடித்து வரும் நிலையில் பிரகாஷ்ராஜுக்கு இந்த படத்தில் என்ன கேரக்டர் என்பது ரகசியமாக படக்குழுவினர்கள் வைக்கப்பட்டு உள்ளது

இன்னும் இரண்டு நாட்களில் எனிமி படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

மனைவியுடன் சாந்தனு நடிக்கும் படத்தின் டைட்டில்!!

சாந்தனு பாக்கியராஜ்……

பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி கிகிவிஜய்யும் இணைந்து ஒரு ஆல்பத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த ஆல்பத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் .

இந்த நிலையில் தற்போது இந்த ஆல்பத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. எங்க போற டி’ என்ற டைட்டில் இந்த ஆல்பத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தரண்குமார் இசையில் ஆர்ஜே விஜய் பாடல் வரிகளில் சாந்தனு பாடும் இந்த ஆல்பத்தை டாட் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் ஆல்பத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே நடன இயக்குனர் பிருந்தா ’ஹே அனாமிகா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அதில் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

மாஸ்டர் போஸ்ட்டரை அச்சுஅசலாக வரைந்த ரசிகர் ! வைரல் வீடியோ!!

தளபதி விஜய்……

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.39 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை ரசிகர் ஒருவர் நியூஸ்பேப்பர்களில் பெயிண்ட் அடித்து உருவாக்கியுள்ளார்.இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவரது வித்தியாசமான இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

ரோஜா சீரியல் நாயகியின் வைரல் நடனம் !

ப்ரியங்கா நல்காரி……..

சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் வரும் பிரபல தொடர்களில் ஒன்று ரோஜா.ப்ரியங்கா நல்காரி இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சிபு சூரியன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.வடிவுக்கரசி,ஷாமிலி சுகுமார்,பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வரும் ப்ரியங்கா மற்றும் சிபு சூரியன் இருவருக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து இந்த தொடரின் ஷூட்டிங் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.விறுவிறுப்பாக இந்த தொடரின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரின் புதிய எபிசோடுகள் ஜூலை 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தன.யாஷிகா ஆனந்த் இந்த தொடரில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.இந்த எபிசோடுகளும் நல்ல வரவேற்பை பெற்றன.

ரசிகர்களின் ஆதரவோடு 600 எபிசோடுகளை கடந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரின் நாயகி ப்ரியங்கா நல்காரி தனது புதிய நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

View this post on Instagram

 

A post shared by PRIYANKA NALKARI (@nalkarpriyanka)

வேகம் எடுக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் ! விவரம் இதோ…..

அயலான்……..

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சில பிரச்சனைகளால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் சென்னையில் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டது.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் 75% நிறைவடைந்துள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் சயின்ஸ் பிக்க்ஷன் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகலும் அதிகம் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.

அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து , இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயன்,ரகுல்,யோகி பாபு,கருணாகரன் உள்ளிட்டோர் இருப்பது போல புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தை விரைவில் பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.