சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாரான சுவாதி!! கசிந்த உண்மை தகவல்!!

சுவாதி……..

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை சுவாதி, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடலில் சுவாதியின் நடிப்பு பேசப்பட்டது.

தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, எட்சன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். 2018-ல் சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். தற்போது ஐதராபாத்துக்கு திரும்பி பெற்றோருடன் வசிக்கிறார். சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். சில படங்களில் நடிக்க வாய்ப்புகளும் வந்துள்ளன.

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது…. ஹீரோ யார் தெரியுமா?

மாயாண்டி குடும்பத்தார்……….

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாகவும், அதில் இளம் நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராசு மதுரவன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘மாயாண்டி குடும்பத்தார்’. குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி உள்பட 10 இயக்குனர்கள் நடித்திருந்தனர்.

இந்நிலையில், ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தை ‘ஒரு கல்லூரியின் கதை’ படத்தை இயக்கி பிரபலமான நந்தா பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட்டி பாப்பா வந்தாச்சு! அப்பாவான நடிகர்! குழந்தை பிறந்தாச்சு – புகைப்படம் இதோ!

அர்ஜூன் அஷோகனுக்கு…….

சினிமா பிரபலங்கள் வீட்டில் விசேஷம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு என வந்துவிட்டால் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் இயல்பான முறையில் படப்பிடிப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மற்ற மொழி சினிமா வட்டாரத்திலும் இதே நிலை தான்.

இந்நிலையில் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அர்ஜூன் அஷோகனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.

இதுகுறித்த செய்தியை அவரே குழந்தையின் புகைப்படத்துடன் எங்கள் இளவரசி வந்துவிட்டார் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Arjun Ashokan (@arjun_ashokan)

விஜய் ஏற்கனவே ஓகே செய்து வைத்திருந்த கதையில், தற்போது சூர்யாவா.! இணையத்தில் கசிந்த தகவல்!!

சூர்யா 40…….

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக சிறந்த விமர்சங்களை சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் சூர்யா 40. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

மேலும் இப்படத்தின் கதையை எதற்கு முன் தளபதி விஜய்யிடம் கூறி ஓகே செய்யப்ட்டிருந்ததாம். ஆனால் தற்போது இப்படம் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ளது.

வாணி போஜனின் அடுத்த பட ஹீரோ ஒரு தயாரிப்பாளரா?

வாணி போஜன்………

’தெய்வமகள்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த நடிகை வாணி போஜன் சமீபத்தில் வெளியான ’ஓ மை கடவுளே’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து வாணி போஜனுக்கு திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஏற்கனவே வாணி போஜன் இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் நடிக்க உள்ள மேலும் ஒரு திரைப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. வாணி போஜன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை மார்க் ஜோல் என்பவர் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமின்றி தயாரிக்கவும் செய்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர். ஸ்டான்லி சேவியர் இசையமைக்கும் இந்த படத்திற்கு விக்னேஷ் ஒளிப்பதிவாளராக பணிபுரிய உள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் வாணிபோஜன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும்’கேசினோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் நடித்த ’சச்சின்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடன இயக்குனர் பிருந்தா படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்!!

நடன இயக்குனர் பிருந்தா…..

பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் ’ஹே அனாமிகா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிருந்தா இயக்கவுள்ள இன்னொரு படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பிருந்தா இயக்கும் அடுத்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி கிகிவிஜய் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ‘பாரிஜாதம்’, ‘லாடம்’, ‘போடா போடி’, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா? உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்துள்ளார். டாட்சன் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பான இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய பிக்பாஸ் வீடு… ஹோட்டலில் போட்டியாளர்கள்… பிக்பாஸ் தொடருமா?

பிக்பாஸ் வீடு………

போட்டியாளர்கள் அத்தனை பேர் முகத்திலும் கலவரமாம். சிலருக்கு மரண பயம். ”நாங்க ஷோவிலிருந்தே வெளியேறிக் கொள்கிறோம்… ஆளை விட்டுடுங்க” என்றே கேட்டிருக்கிறார்கள்

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. தினமும் விதவிதமான டாஸ்க்குகளைத் தந்து நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் பேச வைத்துக் கொண்டிருந்த பிக்பாஸுக்கே பெரிய டாஸ்க் தந்துவிட்டது இயற்கை.

ஆமாம்… இருதினங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்திலிருக்கும் பிக்பாஸ் வீட்டை மழை நீர் சூழ்ந்திருக்கிறது. வீட்டின் கார்டன் ஏரியா, நீச்சல் குளம் முழுக்க இடுப்பளவு தண்ணீர் புகுந்து விட்டதாம்.

தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டதாலும் (ஏரிக்கும் பிக் பாஸ் வீடு அமைந்திருக்கும் இடத்துக்குமிடையிலான தூரம் சில கிலோமீட்டர்கள்தான்) நேற்று (25/11/20) காலையிலிருந்தே ஒருவித அசாதாரண சூழல் அந்த வீட்டுக்குள் நிலவியிருக்கிறது.

போட்டியாளர்கள் அத்தனை பேர் முகத்திலும் கலவரமாம். சிலர், “நாங்க ஷோவிலிருந்தே வெளியேறிக் கொள்கிறோம்… ஆளை விட்டுடுங்க” என்றே சொன்னார்களாம்.

நிலைமையை உணர்ந்து கொண்ட சேனல் துரிதமாகச் செயல்பட்டு பூந்தமல்லியில் அமைந்திருக்கும் பிரபல தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களைத் தங்க வைக்க முடிவு செய்தது.

அதன்படி நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் போட்டியாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக நான்கு வாகனங்களில் அதி தீவிரப் பாதுகாப்புடன் அந்த ஹோட்டலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்டிருக்கிறார்கள்.

நேற்று இரவு முழுக்க அந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தனர் போட்டியாளர்கள். தற்போது தண்ணீரை வெளியேற்றும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அந்த வேலைகள் முடிவடைந்தால் போட்டியாளர்கள் இன்று இரவு மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள்.

இந்த மழை சூழலால் நேற்று ஒளிபரப்பாக வேண்டிய காட்சிகளில் பலவற்றை எடுத்து இன்று ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறார்கள். இதுதவிர பழைய காட்சிகள் சிலவற்றை இன்றைய எபிசோடில் இணைத்து ஒளிபரப்பிவிட்டு இன்றைய நாளை சமாளித்துவிடுவார்கள்.

RJ பாலாஜியின் மனைவி இவங்க தானா.. அட இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே இதோ அவரது புகைப்படம்..!!

RJ பாலாஜி………

ரோடியோவில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர்.ஜே.பாலாஜி, இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். சென்னை வெள்ளத்தின் போது தனி மனிதன் நினைத்தால் ஒரு பட்டாளத்தையே திரட்ட முடியும். என்பதை நிரூபித்து காட்டினார். அப்படிப்பட்ட மண்ணின் மைந்தன் ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்த நாள். இந்நாளில் அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

ஆர்.ஜே.பாலாஜியின் குடும்பம் அவரது தந்தையால் கைவிடப்பட்டது. அதன் பின்னர் அவரது அம்மா தான் இருந்து ஆர்.ஜே.பாலாஜியை ஆளாக்கினார். பள்ளியில் படித்த காலத்தில் ஆர்.ஜே.பாலாஜி 19 பகுதிகளில் 27 வீடுகள் மாறியுள்ளதாகவும், 10 பள்ளிகளில் படித்துள்ளதாகவும் அவரே தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பில் தோல்வியடைந்த ஆர்.ஜே.பாலாஜி, பின்னர் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

அதன் பின்னர் பி.எஸ்.சி. கம்யூட்டர் சைன்ஸில் பட்டம் பெற்றார்.12ம் வகுப்பில் தோல்வியடைந்த ஆர்.ஜே.பாலாஜி, பின்னர் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அத்தோடு நிறுத்திக்கொள்ளாத ஆர்.ஜே.பாலாஜி கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக ஆர்.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கினார்.

ஹலோ கோயம்புத்தூர்” என்ற பெயரில் ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பட்டையக் கிளப்பியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை வந்தார். சென்னையில் உள்ள பிக் எப்.ஃஎம்மில் வேலைக்கு சேர்ந்த ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கிய கிராஸ் டாக் என்ற நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தெரியாத ஒருவருக்கு போன் செய்து கலாய்க்க கூடிய அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பாலாஜி செம்ம சூப்பராக கையாண்டார்.பெயரும் புகழும் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர் கிடையாது. கொஞ்சம் சமூக சிந்தனையும் கொண்டவர். லண்டனில் “க்ராஸ் டாக்” போன்ற நிகழ்ச்சியால் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள உடனடியாக அந்த மாதிரி ஷோவை இனி செய்ய மாட்டேன் என கைவிட்டார்.

இப்போது ஆர்.ஜே.பாலாஜி கோலிவுட்டின் ஒரு அங்கமாக இருந்தாலும் எப்.எம்மில் பணியாற்றி வந்த காலத்தில் சினிமா படங்களையும், திரைப்பிரபலங்களையும் செமையாக கலாய்த்துள்ளார். ஆர்.ஜே.வாக வாழ்க்கையை ஆரம்பித்து காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்ற ஆர்.ஜே.பாலாஜி இப்போது நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

ஆர்.ஜே.வாக வாழ்க்கையை ஆரம்பித்து காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பெயர் பெற்ற ஆர்.ஜே.பாலாஜி இப்போது நடிகராக வளர்ந்து நிற்கிறார். தற்போது நயன்தாராவை வைத்து “மூக்குத்தி அம்மன்” படத்தை இயக்கி, நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி அதன் வெளியிட்டிற்காக காத்திருக்கிறார். அவருடைய இயக்குநர் அவதாரம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்களுக்கும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மகேஷ்பாபு – விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை பட விமர்சனம் !

இவனுக்கு சரியான ஆள் இல்லை…

மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன் இராணுவத்தில் நாயகன் மகேஷ் பாபு குழுவில் பணிபுரிந்து வருகிறார். மகள் திருமணத்திற்காக இரண்டாவது மகனை அழைக்கிறார் விஜயசாந்தி.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக இரண்டாவது மகனும் இறந்து விடுகிறார். மகன் இறந்த செய்தி அறிந்தால் திருமணம் நின்று விடும் என்பதால், திருமணம் நடந்து முடிந்த பிறகு விஜயசாந்தியிடம் சொல்லலாம் என்று அந்த ஊருக்கு செல்கிறார் மகேஷ் பாபு.

சென்ற இடத்தில் விஜய சாந்திக்கும் அந்த ஊரில் இருக்கும் பிரகாஷ்ராஜுக்கும் பிரச்சனை இருப்பதை மகேஷ்பாபு அறிகிறார். இறுதியில் விஜய சாந்திக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையேயான பிரச்சனையை மகேஷ்பாபு தீர்த்து வைத்தாரா? மகன் இறந்த செய்தியை விஜயசாந்திடம் சொன்னாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேஷ் பாபு தனக்கே உரிய பாணியில் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா துறுதுறு நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பேராசிரியராக வரும் விஜயசாந்தி கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.

ஆக்ஷன் கலந்து குடும்பபாங்கான படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அனில் ரவிபுடி. பரபரப்பாக தொடங்கும் திரைக்கதை போகப்போக அடங்கிவிடுகிறது. மகேஷ் பாபு ரயிலில் ஊருக்கு வரும் காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம். காமெடி என்ற பெயரில் ரசிகர்களை கடுப்பேத்துகிறார் இயக்குனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது. ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மொத்தத்தில் ‘இவனுக்கு சரியான ஆள் இல்லை’ சுவாரசியம் குறைவு.

ரசிகர்களை இழக்கிறாரா ரம்யா பாண்டியன்?

ரம்யா பாண்டியன்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் போட்டியாளர் ரம்யா மட்டுமே. குறிப்பாக சுரேஷ் சக்ரவர்த்தி இடமிருந்து எவிக்சன் பாஸை திறமையாக பெற்று அதை அவர் ஆஜித்துக்கு விட்டுக் கொடுத்த பின் அவருடைய இமேஜ் வேற லெவலுக்கு சென்றது மட்டுமின்றி அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை எகிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வீட்டில் புத்திசாலித்தனமாகவும் அழகாகவும் இருக்கும் ஒரே போட்டியாளர் ரம்யா தான் என்று அவரது ஆர்மியினர் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது ரசிகர்களை இழந்து வருவது போல் தெரிகிறது.

குறிப்பாக ஆரிக்கு எதிராக யார் சண்டை போட்டாலும் உடனே அவர்களுக்கு ஆதரவாக ரம்யா சொம்பு தூக்குகிறார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா கூறிய கருத்துக்கு ஆதரவாக ரம்யா பேசுவது பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

ஏனெனில் இதற்கு முன்னர் நடந்த நீதிமன்ற டாஸ்க்கில், ‘ஒரு பெண்ணிடம் பேச கூட தெரியவில்லை, இவனெல்லாம் வந்துட்டான் பிக்பாஸ் வீட்டுக்கு, இவனுக்கெல்லாம் வளர்ப்பு சரியில்லை என்று அப்போதும் ரம்யாவிடம் தான் சம்யுக்தா கூறினார். ஆனால் அவ்வாறு சொல்வது தவறு என்று ரம்யா சம்யுக்தாவிடம் கூறவில்லை.

ஆரிக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக ரம்யா பேசுவதும் ஆஜித்துக்கு ஆதரவாக மட்டுமே இருப்பதும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி உள்பட மற்ற சண்டைகளை எல்லாம் வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் ரம்யா,

ஒருசில சண்டைகளில் மட்டுமே தனது ஆதரவை தெரிவிக்கும் பாணியை மாற்றிக் கொள்ளாவிட்டால் ரம்யாவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் அபாயம் உள்ளது என்று என்று தெரிகிறது.