பிக்பாஸ் வீடு முழுக்க வெள்ளம் – ஆளை விடுங்க சாமி என ஓடிய போட்டியாளர்கள் – தொடருமா பிக்பாஸ் ?

பிக்பாஸ்…….

இந்த வருஷம் 2020 ஆரம்பிச்ச நாள் முதல் பி ரச்சனை – விறுவிறு சுறு சுறு என ஆரம்பித்த இந்த வருடம் மார்ச் மாதம் முதல் தற்போது வரை Lock Down தான். இந்தநிலையில், கொஞ்சம் Entertainment ஆக போய் கொண்டிருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 – இல் தினமும் விதவிதமான டாஸ்க்குகளைத் தந்து இந்த நிகழ்ச்சியை பேசும் பொருளாக்கி விட்டார். தற்போது, எல்லோருக்கும் Task கொடுத்த Big Bossக்கே Task கொடுத்துவிட்டது இயற்க்கை.

நிவர் புயலால் இருதினங்களாகப் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் இருக்கும் பிக்பாஸ் வீட்டில் இடுப்பளவு தண்ணீர் வந்து விட்டது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் Housemates சிலர், “ஆளை விடுங்க சாமி” என்று எஸ்கேப் ஆக பார்க்கிறார்களாம்

உடனே சேனல் புத்திசாலித்தனமாக பிரபல தனியார் ஹோட்டலில் எல்லா போட்டியாளர்களைத் தங்க வைத்துள்ளார்கள்.

வீட்டில் புகுந்த தண்ணியை அகற்றும் வேலைகள் முடிந்துவிட்டால், வழக்கம் போல் போட்டியாளர்கள் இன்று இரவு மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள்.

இதனால் Episode பாதிக்காத விதத்தில், நேற்று நடந்த சிலவற்றை இன்றைய எபிசோடில் இணைத்து ஒளிபரப்பிவிட்டு இன்றைய நாளை சமாளித்துவிடுவார்கள்.

அனிதாவுடன் கூட்டணி சேர்ந்து ரியோவுடன் மல்லுக்கு நிற்கும் சனம் !

பிக் பாஸ்…

பிக் பாஸ் வீடு நேற்று முன்தினம் முதல் கால் சென்டராக மாறி இருக்கிறது. போட்டியாளர்கள் இதில் கேட்கும் சில கேள்விகளை பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று ரியோ அஜித்துக்கு போன் செய்து பேசி இருக்கிறார். வீட்ல எல்லாமே கேம், எல்லாமே strategy என யாரு சொல்வது என ஆஜித்திடம் ரியோ கேட்க, அதற்கு அவர் பாலா சொல்றார் என பதில் சொல்கிறார்.

அனிதா, சனம் போன்றவர்கள் நாங்கள் அனைத்தையும் கேம் ஆக தான் பார்ப்போம் என சொல்லும் போது, அவர்களின் friendship அழகாக இருக்கிறது என ரியோ சொல்ல, இதையெல்லாம் ஏன் ஆஜித்திடம் சொல்றாரு ரியோ என்று தான் நம் மனதில் ஒரு கேள்வி எழுகிறது. அதை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரம்யாவே கேட்டுவிட்டார். பாலாவிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் இவர் ஆஜித்திடம் கேட்டுக்கொண்டு இருக்கிறார் என கலாய்த்துள்ளார்.

மேலும் ரியோ தொடர்ந்து அன்பு.. அன்பு.. என பல விஷயங்களை பேசுகிறார். இந்த வீட்டில் அன்பை எதிர்பார்ப்பது தப்பா ? என்கிற கேள்வியையும் அவர் கேட்டிருக்கிறார். இப்படி ரியோ அன்பு பற்றி பேசி இருப்பது நெட்டிசன்கள் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது.

ஜித்தன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டில் ஒரே ஒரு முறை போரிங் போட்டியாளர் என ஜெயிலுக்குப் போனார். ஆனால், அதற்கு பிறகு அர்ச்சனாவின் கேங்கில் ஐக்கியம் ஆகி, ஜெயிலுக்குப் போவதை சூப்பராக தவிர்த்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் ஜித்தனாக ரமேஷ் இருந்தால் ஜித்தியாக இருப்பது ரம்யா பாண்டியன் தான். ரமேஷுக்கு கால் போட்ட அவர், என்னை நாமினேட் பண்ணனும்னா என்ன ரீசன் சொல்வீங்க என ஆரம்பித்தார்.

நீங்க சைலன்ட் கில்லர், சிரிச்சுன்னே ஊசி போடுவீங்க என ஜித்தன் ரமேஷ் கொஞ்சமும் யோசிக்காமல் அடித்து விட்டார்.ஜித்தன் ரமேஷ் சொன்னதை கேட்டதும், கடுப்பான ரம்யா பாண்டியன், ஒரு நிமிடம் சந்திரமுகியாக மாறிவிட்டு, பின்னர் மீண்டும் பொறுமையை கையாண்டு, ரமேஷுக்கு எப்படி ஆப்பு வைக்கலாம் என யோசித்து, நிஷாவை நாமினேட் பண்ணனும்னா என்ன சொல்லுவீங்க என்று கொக்கிப் போட்டு ஸ்கோர் பண்ணார்.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், அனிதாவுடன் கூட்டணி சேர்ந்து ரியோவுடன் மல்லுக்கு நிற்கிறார் சனம். தன் தவறை உணர்ந்த ரியோ, பிக்பாஸ் முன்பு நடந்ததை விவரிக்கிறார். அடுத்த சண்டை தயார் நிலையில் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

பிக்பாஸ் வீட்டில் நுழைவது குறித்து பதிவு செய்த பிரேம்ஜி !

பிரேம்ஜி…

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தனர்.

நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கும் விதமாக பல்வேறு டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு தருவது வழக்கம். பிரச்னைகளை கிளப்பிவிட்டாலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என்றே பார்வையாளர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பிக்பாஸ் சீசனில் குசும்புத்தனம் செய்து கொண்டு அவ்வப்போது வெடிகளை கொளுத்திப் போட்ட சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது நிகழ்ச்சிக்கு பலவீனமானது.

ரசிகர்கள் தாண்டி திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகர் பரத், பிக்பாஸ் குறித்து பதிவு ஒன்றை செய்தார். அதில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள். அவர்களிடம் கன்டென்ட் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்திருக்கும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி, நாம் இரண்டு பேரும் உள்ளே செல்வோமா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த உரையாடலை பார்த்த நெட்டிசன்கள் பிரேம்ஜி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் நிகழ்ச்சி காமெடியாகவும், பிக்பாஸ் வீட்டினர் கலகலப்பாக இருப்பார்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். பிரேம்ஜி ஸ்டைலில் கூறவேண்டும் என்றால், எவ்ளோவோ பண்ணிட்டோம்…இத பண்ணமாட்டோமா !!!

தமிழ் திரையுலகில் நடிகர், காமெடியன், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் பிரேம்ஜி. இசை சுனாமியான பிரேம்ஜிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நெட்டிசன்களில் இவரும் ஒருவர். இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி, 2003-ம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன் பின் தொடர்ந்து பல வெற்றி படங்களில் பிரேம்ஜி நடித்தார். சென்னை 28 திரைப்படத்தில் பிரேம்ஜி பேசிய என்ன கொடுமை சார் இது வசனம் இவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

படங்களில் நடித்துள்ளார். அதன் பின் தல அஜித்தின் மங்காத்தா படத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சத்திய சோதனை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், முழுக்க காமெடி பாணியில் இந்த படம் தயாராகி வருகிறது.

மழையில் நனைந்தபடி தண்ணீர் சொட்ட சொட்ட புடவையில் போட்டோ ஷுட் நடத்திய பிக்பாஸ் புகழ் சாக்ஷி- வைரல் புகைப்படங்கள்!

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸ் 3வது சீசனில் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

நிகழ்ச்சியில் இருக்கும் வரை மிகவும் தைரியமாக எல்லா விஷயங்களை எதிர்த்து வந்தார்.

நிகழ்ச்சி முடிந்த பின் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது மாடர்ன் போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்தார்.

இந்த நிலையில் அவரது வீட்டு மாடியில் மழையில் நனைந்தபடி தண்ணீர் சொட்ட சொட்ட புடவையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரிலீசுக்கு தயாரான சனம் ஷெட்டியின் எதிர்வினையாற்று..!

எதிர் வினையாற்று…

இளம் டாக்டரான அலெக்ஸ், தாயின் அருள் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் எதிர் வினையாற்று. யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். ஆடுகளம் நரேன் , லட்சுமி பிரியா, சம்பத்ராம், அனுபமா குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி அலெக்ஸ் கூறியதாவது: தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன.

சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே படத்தின் கதை. என்றார்.

ஹாலிவுட் செல்லும் பிக்பாஸ் சாக்சி அகர்வாலுக்கு ஆசி வழங்கிய பாரதிராஜா!

சாக்சி அகர்வால்..

பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால் ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஆசி வழங்கிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, இந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார்.

பலரின் பாராட்டை பெற்ற ‘வல்லதேசம்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் N.T.நந்தா. தற்போது 120 hours என்ற ஹாலிவுட் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டு, நந்தாவிற்கு ஆசி வழங்கியுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் N.T.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குநராக வலம் வரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் நந்தா டிரெய்லரில் மிரட்டியிருக்கிறார் என்று புகழ்ந்த பாரதிராஜா இந்த படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் சாக்சிஅகர்வால் மற்றும் பிரணய் காளியப்பன் ஆகியோர்களுக்கும் ஆசி வழங்கியுள்ளார்.

மேலும் இந்த படம் குறித்து பாரதிராஜா கூறியபோது, ‘தமிழர்களின் இதயத்துடிப்பெல்லாம் இப்போது, பிக்பாஸில் தான் இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களையெல்லாம், தங்கள் வீட்டிற்குள் இருப்பவர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.

அந்த வகையில் சாக்சி அகர்வால் தமிழர்கள் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலம். பாலிவுட்டில் இருப்பவர்கள் மட்டும்தான், ஹாலிவுட்டை கலக்க முடியும் என்ற விதியை மாற்றி, சாக்சி அகர்வாலின் நடிப்பின் அசாத்தியமான திறமையைப் பார்த்த நந்தா அவரை ஹாலிவுட்டில் அறிமுகம் செய்திருக்கிறார். சாக்ஷி அகர்வாலின் இந்த அறிமுகம், அவரை சினிமாவின் அடுத்த தளத்திற்கு கொண்டு போகுமென அவர் நம்புகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் பால் டெர்ரி, சீன் க்ரோனின், உள்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பணிபுரிந்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் மாஸ் பட்ஜெட் ஹாலிவுட் படமா?

ஏஆர் முருகதாஸ்…

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.

ஆனால் திடீரென இந்த படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் ஒரு சில காரணங்களால் விலகிக் கொண்டார். இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி கோலிவுட் திரையுலகில் எழுந்து வந்தது.

இதனை அடுத்து தற்போது ஹாலிவுட் நிறுவனமான டிஸ்னி பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இந்த படம் ’தி லயன் கிங்’ போன்ற முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

லைவ் ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் திரைப்படத்தை டிஸ்னி நிறுவனத்திற்காக ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் தமிழ் இயக்குனர் ஒருவர் முதல் முறையாக உலகத்தரத்தில் ஒரு லைவ்ஆக்சன் மற்றும் அனிமேஷன் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்? பாலாஜிக்கு குறும்படம்!

பிக்பாஸ்…

நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவின் கேப்டன்ஷிப் குறித்து ஆரி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை சொல்ல, போட்டியாளர்களில் ஒருசிலர் பொங்கி எழுந்தனர். ஒட்டுமொத்தமாக ஆரியிடம் அவர்கள் வாக்குவாதம் செய்ய, பிக்பாஸ் வீடே ஒரே களேபரமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தின நிகழ்ச்சியில் இந்த சண்டை குறித்து ஆரி கூறியபோது, ‘ஒரு கேங்கில் இருக்கும் ஐந்து பேர் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்து ஆடுவிய? அல்லது உன்னை நம்பி இந்த வீட்டில் இருப்பியா? என்று ரியோ குறித்து கூறுகிறார்.

அப்போது குறுக்கிடும் பாலாஜி, ‘இதைதான் நானும் சொன்னேன். எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரே விஷயம், எல்லோருக்கும் பாசம், ரிலேஷன் வச்சு எல்லாரையும் மெண்டல் பிளாக் செய்து அவங்களே குடும்பமாக உட்கார்ந்து விளையாட போறாங்க, அதை நான் விடமாட்டேன்’ என்று கூறுகிறார்.

மேலும் பத்து நாள் ஓய்வு எடுத்தபின் எல்லாம் தெளிவாக புரிகிறது என்றும், எங்கே அடிக்க வேண்டும், எங்கே அடிக்கக்கூடாது என்று புரிகிறது என்றும் பாலாஜி கூறுகிறார். எனவே இனி அர்ச்சனா குருப்புக்கு சிம்மசொப்பனமாக பாலாஜி மாறுவார் என்பது இந்த குறும்படத்தில் இருந்து தெரிகிறது.

2 வருடத்தில் 4 முறை த ற்கொ லைக்கு முயன்றேன் – சுல்தான் பட நடிகர் சொல்கிறார்..!

அமித் சாத்…

2 வருடத்தில் 4 முறை த ற் கொ லைக்கு முயன்றேன் – சுல்தான் பட நடிகர் சொல்கிறார். இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் த ற் கொ லை செ ய்து கொ ண் டது திரையுலகை உலுக்கியது.

இந்த நிலையில் இன்னொரு நடிகரும் 4 தடவை த ற் கொ லை க்கு மு யன்ற அ தி ர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

அவரது பெயர் அமித் சாத். இவர் சல்மான்கானின் சுல்தான் படத்தில் நடித்து பிரபலமானார்.

சூப்பர், கோல்டு, அகிரா, யாரா, சகுந்தலா தேவி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

அமித் சாத் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு சில காரணங்களால் த ற் கொ லை உ ணர்வு ஏற்பட்டது. 16-வது வயதில் இருந்து 18-வது வயது வரை 4 தடவை த ற் கொ லை க்கு மு ய ற்சி செ ய் தேன். தி டீரென்று எனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.

த ற் கொ லை செ ய் து கொ ள் வது சரியான மு டிவு அல்ல என்று உணர்ந்தேன். ப யத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்தேன். த ற் கொ லை உ ணர்வில் இருந்து வெளியே வருவதில்தான் உண்மையான வலிமை இருக்கிறது. வாழ்க்கை நமக்கு கிடைத்துள்ள பரிசு” என்றார்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி?

மோகன் ராஜா…

தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கி உள்ள மோகன் ராஜா அடுத்ததாக தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.

தமிழில் மொழி, சத்தம் போடாதே, பாரிஜாதம், அபியும் நானும், காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.

இப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது.

மோகன் ராஜா, லூசிபர் பட போஸ்டர், சிரஞ்சீவி இந்நிலையில், இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் ஏற்கனவே தமிழில் ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், வேலைக்காரன், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.