அனுஷ்காவுக்கு பதிலாக இந்த நடிகை தான்! வெளியானது மிரட்டலான டிரைலர் – திகில் பட ரிலீஸ்!

பூமி பெட்னேகர்…

அனுஷ்கா நடிப்பில் கடந்த 2018 ல் ஹாரர் திரில்லர் கதையுடன் தமிழ், தெலுங்கில் வெளியான படம் பாகமதி. தெலுங்கு வட்டாரத்தில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்தது.

அனுஷ்காவிற்கென தனி ரசிகர்கள் வட்டாரமும், சினிமா மார்க்கெட்டும் உண்டு. ஹீரோயினை மையப்படுத்தியக கதைகளாக அருந்ததி, ஜீரோ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்படம் அவருக்கு கை கொடுத்தது.

அண்மையில் அவரின் நடிப்பில் வெளியான நிசப்தம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது பாகமதி படம் ஹிந்தியில் துர்காமதி என ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அனுஷ்காவின் மிரட்டலான கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை Bhumi Pednekar நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படம் அவரும் டிசம்பர் 11 ல் அமேசான் தளத்தில் பிரீமியர் செய்யப்படவுள்ளதாம்.

விஜய்யின் மாஸ்டரில் நடித்தால் கூட இந்த ரீச் கிடைக்காது- தளபதி படத்தில் நடிக்க மறுத்த தொலைக்காட்சி பிரபலம்!

புகழ்…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள்.

தற்போது இந்த படத்தில் வேறொரு காரணத்தால் நடிக்க மறுத்துள்ளார் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழ்.

அவர் ஒரு பேட்டியில், விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை.

காரணம் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு பெரிய ரீச்சை கொடுத்தது, அதுபோல ரீச் மாஸ்டர் படத்தில் நடித்தால் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

ஒரே நேரத்தில் இரு வாய்ப்பும் வந்ததால் என்னால் மாஸ்டரில் நடிக்க முடியவில்லை.

கண்டிப்பாக அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என கூறியுள்ளார்.

காற்றின் மொழி வைஷ்ணவி திருமணம்: காதலரை மணந்தார்..!

வைஷ்ணவி…

கொரோனா ஊரடங்கு காலம், அதற்கு முந்தைய மாதங்களில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள தற்போது எளிமையாக நடந்து வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட சின்னத்திரை நடிகைகளின் திருமணங்கள் கடந்த 2 மாத்தில் மட்டும் நடந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை வைஷ்ணவி ராஜசேகர் திருமணமும் நடந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி தொடரில் ரோஸி என்ற கேரக்டரில் நடித்து வருகிறவர் வைஷ்ணவி.

அவரது வெள்ளந்தி சிரிப்புக்கும், வெடி பேச்சுக்கும் தனி ரசிகர் வட்டமே உள்ளது.

வைஷ்ணவி சாய் விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். தற்போது இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்துள்ள.

இதில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமண படங்களை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டிருக்கிறார் வைஷ்ணவி. வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மூக்குத்தி அம்மன் மாதிரியே பளிச்சென புகைப்படம் வெளியிட்ட வாணி போஜன் !

வாணி போஜன்…

Air Hostess – ஆக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.

அந்த வகையில் தற்போது, மூக்குத்தி பளிச் என தெரிவது போல் கேஷுவலாக ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி. இளசுகள் இதை பார்த்து, “”என்ன செல்லம், மூக்குத்தி அம்மன் மாதிரியே இருக்க” என்று ஜாலி செய்கிறார்கள்.

ரத்தம் சொட்ட சண்டை காட்சியை முடித்துக் கொடுத்த தல அஜித் ! நெகிழ்ச்சியில் ரசிகர்கள் !

அஜித்…

நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது.

இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், கடந்த ஞாயிறு அன்று இந்த படத்தின் ஷூட்டிங் அஜித்தின் Portion மீண்டும் எடுக்க தொடங்கி ஒரு Schedule முடித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் பயங்கர வேகத்தில் பைக்கில் வந்த தல அஜீத் திடீரென நிலைதடுமாறி ரோட்டில் விழுந்து விட்டாராம்.

பின்னர் எழுந்து பார்த்தபோது கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் தோலுரிந்து ரத்தம் கொட்டி உள்ளது.

இருந்தாலும் என்ன பிளான் செய்தார்களோ அதை முடித்துவிட்டு தான் சென்னை வந்துள்ளார் தல அஜித். அதான் தல ! அதனாலதான் தல.

இந்த வாரம் பிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற போகும் இரண்டு போட்டியாளர்கள், வெளியான அதிர்ச்சி தகவல்..!

பிக்பாஸ் சீசன் 4 …

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அர்ச்சனா, சுசித்ரா உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

மேலும் இதுவரை நடிகை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது 14 போட்டியாளர்களுடன் நிறைந்திருக்கும் பிக்பாஸ் வீடு, அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்கள் முடித்துள்ளது. மேலும் இதனை கமல் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அதிக போட்டியாளர்கள் இருப்பதால் வரும் வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்ற படுவார்கள் என கூறப்படுகிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூறும் பிக்பாஸ் இந்த வாரம் என்ன திட்டம் வைத்துள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தளபதி 65 படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக ஜோடி போடும் பிரபல நடிகை.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் விஜய், நெல்சன் கூட்டணி!

தளபதி 65…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

முதலில் முருகதாஸ் இயக்க இருந்த நிலையில் திடீரென இயக்குனர் மாற்றப்பட்ட செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது தளபதி 65 படத்தை இயக்குபவர் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் என தெரியவந்துள்ளது.

முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் தளபதி 65 படத்திற்காக விஜய்யுடன் முதன் முறையாக தீபிகா படுகோனே ஜோடி போட உள்ளாராம்.

ஏற்கனவே தீபிகா படுகோனே தமிழில் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய கூட்டணியில் தளபதி 65 படம் உருவாவதால் படம் எப்படி இருக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

திடீரென பிரபல நடிகருடன் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா.. 12 வருஷத்துக்கு பிறகு ஒன்று சேர்றாங்களாம்!

நயன்தாரா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் நயன்தாரா மலையாள சினிமாவில் மட்டும் மிகக் குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுப்பதாக பிரச்சனைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் 12 வருடத்துக்கு பிறகு மீண்டும் பிரபல நடிகர் ஒருவருடன் நிழல் என்ற மலையாள படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில்கூட நிழல் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

குஞ்சகோ போபன் என்ற நடிகருடன் 12 வருடத்துக்கு பிறகு நயன்தாரா இணைவதால் தற்போது அவருடன் நிறைய நேரம் செலவழித்து வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் அவர் நயன்தாராவின் நீண்டகால நண்பர் என்பதால் அவரது வீட்டுக்கு சென்றுள்ள நயன்தாரா புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

எதிரிக்கு கூட அந்த நிலை வரக்கூடாது, சாவு பயத்தை காட்டிய கொடிய நோய்.. பாகுபலி வில்லன் ராணாவின் மிரள வைக்கும் பேட்டி!

ராணா…

பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனும், தெலுங்கு நடிகருமான ராணா திரையுலகில் ‘லீடர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் வெவ்வேறு படங்களில் நடித்து வருகிறார் ராணா. சமீபத்தில்தான் யூடியூப் சேனல் ஒன்றையும் ராணா தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ராணா தான் கடந்து வந்த பாதையை பற்றி பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஆஹா என்ற OTT தளத்தில் நடிகை சமந்தா தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் ராணா கலந்து கொண்டுள்ளார். இந்தப் பகுதியின் முன்னோட்ட வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இதில் ராணா, ‘வாழ்க்கை மிக வேகமாக போய்க் கொண்டிருக்கும் போது ஒரு நிறுத்தம் வந்தது. எனக்கு பிறந்ததிலிருந்தே ரத்த அழுத்தம், இதயத்தை சுற்றி கால்சியம் அடைப்பு போன்ற சில உடல் உபாதைகள் இருந்தன. சிறுநீரக செயல்பாட்டிலும் பாதிப்பு இருந்தது.

இதன் காரணமாக 70 சதவிகிதம் ரத்தக்கசிவுகான பக்கவாதம் வருவதற்கு வாய்ப்புகளும் இருந்தன’ என்று குறிப்பிட்டிருக்கிறார். 30% உயிர் இல்லாத உடலாக தான் இருந்தேன்.

இதனைத் தொடர்ந்து சமந்தா அந்த வீடியோவில், ராணாவை சுற்றியிருப்பவர்கள் மனமுடைந்து இருந்தாலும் ராணா ஒரு பாறை போல் வழுவாக இருந்தார் என்றும், அதை தன் கண்ணாலேயே பார்த்திருப்பதாகவும், ராணா உண்மையிலேயே சூப்பர் ஹீரோ என்றும் கூறியிருக்கிறார்.

எனவே ராணா தன்னுடைய உடல்நிலையை பற்றி பேசியிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு, அவருடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வாழ்த்து கூறி வாய்ப்புக்கு தூண்டில் போடும் த்ரிஷா.. கொஞ்சம் பார்த்து செய்யுங்க என கெஞ்சும் ரசிகர்கள்!

திரிஷா…

தமிழ் சினிமாவிற்கு வேலைக்காரன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் மலையாள நடிகர் ஃபகத் பாசில்.

கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேலாக மலையாளத்தில் ஹீரோவாக நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும் ஃபகத் பாசில், நடிகை நஸ்ரியாவை பெங்களூர் டேஸ் படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆறு மாதங்களாகவே கொரோனா பொது முடக்கத்தால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட இந்த நிலையில், தனது ஐபோனை மட்டுமே வைத்துக்கொண்டு ‘சீ யூ சூன்’ என்ற மலையாள படத்தை தயாரித்து பிரமிக்க வைத்துள்ளார்.

இந்த படத்திற்காக தனது வீட்டையே சூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றி, படத்திற்கு தேவையான ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு தனது வீட்டையே மாற்றியமைத்துக் கொண்டாராம்.

இந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் எடிட்டர் மகேஷ் நாராயணன் இயக்கியிருக்கிறார், ஒன்றரை மணி நேரம் அளவிற்கு ஓடக்கூடிய இந்த படத்துல மிகக்குறைந்த நடிகர் நடிகைகளை வைத்தே தயாரித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு இந்த படமானது ஓடிடி தளத்தில் ரிலீசாகி மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்த படத்தை பார்த்த நடிகை திரிஷா, ‘சீ யூ சூன்’ படம்தான் 2020ல் நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்தை கண்டிப்பாக திரையரங்கில் திரையிட வேண்டும் என ஓபன் டாக் கொடுத்துள்ளார்.

மனசார வாழ்த்துக்கள் கூறினாலும் நெட்டிசன்கள், திரிஷாவை வாய்ப்புக்காக தூண்டில் போடுகிறீர்களா.! என கலாய்த்து வருகின்றனர். மற்றொருபுறம், கொஞ்சம் பார்த்து செய்யுங்க என கெஞ்சும் ரசிகர்கள்.!