பிக்பாஸ் 4 : கால் சென்டர் டாஸ்கில் அசத்தும் சோம் சேகர் மற்றும் கேபி !

பிக் பாஸ் 4…

பிக் பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்க் கால் சென்டர் டாஸ்க். அதில் பாதி பேர் முதல் கால் சென்டர் ஊழியர்களாகவும், மீதி இருப்பவர்கள் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளராக இருப்பார்கள். அவர்கள் கால் சென்டருக்கு போன் செய்து பேசி அழைப்பை துண்டிக்க வைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் அடுத்த வார நாமினேஷனுக்கு நேரடியாக செல்வார்கள்.

கால் சென்டர் ஊழியர்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வாடிக்கையாளரை திருப்தி படுத்தவேண்டும். பேசி முடித்தபிறகு மீண்டும் போன் செய்து தங்களது ஸ்டார் ரேட்டிங்கையும் கேட்க வேண்டும். முதல் ஆளாக அர்ச்சனா கன்பெக்ஷன் ரூமில் இருந்து பாலாஜிக்கு அழைப்பு செயதார். அர்ச்சனா கேட்ட முதல் கேள்வியே நேற்று பேசும்போது நான் பிடித்தவர்களை முன்னாடி வைத்து விளையாடுவதாக சொன்னீர்கள், அது யார் ?என கேட்டார். சோம், ரியோ மற்றும் கேபி என பாலாஜி பதில் சொன்னார்.

அதன் பின் லவ் பெட், சோம் சரியாக பர்பார்ம் செய்யாதது, ஷிவானி மீதான அன்பு என பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். I hate you அர்ச்சனா என சொல்வதற்கு என்ன காரணம் என கேட்டு பாலாஜியை திக்குமுக்காட வைத்தார் அர்ச்சனா. ஆனாலும் அர்ச்சனாவுக்கு தொடர்ந்து சளைக்காமல் பதிலடி கொடுத்தார். இறுதியில் நேரம் முடிந்ததால் அர்ச்சனா அடுத்த வார நாமினேஷனுக்கு சென்றார்.

பாலா கையில் பச்சை குத்தி இருக்கும் பெண் பெயர் என்ன என அர்ச்சனா வற்புறுத்தி கேட்டது பற்றி பாலாஜி கோபத்துடன் வெளியில் வந்து பேசினார். இது தொடர்பாக வாக்குவாதமும் நடைபெற்றது. அதன் பின் பாலாஜியை அர்ச்சனா, ரியோ, கேபி உள்ளிட்டவர்கள் சேர்ந்து கார்னர் செய்தனர். அதை பாலாஜியே குறிப்பிட்டு அவர்களுடன் சண்டை போட்டார்.

இனி என்னை அக்கா என கூப்பிடதே என அர்ச்சனா கோபத்துடன் பாலாஜியுடன் கூறினார். மேலும் பாலாஜி கையில் இருந்த பெண் பெயர் பற்றி கேட்டது உன் morals உயர்வாக இருக்கிறது என காட்ட மட்டும் தான், அது என் மகள் மீது சத்தியம் என அர்ச்சனா விளக்கம் கொடுத்தார். சனம் கன்பெக்ஷன் ரூமில் இருந்து சம்யுக்தாவுக்கு போன் செய்தார்.

கலீஜாக பேசுகிறேன் என நீங்கள் எப்படி சொல்லலாம் என கேட்டு வாக்குவாதம் நீண்டுகொண்டே போனது. இறுதியிகள் சனம் நாமினேட் ஆனார். அதன் பின் ஆரி வந்து சம்யுக்தாவிடம் சண்டை போட்டார். வளர்ப்பு சரியில்லை என நீ எப்படி சொல்லலாம் என அவர் கேட்டார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கேபிக்கு போன் செய்து ஓட்டுகிறார் சோம் சேகர். இதை பார்த்த ரசிகர்கள் க்யூட்டான ப்ரோமோ என்று கூறி வருகின்றனர். பற்களில் கேப் இருப்பதால் தான் கேபி என்று நகைச்சுவையாக கூறுகிறார் சோம். சிரிப்பு தாங்க முடியாமல் கேபி போனில் பேசுகிறார். இதை பார்த்த பாலா மற்றும் சனம் கடுப்பில் அடுத்த பிளான் போடுகிறார்கள்.

வாத்தி கம்மிங் பாடல் படைத்த புதிய சாதனை ! விவரம் உள்ளே..!

ஒன்று வாத்தி கம்மிங்…

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.39 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று வாத்தி கம்மிங்.இந்த பாடல் யூடியூப்,டிக்டாக் என்று பல தளங்களில் வைரலாக பரவி வருகிறது.லிரிக்ஸ் குறைவாகவும்.மியூசிக் அதிகமாகவும் உள்ள இந்த பாடல் மொழிகளை தாண்டி பலரிடம் பிரபலமாக இருந்தது.தற்போது இந்த பாடல் யூடியூப்பில் 90 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

வைரலாகும் காஜல் அகர்வாலின் நடன வீடியோ !

காஜல் அகர்வால்…

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக பல வருடங்களாக ஜொலித்து வருபவர் காஜல் அகர்வால்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று தென்னிந்திய மொழிகளில் கலக்கி தனக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் காஜல் அகர்வால். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் காஜல் அகர்வால்.

கடந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் இவர் ஹீரோயினாக நடித்த கோமாளி படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2,சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா,பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.

இதனை தவிர ஹாட்ஸ்டாருக்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடர் விரைவில் ரிலீஸாகவுள்ளது.இந்த தொடரின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.இவரது கல்யாணம் அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.இவருக்கு பல பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார் காஜல் அகர்வால்.

சமீபத்தில் 15.7 மில்லியன் ரசிகர்களை பெற்று தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகை என்ற சாதனையை படைத்துள்ளார் காஜல் அகர்வால். இவரது திருமண புகைப்படங்களும்,வீடியோக்களும் செம வைரலாக சமூகவலைத்தளங்களில் இருந்து வந்தன.

இதனை தொடர்ந்து காஜல் அகர்வால் தனது ஹனிமூன் புகைப்படங்கள் சிலவற்றை கடலுக்கடியில் தங்கியிருப்பது போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வந்தன.தற்போது காஜல் அகர்வாலின் டான்ஸ் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kajholic💞 (@kajholics)

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் புதிய படம் குறித்த ருசிகர தகவல் !

ஷ்ரத்தா ஸ்ரீநாத்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். கன்னடா, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே13 போன்ற படங்களில் நடித்து அசத்தினார்.

புஷ்கர் – காயத்ரி இயக்கிய பிளாக்பஸ்டர் படமான விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதில் இடம்பெற்ற யாஞ்சி பாடல் ஹிட்டாக, தமிழ் ரசிகர்களின் மனதில் நெஞ்சாத்தியாக இடம் பிடித்து விட்டார் ஷ்ரத்தா.

கடந்த ஆண்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சிறப்பான வருடம் என்றே கூறலாம். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் போல்டான பாத்திரத்தில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அருள் நிதி நடித்த கே13 மற்றும் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ஜெர்ஸி திரைப்படம் இவரின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்-கல்லாக அமைந்தது.

இந்நிலையில் தனது புதிய படம் குறித்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஷ்ரத்தா. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிக்கும் ஆராட்டு என்கிற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் ஷ்ரத்தா. இதன் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. உன்னிகிருஷ்ணன் இயக்கி வரும் இப்படம் ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகவுள்ளது.

இப்படப்பிடிப்பில் நேற்று கலந்து கொண்ட நடிகை ஷ்ரத்தா, படக்குழுவினர் பற்றியும், மோகன்லால் குறித்தும் பதிவு செய்தார். மோகன்லால் வெல்கம் டு மை ஃபேமிலி என்று கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் மாறா திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற சார்லி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார்.

புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்த இந்த படம் டிசம்பர் 17-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.

தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவரா? அப்ப நெல்சன் என்ன ஆச்சு?

தளபதி விஜய்…

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 64ஆவது திரைப்படமான ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியிருந்தாலும் அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 65வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் அந்த படத்தில் இருந்து ஒருசில காரணங்களால் விலகினார். இதனை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கபவர்கள் என ஒருசில இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டபோது ’டாக்டர்’ பட இயக்குனர் நெல்சன் பெயர் முதலாவதாக இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக விஜய்யின் அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்க இருப்பதாகவும் எஸ்ஜே சூர்யா சொன்ன கதை விஜய்க்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் பிடித்து விட்டதால் ’தளபதி 65’ படத்தின் இயக்குனர் எஸ்ஜே சூர்யா தான் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்த முறையான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என்றும் வரும் ஜனவரி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தளபதி விஜய், ஜோதிகா நடித்த ’குஷி’ என்ற சூப்பர்ஹிட் படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் நெல்சன் சொன்ன கதை விஜய்க்கு ஓகே என்றாலும் உடனடியாக படப்பிடிப்பை தொடங்க நெல்சனுக்கு முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், அவர் ஏப்ரல் வரை ‘டாக்டர்’ படத்தின் போஸ்ட் புரடொக்சனில் பிஸியாக இருப்பதால், எஸ்.ஜே.சூர்யாவை விஜய் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரே வாரத்தில் கவுதம் மேனன் படத்தில் நடித்து முடித்த சூர்யா !

சூர்யா…

ஒரே வாரத்தில் கவுதம் மேனன் படத்தில் நடித்து முடித்த சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தை ஜெயேந்திராவுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த ஆந்தாலஜி படத்தை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், கவுதம் மேனன், ரதீந்திரன் பிரசாத், ஹலீதா ஷமீம், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர்.

கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த ஆந்தாலஜி படத்தை எடுக்கின்றனர். இதில் கவுதம் மேனன் இயக்கும் குறும்படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். கடந்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

நவரசா படப்பிடிப்பு தளத்தில் சூர்யா, கவுதம் மேனன் இந்நிலையில், இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு ஒரே வாரத்தில் நடத்தி முடித்துள்ளனர். இந்த குறும்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தவறாக நடக்க முயன்றார் – தயாரிப்பாளர் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்..!

மந்தனா கரிமி ராய்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை ஒருவர், தயாரிப்பாளர் மீது பு கார் தெரிவித்துள்ளது ப ரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார் பிரபல இந்தி நடிகை மந்தனா கரிமி ராய். இவர் ஆரம்பத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி பின்னர் கதாநாயகி ஆனார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

மந்தனா கரிமி ராய் தற்போது கோகோ கோலா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதில் சன்னிலியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர தாரிலால் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மந்தனா கரிமி ராய் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். மந்தனா கரிமி ராய், மகேந்திர தாரிலால் அவர் கூறும்போது, “இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே தயாரிப்பாளர் எனக்கு தொல்லை கொடுத்தார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் எனது காட்சிகளில் நடித்து மு டித்து விட்டு கிளம்ப தயாரானேன். அப்போது நான் இருந்த வேனுக்குள் வந்து கிளம்ப விடாமல் தடுத்தார். உனக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன். எனவே இங்கேயே இருக்க வேண்டும் என்று சொல்லி த வறாக நடக்க முயன்றார்” என்றார்.

இந்த பு காரை ம றுத்து தாரிலால் கூறும்போது, “கூடுதல் நேரம் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அதிகமாக ரூ.2 லட்சம் கேட்டார். அதை கொடுத்து விட்டேன். வேறு எதுவும் நடக்கவில்லை” என்றார்.

அடிச்சு தூக்கிய சாதனை! நான் ஸ்டாப் ஆல்பம்! மற்ற நடிகர்களின் படங்களுக்கு சவால்!

புட்ட பொம்மா…

தமிழ் சினிமா போல தெலுங்கு சினிமாவுக்கு ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம். சீனியர் நடிகர்களே இன்னும் ஹீரோக்களாக நடித்துக்கொண்டிருக்க வாரிசு நடிகர்களும்,

இளம் நடிகர்களும் களத்தில் இறங்கி தங்களுக்கான மார்க்கெட்டையும் பிடித்து வருகிறார்கள்.

தெலுங்கு திரையுலகில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தனி இடம் இருக்கிறது. அவரின் படங்களும் உள் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றன.

அதில் கடைசியாக அல வைகுந்த புரமுலு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

திரிவிக்ரம் இயக்கத்தில் இப்படத்தில் அல்லுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

ஜெய ராம், நிவேதா பெத்துராஜ், சமுத்திரகனி, நவ்தீப், தபு என பலர் நடித்திருந்தனர். தமன் இசையில் புட்ட பொம்மா பாடல் அனைவரையும் ஈர்த்த ரகமானது.

பிரபலங்கள் கூட இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர். தற்போது இப்பாடல் 450 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.

ரசிகர்களில் ##UNSTOPPABLEAVPLALBUM #avpl #ButtaBomma #450millionforbuttabomma என பல டேக் இட்டு டிரெண்டிங்கில் இடம் பெற செய்து கொண்டாடி வருகிறார்கள்.

சீரியலில் இருந்து விலகும் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா !

ஜோவிட்டா…

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிட்டா. இவர் நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் ஹீரோவாக அறிமுகமான படத்தில் அவரது ஜோடியாக அறிமுகமானார்.

இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், அம்பிகா, ராதாரவி, பானுசந்தர் உள்பட பலர் நடித்தனர். சுந்தர்.சி உதவியாளர் அஸ்வின் மாதவன் இயக்கி இருந்தார். படத்தின் பணிகள் முடிவடைந்தும் படம் இன்னும் வெளிவரவில்லை.

இதனால், பூவே உனக்ககாக என்ற தொடர் மூலம் சின்னத்தரையில் அறிமுகமானார் ஜோவிட்டா. சில மாதங்களே நடித்து வந்த நிலையில் தற்போது அந்த தொடரில் இருந்து விலகுகிறார்.

இந்த தகவலை அவர் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் தெரிவித்து விட்டார்.

இதனால் தொடரின் கதையில் சில மாற்றங்கள் செய்த அவரது கேரக்டரை முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.

ஜோவிட்டாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதால் அவர் விலகுவதாகவும், பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதால் விலகுவதாகவும்

இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. எது உண்மை என்பது விரைவில் தெரிய வரும் என்கிறார்கள்.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இதுவரை இத்தனை பேர் பார்த்துள்ளார்களா?

சூரரைப் போற்று…

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.

நிஜ கதையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்துவிட்டார் சூர்யா.

OTT தளத்தில் வெளியான இப்படத்தை முதல் நாளில் மட்டுமே 50 மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளார்களாம்.

தற்போது ரிலீஸ் ஆகி 14 நாட்களுக்கு மேலானது, இதுவரை படத்தை 100 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

OTT தளத்தில் வெளியாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.