நடிகர் அஜித் வீட்டுக்கு அழைத்து அவர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுப்பார் என பல பிரபலங்கள் கூறி கேட்டிருப்போம். அந்த அளவு மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்பவர் அவர்.
அஜித் பற்றி மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது ஒரு விழாவில் பேசியுள்ளார். பிரேமம் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அஜித் அவரை வீட்டுக்கு அழைத்தாராம்.
அப்போது அவர் பல அட்வைஸ்களை கொடுத்தார். அதில் பலவற்றை தற்போது பின்பற்றி வருகிறேன் என நிவின் பாலி கூறியுள்ளார்.
மறைந்த நடிகர் முரளியின் மகனான இளம் நடிகர் அதர்வா ஏகப்பட்ட பெண் ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்து இளம் பெண்களின் கனவு கதாநாயகனாக வலம் வருகிறார்.
அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். அவரது தம்பி ஆகாஷ் நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
மதத்தை சார்ந்ததால் இருவீட்டு உறவினர்களும் இவர்களின் திருமணத்தை குறித்து ஆலோசனை செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நட்சத்திர ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 64 படத்தின் கெட்டப்பில் இருப்பது போன்று தெரிகிறது.
நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா சமீபத்தில் திருமணம் செய்தார்கள் என்பதும் இந்த புதுமண தம்பதிகள் இணைந்து ’டெடி’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
என்பதும் தெரிந்ததே இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதனையடுத்து படக்குழுவினரும் இதனை கொண்டாடினார்
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக ஆர்யா மற்றும் சாயிசா இணைந்து அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் அவர்களது ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
ஆர்யா மற்றும் சாயிஷா ஏற்கனவே சூர்யாவின் ’காப்பான்’ படத்தில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில்தான் முதன்முதலாக ஜோடியாக இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
வரும் பிப்ரவரியில் காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இதனையடுத்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் அடுத்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
தர்பார் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியதை கேட்டவர்களுக்கு ஒரேயொரு கேள்வி தான் எழுந்துள்ளது.
தர்பார் இசை வெளியீட்டு விழா அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீனா படத்தில் நடித்த பிறகு தல ஆனார்.
அதில் இருந்து அவரை அனைவரும் தல என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது முருகதாஸ் என்றே அனைவரும் நினைத்தார்கள். இந்நிலையில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய முருகதாஸ் வேறு விதமாக கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது ரஜினி சார் தான் என்று முருகதாஸ் மேடையில் தெரிவித்தார். அஜித் மீது ரஜினி மிகுந்த மரியாதை வைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தான் ரஜினி அஜித்துக்கு இப்படி ஒரு பெயர் வைத்தது தெரிய வந்துள்ளது. அது சரி முருகதாஸ், இதை ஏன் நீங்கள் இத்தனை ஆண்டுகளாக சொல்லவே இல்லை என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். எத்தனையோ பேட்டிகளில் முருகதாஸிடம் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்தது குறித்து கேட்ட போது ஏன் இந்த உண்மையை சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினி தான் செய்யும் நல்ல காரியங்களை வெளியே சொல்வது இல்லை. அதே போன்று தான் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததையும் கூறவில்லை. அவர் அமைதியாக இருந்ததால் தான் முருகதாஸும் மவுனமாக இருந்துவிட்டாரோ. இல்லை என்றால் ரஜினியை வைத்து ஒரு நாள் படம் எடுப்போம், அந்த விழா மேடையில் தான் இதை தெரிவிக்க வேண்டும் என்று இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தாரோ என்னவோ?.
சிறு வயதில் நிலாவை பார்த்து சாப்பிடுவோம். ஆனால் தற்போது நிலவில் நிற்பது போன்று உள்ளது. ரஜினியை பார்த்து பார்த்து ரசித்த, ரசிக்கும் ரசிகன் நான். ஒரு குச்சியை ஹீரோ என்றால் கூட அது திமிருடன் ஆடும். ஆனால் 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்தும் சிறிதும் திமிர் இல்லாதவர் ரஜினி. அவரை போன்றே இருக்க நான் ஆசைப்படுகிறேன் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார். முருகதாஸ் பேச்சால் ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்ல அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய்யின் பிகில் படம் இந்த வருட தீபாவளிக்கு மாஸாக வெளியானது. தமிழ்நாட்டில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு, ஆந்திரா மற்றும் கேரளா, கர்நாடகா என தளபதி மாஸ் செய்துவிட்டார்.
இப்பட ரிலீஸை தொடர்ந்து தளபதி தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். இப்போது பிகில் படம் குறித்து இலங்கையில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை பூஜா. அதில் அவர், பிகில் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஜாப்னாவில் இருந்தேன். அங்கு ஒரு பிரபலமான ராஜா திரையரங்கம் இருக்கிறது.
பிகில் படத்தின் முதல் நாள் முதல் ஷோ கிடைக்கவில்லை என ரசிகர்கள் எல்லாம் திரையரங்கின் கேட்டை எல்லாம் உடைத்து அப்படி ஒரு ஆர்வமாக பார்த்தார்கள்.
அவர்கள் தளபதி மேல் வைத்திருக்கும் வெறி கண்டு அதிர்ந்துவிட்டேன் என பேசியுள்ளார்.
தமிழில் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவருக்கும் சிக்சர் பட இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் சதீஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் காதல் திருமணம் என்று பேச்சு அடிபட்டது.
சிக்சர் பட இயக்குநரும் மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறி சதீஷ் – சிந்து இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இருவருக்கும் இன்று திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களுக்கும் திரையுலகில் இருக்கும் தனது நண்பர்களுக்கும் சதீஷ் திருமன அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார்.
சதீஷ் – சிந்து திருமணம் இன்று காலை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், கவுதம் கார்த்திக் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் இந்துஜா, அதுல்யா ஆகியோர் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்.
கிரிக்கெட் வீரரான விஷ்ணு விஷால் 2009ம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு படத்தில் நாயகனாக சினிமாவில் அறிமுகமானார்.
பின் பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற படங்களில் நடித்து அதிக வரவேற்பு பெற்றார்.
அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தில் அவர் நடிக்க அப்படம் உலகம் முழுவதும் விருதுகள் பெற்று வருகிறது.
2011ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.
ஆனால் நடுவில் பிரச்சனை காரணமாக தனது மனைவியை விவாகரத்து செய்வதாக விஷ்ணு டுவிட்டரில் கூறியிருந்தார்.
படங்களுக்காக காதல் காட்சி நடிப்பது, நடிகைகளுடன் பழகுவது என இருந்தேன். இதுவே சந்தேகமாக மாறி என் திருமண வாழ்வில் விவாகரத்து வரை சென்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையான இலியானா, என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்ததாக கூறியிருக்கிறார்.
நடிகை இலியானா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் கைக்கூடவில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். இது பற்றி இலியானா கூறியதாவது: ’என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்தேன்.
பல மாதங்களாக நல்ல நட்புடன் நாங்கள் இருந்தோம். பல முறை ஒன்றாக டேட்டிங் சென்றோம்.ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இப்போது வெளிநாட்டுக்காரரை காதலிக்கிறீர்களா என கேட்கிறார்கள்.
என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி எனது பெற்றோருக்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறேன். நான் திமிர் பிடித்தவள் என்கிறார்கள். அது பற்றி யார் எது சொன்னாலும் கவலையில்லை.முதல் படத்துக்கு மட்டுமே டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்றேன்.
எல்லா படங்களுக்கும் டெஸ்ட் ஷூட்டில் நான் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப என்னால் ஆட முடியாது. என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி மட்டுமே நான் வாழ்வேன்’ என்றார்.
திரையுலகில் தான் நடித்தால் மட்டும் போதும் என்று கூட சிலர் இருக்கிறார்கள். ஆனால், நடிப்பதையும் தவிர்த்து ரசிகர்களுக்கு மக்களுக்கும் தன்னால் முடிந்தவரை உதவவேண்டும் என்று கூட பலர் உள்ளனர். அதில் நடிகர் ராகவா லாரன்ஸும் ஒருவர்.
அண்மையில் கூட இணையத்தில் இவரிடம் பலரும் உதவி கேட்டு வந்தார்கள். அதற்கு லாரன்ஸ் அவர்கள், “என்னிடம் நிறைய பேர் உதவி கேட்டு வருகிறார்கள் ஆனால், என்னால் முடிந்த வரை தான் உதவ முடிகிறது இதனால் நான் அரசாங்கத்திடம் உதவி கேட்க முயற்சிக்க போகிறேன்” என்று கூறினார்.
அதனை நிறைவேற்றும் விதமாக இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை சந்தித்துள்ளார். தான் கேட்டதை விட அதிகமாகவே உதவுவதாக கூறினார் அவர் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். சும்மா ஒரு படத்தில் வருவது, காதல் காட்சி, நடனம் ஆடி முடித்துவிட்டு செல்லாமல் தனியாக தனக்கென்று தனி டிராக்கை உருவாக்கினார்.
தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் சோலோவாக நடித்த படங்கள் வெற்றியும் பெற்றுள்ளது.
இவர் அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்து அம்மன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நேரத்தில் திடீரென்று நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.