லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு?

லோகேஷ் கனகராஜ்…

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம்.

இப்படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை மகேஷ் பாபுவுக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவர் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘குக் வித் கோமாளி’ பவித்ரா, இன்னொரு சமந்தாவா? வைரல் புகைப்படம்..!

பவித்ரா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்’களும், கோமாளிகளும், நடுவர்களும் கூட மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது என்பதும் புகழ் உள்பட ஒருசிலர் திரையுலகில் பிசியாகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் ஒருவரான பவித்ராவை ஏற்கனவே சமந்தாவுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பேசி வந்தனர்.

சமந்தாவும் அவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதாகவும் அவர் இன்னொரு சமந்தாவாக திரையுலகில் வலம் வருவார் என்றும் பலர் கூறிவந்தனர்

இந்த நிலையில் விஜய் நடித்த ’தெறி’ படத்தில் சமந்தா அணிந்து வந்த சேலை காஸ்ட்யூமில் பவித்ராவும் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு வரும் ரசிகர்கள் ’பவித்ரா இன்னொரு சமந்தா’ என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

’குக் வித் கோமாளி பவித்ரா தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் சதீஷ் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்ணே நீங்க எப்ப வாய்ப்பு கொடுத்தாலும் நம்ம பட டைட்டில் இதுதான்.. விஜய்க்கு அட்லீ கொடுத்த சர்ப்ரைஸ்!!

விஜய் – அட்லீ…

விஜய் அட்லீ கூட்டணி என்றால் வசூல் கூட்டணி என்று கோலிவுட் வட்டாரங்களில் பெயர் உள்ளதாம். விஜய்யும் அட்லீயும் ஒரு படத்தில் இணைந்து விட்டால் அந்த படத்தின் எதிர்பார்ப்பு மலையளவு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகும் படங்களை வாங்கி வெளியிடும் தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் தொடர்ந்து இவர்களது படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் நிலைமைதான் கவலைக்கிடமாக உள்ளது.

அட்லீயின் கவனக்குறைவால் விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வருகிறது. ஆனால் இனி அப்படி செய்ய மாட்டேன் என விஜய்க்கு அட்லீ வாக்கு கொடுத்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் விஜய் அட்லீ கூட்டணியில் அடுத்த படம் ஒன்று உருவாக உள்ளது ஏறக்குறைய உறுதியான தகவல் தான்.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்திற்கு பெயர் வேறு வைத்துவிட்டாராம் அட்லீ. தெறி திரைப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆனதை சமூக வலைதளங்களில் அட்லி கடந்த நான்கு வருடங்களில் கொண்டாடாத அளவுக்கு இந்த முறை கொண்டாடியுள்ளார்.

இதிலிருந்தே விரைவில் இருவரும் இணைய உள்ளனர் என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் விஜய் படங்களில் தனக்கு தெறி படம் மிகவும் ஸ்பெஷலான படம் என குறிப்பிட்டு அடுத்த படத்திற்கு வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அட்லீயோ விரைவில் என பதிலளித்திருந்தார். இதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் வரும் அடுத்த படத்தின் தலைப்பு “வெறி” என்று இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாக அட்லீ வட்டாரங்களில் காதைக் கடிக்கின்றனர்.

முகத்தின் ஒரு பாதியில் இந்தியா மேப்.. மிரட்டும் அருண் விஜய்யின் பார்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

பார்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

அருண் விஜய் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் வந்த விக்டர் கதாபாத்திரத்திற்கு பிறகு அவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறிக்கொண்டிருக்கிறது. வில்லனாக ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது ஹீரோவாகவும் தன்னுடைய இழந்த மார்க்கெட்டை மீட்டுள்ளார்.

வாரிசு நடிகராக இருந்தாலும் இவருக்கு சும்மா ஒன்றும் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இவரும் பல்வேறு அவமானங்களை சந்தித்துதான் தனக்கென ஒரு பாதையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார்.

அந்த பாதையை எக்காரணத்தைக் கொண்டும் நழுவ விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். தற்போது அருண் விஜய் எப்படி படம் நடித்தாலும் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

அந்தவகையில் அடுத்ததாக அருண் விஜய் மற்றும் அறிவழகன் வெற்றிக் கூட்டணியில் பார்டர் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஹோட்டலயே ஸ்கிரீன் ஆக வைத்து வெட்டவெளியில் அந்த ஹோட்டல் முன்பக்க அமைப்பையே ஒரு தியேட்டர் போல் மாற்றி அதில் போஸ்டரை வெளியிட்டனர். இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இந்நிலையில் நேற்று பார்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையதளத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்தின் காட்சி அமைப்புகளை பார்க்கும்போது கண்டிப்பாக ஒரு தரமான ஆக்ஷன் படமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

திரிஷ்யம் 2 படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் நவ்யா நாயர்..!

நவ்யா நாயர்…

தமிழில் அழகிய தீயே, பாச கிளிகள், மாயக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்த நவ்யா நாயர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படங்களில் நடிக்க இருக்கிறார்.

தமிழில் அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாச கிளிகள், மாயக்கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். இவர் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

2010-ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவ்யா நாயர் நடித்து கடைசியாக 2014-ல் திரிஷ்யா என்ற கன்னட படம் வெளியானது.

தற்போது நவ்யா நாயர் மீண்டும் நடிக்க உள்ளார். பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகும் மலையாள படமான திரிஷ்யம் 2-ம் பாகத்தின் ரீமேக்கில் ரவிச்சந்திரனுடன் இணைந்து நடிக்கிறார். திரிஷ்யம் 2 மலையாளப் படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

நடிகர் சிம்புவுடன், ஏ.ஆர். ரகுமான் மகன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

நடிகர் சிம்பு…

நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து நிறைய பேசப்படுகிறார். ஈஸ்வரன் படம் அடுத்து உடனே மாநாடு படப்பிடிப்பு முடித்துள்ளார்.

தயாரிப்பாளருக்கு சொன்ன தேதியை விட சீக்கிரமே படக்குழு முடித்துள்ளார்கள். அண்மையில் சிம்பு ரசிகர்கள் கொண்டாடிய குக் வித் கோமாளி 2 இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அவர் போட்டியாளர்களுடன் அடித்த லூட்டி எல்லாம் பார்க்க செமயாக இருந்தது.

இப்போது சிம்பு ஒரு ஸ்பெஷல் ஷோவிற்கு சென்றுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் 99 Songs என்கிற படத்தை தயாரித்திருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

படத்திற்கான ப்ரீமியர் ஷோ சென்னையில் நடந்தது. அந்த ஷோவிற்கு நடிகர் சிம்புவும் வந்துள்ளார். அவருடன் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் மகன் அமீன் எடுத்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாராவா இது, புடவையில் அசத்தல் லுக்கில் லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகை நயன்தாரா..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவரது படங்கள் என்றாலே மக்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும்.

படத்தில் 2 காதல் காட்சிகள் நடிததோம், பாட்டுக்கு நடனம் ஆடினோம் என்று இல்லாமல் தனது நடிப்பை வெளிக்காட்டும் வகையில் பல படங்கள் தேர்வு செய்து நடித்தார்.

அதுவே அவருக்கு பெரிய ப்ளஸ்ஸாக ஆனது. இப்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பாதி முடிந்துள்ளதாக தெரிகிறது.

எப்போதும் ஏதாவது ஸ்பெஷல் தினம் என்றால் நயன்தாராவின் புகைப்படம் வெளியாகி விடுகிறது. அப்படி தான் விஷு ஸ்பெஷலாக அவர் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் மயங்கி விட்டார்கள் என்றே கூறலாம்.

BMW புதிய கார் வாங்கி கெத்தாக போஸ் கொடுக்கும் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன்- கலக்கும் நடிகை!!

ரம்யா பாண்டியன்…

தமிழ் சினிமாவில் நடிக்க வந்தால் பலருக்கு உடனே பெரிய அளவில் ரீச் கிடைத்துவிடும். கதை அழுத்தமாக உள்ள படங்களில் சிலர் நடித்தால் கூட சரியான அங்கீகாரம் கிடைக்காது.

அப்படி ஜோக்கர், ஆண் தேவதை என சில நல்ல படங்கள் நடித்திருந்தாலும் சரியான அங்கீகாரணம் கிடைக்காமல் இருந்தவர் ரம்யா பாண்டியன் . பின் அவர் புடவையில் நடத்திய ஒரே ஒரு போட்டோ ஷுட் அவரை ஓகோ என பெரிய அளவில் மக்களிடம் பேச வைத்தது.

அதன்பின் அவர் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர், தனியார் நிகழ்ச்சிகளுக்கு அதிகம் கலந்துகொள்வது என செம பிஸியாக இருந்தார்.

பிக்பாஸ் 4வது சீசனிலும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை முடித்த கையோடு படங்கள் பல கமிட்டானார். இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் புதியதாக BMW கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

புதிய கார் பக்கத்தில் கெத்தாக புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டுள்ளார்.

கண்ணீர்விட்டு அழுது சோகமான விஷயத்தை கூறிய குக் வித் கோமாளி Chef தாமு- வருந்திய போட்டியாளர்கள்..!

Chef தாமு….

தமிழ்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக கொண்டாடிய குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி முடிந்தேவிட்டது. நேற்றுமுன்தினம் வரை கடைசி நிகழ்ச்சி இருக்கிறது என்று ஆறுதலாக இருந்தது.

ஆனால் இப்போது நிகழ்ச்சி முடிந்தேவிட்டது. இனி அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என தெரியவில்லை, இந்த அளவிற்கு கலகலப்பாக இருக்குமா என்பதும் தெரியாது.

இந்நிகழ்ச்சி முடிவது மக்களுக்கு எவ்வளவு சோகமோ அதேபோல் தான் அதில் பங்குபெற்றவர்களுக்கும் உள்ளது.

ஒவ்வொருவரும் தங்களது சமூக வலைதளங்களில் நிகழ்ச்சி முடிந்தது குறித்து வருத்தம் அடைந்து வருகின்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமுவிற்கு விருது கொடுக்கப்பட்டது.

தாமு விருதை வாங்கியதும், நான் இதை எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு அங்கீகாரத்தை தான் நான் விரும்பினேன்.

இப்போது தான் அது நடந்திருக்கிறது. குக் வித் கோமாளிக்கு வந்தபிறகுதான் நான் சிரிக்க தொடங்கினேன் என்று கூறி அழுதார்.

வாட்ஸ் ஆப் நம்பர் கேட்ட ரசிகருக்கு போலீஸ் நம்பரை கொடுத்த சுருதி ஹாசன்!!

சுருதிஹாசன்…….

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சுருதிஹாசன், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கிராக், வக்கீல் சாப் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பை பெற்றன.

தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்சுருதி ஹாசனின் டுவிட்டர் பதிவுஅப்போது ரசிகர் ஒருவர் ‘மேடம்,

பிளீஸ் உங்களது வாட்ஸ் ஆப் நம்பரைக் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த நடிகை சுருதி ஹாசன், போலீஸ் அவசர உதவி எண் ஆன 100 என்ற நம்பரைக் குறிப்பிட்டிருந்தார். நடிகர் சுருதி ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.