பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த பரத்.. விஜய் டிவியின் மூலம் அடித்த ஜாக்பாட்!!

சின்னத்திரை……….

தற்போதெல்லாம் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் வெள்ளித்திரையில் கால் பதிப்பது ஒன்றும் புதிதல்ல. அதில் பெரும் பங்கு வகிப்பது விஜய் டிவிதான். ஏனென்றால் விஜய் டிவியில் பணிபுரிந்த பல சின்னத்திரை நடிகர்கள் தற்போது வெள்ளித்திரையில் வேற லெவலில் தங்களது திறமையை வெளிக்காட்டி கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவு ஏன் தற்போது கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ், சிவாங்கி, அஸ்வின், பாலா, பவித்ர லட்சுமி போன்றோருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையான காவியா வெள்ளித்திரையில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஹீரோயினுக்கு இணையான ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் முல்லை கதாபாத்திரத்தில் VJ சித்ரா நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டு சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அந்த கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காவியா நடிக்கத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் ரசிகர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் சீரியல் உள்ள அனைவருக்கும் இருந்தது. ஆனால் தனது திறமையான நடிப்பால் காவியா அந்த தயக்கத்தை உடைத்து காட்டினார்.

தற்போது காவியா அறிவுமணி, பரத்-வாணி போஜன் இணைந்து நடிக்கும் படமொன்றில் ஹீரோயினுக்கு இணையான ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்தப்படம் காவியா அறிவுமணியின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.  இந்தப் படத்தின் பூஜை முடித்து விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த தகவலை அறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்  ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருப்பதோடு, காவியாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ராம் சரணும் இல்லை, பிரபாஸும் இல்லை.. லோகேஷ் கனகராஜின் அடுத்த தெலுங்கு பட நடிகர் இவர்தான்!

லோகேஷ் கனகராஜ்………

லோகேஷ் கனகராஜ்(lokesh kanagaraj) தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்கிற அளவுக்கு தன்னுடைய முதல் மூன்று படங்களின் மூலம் நிரூபித்துள்ளார். இதுவரை அவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளன.

தற்போது லோகேஷ் கனகராஜுக்கு தமிழை விட தெலுங்கு சினிமாவில் இருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஊரடங்கு சமயத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அந்த நிறுவனத்திற்காக லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட நாயகனாக வலம் வரும் பிரபாஸை வைத்து படம் இயக்க போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்து திரும்பும் இடமெல்லாம் வைரல் ஆனது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்படி லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம்.

முன்னதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜுக்கு அட்வான்ஸ் கொடுத்த நிலையில் தற்போது மகேஷ்பாபு அந்த படத்தை வேறு ஒரு நிறுவனத்துடன் செய்ய ஆசைப்படுகிறாராம். இதற்கு மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அனுமதி கொடுக்குமா என்பது சந்தேகம் தானாம்.

தமிழ்நாட்டில் சன் பிக்சர்ஸ் எப்படியோ அப்படித்தான் தெலுங்கில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். இதன் காரணமாக பெரிய அளவில் முன்னணி நடிகர்களை அந்த நிறுவனம் பகைத்துக் கொள்ளாது என்கிறார்கள் பிரதேச வாசிகள். ஆக மொத்தத்தில் லோகேஷ் கனகராஜ் இன்னும் சில வருடங்களில் இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனராக மாறி விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதலில் கமலுடன் விக்ரம் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விஜய்யுடன் தளபதி 66 படத்தை இயக்க உள்ளாராம் லோகேஷ் கனகராஜ். இந்த இரண்டு படங்களும் முடிந்தால்தான் மகேஷ்பாபுவின் படத்திற்கான அறிவிப்புகள் வரும் என்கிறார்கள் வலைப்பேச்சு நண்பர்கள்.

படக்குழுவினருக்கு கொரோனா – தனிமைப்படுத்திக் கொண்ட ஷாருக்கான்!!

ஷாருக்கான்…

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஷாருக்கான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், ரன்பீர் கபூர். கோவிந்தா, கார்த்திக் ஆர்யன், செந்தில், டைரக்டர் சுந்தர்.சி.

நடிகைகள் நக்மா, நிவேதா தாமஸ், கவுரி கிஷான், ஐஸ்வர்யா லட்சுமி, பூமி பெட்னெகர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி உள்ளனர். சிலர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஷாருக்கான் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. பதான் என்ற இந்தி படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு துபாயில் நடந்தது.

தற்போது மும்பையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். பதான் படக்குழுவினருக்கு முன் எச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ததில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ஷாருக்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். பதான் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் அபிரகாம் ஆகியோரும் நடிக்கின்றனர்.

பெரிய கோஸ்டியுடன் களமிறங்கும் நடிகை காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்…

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் காஜல் அகர்வால், அடுத்ததாக பெரிய கோஸ்டியுடன் களமிறங்க இருக்கிறார்.

பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் பேயாக நடித்து உள்ளனர். தற்போது காஜல் அகர்வாலும் புதிய படத்தில் பேயாக நடிக்கிறார்.

இந்த படத்துக்கு கோஷ்டி என்று பெயர் வைத்துள்ளனர். கல்யாண் இயக்குகிறார். இவர் பிரபுதேவா நடித்த குலேபகாவலி, ஜோதிகா நடித்த ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கியவர். காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மயில்சாமி, சத்யன் உள்பட 30 நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர்.

காஜல் அகர்வால் பேயாக மட்டுமன்றி போலீஸ் அதிகாரியாகவும் சினிமா நடிகையாகவும் வருகிறார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு பேய் தொந்தரவு கொடுப்பதால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது கதை. பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் அஷ்வின் மற்றும் புகழுக்கு அடித்த லக்- சூப்பர் நியூஸ்!!

அஷ்வின் மற்றும் புகழ்…

நேற்று ஏப்ரல் 14 தொலைக்காட்சி ரசிகர்களை சோகத்தில் ஒரு விஷயம் ஆழ்த்தியது. அது என்ன என்று உங்களுக்கே தெரியும்.

இத்தனை மாதங்களாக நம்மை கலகலவென சிரிக்க வைத்து வந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. நமக்கு வந்த தகவல் போல் கனி தான் 2வது சீசனின் வெற்றியாளர்.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து கலகலப்பாக இருந்தாலும் இறுதியில் எமோஷ்னலாக இருந்தது.

அடுத்து குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் என்ன செய்ய இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி முடிந்த நிலையில் அஷ்வின் மற்றும் புகழ் ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளனர்.

அதாவது அவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இப்படத்தை Trident Arts தயாரிக்கிறார்களாம்.

இந்த செய்தியை அவர்களே வெளியிட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தலைவர் பதவியை ராஜினாமா செய்த தீபிகா படுகோனே!!

தீபிகா படுகோனே…

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்தின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தீபிகா படுகோனே கடந்த 2019-ம் ஆண்டு எம்.ஏ.எம்.ஐ. மும்பை திரைப்பட விழா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்பு அமீர்கானின் மனைவி கிரண் ராவ் இந்த பதவியில் இருந்தார்.

இந்த நிலையில் மும்பை திரைப்பட விழா தலைவர் பதவியை தீபிகா படுகோனே திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எம்.ஏ.எம்.ஐ. மும்பை திரைப்பட விழா தலைவராக இருந்து சினிமாவையும், உலகம் முழுவதும் உள்ள சாதனையாளர்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றிய அனுபவம் மகிழ்ச்சியானது.

ஆனால் தற்போது எனது இதர பணிகள் காரணமாக திரைப்பட விழா தலைவர் பதவிக்கு அர்ப்பணிப்பை கொடுக்க இயலவில்லை. எனவே இந்த பதவியில் இருந்து விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.

கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட பிக் பாஸ் நடிகை லாஸ்லியா!!

லாஸ்லியா…

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இளம் நடிகை லாஸ்லியா.

இவர் தற்போது தமிழ் திரையுலகில் உருவாகி வரும் நான்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் நடிப்பில் உருவாகி வரும் Friendship எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தற்போது பிக் பாஸ் தர்ஷன் மற்றும் கே.எஸ். ரவிகுமாருடன் லாஸ்லியா கூகுள் குட்டப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை லாஸ்லியா கடற்கரை புகைப்படங்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

அதுவும் மார்டன் உடையில் இல்லாமல், அழகிய வெள்ளை நிற புடவையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய திரைப்படம், வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

ஏ.ஆர்.முருகதாஸ்…

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி இயக்குனராக விளங்குபவர் தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இவர் இயக்கத்தில் பல பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இவர் சூர்யா, விஜய், அஜித், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்பயணத்தில் பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடைசியாக இவர் தளபதி விஜயை வைத்து சர்கார் என்ற படத்தை இயக்கியிருந்தார், இப்படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்திருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 1947 என்ற படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைகீழாக தொங்கி போஸ் கொடுத்த நடிகை சமந்தா – இது வேற லெவல்!!

நடிகை சமந்தா…

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் த்ரில்லர் கதைகளை கொண்ட படமும் உருவாகி வருகிறது.

மேலும் தெலுங்கில் சகுந்தலம் எனும் காவிய திரைப்படம் பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

நடிகை சமந்தா எப்போதும் ஜிம் ஒர்கவுட் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.

இந்நிலையில் நடிகை சமந்தா தலைகீழாக தொங்கி யோகா செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நீங்க வேற லெவல் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மார்டன் உடையில் ரசிகர்கள் கவர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை – அதிலும் அழகு தான்!!

நடிகை ரோஷினி…

விஜய் தொலைக்காட்சியில் தற்போது TRPயில் முன்னணியில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகியாக நடித்து தமிழக மக்களின் மனதை கவர்ந்துள்ளார் இளம் நடிகை ரோஷினி.

ஆம் இவர் நடித்து வரும் கண்ணம்மா எனும் கதாபாத்திரம், பல இளைஞர்களின் மனதை கவர்ந்திழுத்துள்ளது.

சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நடிகையாக பிரபலமான நடிகை ரோஷினி தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரோஷினி மார்டன் உடையில் அழகிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

புடவையில் மட்டுமல்ல, மார்டன் உடையிலும் கண்ணம்மா அழகு தான், என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.