தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன், தன்னுடைய நண்பர் மகத்தின் காதலுக்கு துணை நின்றிருக்கிறார்.
‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், மகத் நடிப்பில் உருவாகி வரும் ‘காதல் ConditionsApply’ என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார்.
லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் தயாரிக்கும் இந்த படத்தை அரவிந்த் இயக்குகிறார். தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அரவிந்த் சாமி, ஆர்யாவின் படத்தில் நடித்து இருக்கிறார்.
தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர்,
சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.
தற்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’, ‘தலைவி’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இப்படங்களை நடிகர் அரவிந்த் சாமி தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வந்தார். தற்போது இந்த படத்திற்கு தமிழில் ‘ரெண்டகம்’ என்றும் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல இன்கேம் இன்கேம் காவாலே என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.
கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. இவர்தான் விஜய்யின் அடுத்த கதாநாயகி என்று கூட சொல்கிறார்கள்.
தற்போது இவர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போய்விட்டது.இவரின் துறுதுறு பாவனைகளும், கெத்தான உடல்மொழியும், சுண்டியிழுக்கும் தோற்றப் பொலிவும்,
கட்டிப்போடும் நடிப்பும் எப்பேர்ப்பட்ட இளசுகளின் நெஞ்சை துளைத்திடவே செய்யும். அந்தளவுக்கு தென்னிந்திய சினிமாவில் எக்ஸ்பிரஷன் குயினாக ரசிக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா.
சினிமாவில் நாயகிகளை பொறுத்தவரை அவர்களுக்கான வெற்றி ஃபார்முலா ஒன்றே ஒன்றுதான். ரசிக்கவைக்கும் அழகும் தேர்ச்சியான நடிப்பும் ஒருசேர வெளிப்படும்போது வெள்ளித்திரையில் ஜொலிக்கிறார்கள்; ரசிகர்களை வசப்படுத்துகிறார்கள்.
ராஷ்மிகாவின் கரியரில் இதுதான் நேர்ந்தது. திரையில் அழகு வழியும் பொம்மையாக அல்லாமல், கில்லி அடிக்கும் அம்மணியாக தோன்றுவதையே ராஷ்மிகா விரும்புகிறார் என்பதையே அவருடைய படத்தேர்வுகள் காட்டுகின்றன. ரசிகர்கள் இவரை நேஷனல் க்ரஷ் என்று செல்லமாக அழைப்பது உண்டு.
இந்நிலையில், சலூன் கடை ஒன்றில் இவரது புகைப்படத்தை மொட்டையடித்து மாடலாக பயன் படுத்தியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இது என்னடா நேஷனல் க்ரஷ்-க்கு வந்த சோதனை என்று பங்கம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
தளபதி விஜய் நடிப்பில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டுள்ள தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்க்கு பெரிய அடியை கொடுத்துள்ளது.
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த தளபதி 65 படம் ஒருவழியாக சமீபத்தில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஜார்ஜியாவில் அடிக்கடி மழை பெய்து வருவதாக கூறுகின்றனர். இதன் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாமல் தளபதி 65 படக்குழுவினர் தடுமாறி வருகிறார்களாம்.
இதனால் சன் நிறுவனத்திற்கு தளபதி 65 படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் அடி விழும் என தெரிகிறது. முன்னதாக ரஷ்யாவில் பிளான் செய்யப்பட்ட தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் கடைசி நேரத்தில் ஜார்ஜியா நாட்டுக்கு மாற்றப்பட்டது.
தளபதி 65 மூன்றாவது முறையாக அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் முதல் முறையாக தெலுங்கு சினிமாவின் சென்சேஷனல் நடிகை பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடிந்தவுடன் மே முதல் வாரத்தில் சென்னையில் தொடங்க இருந்த படப்பிடிப்பு தற்போது தள்ளிப்போகும் என தெரிகிறது. இருந்தாலும் கிடைக்கும் கேப்பில் படப்பிடிப்பை தொய்வில்லாமல் நடத்துவதில் ஆயுத்தமாக இருக்கிறாராம் நெல்சன். இருந்தாலும் திட்டமிட்டபடி தளபதி 65 படத்தின் ஜார்ஜியா படப்பிடிப்பு நடக்குமா என்பது சந்தேகம்தான். கூடுதலாக நாட்கள் இழுக்கும் என தெரிகிறது.
இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி பிரியா பவானி சங்கர். தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.
தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
பிரியா பவானி சங்கரின் பட வரிசையை பார்க்கும்போது கண்டிப்பாக நயன்தாராவை ஓரம்கட்டி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக விரைவில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இளம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருடத்திற்கு 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மட்டும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வெளியாக உள்ளதாம்.
ப்ரியா பவானி சங்கர் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் ஒரு புகைப்படத்தை ரொம்ப க்ளோஸப்பில் எடுத்து வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவரையா இவ்வளவு நாள் ரசித்தோம் எனும் அளவுக்கு மனம் நொந்து போய் விட்டனர்.
தமிழ் சினிமாவின் நம்பிக்கையான உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 65 படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
மேலும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து முன்னணி தெலுங்கு நடிகை பூஜா ஹேக் டே நடிக்கவிருக்கிறார்.
அனிருத் இசையில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் தளபதி 65 படப்பிடிப்பில் இருந்து தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது.
தமிழில் டார்லிங் படம் மூலம் நடிகையாக அறிமுகமான நிக்கி கல்ராணியிடம் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நிக்கி கல்ராணி. இவரது சகோதரி சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை நிக்கி கல்ராணியின் குடும்பத்தினர் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீது ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘‘கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் நிகில்.
இவருடைய ஓட்டலில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.50 லட்சம் முதலீடு செய்திருந்தேன். இதற்காக மாதம் ரூ.1 லட்சம் கொடுப்பதாக நிகில் கூறியிருந்தார். ஆனால் இதுவரை நிகில் எனக்கு மாதம் ரூ.1 லட்சம் கொடுக்கவில்லை. மாறாக என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தையும் திரும்ப கொடுக்கவில்லை.
இதுபற்றி பலமுறை நிகிலிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் நிகில் மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸின் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட 3 நடிகைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தி படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகைகள் அல்பனா புச், நிதி ஷா, தஸ்னிம் சேக் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை தஸ்னிம் சேக்குக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அவருடன் தொடர்ந்து சில நாட்களாக நெருக்கமாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட அல்பனா புச்சும் நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
படப்பிடிப்பில் பங்கேற்ற 3 நடிகைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்குபவர், இவர் தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது, இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை என்று தான் கூறவேண்டும்.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் மாநாடு படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ், சிம்பு உடன் நடித்து வந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதனிடையே தற்போது மாநாடு திரைப்படத்தில் மேலும் சில குக் வித் கோமாளி பிரபலங்கள் இணைத்துள்ளனர்.
ஆம் பாலா, சரத் உள்ளிட்ட முக்கிய குக் வித் கோமாளி பிரபலங்கள் மாநாடு படத்தில் நடித்துள்ளனர். இதோ அவர்கள் சிம்புவுடன் இருக்கும் புகைப்படம்.