பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்.. யார் தெரியுமா?

பிரசாந்த்…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி, லீலா சாம்சன் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண தேதியை அறிவித்த நடிகர் விஷ்ணு விஷால்..!

விஷ்ணு விஷால்…

நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் திருமணம் செய்து கொள்ளும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.

அதைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டாவின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இதற்கான அழைப்பிதழை நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்..!

நிவேதா தாமஸ்…

தமிழில் ரஜினி, கமல் படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸின் தனித்திறமையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார்.

மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நிவேதா தாமஸ், சூர்யா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் படத்தில் இடம் பெற்ற ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்…’ என்ற பாடலை பாடி தானே இசையமைத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் நிவேதா தாமஸை புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள். மேலும் பல பாடல்களை பாடி வெளியிடுமாறும் கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்.. என்ன தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ்…

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் கதையில் நடித்துள்ளார் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. பாண்டிராஜ் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறன் படத்தில் சூர்யா இணைவார் என தெரிகிறது.

இந்நிலையில் வாடிவாசல் படத்துக்கான இசைப்பணிகள் தொடங்கியிருப்பதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிதாக கிடைத்திருக்கும் இந்த அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே தேசிய விருது கிடைக்காத காரணம் என்ன? நடிக்கத் தெரியவில்லை என்று சொன்ன பிரபலம்!!

சிவாஜி……….

தன்னுடைய நடிப்பால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த சிவாஜி கணேசனுக்கு தற்போது வரை தேசியவிருது கிடைக்கவில்லை என்பது பலருக்கும் தெரிந்திராத ஒன்று. அதற்கான காரணம் என்ன என்பது தற்போது வரை புரியாத புதிராக உள்ளது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே ஒரு காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தவர் சிவாஜி கணேசன். அவரது ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அப்படி மெனக்கெடல் இருக்கும்.

அதுவும் பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களில் அவர் நடித்த நடிப்பு இன்றும் பேசப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதற்குமேல் சிறந்த நடிப்பை காட்டுபவர்களுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது சிவாஜியின் நடிப்பு.

அப்பேர்பட்ட சிவாஜி கணேசனுக்கு ஏன் தற்போது வரை தேசியவிருது கிடைக்கவில்லை என்ற கேள்வி ஒவ்வொரு ரசிகர்களும் இருந்து வருகிறது. சிவாஜி காலகட்டத்தில் இருந்த பெரும்பாலான நடிகர்களுக்கு அந்த விருது கிடைத்தது.

சிவாஜியை விட சுமாரான நடிகர்களுக்குக்கூட தேசிய விருது கிடைத்துள்ளது. இதைப்பற்றி சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில், மற்றவர்களைப் போல சிவாஜி கணேசனுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று நினைத்ததால் தேசிய விருது கொடுக்கவில்லை போல என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றே சிவாஜி கணேசன் தேசிய விருதுக்கு புறக்கணிக்கப்பட்டாரா என்ற ஒரு கேள்வியும் நீண்ட நாட்களாக பத்திரிகைகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வருகிறது. இதற்கான உண்மை காரணம் என்னவாக இருக்கலாம் என்பதை ரசிகர்கள் கமெண்டில் தெரிவிக்கலாம்.

நம்ம பிகில்பட சிங்கபெண்ணா இது? மோ சமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள காயத்ரி..!!

காயத்ரி…………

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய்யின் அடுத்த படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளனர். அவர் படத்தில் நான் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் போட்டிபோட்டு ஏங்கி வருகிறார்கள். அப்படி அவர் படத்தில் நடித்தாலே போது சினிமாவில் செட்டில் ஆகிவிடலாம் என்று இளம் நடிகைகள் இருந்து வருகிறார்.

அந்தவகையில், விஜய்யை வைத்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பெரிய ஹிட் கொடுத்த படம் பிகில். இப்படத்தில் நயன் தாராவை தவிர மற்ற கதாபாத்திரங்களில் பல இளம்நடிகைகள் நடித்து வந்தனர்.

படத்தில் சிறு கால்பந்து வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங் துறையில் இருந்து வந்து பிகில் பட வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகினார் காயத்ரி.

சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காயத்ரி க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது படுக்கையில் உள்ளாடை மட்டு அணிந்து படுமோசமான போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன் காதலித்து ஏமாற்றிய முன்னணி நடிகர்! திருமணமாகாமல் தனிமையில் 45 வயதான நடிகை..!

நடிகை…………..

சினிமாவில் பிரபலங்கள் பலர் தன்னுடன் நடிக்கும் சக நடிகை நடிகர்களை காதலித்து லிவிங்டுகெதரி இருப்பது வழக்கம். அப்படி பல பிரபலங்கள் காதலித்து பின் பிரிந்து திருமணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 8 ஆண்டுகளாக நடிகை ஒருவரை காதலித்து வந்துள்ளார் முன்னணி நடிகர் சல்மான் கான்.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் சல்மான் கான் தான். சல்மான்கான் காதல் கிசுகிசுக்களில் பலமுறை சிக்கியுள்ளார்.

கேத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல நடிகைகளுடன் பழகிய சல்மான் கான் நடிகை சோமி அலி என்பவரையும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பழைய கால நினைவுகளை ஞாபகப்படுத்திய சோமி அலி, சல்மான்கான் தன்னை ஏமாற்றியதை வாழ்நாளில் மறக்க முடியாது எனவும்,

ஆனால் அவரது குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். சல்மான்கான் இதே மாதிரி காதல் சர்ச்சைகளில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஆனால் சல்மான் கானும் இன்னும் திருமணமாகாமல் ஒத்தையில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கா ரம்யா பாண்டியனை மிஞ்சிய கீர்த்தி பாண்டியன் – முகம் சுளிக்க வைக்கும் அரைகுறை ஆடை!!

கீர்த்தி பாண்டியன்………

சென்ற வருடம் வெளிவந்த தும்பா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி பாண்டியன்.

இப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்களில் ஓடிக்கொண்டு இருந்தது. இப்படத்தின் மூலம் கீர்த்தி பாண்டியனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பு கிடைத்தது.

இதன்பின் ஓடிடி துறையில் அதாவது நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற துறை ஒன்றில் போஸ்ட்மேன் என்ற படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடலை காட்டி மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அக்கா ரம்யா பாண்டியனை தங்கச்சி கீர்த்தி பாண்டியன் மிஞ்சிவிட்டார் என கூறி வருகின்றனர்.

பிரபலத்தின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய குக் வித் கோமாளி 2 பிரபலங்கள்- யாருடைய பிறந்தநாள் தெரியுமா?வீடியோ!

குக் வித் கோமாளி 2………..

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் அனைவரும் ஏப்ரல் 14ம் தேதிக்காக ஆவலாக வெயிட்டிங்.

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக தொலைக்காட்சிகளில் நிறைய படங்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. ஆனால் எல்லோரும் ஆவலாக காத்துக் கொண்டிருப்பது குக் வித் கோமாளி 2 இறுதி நிகழ்ச்சிக்காக தான்.

வெற்றியாளர் கனி அவருக்கு அடுத்தடுத்து ஷகீலா, அஸ்வின் இருப்பதாக செய்திகள் வெளியாகிவிட்டன.

ஆனாலும் இந்த இறுதி நிகழ்ச்சிக்காக தான் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங். இதுவரை வந்த புரொமோக்கள் அனைத்தும் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக ஒரு கொண்டாட்டத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.

அது வேறுயாருக்கும் இல்லை பிரபல நடிகை ரேகா அவர்களின் பிறந்தநாளை பிக்பாஸ் 4 மற்றும் குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் சேர்ந்து கொண்டாடியுள்ளார்கள்.

அந்த வீடியோ இதோ,

அண்ணாத்த படத்திலிருந்து ரஜினி வெளியான செம்ம மாஸ் ஃபோட்டோ !

அண்ணாத்த…………

தல அஜித் உடனான விஸ்வாசத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் அவர் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ராமோஜி பிலிம் சிட்டி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் GET UP ஒன்று லீக் ஆகியது. எப்போமே Look – இல் கோட்டைவிடும் சிவா இந்த முறை மாஸ் காமிச்சுட்டார்.

அண்ணாத்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, நயன்தாரா மற்றும் சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர், மேலும் டி இமானின் இசையும், வெற்றியின் ஒளிப்பதிவோடு படம் தயாராகிறது. ‘சென்டிமென்ட் இடங்களில் சமரசமே இருக்கக் கூடாது.

அதுதான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமையும்’ என்ற ஃபார்முலாவோடு அஜித் படங்களில் வேலை பார்த்தவர் சிவா. தற்போதும் அதில் அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், சில மாதங்களுக்கு முன் திடீரென்று ரஜினிக்கு ர.த் த அ.ழு.த்தம் கூட அண்ணாத்த படப்பிடிப்பு நின்று போனது. அதன்பின் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பிசியாக கலந்து கொண்டுள்ளார். தற்போது ரஜினியும், இயக்குனர் சிவாவும் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாள் கழித்து ரஜினியை பார்த்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.