தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தானா – மாஸ் அப்டேட்!!

நடிகர் தனுஷ்….

இந்தியளவில் பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் கர்ணன் படம் வெளியாகியுள்ளது.

வெளியான முதல் நாளில் சுமார் ரூ. 10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை செய்துள்ளது கர்ணன்.

மேலும் நடிகர் தனுஷ் தொடர்ந்து பல திரைப்படங்களை தொடர்ந்து கமிட் செய்து வைத்துள்ளார்.

ஆம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43, சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் D44, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ராம் குமார் இயக்கத்தில் D46 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் தனுஷின் 47 வது படத்தை இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இதற்குமுன் ராக்கி எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தற்போதுவரை வெளியாகவில்லை. மேலும் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாணி காயிதம் படத்தின் இயக்குனரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி, மகன்களுடன் கர்ணன் படம் பார்த்த நடிகர் தனுஷ் – அதுவும் எங்கே தெரியுமா?

தனுஷ்…

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கர்ணன். ஆம் பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் வெளியாகி முதல் நாளிலேயே ரூ. 10 கோடி வரை வசூல் செய்து தமிழகத்தில் மாபெரும் வசூல் சாதனையை செய்தது.

கர்ணன் படத்தை தனுஷின் அண்ணண், தனது மனைவி மற்றும் சகோதரரியுடன் இணைந்து திரையரங்கில் பார்த்து ரசித்தார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவி, மகன்களுடன் இணைந்து அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்து ரசித்துள்ளார்.

ஆம் தி கிரே மென் எனும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி பைனலில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் – யார் தெரியுமா?

குக் வித் கோமாளி…

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல் வரும் தமிழ் புத்தாண்டு அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த பைனல் நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிம்பு கலந்துகொள்கிறார்.

மேலும் சந்தோஷ் நாராயணன், அவரது மகள் தீ, காணொளி மூலம் ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி பைனல் நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகன் ராவ் கலந்துகொண்டுள்ளார்.

முகன் ராவ் தற்போது தமிழ் திரையுலகில் வெற்றி எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் – ஏ.ஆர்.ரகுமான்!!

ஏ.ஆர்.ரகுமான்..

99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். அடுத்து படம் இயக்கவும் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது.

இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது, ”இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது.

நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது பற்றிய முடிவை எடுப்பேன்.

சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. அதில் இருக்கவே விரும்புகிறேன். நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். இசை மற்றும் கதை எழுதும் பணியை செய்யவே விரும்புகிறேன்.

எனது வாழ்க்கை வித்தியாசமானது. அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு வேலைக்குத்தான் போகச் சொல்வார்கள். ஆனால் எனது தாய் இசைத்துறையில் பணியாற்றும்படி கூறினார்” என்றார்.

நடிகை சுனைனாவிற்கு திருமணமா?- மாப்பிள்ளை ஒரு நடிகரா?

சுனைனா…

சினிமா நடிகைகள் பற்றி வதந்திகள் வருவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. ஒருசிலர் வதந்திகளுக்கு ரியாக்ட் செய்தாலும் பலர் அதை கண்டுகொள்வதே இல்லை.

2008ம் ஆண்டு வெளிவந்த காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சுனைனா.

அதன்பிறகு அவர் நிறைய படங்கள் நடித்தார், அண்மையில் அவர் நடிப்பில் வெளியான சில்லு கருப்பட்டி படத்திற்கு நிறைய விருதுகள் எல்லாம் கிடைத்தது.

கடந்த சில வருடங்களாக சுனைனா நடிகர் கிருஷ்ணாவை டேட்டிங் செய்வதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் என்ற வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

இப்போதும் அப்படி ஒரு வதந்தி கிளம்ப நடிகை தரப்பில், சுனைனா திருமணம் பற்றிய செய்திகள் வருமா என்பது தெரியவில்லை.

ஆனால் அடுத்தடுத்து அவர் நடிக்கப்போகும் படங்கள் பற்றிய செய்திகள் இனி வர இருக்கின்றன என்கின்றனர்.

எனிமி படத்தின் டீஸர் ரிலீஸ் அப்டேட்..!

எனிமி…

ஆர்யா, விஷால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கும் எனிமி படத்தை ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ படத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள 10 சதவீத படப்பிடிப்பை சென்னையில் நடத்த உள்ளதாகவும் இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.

மேலும் எனிமி படத்தின் டீசரை இரண்டு வாரத்திற்குள் வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கர்ணன் படத்தை பல கோடிக்கு வாங்கிய அமேசான்.. ரிலீஸுக்கு முன்னாடியே 65 கோடி லாபமாம்!

அமேசான்…

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கர்ணன். திரும்பும் திசையெல்லாம் கர்ணன் பற்றிய பேச்சுதான்.

அசுரன் படத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு கர்ணன் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தாலும் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை.

முதலில் கர்ணன் படம் கொரானா கட்டுப்பாடுகளால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் கர்ணன் படம் ரிலீஸாவதற்கு முன்னரே கிட்டத்தட்ட 65 கோடி வரை லாபம் பார்த்து விட்டதாம்.

கர்ணன் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் 21 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறுகின்றனர். தனுஷ் கேரியரில் ஒரு படம் திரையரங்கில் வெளியாகி டிஜிட்டல் தளத்திற்கு இவ்வளவு பெரிய விலைக்கு வருவது இதுதான் முதல் முறையாம்.

ஜகமே தந்திரம் திரைப்படம் 60 கோடிக்கும் மேல் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால் அது நேரடி ஓடிடி ரிலீஸ். இதன் காரணமாக தற்போது டிஜிட்டல் துறைகளிலும் தன்னுடைய வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளார் தனுஷ்.

அசுரன் படத்தை போலவே கர்ணன் திரைப்படம் 100 கோடி வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நடிகர்கள் மாஸ் படங்கள் கொடுத்து வசூலை ஈட்டி வரும் நிலையில் தனுஷ் மட்டும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவு பெரிய வசூலை ஈட்டி வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

கர்ணன் படத்தை தன்னுடைய ஸ்டைலில் கலாய்த்த விவேக்..!

விவேக்…

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தை பார்த்த அனைவரும் ஆகா ஓகோ என புகழ்ந்து கொண்டிருக்கையில் நடிகர் விவேக் தன்னுடைய ஸ்டைலில் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அசுரன் படத்திலிருந்து தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் அசுரன் அளவுக்கு தனுஷ் நடிப்பிற்கு தீனி போட ஒரு படமும் இல்லையே என ரசிகர்கள் ஏங்கினர்.

ஆனால் தற்போது தனுஷுக்கு அடுத்த தேசிய விருது கிடைக்கும் அளவுக்கு ஒரு படத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். கர்ணன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் கர்ணன் படத்தைப் பார்த்துவிட்டு தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் போற்றிப் புகழ்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் படிக்காதவன் மற்றும் உத்தமபுத்திரன் போன்ற படங்களில் தனுஷுடன் நடித்த காமெடி நடிகர் விவேக் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு படிக்காதவன் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு படத்தை ஜாலியாக கலாய்த்துள்ளார்.

படிக்காதவன் படத்தில் தனுஷிடம் பேசிய வசனமான, எப்பவாவது வித்தவுட்டுணா ஓகே, எப்பவுமே வித்தவுட்னா எப்படி என்ற வசனத்தை மாற்றி, கர்ணன் படத்திற்கு, எப்பவாச்சும் ஹிட்டுக்கொடுத்தா ஓகே, எப்பவுமே கொடுத்தா எப்படி ப்ரோ? என பதிவிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

புடவையில் தகதகவென மின்னும் ப்ரியா பவானி ஷங்கர்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

பிரியா பவானி சங்கர்…

செய்தி வாசிப்பாளராக இருந்து, அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்பின் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இன்னும் கொஞ்ச நாளில் நயன்தாரா மார்க்கெட்டை ஓரம் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா கேரியரை தொடங்கி பின்னர் சீரியல் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சரியான நேரத்தில் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகிய நடிகர்களுக்கு பிறகு இருக்கும் அனைத்து நடிகர்களின் படங்களிலும் தற்போது பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயின். போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு படங்களாக பிரியா பவானி சங்கரை இளம் நடிகர்கள் புக் செய்து வருகின்றனர்.

விரைவில் முன்னணி நடிகர்களுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதற்கு ஏற்றார் போல அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது. அந்த ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

புடவையில் முன்பக்கமாக இறக்கி காட்டி கவர்ச்சிக்கு நான் தயார் என்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தயாரிப்பாளர்களை உசுப்பேற்றி உள்ளார் பிரியா பவனி சங்கர்.

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

சூர்யா…

இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளவர், இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது.

மேலும் அடுத்தாக இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதன் முலம் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாரி செல்வராஜ் பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் தற்போது கலைப்புலி S.தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏனென்றால் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன், சிவா, மாரி செல்வராஜ் என முக்கிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதே அதற்கு காரணம்.