தனுஷின் நடிப்பில் வெளியான கர்ணன் திரைவிமர்சனம்..!

கர்ணன் திரைவிமர்சனம்…

தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை விட மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கர்ணன். பரியேறும் பெருமாள் எனும் எதார்த்தமான படைப்பை தந்துவிட்டு, தற்போது கர்ணன் எனும் படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். சில எதிர்ப்புகள், பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகியுள்ள கர்ணன், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு நீதியை வழங்கினாரா? இல்லையா? என்று பார்ப்போம்.

கதைக்களம்

கர்ணன் { தனுஷ் } கைது செய்து அடித்து உதைத்து ரத்தம் சொட்ட சொட்ட காவல் துறையினர்கள் அழைத்து செல்கின்றனர். அங்கே துவங்கும் ‘கண்டா வரச்சொல்லுங்க பாடல் ‘ அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

அந்த இடத்தில் முடித்து சில வருடங்கள் படம் பின்னோக்கி செல்கிறது. அங்கே, பொடியன்குளம் எனும் குக்கிராமத்தில் தனது மக்களுடன் வாழ்ந்து வருகிறான் கர்ணன். கர்ணனின் துணை நிற்பவராக லால் மற்றும் அவரது 6 நண்பர்கள்.

பொடியன்குளம் ஊரில் தொடர்ந்து 8 வருடமாக யாராலும் நிகழ்த்தமுடியாத விஷயத்தை கர்ணன் முடிக்கிறான். அதனால், ஊர் வழக்கப்படி கர்ணனுக்கு வாழ் கொடுத்த கொண்டாடுகின்றனர்.

என்னதான் ஊர் மக்கள் சொந்தோசமாக ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் தங்களது ஊருக்கு அரசால் கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் கிடைக்கவிடாமல் மேல் சாதி காரர்கள் தடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்று வருத்தமும் இருக்கிறது.

அதில் ஒன்றாக கர்ணனின் பொடியன்குளம் ஊர் வழியாக செல்லும் ஒரு பேருந்து கூட பொடியம்குளம் அருகே நிற்பதில்லை. அது ஏன் என்று கேட்டால், உங்களின் ஊருக்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்று கூறி நிரகிரிகின்றனர் பேருந்து ஓட்டுனர்கள்.

இதற்காக பல வழியில் போராடுகிறார்கள் பொடியன்குளம் மக்கள். ஆனால் குனிந்து கெஞ்சினாள் உரிமை கிடைக்காது, நிமிர்ந்து தைரியமாக போராடுவோம் என்று தனது மக்களுக்காகவும், தங்களது உரிமைக்காகவும் போராடுகிறார் கர்ணன்.

ஒட்டுமொத்தமாக இந்த போராட்டத்தில், பல தடைகளையும், பல இழப்பையும் சந்திக்கும் கர்ணன், உரிமையை மீட்டு தன் மக்களுக்கு தந்தானா? இல்லையா? இறுதியில் வென்றது சாதியா? அல்லது உரிமையா? என்பது தான், கர்ணனின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கர்ணனாக வரும் தனுஷ், கீழ் சாதி மக்களின் உணர்வுகளை கண்முன் பிரதிபலிக்கிறார். அதே போல், கர்ணனுக்கு துணையாக நிற்கும் நடிகர் லால், தனது நடிப்பின் மூலம் கண்கலங்க வைக்கிறார். இருவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்பதில் சந்தகமேயில்லை.

கதாநாயகி ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் படத்தை மலையளவு தூக்கி நிறுத்துகிறது. அதேபோல், வில்லனாக வரும் நடிகர் நட்டி, காவல் துறை அதிகாரியாக படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் அலரவைக்கிறார்.

இவர்களை போல் இப்படத்தில் நடித்த கோழி குஞ்சு, கழுதை, குதிரை, பருந்து என ஆரம்பித்து, தனுஷின் தங்கையாக வரும் கதாபாத்திரம் வரை படத்தின் ஒவ்வொரு காட்சியும் பல கதைகளை கூறுகிறது.

பரியேறும் பெருமாள் படத்திற்கு பின், மாரி செல்வராஜ் என்ன செய்யப்போகிறார் என்று காத்திருந்து ரசிகர்களுக்கு, மிகப்பெரிய விருந்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.

சந்தோஷ் நாராயணனின் இசை, படத்தின் பாதி வெற்றி. ஒளிப்பதிவின் மூலம் தேனி ஈஸ்வர் மிரட்டியுள்ளார். மீண்டும் தனது தயாரிப்பில் ஓர் சிறந்த படைப்பை தந்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு.

இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்துக்கொண்ட கதைக்களம், மாஸ்டர் பீஸ். திரைக்கதை வெற்றிக்கு வழி காட்டியுள்ளது.

க்ளாப்ஸ்

தனுஷ், லால், உள்ளிட்ட அனைவரின் நடிப்பு.

மாரி செல்வராஜின் கதை, திரைக்கதை.

ஒளிப்பதிவு, இசை.

பல்ப்ஸ்

படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும், அது பெரிதாக குறைபோல் தெரியவில்லை.

மொத்தத்தில் மாரி செல்வராஜின் மாஸ்டர் பீஸ் கர்ணன்.

அழகான மனிதரை சந்தித்ததில் பெருமை… பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்!!

துருவ் விக்ரம்…

விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம், பிரபல நடிகர் ஒருவரை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘வர்மா’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தந்தை விக்ரமுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் துருவ் விக்ரம்.

இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் ’இந்த அழகான மனிதரை சந்தித்ததால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா… தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!!

கோப்ரா…

விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இதனிடையே இந்த திரைப்படத்தை பிரபல ஓடிடி தளம் ஒன்று வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இது ஒரு பொய்யான தகவல், இதில் உண்மை இல்லை என்று இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

கர்ணன் படத்தை விமர்சித்து பதிவிட்ட நடிகர் விஜய் சேதுபதி, என்ன சொன்னார் பாருங்க!

விஜய் சேதுபதி…

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்றுமுன்தினம் உலகமுழுவதும் வெளியான திரைப்படம் தான் கர்ணன்.

மேலும் இப்படம் திரையரங்கில் வெளியான முதல் ஷோ முதல் ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் சந்தோஷகமாக பதிவிட்டு வருகின்றனர், அந்த அளவிற்கு இப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று பல இடங்களில் மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இணையத்தில் கர்ணன் படம் குறித்து தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி “எக்ஸலென்ட் மூவி… டோண்ட் மிஸ் இட்” என கர்ணன் படம் குறித்து பதிவிட்டுள்ளார், இதற்கு அவர்களின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

TRPயை அடித்து நொறுக்க வரும் புத்தம் புதிய பிரமாண்ட சீரியல் – விஜய் டிவியின் அடுத்த அதிரடி!!

விஜய் டிவி…

சின்னத்திரையில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி, விஜய் டிவி.

இதில் பல சூப்பர்ஹிட் சீரியல்களும் இதுவரை ஒளிபரப்பாகி வந்துள்ளது. மேலும் தற்போது மக்கள் மத்தியில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் முடிவு வருகிறது.

அதிலும் சஞ்சீவ் நடித்து வந்துகொண்டிருந்த காற்றின் மொழி சீரியல் இந்த வாரத்திலிருந்து முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் விஜய் டிவியில் புதிதாக பிரமாண்டமான வேலம்மாள் எனும் புதிய சீரியல் ஒளிபரப்பவுள்ளது.

ஆம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மௌன ராகம் சீரியல் சீசன் 1ல் சத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த குழந்தை நட்சத்திரம்,

நடிகை கிருத்திகா தான், மீண்டும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக்கவுள்ளார்.

இந்த சீரியல் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 2 பைனல்ஸில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்! திடீரென்று அவர் கொடுத்த சப்ரைஸ்..!

ஏ.ஆர்.ரகுமான்…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, பெரியளவிலான ரசிகர்கள் ரசிக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவடையவுள்ளது.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 பைனல்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.

இதனிடையே அண்மையில் இந்த பைனல்ஸ் எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருந்தது, இதில் டாப் நடிகரான சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பிரபல பாடகியான தீ-யும் குக் வித் கோமாளி பைனல்ஸ் வந்துள்ளார், மேலும் அவருடன் போட்டியாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி-யில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஆம், அதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் திரையில் வந்து குக் வித் கோமாளி நட்சத்திரங்களுடன் பேசியுள்ளார்.

மேலும் அவர் முக்கிய போட்டியாளர் கனியிடம் பைனல்ஸிலும் காரா கொழம்பு தானா என கேட்டுள்ளார்.

ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்!!

ஆண்ட்ரியா…

தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ ரசிகர்களிடையே அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியா கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்வார்.

இந்நிலையில், ஆண்ட்ரியா உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவு செய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி ரசிகர்களிடையே அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

வெளியான ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் – உருகும் ரசிகர்கள்..!

ரம்யா பாண்டியன்….

ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் அதற்கு முன்னதாக டம்மி பட்டாசு என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படமான ஆண் தேவதை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதையெல்லாம் தாண்டி விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு சீசன் 9 போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் சின்னத்திரையில் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்தார்.

இவர் புகழ்ச்சியை பார்த்து விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். நடிப்பை பார்த்தோ, இடுப்பை பார்த்தோ எதை பார்த்து வாய்ப்பு கிடைத்தது என்று தெரியவில்லை. பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனின் சினிமா கேரியர் கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதை விட்டுவிடக் கூடாது என தன்னுடைய பழைய கவர்ச்சி வழியை கையில் எடுத்துள்ளார் ரம்யா பாண்டியன். அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று செம வைரல் ஆகியுள்ளது.

மறைக்க வேண்டியதை வெளியில் காட்டியதால் குதூகலமான ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். ரம்யா பாண்டியன் தற்போது சூர்யா தயாரிக்கும் படமொன்றில் நடித்து கொண்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து சில இளம் நடிகர்களின் படம் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். விரைவில் வெள்ளித்திரையில் நாயகியாக கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

தொடர்ந்து புது புது படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரும் ரம்யா பாண்டியன் இடை இடையே கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

பிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா- புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்!!

பிரியங்கா தேஷ்பாண்டே…

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 8, ஸ்டார்ட் ம்யூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் டிவியின் முன்னணி பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் 5ஆம் சீசன் வரும் ஜூன்,ஜூலை மாதம் துவங்கவிருக்கிறது. இதில் விஜய் டீவியை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் confession roomல் தொகுப்பாளினி பிரியங்கா இருப்பது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனால் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள போகிறார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இந்த புகைப்படம் பிக் பாஸ் சீசன் 1ல் பிரியங்கா விருந்தினராக வந்து போது எடுத்து என்று தெரியவந்துள்ளது.

ரோஷ்னி ஹரிபிரியன் புகைப்பட தொகுப்பு..!

ரோஷ்னி…