ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட தளபதி 65 படத்தின் அறிமுக நடிகை, செம ட்ரெண்டிங் புகைப்படங்கள்..!

அபர்ணா தாஸ்..

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் செம வைரலானது.

இதனிடையே அண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்துவிட்டு சென்றார். சற்றும் எதிர்பார்க்காத விதமாக நடந்த இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் தளபதி விஜய் தற்போது தளபதி 65 படத்தின் ஷூட்டிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார்,

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ள நடிகை அபர்ணா தாஸ்,

இவரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது.

நன்றி மறக்காத மாஸ்டர் மகேந்திரன்.. வாழ்க்கையை மாற்றிய லோகேஷ் கனகராஜுக்கு செய்த முதல் மரியாதை!!

மகேந்திரன்…

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றி பல நடிகர்களுக்கும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அந்த வகையில் விஜய் சேதுபதி தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகராக வலம் வருகிறார். அதைவிட முக்கியம் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார் என்பதுதான்.

அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் மற்றொரு நபர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார் என்றால் அது மாஸ்டர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர்.

ஆனால் தற்போது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு பெரிய வரவேற்பு இல்லை. இந்நிலையில்தான் மாஸ்டர் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

வெறும் 15 நிமிடம் மட்டுமே படத்தில் வந்திருந்தாலும் மாஸ்டர் படம் முடிந்தவுடன் அனைவரையும் மாஸ்டர் மகேந்திரன் என கொண்டாடும் வகையில் செய்துவிட்டது அவரது நடிப்பு.

அதன் விளைவாக தற்போது அவருக்கு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. தன்னுடைய கேரியரின் செகண்ட் இன்னிங்சில் இருக்கும் மகேந்திரன் சமீபத்தில் ஒரு கார் வாங்கியுள்ளார்.

அதற்கு லோகேஷ் கனகராஜ் தான் முழுக்க முழுக்க காரணம் என அவரை அழைத்து அவர் கையால் சாவியைக் கொடுத்தால் தான் வண்டி ஓட்டுவேன் என அடம்பிடித்துள்ளாராம். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தளபதி 65 பட ராசி.. பூஜா ஹெக்டேவுக்கு பட வாய்ப்பை தூக்கிக் கொடுத்த 45 வயது முன்னணி நடிகர்!!

பூஜா ஹெக்டே…

ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகை என தமிழ் சினிமாவில் முத்திரை குத்தப்பட்டு அனுப்பப்பட்ட பூஜா ஹெக்டே தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக மாறியுள்ளார்.

கடந்த சில வருடங்களாக பூஜா ஹெக்டே நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வருகின்றனர். அந்தவகையில் கடைசியாக வெளியான அலவைகுண்டபுரம்லோ படம் வசூலை வாரி குவித்தது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் தளபதி 65 பட வாய்ப்பை சுலபமாக பெற்றுவிட்டார். நீண்ட நாட்களாகவே தமிழில் முன்னணி நடிகருடன் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற பூஜா ஹெக்டேவின் கனவு நிறைவேறியது.

தெலுங்கை போலவே தற்போது தமிழிலும் பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் அடுத்ததாக சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் பட வாய்ப்பை பெற்றுவிட்டாராம் பூஜா ஹெக்டே.

இப்போதைக்கு கதை மட்டும் சொல்லி ஓகே செய்து வைத்திருக்கும் சிறுத்தை சிவா படக்குழு, அண்ணாத்த படத்தை முடித்தவுடன் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூர்யாவை வைத்து படம் இயக்க இருந்த சிறுத்தை சிவாவுக்கு சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த பட வாய்ப்பு கிடைத்ததால் சூர்யாவே பெருந்தன்மையுடன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என சிவாவை அனுப்பி வைத்ததாக அப்போதைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

தளபதி 65 படத்துக்கு போட்டியாக வரும் 800 கோடி பட்ஜெட் படம்.. அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம்!!

தளபதி 65…

பெரும்பாலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் சோலோவாக ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வசூலை வாரிக் குவிக்கும். அதுமட்டுமல்லாமல் தான் தயாரிக்கும் படங்களுக்கான விளம்பரங்களை அதிகப்படுத்தி அதே தேதியில் வெளியாக இருக்கும் மற்ற நடிகர்களின் படங்களை பயமுறுத்தி ஒதுங்க வைத்துவிடுவார்கள்.

ஆனால் இந்த வருடம் சன் பிக்சர்ஸுக்கு அந்த அளவுக்கு பெரிய அளவு போட்டி இல்லை. அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்கள் பலரின் திரைப்படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

அதில் எதிர்பார்ப்பில் இருக்கும் முதல் திரைப்படம் என்றால் தளபதி 65 தான். ஜார்ஜியாவில் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ள தளபதி 65 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிந்துவிடும் என தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 2022 பொங்கலை குறி வைத்து தளபதி 65 படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. அதற்கு முன்னதாக தீபாவளிக்கு சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படம் வெளியாக உள்ளது.

சோலோ ரிலீஸ் செய்து மிகப்பெரிய வசூலை வாரி குவித்து விடலாம் என சன் பிக்சர்ஸ் கண்ட கனவில் ஒரு லாரி மண்ணை அள்ளிக் கொட்டியுள்ளது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படம். 100 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இரண்டு பாகமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கிட்டத்தட்ட 70 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க உள்ளதாம் படக்குழு. இதனால் 2022ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறையில் படத்தை வெளியிட தயாராக உள்ளாராம் மணிரத்னம்.

தல பிறந்தநாளுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே நாளில் இரண்டு சர்ப்ரைஸ் கொடுக்கும் வலிமை படக்குழு!!

வலிமை…

அஜித் நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதனால் தல ரசிகர்கள் தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்த வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு தீனி போடும் வகையில் ஃபுல் மீல்ஸ் ஆக உருவாகி வருகிறது வலிமை திரைப்படம். ஆக்ஷன் சென்டிமென்ட் என பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகிவரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தல அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது ஏற்கனவே தெரிந்த செய்திதான்.

இதற்காக ஏற்கனவே சமூக வலைதளங்களில் உள்ள மற்ற நடிகர்களில் சாதனைகளை பட்டியலிட்டு அவற்றை முறியடிக்கும் நோக்கத்தில் தல ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். கண்டிப்பாக வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சரித்திர சாதனை படைக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

இது ஒருபுறமிருக்க படக்குழுவினர் தல அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வலிமை படத்தின் தீம் மியூசிக் உடன் சேர்ந்த மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட உள்ளதாம்.

யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திற்கு இசையமைக்கும் போதெல்லாம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறி ஏற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி என்றாலே பின்னணி இசைக்கு குறைச்சல் இருக்காது. மேலும் வலிமை படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளதாகவும் ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் உலா வருகின்றன. எது எப்படியோ இந்த முறை தல ரசிகர்களின் கொண்டாட்டம் வேற லெவலில் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

குக் வித் கோமாளி 2 இறுதி நிகழ்ச்சியில் சிம்புவை அடுத்து இவரும் வருகிறாரா?

குக் வித் கோமாளி…

சமையல் அது கூடவே காமெடி என்கிற கான்செப்டில் உருவான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் சீசனுக்கே செம ரீச், அதனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது.

ஒன்றை விட இரண்டாவது சீசன் மக்கள் பெரிய அளவில் கொண்டாடினார்கள். கடந்த சில மாதங்களாக கொண்டாட்டமாக நிகழ்ச்சி இருந்தது தற்போது முடிவுக்கும் வந்துவிட்டது.

இறுதி நிகழ்ச்சியின் புரொமோக்கள் வந்துவிட்டன, அதைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ஸ்பெஷல் விருந்தினராக நடிகர் சிம்பு பங்குபெற்றிருந்தார்.

அவர் நிகழ்ச்சி முழுவதும் வரப்போகிறார் என தெரிகிறது. அவர் புரொமோக்களிலேயே போட்டியாளர்களுடன் சேர்ந்து செம கலாட்டா செய்கிறார்.

இப்போது என்ன மற்றொரு ஸ்பெஷல் தகவல் என்றால் கடந்த சில வாரங்களாக எல்லோரையும் Enjoy Enjaami என்ற பாடலுக்கு நடனம் ஆட வைக்கும் பாடகி தீ குக் வித் கோமாளி 2 இறுதி நிகழ்ச்சியில் வந்திருக்கிறார் என தெரிகிறது.

காரணம் தர்ஷா மற்றும் ரித்திகாவுடன் குக் வித் கோமாளி 2 செட்டில் அவர் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மாலைதீவில் ஸ்ரீதேவி மகள்… வைரலாகும் புகைப்படங்கள்!!

ஜான்விகபூர்…

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்விகபூர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். இவர் 2018-ம் ஆண்டு தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும்.

அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது இவர் நடிப்பில் டோஸ்டானா 2, குட் லக் ஜெரி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இவர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இந்நிலையில்,

தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வலிமை படத்தில் அஜித் செய்த விஷயம், வியந்துபோன போனி கபூர்- அவரே வெளியிட்ட செம தகவல்..!

அஜித்…

அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே தொடங்கியது. கொரோனா பிரச்சனை காரணமாக அப்படியே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இப்போது மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்து முடிந்தே விட்டது. படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தியாவிலேயே சிறந்த போஸ்டர் டிசைனர் ஒருவர் தான் வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக்கை டிசைன் செய்கிறாராம்.

படப்பிடிப்பு ஆரம்பித்தது முதல் படத்தை பற்றிய எந்தஒரு அப்டேட்டும் இல்லை. ரசிகர்கள் கேட்டு கேட்டு ஓய்ந்து விட்டார்கள். படக்குழுவினரோ அப்டேட் சரியான நேரத்திற்கு கண்டிப்பாக வரும் என்கின்றனர்.

இந்த நிலையில் தான் இப்பட இயக்குனர் போனி கபூர் மற்றும் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு சூப்பர் புகைப்படம் வெளியாகி வைரலாகி வந்தது.

இப்போது என்னவென்றால் தயாரிப்பாளர் போனி கபூரின் பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் அவர் பேசும்போது, தமிழ் சினிமாவில் சரித்திர வெற்றியை இப்படம் பதிவு செய்யும் என்பதை மட்டும் இப்போது உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

பைக் சேஸிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அவரது உழைப்புக்கு பலன் இல்லாமலா போகும் என கூறியுள்ளார்.

கர்ணன் பாணியில் கையில் கத்தியுடன் நடிகர் சூர்யா – வெறித்தனமான சூர்யா40 படத்தின் ஸ்டில்!!

சூர்யா40…

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முதல் முறை, இளம் நடிகை ப்ரியா அருள் மோகன் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து வாடிவாசல், சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் என தொடர்ந்து படங்கள் நடிக்கவுள்ளார்.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திலிருந்து சமீபத்தில் சூர்யாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல் புகைப்படம் ஒன்று வெளியானது.

இந்நிலையில் தற்போது சூர்யாவின் கையில் கத்தியுடன் இருப்பது போல், கர்ணன் படத்தின் பாணியில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படம் எப்போது ரிலீஸ்- அதிகாரப்பூர்வ தகவல்!!

பொன்னியின் செல்வன்…

கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் என்கிற நாவல் மக்களிடம் மிகவும் பிரபலம்.

அந்த நாவலை தழுவி மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் என்கிற பெயரிலேயே படம் இயக்கி வருகிறார்.

இதில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு என பலர் நடிக்கிறார்கள்.

அண்மையில் சுல்தான் படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் கார்த்தி லைவ் சாட் வந்துள்ளார். அப்போது அவர், பொன்னியின் செல்வன் படம் அழகாக தயாராகி வருகிறது. இதுவரை 70% படப்பிடிப்பு முடிந்துள்ளது.

கொரோனா பிரச்சனையால் படத்தின் சில வேலைகள் தாமதம் ஆகிறது. படத்தை 2022 பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸிற்கு எதிர்ப்பார்க்கலாம் என கூறியுள்ளார்.