கமல் படத்தில் இருந்து விலகியது ஏன்? லாரன்ஸ் விளக்கம்!!

ராகவா லாரன்ஸ்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் விலகியது குறித்து காரணம் வெளியாகியுள்ளது.

நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருந்தது. சில காரணங்களால் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவில்லை. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் பிசியாக நடிப்பதாலும், அதன்பின் சந்திரமுகி 2 படத்தின் வேலைகள் இருப்பதாலும் கமலின் விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போன காரணம் என்று லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

நடன இயக்குனருடன் ஆடிய சாயிஷா… வைரலாகும் வீடியோ!!

சாயிஷா…

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகர் ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாயிஷா. இவர் நடிகர் ஆர்யாவின் மனைவியாவார். கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் சாயிஷா நடித்த ’யுவரத்னா’ என்ற படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் யுவரத்னா படத்தில் இடம்பெற்ற ’நீதானே நா’ என்ற பாடலுக்கு டான்ஸ் மாஸ்டருடன் நடனம் ஆடிய வீடியோவின் காட்சிகளை சாயிஷா தற்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில் டான்ஸ் மாஸ்டருடன் நெருக்கமான ஸ்டெப்ஸ்களுடன் ஆடும் காட்சியை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் படம்!!

வணக்கம் டா மாப்ள…

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்தை வருகிற தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் வெளியிட உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்டதை அடுத்து, ஓடிடி-யில் படங்கள் நேரடியாக வெளியிடப்பட்டன. அதேபோல் யோகிபாபுவின் ‘நாங்க ரொம்ப பிஸி’, ‘மண்டேலா’, விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’, சமுத்திரகனியின் ‘ஏலே’ ஆகிய படங்கள் நேரடியாக டி.வி.யில் வெளியிடப்பட்டன.

அந்த வகையில் தற்போது நேரடி டி.வி. வெளியீட்டிற்காக தயாராகி உள்ள படம் ‘வணக்கம்டா மாப்ள’. ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ராஜேஷ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று, நேரடியாக டி.வி.யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

முதலுக்கே மோ சம் போன சன் பிக்சர்ஸ்.. ஜார்ஜியாவில் முதல் நாளே கசிந்த தளபதி 65 விஜய் புகைப்படம்!!

சன் பிக்சர்ஸ்……

மாஸ்டர் படத்திற்குப் பிறகு தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார்.

மேலும் மூன்றாவது முறையாக விஜய் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதால் இந்த படத்தின் பாடல்கள் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் பின்னணி இசையும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக விஜய் சைக்கிளில் வந்ததுதான் இந்தியாவில் உள்ள அனைத்து மீடியாக்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம், அரசியல்வாதிகள் ஒருபக்கம் என தங்களுக்கு தெரிந்த வகையில் அதை பரப்பி வருகின்றனர்.

ஆனால் எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை என விஜய் தரப்பிலிருந்து செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அன்றிரவே விஜய் தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்.

இந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. தற்போது விஜய் தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்று இறங்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இன்னும் தளபதி 65 படப்பிடிப்பு தொடங்கப்படாத நிலையில் விஜய் விமானத்தை இறங்கியவுடனேயே புகைப்படம் வெளியானது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் வெளிநாட்டு படப்பிடிப்பு முடியும் வரை படக்குழுவினர் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அதிரடி கட்டுப்பாடு ஒன்றை போட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.

ரெண்டு படம் பிளாப், ஆனாலும் கழுத்து நிறைய தங்கத்துடன் சுற்றித்திரியும் நிதி அகர்வால்.. !! கோ பத்தில் தயாரிப்பாளர்கள்!!

நிதி அகர்வால்…….

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நிதி அகர்வால். இவர் ஹிந்தியில் வெளியான ‘முன்னா மைக்கேல்’ என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து நிதி அகர்வால் தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். சில தினகளுக்கு முன்னதாக ‘பூமி’, ‘ஈஸ்வரன்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார் ஆனால் எதிர் பார்த்த அளவு ஓட வில்லை, பெரும் தோல்வியை சந்தித்தது.

அதாவது நிதி அகர்வால் என்னதான் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் அவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் நிதி அகர்வால் தற்போது பனியனில், கழுத்து நிறைய தங்கம் அணிந்து எடுத்துள்ள புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல், ரசிகர்கள் பலரை நிதி அகர்வால் பக்கம் ஈர்த்திருக்கிறது. எனவே, இந்தப் புகைப்படங்களைப் பார்த்த பலர், நிதி அகர்வாலின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர்.

நடிகர் ஜெய்யின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு- சூப்பர் புகைப்படங்கள்!!

சிம்பு…

தமிழ் சினிமாவில் படு வேகமாக படங்கள் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருபவர் நடிகர் சிம்பு.

நடுவில் உடல்எடை போட்டு, படங்கள் நடிக்காமல், சில சர்ச்சைகளில் சிக்கி என ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தார். ஆனால் அவரது ரசிகர்கள் துளி கூட அவரை வெறுக்கவில்லை.

ஒரு தூண் போல சிம்புவிற்கு பாதுகாப்பாகவே இருந்தனர். இந்த நிலையில் தான் லாக் டவுன் சமயத்தில் உடல்எடை முழுவதும் குறைத்து புதிய மனிதர் போல் தோன்றினார் சிம்பு.

ஈஸ்வரன், மாநாடு என படங்கள் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அண்மையில் இரவு, பகலாக மாநாடு படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

நேற்றுமுன்தினம் சிம்பு மாலை நேரத்தில் தனது ஓட்டையும் பதிவு செய்திருந்தார். அதோடு நடிகர் ஜெய்யின் பிறந்தநாள்,

அவரது பிறந்தநாளை நடிகர் சிம்பு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனான மிக சிறந்த நடிகர்! ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?

விக்ரம்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார், இவர் இயக்கத்தில் வெளியான மூன்று திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது.

கடைசியாக இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

அதனை தொடர்ந்து இவர் உலகநாயகன் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். மேலும் கமல் உடன் லோகேஷ் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தை இன்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்திய திரையுலகில் தற்போது உள்ள மிக சிறந்த நடிகர்களில் ஒருவர் தான் பஹத் பாசில், கமலுடன் விக்ரம் படத்தில் நடிப்பதாக பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார்.

இதனிடையே விக்ரம் படத்தின் ஷூட்டிங் மே 3 ஆம் தேதி ஆரம்பித்து 100 நாட்கள் வரை நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்திற்காக கமல், பஹத் பாசில், பிரபு தேவா, லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

திடீரென சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா…. ஏன் தெரியுமா?

சமந்தா…

சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டன, இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர்.

சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது.

குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர். சகுந்தலை படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் சமந்தாவை ஒப்பந்தம் செய்தனர்.

இந்தப் படத்தில் நடிக்க சமந்தா ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ரூ.3 கோடி வாங்கிய சமந்தா, சகுந்தலை படத்தில் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருப்பதாலும்,

தான் நடிக்கும் முதல் புராண படம் என்பதாலும் சம்பளத்தை ரூ.50 லட்சம் குறைத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியனாரா குக் வித் கோமாளியின் முக்கிய பிரபலம், பூஜையுடன் தொடங்கிய திரைப்படம்!!

பவித்ரா…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

மேலும் தற்போது நடந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இதில் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, பவித்ரா, கனி உள்ளிட்டோர் போட்டி போடவுள்ளனர்.

இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான முக்கிய போட்டியாளர் தான் பவித்ரா, சின்னத்திரையில் பிரபலமான பவித்ரா தற்போது பெரிய திரையிலும் அறிமுகமாகவுள்ளார்.

ஆம், AGS தயாரிக்கும் படத்தில் நடிகர் சதிஷ் உடன் பவித்ரா நடிக்கவுள்ளார். நேற்று நடந்துள்ள இப்படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

மேலும் முக்கிய நடிகர் சதிஷ்க்கு ஜோடியாக தான் பவித்ரா இப்படத்தில் நடிக்கவுள்ளார், பூஜையில் சிவகார்த்திகேயனுடன் பவித்ரா இருக்கும் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் நடிகர் சதிஷின் நண்பர் என்பதால் அவர் இந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளார் என சதிஷ் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் தளபதி விஜய் படத்தை இயக்கும் நடிகர் பிரபு தேவா? இணையும் பிரம்மாண்ட கூட்டணி!!

விஜய்-பிரபு தேவா…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் 50 % இருக்கைகளுடன் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது, மேலும் கொரோனா காரணமாக இப்படம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்த நிலையில் மாஸ்டர் படம் பலருக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக பரபரப்பு தகவல் இணையத்தில் வெளியானது. மேலும் அந்த படத்தில் சல்மான் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மாஸ்டர் ரீமேக் படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரபுதேவா ஏற்கனவே விஜய் நடித்த போக்கிரியை இந்தியில் சல்மான் கானை வைத்து வான்டட் என்ற பெயரில் இயக்கியிருந்தார் அந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது.

மேலும் சல்மான் கானை வைத்து பிரபு தேவா தபாங் 3 திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அதனை தொடர்ந்து ராதே என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.