6 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய நேர்கொண்ட பார்வை.. சத்தமில்லாமல் மூடி மறைத்த தயாரிப்பாளர்!!

நேர்கொண்ட பார்வை…

அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ஆனால் இந்தப்படத்தில் தல அஜித் ஒரு கெஸ்ட் ரோல் மாதிரிதான் நடித்திருந்தார். அஜித் என்ற பெயருக்காகவே அந்தப் படம் 100 கோடி வசூல் செய்தது பெருமைக்குரியது.

அஜித்தை தவிர அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா தாஸ், பிக் பாஸ் அபிராமி போன்றோர் நடித்திருந்தனர். என்னதான் ஹிந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்தாலும் பார்ப்பதற்கு ஹிந்தி படம் போலவே இருந்தது.

அதற்கு காரணம் நாயகிகளின் தேர்வு சரியில்லாதது தான். இதுவே தெலுங்கில் தற்போது வக்கீல்சாப் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழ் மற்றும் தெலுங்கு பரிட்சயமான நடிகைகளான நிவேதா தாமஸ், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த கம்பரிசன் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நேர்கொண்ட பார்வை படம் 100 கோடி வசூல் செய்ததாக ட்ரேடிங் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால் படம் ஆறு கோடி நஷ்டமானதைப் பற்றி யாருமே வாய் திறக்கவில்லை.

நேர்கொண்ட பார்வை படம் 6 கோடி நஷ்டமானது வலைபேச்சு நண்பர்கள் சொல்லித்தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. என்ன தான் அஜித் படமாக இருந்தாலும் அதில் அஜீத் கெஸ்ட் ரோலில் மட்டுமே பண்ணிருந்ததால் நிறைய இடங்களில் படம் பெரிதாக செல்லவில்லையாம்.

குறிப்பாக சிட்டி சைடு மட்டுமே படம் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக 6 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் வலிமை படத்தின் வியாபாரத்திற்கும் சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் தமிழ் சினிமாவுக்கே பைனான்ஸ் செய்யும் அன்புச்செழியனிடம் படத்தை விற்றுவிட்டார் போனி கபூர்.

மாஸ்டர் பிளான். தமிழ் சினிமாவில் அன்புச்செழியனின் ராஜாங்கம் தான். இதனால் அந்தப் படம் நஷ்டமாகி விட்டது பணத்தை கொடுங்கள் என யாரும் கேட்க முடியாது. இருந்தாலும் அவரே முன்வந்து 6 கோடி நஷ்டத்திற்கு வட்டியுடன் சேர்த்து கொடுத்து விடுகிறேன் என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அந்த படத்தை ரீமேக் பண்றோம், 100 கோடி வசூல் அடிக்கிறோம்.. பிரபல நடிகரின் கனவில் மண்ணைப் போட்ட சூர்யா!!

சூர்யா…

சூர்யாவின் படம் ஒன்றை எப்படியாவது ரீமேக் செய்து விடலாம் என கனவு கண்டுகொண்டிருந்த பிரபல முன்னணி நடிகரின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார் சூர்யா என்பதுதான் சினிமா வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.

கடந்த 6 வருட காலம் சூர்யாவுக்கு நரக காலம் தான். சூர்யா எடுத்த ஒவ்வொரு புதிய முயற்சிகளும் தோல்வியையே தழுவியது. இதன் காரணமாக தன்னுடைய மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்.

போதாக்குறைக்கு தெலுங்கில் நம்பர் ஒன் தமிழ் நடிகராக இருந்த சூர்யா தற்போது அந்த இடத்தை பறிகொடுத்து விட்டார். இதனால் எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.

சூர்யாவின் வழக்கமான மாஸ் படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக உருவாகியிருந்த இந்த படம் வெகுவாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. சூரரை போற்று படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் சூர்யாவின் மார்க்கெட்டை இரண்டு மடங்காக மாறியிருக்கும்.

ஆனால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானதால் தன்னுடைய சினிமா மார்க்கெட்டை அவரால் நிலைப் படுத்த முடியவில்லை. இருந்தாலும் நல்ல படம் என்பதால் அடுத்தடுத்து சூர்யா நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ஹிந்தியில் மட்டும் வெளியாகாமல் இருந்தது. அதற்கு காரணம் இந்து முன்னணி நடிகர் ஷாகித் கபூர் அந்த படத்தை ரீமேக் செய்ய ஆசைப்பட்டாராம்.

ஆனால் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை ஊடான் என்ற பெயரில் இந்தியில் டப் செய்து ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் வெளியிடப்போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதன் காரணமாக பெருத்த ஏமாற்றத்தில் உள்ளாராம் ஷாகித் கபூர். ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட்டடித்த பல படங்களின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

இனி சினிமாவில் நடிக்கமாட்டாரா உலகநாயகன் கமல், தனது எதிர்காலம் குறித்து அவர் எடுத்துள்ள முடிவு!!

கமல்ஹாசன்…

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவருக்கு உலகமுழுவதில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

மேலும் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் நிறுத்தப்பட்டதால், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரையில் பிஸியாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி கோயம்பத்தூர் தெற்கில் வேட்பாளராக போட்டியிடும் கமல், அங்கு தனது பிரச்சாரத்தை விறுவிறுப்பாக செய்து கொண்டு இருக்கிறார்.

இதனிடையே கமல் தனது பரப்புரையின் போது சினிமா குறித்த தனது முடிவை எடுத்துள்ளார். ஆம் அவர் கூறியதாவது ” எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக தான் என்ற முடிவை எடுத்துளேன்.

மேலும் தனது அ.ர.சி.யலுக்கு இ டைஞ்சல் ஏற்பட்டதால் சினிமாவில் நடிப்பது நி றுத்தப்படும் ” என்ற தனது அ.தி.ர.டி முடிவை கமல் தனது பரப்புரையின் போது கூறியிருந்தார்.

தேர்தல் பிரச்சத்திரத்தின் போது நடனமாடிய கமலின் மகள், அவருடன் சேர்ந்து நடனமாடிய பிரபல நடிகை!!

அக்ஷரா ஹாசன்…

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவருக்கு உலகமுழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக கமல் தனது மக்கள் நீதி மய்யம் க.ட் சியின் பரப்புரையில் பிஸியாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி கோயம்பத்தூர் தெற்கில் வேட்பாளராக போட்டியிடும் கமல், அங்கு தனது பி.ரச்சாரத்தை விறுவிறுப்பாக செய்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் மற்றும் நடிகை சுஹாசினி,

இருவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சாரத்திரத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் அப்போது அக்ஷரா ஹாசன் மற்றும் நடிகை சுஹாசினி இருவரும் ஒட்டுக்கேட்டு நடமாடியது,

அங்கிருந்த மக்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

முற்றிலும் மெலிந்துபோன தோற்றத்தில் நடிகை சமந்தா! ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய புகைப்படம்!!

நடிகை சமந்தா…

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் நடிகை சமந்தா, இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் நடிகை சமந்தா தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருவதால், அதிகமான தமிழ் திரைப்படங்களில் இவரை காண முடியவில்லை.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து வேறு எந்த திரைப்படங்களிலும் இவர் நடிக்கவில்லை.

மேலும் தற்போது சாகுந்தலம், காத்து வாக்குல ரெண்டு காதல், உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதங்களில் எப்போது ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருவது வழக்கம்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. ஆம், சமந்தா முற்றிலும் மெலிந்துபோன தோற்றதில் காணப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் ரீமேக்காக்கும் மாஸ்டர் ! படத்திற்காக காத்திருக்கும் முன்னணி கான் நடிகர்..!

மாஸ்டர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர், இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

மேலும் இப்படம் குறித்து பல விஷயங்கள் இணையத்தில் வெளியாகி பெரியளவில் ட்ரெண்டாகி வரும், அந்த வகையில் தற்போது ஒரு தகவல் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

ஆம், மாஸ்டர் படத்தை தற்போது பாலிவுட் முன்னணி நிறுவனம் ஒன்று ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இதில் பிரபல முன்னணி நடிகர் சல்மான் கானை நடிக்கவைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

சல்மான் கானை சந்தித்த அந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், இப்படத்தின் கதை அவருக்கு பிடித்து போனதால் மாஸ்டர் படத்தின் ரீமேக்கிற்கு ஓகே கூறியுள்ளார் சல்மான்.

ஆனால் மாஸ்டர் பட ரீமேக்கின் முழுமையான கதைக்காக சல்மான் கான் காத்திருப்பதாகவும்,

இது குறித்து பின் வரும் நாட்களில் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

திருமண கோலத்தில் தனது ஆண் நண்பருடன் குக் வித் கோமாளி பவித்ரா – ரசிகர்கள் ஷாக்!!

பவித்ரா லட்சுமி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் நடிகை பவித்ரா லட்சுமி.

ஆம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுடன் பவித்ரா இணைந்து செய்யும் நகைச்சுவைகள் பல ரசிகர்களை கவர்ந்தது.

இந்த வாரத்தின் எபிசோடில் பவித்ராவுடன் அவரது ஆண் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் யார் என்பது பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பவித்ராவுடன் வந்த நபருடன் திருமண கோலத்தில் பவித்ரா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர். ஆனால் இது விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது என தற்போது தெரியவந்துள்ளது.

புது ஐடியாவ வச்சி கெத்து காமிச்ச விஜய் ஆண்டனி.. இந்த மனுஷனுக்குள்ளயும் பல விஷயம் இருக்கே!

விஜய் ஆண்டனி….

தமிழ்சினிமாவில் விசித்திரமான படத்தலைப்பு வித்தியாசமான கதைகளில் நடிப்பவர்தான் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன், எமன் மற்றும் சைத்தான் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல் கொடுத்த விஜய் ஆண்டனி ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாக கலக்கினார். இவர் ஹீரோவாக நடித்து வெளியான பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதன் பிறகு முழுநேர நடிகராக விஜய் ஆண்டனி மாறினார். முதன்முதலில் sneak peek என்ற வீடியோவை அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி தான். அதாவது யூட்யூபில் முதன்முதலில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில்தான் sneak peek வீடியோவாக வெளியிட்டனர்.

அதற்குக் காரணம் அப்போது டீசர் மற்றும் டிரைலர் ரெடி பண்ண முடியாமல் படக்குழு தவித்தனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் டைட்டில் சைத்தான் என்பதால் பல ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீதான கியூரியாசிட்டி உருவானது.

அதனால் படக்குழு என்ன செய்வது என தெரியாமல் கடைசியாக படத்திலிருந்து ஒரு சில காட்சிகளை எடுத்து sneak peek ஆக வெளியிட்டனர். அதன்பிறகுதான் பல படங்கள் இம்முறையை பயன்படுத்தி தங்களது படத்தினை ப்ரோமோஷன் செய்தனர்.

தற்போது பல படங்கள் யூடியூபில் sneak peek ஆக வெளியிடுகின்றனர். ஆனால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய் ஆண்டனி தான் என்பது பலருக்கும் தெரியாது.

வேலவன் ஸ்டோரில் தாறுமாறாக ஷாப்பிங் செய்த விஜய் டிவி சுனிதா.. வைரல் வீடியோ!

சுனிதா…

1988ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். இந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள், ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிக குறைந்த விலையில் கிடைத்தால் தூத்துக்குடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் வேலவன் ஸ்டோர்ஸ் சென்னையில், டி நகர் உஸ்மான் ரோட்டில் மிக பிரம்மாண்டமாய் 7 அடுக்கு மாடியாக உருப்பெற்று இருப்பதோடு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்தக் கடையை நோக்கி குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த கடையில் பண்டிகைக்கு பல தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு அளிக்கப்பட்ட ஆஃபர்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இந்த கடையில் ஏற்கனவே வனிதா விஜயகுமார், மணிமேகலை, புகழ், ஷிவாங்கி, பாலா, தங்கதுரை, வினோத், ஜாக்குலின், தீபா என பல சினிமா துறை பிரபலங்கள் ஷாப்பிங் செய்ததோடு, தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு நடிகை சுனிதா சென்றதோடு, அங்கு தொகுப்பாளர் வைரமுடன் இணைந்து ஷாப்பிங் செய்துள்ளாராம்.

அதாவது சாதாரண மக்களை மட்டும் இல்லாமல் திரைத்துறை பிரபலங்களையும் தன்பால் ஈர்த்துள்ளது வேலவன் ஸ்டோர்ஸ். ஏனென்றால் குறைந்த விலை, நிறைந்த தரம் என்ற சொல்லுக்கேற்ப இருப்பதால் பல திரையுலக பிரபலங்களின் ஃபேவரட் கடையாக வேலவன் ஸ்டோர்ஸ் திகழ்ந்து வருகிறது.

இப்படி இருக்க நடன கலைஞரும் நடிகையுமான சுனிதா தொகுப்பாளர் வைரமுடன் இணைந்து வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தொகுப்பாளர் வைரம் சுனிதாவுக்கு புடவை கட்டி விட்டுஉள்ளாராம். இதற்கு பதிலாக சுனிதா VJ வைரத்திற்கு ‘ஐ லவ் யு’ சொல்லியுள்ளார்.

அண்ணாத்த பாதி இப்படி, மீதி அப்படி.. சூப்பர் ஹிட் படங்களுடன் ஒப்பிட்டு எதிர்பார்ப்பை கூட்டிய பிரபலம்!!

அண்ணாத்த…

தர்பார் படத்தின் சலசலப்புகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் அண்ணாத்த. படம் தொடங்கப்பட்ட வேகத்தில் இந்நேரம் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும்.

ஆனால் இடையில் படப்பிடிப்பு தடைபட்டது. அதன் பிறகு தொடங்கப்பட்ட படப்பிடிப்பில் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் படத்தின் நிலை என்ன ஆகும் என்றே தெரியாத அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது ரஜினி முழு உடல் ஆரோக்கியத்துடன் நடித்து வருகிறார். மேலும் தற்போது அண்ணாத்த படத்திற்காக சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் செட் போட்டு விறுவிறுப்பாக சூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்னும் சில நாட்களில் அண்ணாத்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். அதனைத் தொடர்ந்து அண்ணாத்த படம் வருகின்ற 2021 தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது ஒருபுறமிருக்க அண்ணாத்த படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிவரும் திலிப் சுப்புராயன் அண்ணாத்த படத்தை பற்றி கூறி ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் பாதி பழைய சூப்பர் ஹிட் படமான படையப்பா போன்றும், இரண்டாம் பாதி பாட்ஷா போன்றும் பட்டையை கிளப்பப் போகிறது என கூறியுள்ளார். மேலும் ரஜினியின் சினிமா கேரியரில் அண்ணாத்த படம் மிகப்பெரிய வசூலை வாரிக் குவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.