இனி மேல் ஒழுங்காக இருக்கேன், வாய்ப்பு கொடுங்க.. தயாரிப்பாளர்களிடம் கெஞ்சும் பிரபல நடிகர்!!

பிரபல நடிகர்…

முதல் படத்திலேயே உச்ச நடிகர் ரேஞ்சுக்கு வளர்ந்த அந்த நடிகர் மவுசு வந்தபிறகு தயாரிப்பாளர்களை நாயை விட கேவலமாக நடத்தி பந்தா பண்ணிய சம்பவங்கள் தற்போது அவருக்கு வினையாக முடிந்துள்ள செய்தி தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவர் அந்த நடிகர். அதன்பிறகு புகழ் உச்சத்திற்கு செல்ல பட வாய்ப்பு கிடைத்தால் போதும், பணம் சம்பாதித்தால் போதும் என மட்டமான படங்களில் தொடர்ந்து நடித்தார்.

அதன் விளைவு தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டி ருக்கிறார். சுமாரான படங்களில் நடித்தது கூட பரவாயில்லை, ஆனால் தயாரிப்பாளர்களிடம் பந்தா காட்டியது கொஞ்சநஞ்சம் இல்லையாம்.

ஆடி காரில் தான் சூட்டிங் போவாராம், பைவ் ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவாராம், பத்தாததுக்கு இரவு பார்ட்டிக்கு ஃபாரின் சரக்கு தான் வேண்டுமாம், பத்தாதுக்கு தயாரிப்பாளர்கள் மாமா வேலை வேற பார்க்க வேண்டுமாம். அப்பப்பா! அந்த நடிகரின் டார்ச்சல்களை சொல்லி மாளாது.

அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களை நோகடித்துள்ளார். சுமாரான மார்க்கெட் இருக்கும்போதே தயாரிப்பாளர்களை படாதபாடுபடுத்திய அந்த நடிகருக்கு சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லையாம். எந்த ஒரு தயாரிப்பாளரும் அந்த நடிகரை வைத்து படம் தயாரிக்க மாட்டேன் என ஓபன் ஆக சொல்லிவிட்டார்களாம்.

இதனால் தன்னுடைய தப்பை எல்லாம் உணர்ந்து தற்போது தயாரிப்பாளர்களிடம் சரண்டர் ஆகி விட்டாராம் அந்த நடிகர். எனக்கு ஆட்டோ கொடுத்தால் கூட போதும் சூட்டிங்கிற்கு வருகிறேன் எனவும், 5 ஸ்டார் ஹோட்டல் எல்லாம் வேண்டாம் சூட்டிங்கில் ஒரு மரத்தடியில் கட்டில் போட்டு கொடுங்கள் போதும் எனவும் அநியாயத்துக்கு பொங்குகிறாராம்.

இதையெல்லாம் பார்த்து ஏமாறுவதற்கு நாங்கள் ஆளில்லை எனவும், இனிமேல் உங்க கேரியர் காலிதான் எனவும் அந்த நடிகருக்கு அச்சம் கொடுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள். இருந்தாலும் நெருக்கமான ஒண்ணு ரெண்டு தயாரிப்பாளர்களுக்கு பொடி போட்டு வசியம் செய்து வருகிறாராம்.

இனி என் வழி ரஜினி வழி, ரூட்டை மாற்றிய அமலாபால்!

அமலாபால்…

தமிழ் சினிமாவில் வந்த புதிதிலேயே மளமளவென பல படங்களில் நடித்து பரபரப்பான கதாநாயகியாக வலம் வந்தவர் அமலாபால். தன்னுடைய கேரியர் உச்சத்தில் இருக்கும்போது இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். திருமணத்திற்கு பிறகும் அமலாபால் சினிமாவின் மீது அதிக நாட்டம் கொண்டதால் தான் இந்த விவாகரத்து நடைபெற்றது.

அதுமட்டுமில்லாமல் அமலாபாலின் மாமனார் பல பேட்டிகளில் அமலாபாலின் நடவடிக்கைகள் திருமணத்திற்கு பிறகும் சுத்தமாக சரியில்லை எனக் கூறினார் என்பதை எல்லாம் மறந்து விட முடியுமா.

அதன் பிறகு அமலாபால் வாழ்க்கையில் இரண்டு பேர் வந்து சென்று விட்டனர். ஒரு வட இந்திய பாடகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியானதால் அவருடன் நட்பு மட்டுமே எனவும் படப்பிடிப்புக்காக தான் அப்படி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன் எனவும் மழுப்பினார்.

சமீபகாலமாக அமலாபாலுக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாததால் படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்கவும் தயங்குவதில்லை. அப்படி அமலாபால் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் ஒரு வெப் செரீஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வளவு வேலைகள் செய்துவிட்டு ஆன்மிகம் தான் எனக்கு முக்கியம் என ரஜினி மாதிரி துண்டு போட்டுக் கொண்டு கிளம்பி விட்டாராம். இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் வாசிகள், முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு என கிண்டலடிக்கிறார்களாம். தேவையில்லாமல் ரஜினி பெயரை இழுக்க வேண்டாம் எனவும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

தனுஷ் மாஸ்டர் படத்திற்கு சப்போர்ட் பண்ண காரணம் இதுதானா? எல்லாம் தளபதி 65 மாயம் தான்!

தனுஷ்…

தியேட்டர் தொழில்களே மொத்தமாக மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட போது விஜய்யின் மாஸ்டர் படம் தான் அனைவரையும் காப்பாற்றியது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தின் வெளியீட்டின்போது தனுஷும் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு மிகவும் சப்போர்ட் செய்தார்.

இந்திய சினிமாவில் உள்ள மிகப் பெரிய நடிகர்கள் அனைவரும் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யலாமா என யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அசால்டாக தன்னுடைய மாஸ்டர் படத்தின் மூலம் தெம்பை கொடுத்தார் விஜய்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு நேரடியாக ஓடிடியில் வெளியாக இருந்த பல முன்னணி நடிகர்களின் படமும் அதிலிருந்து பின்வாங்கி தியேட்டர் வெளியீட்டை உறுதி செய்தனர். அந்த வகையில் தனுஷின் ஜகமே தந்திரம் படமும் வெளியாக இருந்தது.

ஆனால் தயாரிப்பாளர் செய்த குளறுபடியால் அந்த படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தொடர்ந்து விஜய்யின் படங்களுக்கும் விஜய்யின் செயல்களுக்கும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனுஷ் ஆதரவு கொடுத்து வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் ஒரு வதந்தி ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக சுற்றிக்கொண்டிருக்கிறது.

அதாவது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் தனுஷ் ஒரு கேமியோ ரோல் செய்ய உள்ளார் என்ற செய்தி தான். இது உண்மையில்லை என தெரிந்தும் இது நடந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இடையில் ஒரு நல்ல உறவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் படத்தில் கார்த்தியை விட இவர் தான் பெஸ்ட்.. மொத்த பாராட்டையும் அள்ளிச் செல்லும் பிரபலம்!!

சுல்தான்…

கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சுல்தான் படத்தில் கார்த்தியை விட குறிப்பிட்ட பிரபலம் ஒருவருக்குத்தான் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய படமாக வெளியான திரைப்படம் தான் சுல்தான். கார்த்தி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளியான சுல்தான் படத்தை சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியிருந்தார்.

சுல்தான் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு படத்தின் சாயல் அதிகமாக இருப்பதாகவும் தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையெல்லாம் தாண்டி கார்த்தியின் சினிமா கேரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாகவும் சுல்தான் படம் மாறியுள்ளது. இதில் கார்த்தி, ரஷ்மிகா மந்தனா, நெப்போலியன், மலையாள நடிகர் லால் ஆகியோர் நடித்திருந்தாலும் யாருடைய கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் பதியவில்லை.

ஆனால் சுல்தான் படத்தில் பின்னணி இசையமைத்திருந்த யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளார். மாஸ் கட்சிகளுக்கு யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பிரமாண்டமாக இருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன்காரணமாக அடுத்ததாக யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகும் வலிமை படத்தை தான் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கார்த்தி படத்திற்கே இப்படி மியூசிக் போட்டிருக்கிறார் என்றால் கண்டிப்பாக வலிமை படத்தை மிரட்டி விடுவார் என தல ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர்.

விஜய் சேதுபதியின் முதல் பாலிவுட் மும்பைக்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்.. மாநகரம் ரீமேக்!

மும்பைக்கார்…

விஜய் சேதுபதி ஹீரோ இல்லை, நடிகர் என்பதை படத்துக்கு படம் நிரூபித்து வருகிறார். தனக்கு ஏற்ற பிடித்த கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனாலேயே இந்தியா முழுவதும் அவரை கொண்டாடி வருகின்றனர்.

ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என விஜய் சேதுபதி நினைத்திருந்தால் சில தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்த போதே அவரது கேரியர் காலியாகியிருக்கும். ஆனால் விருப்பப்பட்ட கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவரை இந்த அளவு உயர்த்தியுள்ளது.

தமிழிலிருந்து ஹிந்திக்கு போன நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி மாறியுள்ளார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் மும்பைக்கார் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார்.

முன்னதாக விஜய்சேதுபதி மும்பைக்கார் படத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்பது யாருக்கும் புலப்படாமல் இருந்தது. எல்லோருமே வில்லன் கதாபாத்திரத்தை தான் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

ஆனால் எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் விஜய் சேதுபதி காமெடி நடிகர் முனீஷ்காந்த் மாநகரம் படத்தில் நடித்த வேடத்தில் நடித்துள்ளார். இதற்கான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் மும்பைக்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கண்டிப்பாக மாநகரம் படத்தை போலவே ஹிந்தியில் மும்பைக்கார் படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என இப்போதே கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நடிகர் ஜெய்யுடனான காதல் தோல்வி குறித்து முதன்முறையாக பேசிய நடிகை அஞ்சலி – இனி இதுதானாம்!!

நடிகை அஞ்சலி…

தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள். படம் நடித்தோம், போனோம் என்றில்லாமல் தன் கதாபாத்திரம் பேசும் அளவிற்கு மிகவும் அழுத்தமான கதைகளாக தேர்வு செய்து நடிப்பவர் நடிகை அஞ்சலி.

படங்களை தாண்டி அவரது சொந்த விஷயங்களுக்காக பல ச.ர்.ச்சைகளில் சி.க்கினார். அதில் ஒன்று அவர் நடிகர் ஜெய்யை காதலித்தது தான்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென பிரிந்தார்கள், என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது முதன்முறையாக தனது காதல் தோல்வி குறித்து பேட்டி கொடுத்துள்ளார் அஞ்சலி.

காதல் தோல்வியால் பல கஷ்டங்களை சந்தித்தேன், அந்த நேரத்தில் எனக்கு எனது அம்மா தான் உதாரணமாக இருந்தார். அவர் சந்திக்காத பிரச்சனைகள் இல்லை, அவரது வாழ்க்கை அவ்வளவு கடினமானது.

தற்போது தனது கவனம் முழுவதும் தனது சினிமா பயணத்தில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு இப்படிபட்ட கதாபாத்திரமா?- கசிந்த தகவல்!!

தளபதி 65…

மாஸ்டர் படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

ஒருவழியாக இந்த வருட ஆரம்பத்திலேயே வெளியானது. அப்படத்தை தொடர்ந்து விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கதாக இருந்தது.

ஆனால் என்ன காரணம் என்பது தெரியவில்லை, முருகதாஸ் படத்தில் இருந்து விலகினார். பின் பல இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்த விஜய் இறுதியாக டாக்டர் பட புகழ் நெல்சன் கதையை தேர்வு செய்துள்ளார்.

படத்திற்கான பூஜை அண்மையில் சன் பிக்சர்ஸ் இடத்தில் நடந்தது, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. படத்தின் படப்பிடிப்பு பூஜைக்கு பின் இரண்டு நாள் அங்கு நடந்தது.

தற்போது அடுத்தகட்டமாக ஏப்ரல் 24ம் தேதி இருந்து படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளதாம்.

இந்த நிலையில் தான் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் விஜய் ஒரு ரகசிய உளவுத்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தி கசிந்துள்ளது.

சமூக வலைதள பக்கத்தில் கண்ணீருடன் பேசிய குக் வித் கோமாளி தர்ஷா குப்தா! என்ன காரணம் தெரியுமா?

தர்ஷா குப்தா….

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.

அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து வந்த பைனல்ஸ் நிகழ்ச்சி குக் வித் சீசன் 2-வில் விரைவில் நடைபெறவுள்ளது.

இதற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு காத்துகொண்டு இருக்கின்றனர். மேலும் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி, செந்தோரப்பூவே உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தர்ஷா குப்தா.

மேலும் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் வந்துள்ளார், அப்போது அவர் திடீரென்று கண்ணீருடன் அழுத படி சோகமாக பேசியுள்ளார்.

ஆம், தர்ஷா குப்தா உதவியாக ஒரு சில நகைகளின் விளம்பரத்தை பதிவிடுவதாக இருந்தாராம். ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் விளம்பரங்களை பதிவிட முடியவில்லையாம்.

இதன் காரணமாக தர்ஷா குப்தா ஏமாற்றுவதாக இணையத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து போன தர்ஷா கண்ணீருடன் அழுத படி ரசிகர்களுக்கு இது குறித்து தெளிவு படுத்தியுள்ளார்.

மார்டன் உடையில் வெளிநாட்டு நடிகையை போல் மாறிய தொகுப்பாளினி டிடி – அசந்துபோன ரசிகர்கள்!!

திவ்யதர்ஷினி…

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பலபேரின் மனதை கவர்ந்தவர் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி.

இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் தற்போது சின்னத்திரையில் மட்டுமல்லாமல், பா.பாண்டி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் விஜய் Television Awards விழா நடைபெற்றுள்ளது. இதில் நிகழ்ச்சிகள், சீரியல்கள் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த வருங்கால சந்தானம்.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கார் போல!!

புகழ்…

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்புவின் அடுத்த ரிலீஸுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு. தற்போது மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் பிரேம்ஜி, கருணாகரன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் தற்போது புதிதாக மாநாடு படத்தில் இணைந்துள்ளார் குக் வித் கோமாளி பிரபலம் புகழ்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருப்பவர் புகழ். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு பிறகு அவரது சினிமா மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

அந்த வகையில் வலிமை, தளபதி 65, விஜய் சேதுபதி பொன்ராம் படம், சந்தானம் படம் என புகழ் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக பல படங்கள் ரிலீஷுக்கு வரிசை கட்டுகின்றன.

அடுத்த வருடத்தில் சந்தானம் விட்ட இடத்தை தமிழ் சினிமாவில் புகழ் நிரப்புவார் என்று இப்போது அவரின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. சிம்பு தனக்கு பிடித்தவர்களை உயரத்தைவிட என்னைக்கும் யோசித்ததே கிடையாது.

அப்படி விஜய் டிவியில் நல்ல நல்ல காமெடி செய்து கொண்டிருந்த சந்தானத்திற்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து முன்னணி காமெடியனாக உயர்த்தி விட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே.