விஜய்யின் மாஸ் காட்சிகளை வைத்து எடுக்கப்பட்ட காட்சில்லா vs காங் சண்டைக்காட்சிகள்.. வைரலாகும் வீடியோ!!

Godzilla vs. Kong…

சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற காட்சில்லாvsகாங் படத்தில் காங் என்ற குரங்கு செய்யும் மாஸ் காட்சிகள் அனைத்துமே ஏற்கனவே விஜய் படங்களில் வந்த காட்சிகள் போல விஜய் ரசிகர்கள் எடிட் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். கடந்த சில வருடங்களில் விஜய் படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனைகள் செய்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் படங்களில் வரும் படம் சண்டை காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக அமைந்து வருகின்றது.

ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக விஜய் தன்னுடைய புதிய புதிய விஷயங்களை சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தி வருகிறார். அது ஸ்டைலாக இருப்பதால் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

குறிப்பாக குழந்தை ரசிகர்கள் விஜய்யின் ஸ்டைலை அப்படியே காப்பியடித்து செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். இப்போது விஜய்யின் ஸ்டைல் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது போல.

சமீபத்தில் வெளியான காட்சில்லாvsகாங் படத்தில் காங் காட்டும் மேனரிசங்கள் சண்டைக் காட்சிகள் அனைத்துமே ஏற்கனவே விஜய் படங்களில் வந்தது போன்ற பிம்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இதனை கவனித்த ரசிகர்கள் வீடியோவை எடிட் செய்து இணையத்தில் உலாவிட்டனர். தற்போது இந்த வீடியோ தான் இணையதள ட்ரென்டிங்காக சென்று கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில் விஜய் செய்வதைப் போலவே காங் செய்வது ரசிகர்களை மிகவும் கவர்ந்ததுள்ளது.

டியூசன் மாஸ்டர் டு அரசியல்வாதி.. இணையத்தில் பட்டையை கிளப்பும் கோடியில் ஒருவன் ட்ரைலர்!!

கோடியில் ஒருவன்…

விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோடியில் ஒருவன்.

ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

டியூசன் மாஸ்டர் அ.ர.சியல் இறங்குவது போல ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

விஜய் ஆண்டனியின் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருப்பதால் கண்டிப்பாக இந்த படமும் வெற்றி பெறும் என நம்பலாம்.

ராஜமௌலி படத்தில் ஹீரோவை விட வில்லன் தான் மாஸ்.. வெளியான RRR பட அஜய் தேவ்கன் மோஷன் போஸ்டர்!!

RRR…

இந்திய சினிமா உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு உச்சத்தில் உள்ள இயக்குனர் என்றால் அது ராஜமௌலி தான். பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்றவர்.

பாகுபலி படங்களுக்கு பிறகு தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ராஜமௌலி சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து RRR என்ற படத்தில் நடித்திருந்தனர்.

பாகுபலி படங்களுக்குப் பிறகு ராஜமௌலி கிட்டத்தட்ட 400 கோடி செலவு செய்து தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) எனும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் வருகின்ற அக்டோபர் 13ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு RRR படக்குழுவினர் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

டிக்டாக் பிரபலத்துக்கு அடித்த ஜாக்பாட்.. தளபதி 65 படத்தில் இரண்டாவது ஹீரோயின் இவங்க தான்!

தளபதி 65…

ஆயிரம் பேர் டிக் டாக் வீடியோக்களை குறை சொன்னாலும் சினிமாவில் நுழைவதற்கு அதுதான் துருப்புச் சீட்டாக அமைந்துள்ளது. தற்போதெல்லாம் சினிமா நடிகர்களை விட டிக் டாக் வீடியோக்கள் செய்பவர்களுக்கு தான் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

நல்லதோ கெட்டதோ எது செய்தாலும் டிரெண்ட் ஆகி விடுகிறது. அந்த வகையில் டிக் டாக் வீடியோக்கள் செய்து கொண்டிருந்த இளம் பெண்மணி ஒருவருக்கு தளபதி 65 படத்தில் இரண்டாவது கதாநாயகி சாங்ஸ் கிடைத்திருப்பது தான் கோலிவுட்டில் பேச்சாக உள்ளது.

டிக் டாக் வீடியோக்கள் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக அமைந்தது. இதன் காரணமாக பலரும் இதை பயன்படுத்தி வந்தனர். அந்தவகையில் கேரளா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் தான் அபர்ணா தாஸ்.

டிக் டாக் வீடியோக்கள் செய்து கொண்டிருந்தவரை அங்குள்ள இயக்குனர் ஒருவர் ஒரு படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்தார் அபர்ணா.

தற்போது தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்டம் திரைப்படமாக உருவாகும் விஜய்யின் தளபதி 65 படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. டிக் டாக் வீடியோக்கள் ஆண்களுக்கு ஒத்து வருகிறதோ இல்லையோ, பெண்களுக்கும் செமையாக ஒர்க்கவுட்டாகி விடுகிறது.

அழகாக இருக்கிறார்கள் என ஆண்கள் லைக் போடுவதால் தான் பெண்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்துவிடாதீர்கள். இதுஒருபுறமிருக்க ஒரு டிக்டாக் வீடியோ செய்த பெண்மணிக்கு இவ்வளவு பெரிய பட வாய்ப்பா என தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகைகளும் தற்போது வயிற்றெரிச்சலில் இருக்கிறார்களாம்.

அந்த இயக்குனருடன் விஜய் கூட்டணி சேர்ந்தால் படம் 700 கோடி வசூல் செய்யும்.. மனக் கோட்டை கட்டும் ரசிகர்கள்!!

விஜய் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். அதுமட்டுமில்லாமல் தற்போ.தை.க்கு தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்யும் படங்கள் கொடுக்கும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இந்த கொரானா சூழ்நிலையிலும் கூட 240 கோடிக்கு மேல் வசூல் சாதனையை செய்துள்ளது மாஸ்டர் திரைப்படம்.

அந்தவகையில் அடுத்ததாக தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தளபதி 65 படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் விஜய். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 400 என்பதை பதிவு செய்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் 400 கோடி வசூலுக்கு ரெடியாக இருங்கள் என பரப்பிவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடன் இந்தியாவே கலக்கும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளாராம் விஜய். இந்த கூட்டணி அமைத்தால் அந்த படம் 500 கோடி வசூல் செய்யுமாம்.

அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் விஜய் வெற்றிமாறன் கூட்டணி இணைய உள்ளதாம். இந்த கூட்டணி மட்டும் அமைந்தால் இந்தியா முழுவதும் விஜய்யின் படம் 700 கோடி வசூல் செய்யுமாம்.

இவ்வாறு சமூக வலைதளங்களை விஜய் ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். விஜய்யின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படம் பிகில் தான். அந்த படம் கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூல் செய்தது.

300 கோடி வசூல் செய்தும் அட்லீயால் தயாரிப்பு தரப்பு கொஞ்சம் நஷ்டத்தை சந்தித்ததாக தற்போது வரை ஒரு பேச்சுள்ளது குறிப்பிடத்தக்கது. வருங்காலங்களில் விஜய்யின் படங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இப்போதே மனக்கோட்டை கட்டுவதை தான் மற்ற ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்!!

தி கிரேட் இந்தியன் கிச்சன்…

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது, இயக்குனர் ஆர்.கண்ணன் இதனை இயக்குகிறார்.

மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.

இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் ஆர்.கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கியும் வருகிறார்.

பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது.

தளபதி 65 திரைப்படம் குறித்து துப்பாக்கி பட வில்லன் பதிவு! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

வித்யூத் ஜம்வால்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை அண்மையில் முக்கிய நட்சத்திரங்களுடன் நடந்தது, மேலும் தளபதி விஜய் இந்த பூஜையில் கலந்து கொண்டு அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தளபதி 65 படம் குறித்து எதாவது தகவல் இணையத்தில் பரவி வருகிறது, அந்த வகையில் தற்போது தளபதி 65 படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பதாக கூறியிருந்தார்.

மேலும் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் தளபதி 65 படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆம், தளபதி 65 படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக தகவல் ஒன்று பரவி உள்ளது.

இதற்கு வித்யூத் ஜம்வால் “அதற்காக தான் காத்திருப்பதாகவும், ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை” என பதிவிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி முக்கிய நட்சத்திரத்துடன் செஃப் தாமுவின் மகள் எடுத்துக்கொண்ட செல்பி, யாருடன் தெரியுமா?

செஃப் தாமு மகள் …

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இதை வாரம்தோறும் காண ஒரு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து வந்த பைனல்ஸ் நிகழ்ச்சி குக் வித் சீசன் 2-வில் விரைவில் நடைபெறவுள்ளது.

இதற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு காத்துகொண்டு இருக்கின்றனர். மேலும் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல செஃப் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வரும் செஃப் தாமு மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

மேலும் அக்ஷயா தாமோதரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆம் அதில் குக் வித் பிரபலம் அஸ்வினை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Akshayaa Damodaran (@akshay3387)

மார்டன் உடையில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை !!

நடிகைகள்…

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களின் வரிசையில் இடம்பிடித்துள்ள சீரியல்கள் பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த இரண்டு சீரியல்களிலும், நடித்து வரும் நடிகர், நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள்.

அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை,கதிர், பாரதி கண்ணம்மா ரோஷினி, அருண் உள்ளிட்டோரை குறிப்பிட்டு கூறலாம்.

சமீபத்தில் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த விஜய் Television விருதுகள் நடைபெற்றது.

இந்த விருது விழாவிற்கு மிகவும் அழகிய மார்டன் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைகள் வந்துள்ளனர்.

அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி பவித்ராவின் செம குத்தாட்டம்… பாக்க இரண்டு கண் போதாது..!

பவித்ரா…

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் வரும் நடிகர், நடிகைகளுக்குத்தான் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது.

ஆனால் இப்போது டிவி பெட்டி இல்லாத வீடுகளே இல்லை. இதனால் சின்னத்திரையில் வந்தாலும் செம ரீச் இருக்கிறது.

அதிலும் விஜய் டிவியில் சின்னதாக தலைகாட்டினால் கூட எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. விஜய் டிவியில் சாதாரணமாக காமெடி ஷோ நிகழ்ச்சிகளில் அறிமுகமான சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் ஆகியோர் இன்று திரைத்துறையில் உச்சத்தில் உள்ளனர்.

சந்தானமும் விஜய் டிவியில் வந்த லொள்ளு சபா மூலம் பிரபலமானவர் தான். அந்தவகையில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் செம பேமஸ். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலம் ஆனவர் தான் பவித்ரா.

இப்போது அவர் ட்ரம்ப்ஸ் இசைக்கு செம குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.