நடிகை கீர்த்தி சசுரேஷுக்கு திருமணம் என்ற தகவல்கள் பல முறை இதுவரை இணையதளங்களில் கிசுகிசுக்கப்பட்டுள்ளது.
ஆம் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்றும் பிரபல கேரளா தொழிலதிபர் ஒருவருடன் திருணம் என்றும் இதுவரை பல தடவை தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுவரை தனது திருமணம் குறித்து கிசுகிசுக்கப்படும் ஒவ்வொரு செய்தியையும், மறுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். இதில் ” எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகிறது. சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 தடவை செய்திகள் வந்துள்ளன “.
” ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது ” என்று கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு சிறந்த நடிகர். இவரது நடிப்பை தாண்டி ரஜினியின் ஸ்டைல், வசனங்கள் எல்லாம் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனது.
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர் கவர்ந்திருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்து அண்ணாத்த என்கிற படம் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு தொடங்கும் நடந்து கொண்டிருந்த நேரத்தில் கொரோனா வந்து நிறுத்தியது.
பின் மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க சில தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட மீண்டும் நின்றது.
இந்த நேரத்தில் தான் ரஜினியை பற்றி ஒரு சூப்பர் தகவல் வந்தது. அதாவது மத்திய அரசு நடிகர் ரஜினி அவர்களுக்க தாதா சாகேக் பால்கே விருது அளித்துள்ளனர்.
விருது கிடைத்த சந்தோஷத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். சரி ரஜினி அவர்கள் இதுபோல் எத்தனை உயரிய விருது வாங்கியுள்ளார் என்ற விவரம் இதோ
தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் ரஜினிகாந்த், தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ள தனுஷ் ஆகிய இருவருக்கும் ஒரே நாளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்தவாரம் 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய, நடிகர் தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது பெறுவதாக அறிவித்தார்.
இந்திய சினிமாவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான இதனை ரஜினி பெறுவது குறித்து, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் 67வது தேசிய விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம், அதாவது மே 3-ஆம் தேதி நடைபெறும் என்றும், அதே நாளில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்துக்கும் விருது வழங்கப்படும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
அதன்படி ரஜினி மற்றும் தனுஷ் இருவரும் ஒரே நாளில் விருது வாங்குவது உறுதியாகியிருக்கிறது. இரண்டு உயரிய விருதுகளையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வாங்குவது, ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சத்தில் தமிழ் திரையுலகம் முடங்கி கிடந்த நேரத்தில், மாஸ்டர் படம் வெளியாகி அனைவருக்கும் படத்தை திரையரங்கில் வெளியீடு ஒரு வழியை அமைத்து தந்தது. அப்படத்தை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
ரெமோ திரைப்படத்திற்கு பிறகு பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இன்று வெளியாகவுள்ள படம் சுல்தான். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள சுல்தான், அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்று பார்ப்போம்.
கதைக்களம்
ரவுடிசத்தை தனது தொழிலாகவே கொண்டுள்ள நெப்போலியனுக்கு மகனாக பிறக்கிறார் கார்த்தி { சுல்தான் }. பிரசவத்தின் நேரத்தில் குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்ததால், தன் தாயை தனது பிறப்பிலேயே கார்த்தி இழக்கிறார்.
தாயில்லாமல், 100 அடியாட்களிடம் வளரும் கதாநாயகன் { சுல்தான் }, அவர்கள் அனைவரையும் தனது சொந்த அண்ணனாக பார்க்கிறார். வெளிநாட்டில் வேலை செய்து வரும் கார்த்தி விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வருகிறார்.
அதே சமையத்தில் தனது கிராமத்தை வில்லன் ஜெயசீலனிடம் இருந்து, நீங்கள் காப்பாற்றி தரவேண்டும் என்று நெப்போலியனிடம், பொன்வண்ணன் { விவசாயி } கேட்க, காப்பற்றி தருகிறேன் என்று நெப்போலியனும் வாக்களிக்கிறார்.
இதன்பின், போலீஸ் அதிகாரியின் மூலம் கார்த்தியின் வீட்டிற்குள் Food Delivery ஆட்களாக பூகுந்து, நெப்போலியன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு துப்பாக்கி சூடு நடக்கிறது. இதனால் ரவுடி கூட்டத்தில் நான் இருக்கமாட்டேன் என்று ஊரைவிட்டு கார்த்தி கிளம்பும் நேரத்தில், அந்த மனவருத்தத்தில் உயிரை விடுகிறார் நெப்போலியன்.
இதனால் தனது தந்தைக்கு பிறகு, தன்னை தூக்கி வளர்ந்த அண்ணன்களை பார்த்துக்கொள் வேண்டும் என்று, போலீஸ் அதிகாரியிடம் சென்று, 100 போரையும் திருத்த 6 மாதம் அவகாசம் கேட்கிறார் கார்த்தி.
ஆனால் தனது தலைவன் நெப்போலியன், கிராமத்தை காப்பற்றி தருவேன் என்று விவசாயின் பொன்வண்ணனிடம், கொடுத்த வாக்கை காப்பாற்ற கார்த்தியிடம் பொய் சொல்லி, பொன்வண்ணனின் ஊருக்கு, கார்த்தியின் சில ரவுடிகள் கிளம்புகிறார்கள். அவர்களுடன் உண்மையை அறியாமல் கார்த்தியும் செல்லுகிறார்.
ஆனால் அந்த ஊருக்கு சென்ற சில அசபாவிதங்கள் நடக்க, கார்த்திக்கு அனைத்து உண்மைகளும், தெரியவருகிறது. அதன்பின் எப்படி அந்த கிராமத்தை வில்லனிடமிருந்து கார்த்தி காப்பாற்றுகிறார், அங்கு சந்திக்கும் தனது காதலி, ருக்குமணி { ரஷ்மிகா மந்தனாவை } எப்படி கரம்பிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
வழக்கம் போல் தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்காமல் நடித்திருக்கிறார் நடிகர் கார்த்தி. அதேபோல் கார்த்திக்கும் உறுதுணையாக நிற்கும் நடிகர் லால் அவர்களின் நடிப்பும் பாராட்டுக்குரியது.
தனது முதல் தமிழ் படம் போல் இல்லாமல் கிராமத்து கதைக்களத்திற்கு நன்றாக பொருந்தியுள்ளார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் எடுத்துக்கொண்ட கதைக்களம் புதிதாக இருந்தாலும், திரைக்கதை படத்தை கொஞ்சம் சொதப்பியுள்ளது.
ஹீரோவின் பில்டப்பிற்காக வில்லன் பேசும் வசனங்கள், படத்தை பார்ப்பவர்களுக்கு சலிப்பு தட்டுகிறது. படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகளில் சிலவற்றை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
Vivek மற்றும் Marvinபாடல்கள், படத்திற்கு கூடுதல் பலம் தான். ஆனால், யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் எப்போதும் போல் மிரட்டியிருக்கிறார். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்க்கிறது.
க்ளாப்ஸ்
கார்த்தி, லாலின் நடிப்பு
Vivek – Marvin பாடல்கள்
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு
பல்ப்ஸ்
திரைக்கதை கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்
தேவையில்லாத வசனங்கள்
மொத்தத்தில் கமெர்ஷியல் ரசிகர்களுக்கு சுல்தான் விருந்தாக அமைந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சூப்பர் ஹிட்டான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான். இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன என்பதும், உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் நாம் அறிந்ததே.
அதே போல் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்டு, அந்த வருட இறுதியில் முடிக்கப்படும். ஆனால் கடந்த நான்காவது சீசன் மட்டும் கொரோனா வைரஸ் அ.ச்சு.று.த்தலின் கார.ணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவுற்றது.
தற்போது பிக் பாஸ் தமிழில் 5வது சீசன் ஜூன் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கவிருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல் இந்த சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை சகிலாவின் மகளான மிலா கலந்துகொள்ள உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதாவது நடிகை சகிலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். கவர்ச்சி புயலாக வலம் வந்த ஷகிலா இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே மம்மி என்ற உயர்ந்த ஸ்தானம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெருமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியையே சேரும்.
சமீபத்தில் ஷகிலா, மிலா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும், அவர் ஓர் ஆடை வடிவமைப்பாளர் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது மிலா பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக பங்கேற்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தைப் பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளன. அதற்குக் காரணம் சமீபத்தில் தளபதி 65 படத்துக்கான பூஜை புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.
அதிலும் தளபதி விஜய் அதிகமாக முடி வைத்திருந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. மாஸ்டர் பட சாயலில் இருந்தாலும் அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறார். இந்த புகைப்படங்கள்தான் இணையதளத்தில் சக்கை போடு போட்டன.
இந்நிலையில் பூஜை போட்ட கையோடு சம்பிரதாயத்திற்கு இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம். அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கோபுரம் ஸ்டூடியோவில் போடப்பட்டுள்ள செட்டில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.
மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் மற்றொரு நடிகையாக அபர்ணா தாஸ் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய்யின் விருப்பமான காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவும் படத்தில் இணைய உள்ளாராம்.
யோகி பாபுவிடம் தளபதி 65 படத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட 50 நாட்கள் கால்ஷீட் வாங்கியுள்ளாராம் இயக்குனர் நெல்சன். காமெடி நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் பேசப்படும். அந்த வகையில் தற்போது யோகி பாபு ஒரு நாளைக்கு 2 முதல் 5 லட்சம் வரை வாங்கி கொண்டிருக்கிறாராம்.
அப்படி கணக்கு போட்டால் தளபதி 65 படத்தில் அவர் வாங்கும் சம்பளம் கிட்டத்தட்ட ஹீரோயினுக்கு இணையாக இருக்கிறது என இப்போதே கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. நாளுக்கு நாள் யோகிபாபுவின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக இருக்கிறது என பல நடிகர்கள் பொறாமையில் இருக்கிறார்களாம்.
கடந்த சில வருடங்களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இளம் இயக்குனர்களில் தன்னுடைய கதை திறமையால் அனைவரையும் கவர்ந்தவர் கார்த்திக் நரேன். அவருடைய முதல் படமான துருவங்கள் பதினாறு படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தை எடுத்தார். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரான கவுதம் மேனன் படத்தை பல சிக்கல்களில் மாட்டி விட்டதால் தற்போது வரை வெளிவராமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அருண் விஜய் மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் வெளியான மாபியா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் எப்படியாவது மீண்டும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என தனுஷுடன் D43 படத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தான் அவருக்கு ஒரு பாலிவுட் ஆப்பர் வந்துள்ளது. சமீபத்தில் துருவங்கள் பதினாறு படத்தை பார்த்த பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் வருண் தவான் அந்த படத்தை ரீமேக் செய்வேன் என அடம்பிடித்து கொண்டிருக்கிறாராம்.
துருவங்கள் பதினாறு படத்தின் ஒவ்வொரு நிமிடமும் மிக சுவாரசியமாக இருப்பதால் அந்த படம் தன்னை மிகவும் கவர்ந்து விட்டது எனவும், முடிந்தால் இந்த படத்தின் இந்தி ரீமேக்கை நீங்களே இயக்குங்கள் எனவும் கார்த்திக் நரேனிடம் கேட்டுள்ளாராம்.
இந்த கூட்டணி மட்டும் உறுதியானால் கண்டிப்பாக கார்த்திக் நரேன் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைப்பார். மிக இளம் வயதிலேயே தமிழில் இருந்து பாலிவுட் சென்ற இயக்குனர் என்ற பெருமையை கார்த்திக் நடையின் படைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தல அஜித். பல தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும் தற்போது வரை அவரது ரசிகர்கள் அவரை விட்டு விலகாமல் அவருக்கு சப்போர்ட் செய்து வந்ததால் சமீபகாலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் போன்ற படங்கள் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் அடுத்த வசூல் சாதனைக்கு ரெடியாக இருக்கும் திரைப்படம் வலிமை.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் வினோத் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம். இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் வலிமை படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டு உரிமைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் வலிமை படத்தின் டப்பிங் மற்றும் எடிட்டிங் ஆகியவற்றை எடுத்தவரை முடித்து வைத்து விட்டார்களாம். அதுமட்டுமில்லாமல் வருகிற மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு வரும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித் மீதுள்ள மரியாதையால் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் தல அஜித்திற்கு மரியாதை கொடுக்க சொல்லி பலரிடமும் சண்டை போட்டு வருகின்றனர். அதாவது அஜித் சார் என்று தான் சொல்ல வேண்டுமாம்.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த் தல அஜித் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர், டேய் அஜித் சார் என்று மரியாதையாக கூப்பிடு என எச்சரித்தார்.
ஆனால் அதை ஜாலியாக எடுத்துக் கொண்ட சித்தார்த், வடிவேலுவின் ஆஹான் என்ற டயலாக்கை போட்டு சரியான நோஸ் கட் செய்துவிட்டார். அஜித்தின் பிறந்த நாள் விரைவில் வர இருப்பதால் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவல் அரசியல்வாதிகள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன்.
என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தன்னுடைய பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.