வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்..!

ராக்கெட்ரி…

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார்.

ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன்.

பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இதன் தமிழ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சூர்யா, மாதவனை வியந்து பாராட்டியதோடு, இப்பாடத்தில் தானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிரெய்லரில் வரும் ஒவ்வொரு வசனங்களும், காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். குறிப்பாக ‘ஒரு நாயை அழிக்க… அதற்கு வெறிநாய்னு பட்டம் கட்டினாலே போதும், அது போல ஒரு மனுஷனை தலை தூக்க முடியாத அளவுக்கு அடிச்சி கொல்லணும்னா…

அவனுக்கு தேச துரோகின்னு பட்டம் கொடுத்தா போதும்’ என சூர்யா பேசும் வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன. இப்படம் கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ம னநிலை சரியில்லாமல் காணாமல் போன பிரபல சீரியல் நடிகர்…. தீயாய் பரவிய விளம்பரத்தின் பின்னணி என்ன?

பாண்டிகமலை………..

சின்னத்திரை நடிகரான பாண்டிகமலை காணவில்லை என்றும் கண்டுபிடிப்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பரிசுத்தொகை என்று கூறப்பட்டுள்ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பாப்புலரான நடிகராக இருந்து வருபவர் பாண்டி கமல். அவர் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் கமலை காணவில்லை என குறிப்பிட்டு செய்தித்தாளில் வி.ள.ம்பரம் வந்திருப்பதாக அவரே இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் ம.ன.நி.லை சரியில்லாதவர் என்றும் அவரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் என்றும், நேரில் அழைத்து வருபவர்களுக்கு 25 லட்சம் ருபாய் சன்மானம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாண்டி கமல் “என்னது 25 லச்சமா.. ஓ My கடவுளே… அடடா….எனக்கே அந்த பயனே தெரியுமே பா…. Amount கேஷவா or Cheque va ???????” என கேட்டிருக்கிறார் அவர்.

இந்த பதிவை பார்த்து ஆச்சர்யம் ஆன ரசிகர்கள் ‘இது புது சீரியலுக்காகவா?’ என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த விளம்பரத்தில் பெயர் சூர்யா என குறிப்பிடப்பட்டு இருப்பதால் அவர் அந்த தொடரில் சூர்யா என்ற ம.ன.நி.லை பா.தி.க்.க.ப்பட்ட நபராக தான் நடிக்கிறார் என தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pandikamal (@pandikamal2020)

அச்சு அசல் நயன்தாரா போல சிக்குன்னு மாறிய அனிகா.. புடவையில் சரமாரியாக குவியும் லைக்குகள்!!

நடிகை அனிகா……….

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற அஜித் படங்களில் அவருக்கு மகளாக நடித்து தல அஜித்தின் ரில் மகள் என்ற பெருமையுடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது பருவ மங்கையாக மாறி உள்ள அனிகா சுரேந்திரன் முன்னணி ஹீரோயின்களே கண்டு மிரளும் அளவுக்கு போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

எனவே சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் அனிகா, 16 வயதிலேயே சினிமா, மாடலிங், விளம்பரப் படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில்,தற்போது முன்னணி ஹீரோயின்களுக்கு கடும் போட்டியாக மாறி வருகிறார்.

ஆகையால் அனிகா சுரேந்திரன் விரைவில் கதாநாயகியாக பல படங்களில் பார்ப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடைவையில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதைப் பார்க்கும் அவருடைய ரசிகர்கள் வர்ணித்து தங்களுடைய கமெண்டுகளை தட்டி விடுகின்றனர்.

கசிந்தது சூர்யா40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி.. அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ் நிறுவனம்!!

சூர்யா40………..

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா40 படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு காரணம் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை சுவைத்ததுதான்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர் பாண்டிராஜின் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க போவதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் என இப்போதே தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இது ஒருபுறமிருக்க சூர்யா 40 படத்தின் அறிவிப்புகள் பெரிதாக இல்லையென்றாலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரே மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தேதி குறித்துள்ளது சன் நிறுவனம்.

வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சூர்யா40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். இந்நிலையில் இந்த செய்தியும் இணையத்தில் கசிந்து விட்டது. கடந்த சில வருடங்களாகவே மிகப் பெரிய படங்களின் ரகசியங்கள் எளிதாக இணையத்தில் கசிந்து வருவது வாடிக்கையாகி விட்டது.

தமிழில் மட்டுமல்ல மொத்த இந்திய சினிமாவிலும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் அனைத்துக்குமே இதே கதிதான். இப்படியே போனால் படத்துக்கான சுவாரசியம் குறைந்துவிடும் என தற்போது தன்னுடைய ஊழியர்களுக்கு செம டோஸ் விட்டுள்ளதாம் சன் நிறுவனம்.

பிக்பாஸ் புகழ் கவின் பற்றி வந்த சோக செய்தி- கடும் வருத்தத்தில் ரசிகர்கள்..!

கவின்…

பிக்பாஸ் 3வது சீசனில் அனைவராலும் முக்கியமாக கவனிக்கப்பட்டவர் கவின். சரவணன்-மீனாட்சி என்கிற ஹிட் சீரியல் மூலம் எல்லோர் மனதையும் கவர்ந்தார்.

கவின் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு பல சர்.ச்சை.களில் சி.க்.கினார். அந்த பிரச்சனைகள் முடிய மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு விஷயத்தில் மாட்டிக் கொண்டே இருந்தார்.

இப்போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் வேறொரு நபராக வலம் வருகிறார். அண்மையில் அதாவது நேற்று (மார்ச் 31) விஜய்யின் 65வது படத்தின் பூஜை போடப்பட்டது. பின் குழுவினர் அனைவரும் நின்று புகைப்படம் எல்லாம் எடுத்தார்கள்.

அதில் ரசிகர்கள் கவினை கண்டுபிடிக்க தளபதி 65ல் நடிக்கிறார் என்றனர். ஆனால் இப்போது வரும் தகவல் என்னவென்றால் இயக்குனர் நெல்சன் திலீப்பிற்கு கவின் நல்ல நண்பராம்.

இந்த தளபதி 65 படத்தில் கவின் நடிக்கவில்லையாம், அதற்கு மாறாக உதவி இயக்குனராக தான் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார் என்று தகவல் வருகின்றன.

விஜய் படத்தில் கவின் நடிக்கிறார் என்று சந்தோஷத்தில் இருந்த ரசிகர்களுக்கு இது வருத்தமான செய்தியாக அமைந்துவிட்டது.

தளபதி 65 பூஜைக்கு ஹீரோ விஜய் வந்தாச்சு, ஹீரோயின் ஏன் வரல.. கோலிவுட்டை துளைத்தெடுக்கும் கேள்விகள்!

தளபதி 65….

மாஸ்டர் படத்தின் வெற்றி விஜய்க்கு ஒரு புதிய தெம்பு கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். 50% பார்வையாளர்களை வைத்துக்கொண்டே மாஸ்டர் படம் 200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்ததால் கண்டிப்பாக தளபதி 65 படம் மிகப்பெரிய வசூலை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த முறையும் விஜய் இளைஞர் கூட்டணியில் வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. கடந்த பத்து வருடங்களில் விஜய்யின் மார்க்கெட் மிகப் பெரிய உயரத்திற்கு வந்ததுக்கு காரணம் விஜய் இளம் இயக்குனர்களை நம்பி தன்னுடைய படங்களை ஒப்படைத்தது தான்.

அந்த வகையில் தான் விஜய்யின் தீவிர ரசிகர் அட்லீ தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை கொடுத்தார். அதேபோல லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு மாஸ்டர் என்ற மாஸ்டர் பீஸ் படத்தைக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு சென்சேஷனல் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே மிஷ்கினின் முகமூடி படத்தில் நடித்தவர் தான்.

மிகப்பெரிய படத்தின் பூஜை நடைபெற்றபோது படத்தின் நாயகி வந்திருக்க வேண்டாமா என கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் பூஜை புகைப்படங்கள் வெளியாவதற்கு முன்னரே தன்னால் தளபதி 65 படத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்கிற வருத்தத்தை பூஜா ஹெக்டே பதிவு செய்தார்.

தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால் தேதிகள் ஒதுக்க முடியவில்லை எனவும், கண்டிப்பாக தளபதி 65 படத்தில் இணைவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். பூஜா ஹெக்டேவின் இந்த பதிவிற்கு 40 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளன.

40 கோடியில் உருவான சுல்தான்.. ரிலீசுக்கு முன்னாடியே இத்தனை கோடி லாபமா?

சுல்தான்…

விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டர் உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் சுல்தான். முன்னதாக சூர்யா குடும்ப திரைப்படங்களை திரையிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறியது நினைவிருக்கலாம்.

ஆனால் தற்போது சூர்யா மட்டுமல்ல தமிழ் சினிமாவின் சுண்டைக்காய் ஹீரோ யார் படம் நடித்தாலும் வாங்கித் திரையிட ரெடியாக இருக்கின்றனர். அந்தவகையில் கார்த்தி படத்தை விட்டுவிடுவார்களா என்ன.

கார்த்தியின் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் கைதி திரைப்படம் வியாபாரத்தில் கார்த்தியை உச்சிக்கு கொண்டு சென்றது. அந்த வகையில் அடுத்ததாக எதிர்பார்க்கும் திரைப்படம் தான் சுல்தான்.

சிவகார்த்திகேயனுக்கு ரெமோ என்ற படத்தை கொடுத்த பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 40 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான். இந்நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட 67 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது.

சுல்தான் படம் வெளியாவதற்கு முன்னரே 27 கோடி ரூபாய் லாபத்தை பார்த்துள்ளதாக கூறுகின்றனர். சுல்தான் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நல்ல விலைக்குப் போயுள்ளதால் தான் இந்த லாபம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் வினியோகஸ்தரர்களை நம்பி ரிஸ்க் எடுக்காமல் தமிழ்நாட்டில் சொந்தமாகவே ரிலீஸ் செய்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ஆக மொத்தத்தில் ஆரம்பத்திலேயே லாபம் பார்த்த சுல்தான் படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா என்பதுதான் தற்போதைய ஒரே கேள்வி.

பூமி படம் படுத்திய பாடு.. வெற்றியை தேடி ஓட்டம் பிடிக்கும் ஜெயம் ரவி!!

ஜெயம் ரவி…

வாரிசு நடிகர்களாக அறிமுகமாகன பலருக்கும் முதல் படம் வெற்றிப்படமாக அமைவது கடினம்தான். அந்த வகையில் சரியான படத்தை தேர்வு செய்து இளம் கதாநாயகனாக களம் இறங்கியவர் ஜெயம் ரவி.

ஜெயம் என்ற வெற்றிப் படத்தின் மூலம் தொடர் வெற்றி நாயகனாக வலம் வந்த ஜெயம் ரவிக்கு தன்னுடைய கேரியரில் சில சறுக்கல்கள் ஏற்பட்டது. மூன்று வருடங்கள் ஜெயம் ரவியின் எந்த ஒரு படமும் வெளிவராமல் இருந்தது.

அந்த மூன்று வருட காலத்தில் மிகவும் சிரமப்பட்டு விட்டதாக ஜெயம் ரவி பல பேட்டிகளில் புலம்பி தள்ளினார். அதன்பிறகு ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது மீண்டும் தன்னுடைய வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஜெயம் ரவியின் 25வது படமாக வெளியானது பூமி.

நல்ல வேளை இந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை. அப்படி வெளியாகியிருந்தால் ஜெயம் ரவியின் கேரியரில் இவ்வளவு ஒரு மோசமான தோல்வி படத்தை அவர் சந்திக்க முடியாது என்கிற அளவுக்கு தோல்வியை சந்தித்தது.

கதைக்கரு சரியாக இருந்தாலும் அதை கையாண்ட விதம் பார்ப்பவர்களை மிகவும் சலிப்படைய வைத்தது. இருந்தாலும் உஷாரான ஜெயம்ரவி இனி அடுத்தடுத்த படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்து விடவேண்டும் என எண்ணி சரியாக காய் நகர்த்தி வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இரும்புத்திரை படத்தில் பணியாற்றிய பிரபலம் ஒருவருடன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

அந்த படத்தின் கதையே தமிழ் சினிமாவுக்கு புதிது என்கிறார்கள். மேலும் பூமி படத்தின் விமர்சனங்கள் ஜெயம் ரவியை கடுமையாக பாதித்ததால் தான் தற்போது ஒரு கதையை தேர்ந்தெடுக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்கிறாராம்.

செம கெத்தா வந்த தளபதி விஜய்.. இணையத்தை கலக்கும் தளபதி 65 பூஜை புகைப்படம்!!

விஜய்…

விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகும் தளபதி 65(#Thalapathy65) படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் தளபதி65 படத்தின் பூஜை விழா நேற்று சென்னையில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

இதற்காக தளபதி விஜய் தாறுமாறான ஸ்டைலில் வந்து இறங்கியுள்ள புகைப்படம்தான் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

பரட்டை தலையுடன் மாஸ்டர் படத்திலிருந்த அதே கெட்டப்பை தளபதி 65 படத்திலும் பயன்படுத்துவது போல் தோன்றுகிறது. மேலும் இந்த பூஜையை தொடர்ந்து இரண்டு நாட்கள் சம்பிரதாய படப்பிடிப்பு இருக்கும் எனவும்,

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஏப்ரல் 9ஆம் தேதி முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

காலையிலிருந்தே சமூகவலைதளங்களில் தளபதி 65 படத்தின் பூஜை பற்றிய செய்திகள் அதிகளவில் வலம் வந்த நிலையில் தற்போது விஜய் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

அதனைத் தொடர்ந்து படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தின் பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என வருத்தத்துடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருந்தாலும் படக்குழுவினருடன் இணைவதை ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தளபதி 65 படத்தின் இயக்குனர் நெல்சன், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, கலாநிதி மாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகை த்ரிஷாவா இது! 37 வயதில் அவர் வெளியிட்ட ஷாக்கிங் போட்டோ..!

நடிகை த்ரிஷா…

தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா.

இவர் நடிப்பில் தற்போது பரமபதம் ஆட்டம், ராங்கி, கர்ஜனை உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.

கதாநாயகியாக மட்டுமல்லாமல், இதுபோன்ற சோலோ ஹீரோயின் கதைகளிலும் நடித்து அசத்தி வருகிறார் நடிகை த்ரிஷா.

இந்நிலையில் 37 வயதாகும் நடிகை த்ரிஷா, ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.