சுல்தான் படத்தின் ப்ரோமோ காட்சி வெளியீடு !

சுல்தான் ப்ரோமோ காட்சி…

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அதோடு சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெமோ திரைப்பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இந்த சுல்தான் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா நடித்துள்ளார். அதிரடி மாஸ் மசாலா பொழுதுப்போக்கு படமான இதில் ராமச்சந்திர ராஜு, லால் பால், நெப்போலியன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் சுல்தான் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜாவும், பாடல்களுக்கான இசையை விவேக் – மெர்வினும் அமைத்துள்ளார்கள்.

சென்சாரில் சுல்தான் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

யாரையும் இவ்ளோ அழகா பாடலின் ப்ரோமோ காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யோகிபாபுவின் நகைச்சுவையும், ராஷ்மிகா மற்றும் கார்த்தியின் துள்ளலான ரொமான்ஸ் காட்சிகள் ப்ரோமோவை சிறப்பிக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி கைவசம் பொன்னியின் செல்வன் படம் உள்ளது.மணிரத்னம் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி, சியான் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

பிரபல சின்னத்திரை நடிகர் ப்ரஜனின் ட்வின்ஸ் மகள்கள், வெளியான செம கியூட்டான போட்டோ..!

ப்ரஜன்…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர் தான் ப்ரஜன், இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

சின்னத்திரையில் தொகுப்பாளராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ப்ரஜன், இது ஒரு காதல் கதை என்ற சீரியலில் ஹீரோவாக சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து காதலிக்க நேரமில்லை என்ற சீரியலில் மீண்டும் ஹீரோவாக களமிறங்கிய ப்ரஜனுக்கு ஒரு மிக பெரிய ரசிகைகள் பட்டாளமே உருவானது என்று தான் கூறவேண்டும்.

மேலும் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியான ப்ரஜன் பின் மீண்டும் சின்ன தம்பி என்ற சீரியலில் நடித்தார். தற்போது இவர் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாண்ட்ரா எமி என்பவரை திருமணம் செய்து கொண்ட ப்ரஜன், இவர்களுக்கு இரண்டு இரட்டையர் மகள்கள் உள்ளனர்.

மேலும் தற்போது ப்ரஜன் அவரின் மகள்களை தூக்கி வைத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவி சீரியல் நடிகையை திருமணம் செய்தகொண்ட பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்!!

பிரவீன்…

TRPயின் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களின் வரிசையில் முக்கியமான இடத்தை பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்துள்ளது.

இதில் கதாநாயகியாக நடித்து வரும், அறிமுக நடிகை ரோஷினி, தமிழக ரசிகர்கள் மனதில் நடிகையாக இடம்பிடித்துள்ளார்.

சின்னத்திரையில் சூப்பர்ஹிட் சீரியலாக விளங்கி வரும் பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கி வருபவர் இயக்குனர் பிரவீன். இவர் இதற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி, ராஜா ராணி 1 உள்ளிட்ட சீரியலை இயக்கியுள்ளார்.

இயக்குனர் பிரவீன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த, நடிகை சாய் ப்ரமோதித்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகளை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அட நண்பன் பட மில்லிமீட்டரா இது….? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்!!

ரின்சன் சைமன்…

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய், இலியானா, சத்யராஜ் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளி வந்த படம் நண்பன். இப்படத்தில் சிறு கதாபாத்திரமான மில்லி மீட்டர் என்ற ரோலில் நடித்திருந்தவர் ரின்சன் சைமன். சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், நிறைய டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டி வந்தார்.

இதன் விளைவாக ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கேர்ல்ஸ் உள்பட பல நிகழ்ச்சிகளில் திறமையை வெளிப்படுத்தி திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.மேலும், மில்லி மீட்டர் வளர்ந்து விட்டாரா!! என்ற வியப்பிலும் கேள்வி கேட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். உண்மையிலேயே மில்லி மீட்டர் பெயர் ரின்சன் சைமன் ஆகும்.

தமிழ் சினிமா திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சங்கர் தான். மேலும், இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய், இலியானா, சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் உட்பட பல நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த படம் தான் “நண்பன்”.

இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு திரை உலகிற்கு வெளி வந்தது. நண்பன் படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படு.த்திய படம் என்று கூட சொல்லலாம். இந்த திரை.ப்படம் ‘3 இடியட்ஸ்’ என்று ஹி.ந்தியில் 2009 ஆம் ஆண்டு வந்த படமாகும். இந்த படத்.தை தமிழில் கொஞ்சம் மா.டுலே.ஷன் செய்து வெளியிட்டார்கள். மேலும்,நண்பன் படத்தில் மில்லி மீட்டர் என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரின்சன் சைமன்.

தற்போது இவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து உள்ளார் என்ற கருத்துக்.கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்.றது. நடிகர் ரின்சன் சைம.ன் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் உடையவர். இதுமட்டும் இல்லாமல் இவருக்கு நடனத்திலும் அதிக ஆர்வம்

இதனாலேயே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர்-1 ,பாய்ஸ் vs கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய நடன திறமையை காண்பித்து உள்ளார். மேலும், பலரையும் இவருடைய திறமையால் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நோக்கி பயணம் செய்தார். இதையடுத்து நடிகர் ரின்சன் சைமன் ‘சுட்ட கதை, நலனும் நந்தினியும், ரெ.ட்.டை.சுழி, நண்பன், பா. பாண்டி உட்பட பல படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி உள்ளார்.

இப்படி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தாலும் இவரை நண்பன் படத்தின் மூலம் தான் அதிகமாக பிரபலமானார்.நண்பன் படத்தின் மூலம் தான் இவர் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார் என்று கூட சொல்லலாம்.

தற்போது நடிகர் ரின்சன் சைமன் அவர்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஸ்டைல்லைப் பின்பற்றி குறும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார் என்ற தகவல் இணையங்களில் வெளிவந்து உள்ளது.

மேலும்,நடிகர் ரின்சன் சைமன் திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவருடைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது.

இதை பார்த்து அனைவரும் வியப்பிலும், ஆச்சிரியத்திலும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், நண்பன் படத்தில் மீசை, தாடி இல்லாமல் மிகவும் ஒ.ல்.லி.யா.க காணப்பட்ட ரின்சன் சைமன் தற்போது ஆச்சரியப்படும் அளவிற்கு தாடி, மீசை என மாஸ் கெட்டப்பில் தோற்றமளிக்கிறார்.

என்ன பார்த்து ஊரே சிரித்தது போதும்.. வேற மாதிரி களமிறங்கும் சதீஷ்!!

நடிகர் சதீஷ்…

தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக உயர்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோலிவுட்டில் காமெடியன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு வருகிறது.

இந்த காமெடியன் டூ ஹீரோ மாற்றம் எழுபதுகளில் நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோரில் தொடங்கி, தற்போது சந்தானம், யோகி பாபு, சூரி என நீண்டு கொண்டே தான் செல்கிறது. தற்போதுள்ள தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் எண்ணிக்கை சற்றே குறைவுதான்.

இந்த நிலையில் தற்போது காமெடி நடிகராக கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் விரைவில் ஹீரோவாக உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது தமிழ் சினிமாவில் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சதீஷ். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என கிடைக்கும் வேடங்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துவார். சமீபத்தில் கூட சதீஷ் நடிப்பில் பூமி, டெடி ஆகிய படங்கள் வெளியாகின.

தற்போது சதீஷ் ஹீரோவாக களம் இறங்க உள்ளாராம். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் மேலும் ஒரு படத்திலும் சதீஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே, காமெடியனாக கால்பதித்து தற்போது தாறுமாறாக வளர்ச்சி பெற்றிருக்கும் சதீஷ் பற்றிய இந்த தகவல்கள் இணையத்தில் கா ட்டுத் தீ போல் பரவி வருகிறது.

டிடி முன்னாள் கணவரின் சமீபத்திய புகைப்படம், அதுவும் எந்த பிரபல நடிகருடன் உள்ளார் தெரியுமா?

டிடி…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக பல வருடங்களாக இருந்து வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவி-யில் ஜோடி NO.1,

சூப்பர் சிங்கர், அன்புடன் டிடி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்று தான் கூறவேண்டும்.

மேலும் இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் திருமணமானது,

பின் சில காரணங்களால் இவர்கள் 2017 ஆம் ஆண்டு வி.வா.க.ர.த்து செய்து கொ.ண்டனர்.

இந்நிலையில் தற்போது டிடி-யின் முன்னாள் கணவரான ஸ்ரீகாந்த் நடிகர் சாந்தனு மற்றும் அவரின் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பிரபல இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய்க்காக காத்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன், தளபதி 66 இந்த கூட்டணி தானா?

வெற்றிமாறன்….

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரான வெற்றிமாறன் அளித்த சமீபத்திய பேட்டியில் தளபதி விஜய்யுடன் இணைவது குறித்து பேசியுள்ளார்.

ஆம், தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கி வருவதாகவும். இப்படத்தை முடித்துவிட்டு RS Infotainment க்கு ஒரு படம், மேலும் சூர்யாவின் வாடிவாசல் என மூன்று திரைப்படங்களை முடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இப்படங்களை முடித்துவிட்டு தளபதி விஜய்க்காக காத்திருக்க போவதாக கூறியுள்ளார். மேலும் அசுரன் படத்தை முடித்துவிட்டு தளபதியை சந்தித்தாகவும் அப்போது தான் இது குறித்து பேசியதாகவும் கூறினார்.

ஐந்தாவது பைனலிஸ்ட்டாக உள்ள நுழைந்த முக்கிய போட்டியாளர், குக் வித் கோமாளி சீசன் 2 -வில் நடந்த அதிரடி சம்பவம்!!

குக் வித் கோமாளி…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

அந்த வகையில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இறுதி போட்டிக்கு நகரந்துள்ளது.

அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் என மூவரும் பைனல்ஸ் போட்டிக்கு தேர்வாகி இருந்த நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் ஷகீலா நான்காவது பைனலிஸ்ட்டாக தேர்வாகி இருந்தார்.

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2-வின் அதிரடி முடிவால் ஐந்தாவது பைனலிஸ்ட்டாக மேலும் ஒருவர் தேர்வாகியுள்ளார்.

ஆம் பவித்ரா தான் அந்த ஐந்தாவது பைனலிஸ்ட், நான்கு போட்டியாளர்களை வைத்து மட்டுமே பைனல்ஸ நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில் தற்போது ஐந்து போட்டியாளர்கள் பைனல்ஸ் சென்றுள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

பிக் பாஸ் 5ல் கலந்து கொள்ளும் பிரபலங்களின் முழு பட்டியல் – ரசிகர்கள் எதிர்பார்க்காத லிஸ்ட்!!

பிக்பாஸ் சீசன் 5…

சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.

ஆம் ஜனவரி மாதம் முடிந்த பிக் பாஸ் சீசன் 4 முடிவடைந்ததை தொடர்ந்து, எப்போது பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் என்று தான் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் மாதம் துவங்க வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த முறை கமல் ஹாசனுக்கு பதிலாக, நடிகர் சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கஉள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் பிரபலங்கள் குறித்து கடந்த வாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளப்போவதாக பேச்சு வார்த்தை நடத்தி வரும் பிரபலங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதோ..

{ குக் வித் கோமாளி பிரபலங்கள் }

1. சுனிதா

2. அஷ்வின்

3. தர்ஷா குப்தா

4. பவித்ரலட்சுமி

—————————–

{ நடிகர், நடிகைகள் }

5. நடிகர் சித்தார்த்

6. ராதா

7. ராதா ரவி

8. லக்ஷ்மி மேனன்

9. சோனா

10. லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

11. பூனம் பாஜ்வா

37 வயதாகியும் நடிகை சதா கல்யாணம் பண்ணாமல் இருக்க காரணம் இதுதானாம்..!

சதா…

அண்டங்காக்கா கொண்டைக்காரி ரண்டக்க ரண்டக்க என இளம் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சதா தற்போது 37 வயது தாண்டியும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்க காரணம் என்ன என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சதா தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.

அதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த சதாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் என்றால் ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் திரைப்படம் தான்.

அந்நியன் படத்தில் நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு பல விருதுகளை வென்றார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்தால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது வரை சினிமாவில் நடித்து வந்தாலும் முன்னர் இருந்தது போல் மார்க்கெட் இல்லை. கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

வழக்கமாக மார்க்கெட் இல்லாத போது நடிகைகள் தொழிலதிபரை பார்த்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் சதா, தற்போது வரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது இல்லை எனவும், எனக்கானவரை இன்னும் நான் சந்திக்கவில்லை எனவும் தற்போது வரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

சதாவின் சினிமா மார்க்கெட் தலைகீழாக மாறியதற்கு வடிவேலுவுடன் நடித்த எலி படம் தான் காரணம் என தற்போது வரை சமூக வலைதளங்களில் ஒரு செய்தி விவாதப்பொருளாக சென்று கொண்டிருக்கிறது.