அவரு கூட நடிக்க முடியாது.. 49 வயது முன்னணி நடிகரை ஒதுக்கிவைக்கும் சாய் பல்லவி!!

சாய்பல்லவி…

சாய்பல்லவியிடம் 49 வயது மதிக்கத்தக்க நடிகருடன் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க கேட்டதற்காக அவருடன் நடிக்க முடியாது என்று கூறியது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஒரு முன்னணி நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவை சேர்ந்தவராக இருந்தாலும் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாதான் தற்போது சாய்பல்லவிக்கு தாய் இடமாக உள்ளது. எக்கச்சக்கமாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அதுவும் சாய்பல்லவி இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டம் போடுவது எல்லாம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது போல. இப்போதெல்லாம் முன்னணி நடிகர்களை விட சாய்பல்லவி நடனம் ஆடும் வீடியோக்கள் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.

தெலுங்கில் ஏற்கனவே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சாய்பல்லவி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்து விட்டாராம். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் நடித்து வருகின்றனர்.

இதில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவியை கேட்டதற்கு ஏதேதோ காரணம் சொல்லி மறுத்து விட்டாராம். ஆனால் சாய் பல்லவி உண்மையில் பவன்கல்யானின் வயதை மனதில் வைத்து தான் வேண்டாம் என்று சொன்னதாக டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

இதை கேள்விப்பட்ட பலரும் மார்க்கெட் இருக்கும் போது இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதும், மார்க்கெட் இல்லாத போது வயதான நடிகர்களுக்கு ஜோடியாவதும் வழக்கம் தானே என சகஜமாக எடுத்துக் கொண்டார்களாம்.

நல்லி எலும்பு போல் ஆன பிரியா பவானி சங்கர்.. கண்ணீர்விடும் ரசிகர்கள்!!

பிரியா பவானி சங்கர்…

செய்தி வாசிப்பாளராக இருந்து, அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். அதன்பின் இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இன்னும் கொஞ்ச நாளில் நயன்தாரா மார்க்கெட்டை ஓரம் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா கேரியரை தொடங்கி பின்னர் சீரியல் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சரியான நேரத்தில் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகிய நடிகர்களுக்கு பிறகு இருக்கும் அனைத்து நடிகர்களின் படங்களிலும் தற்போது பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயின். போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு படங்களாக பிரியா பவானி சங்கரை இளம் நடிகர்கள் புக் செய்து வருகின்றனர்.

விரைவில் முன்னணி நடிகர்களுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதற்கு ஏற்றார் போல அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது. அந்த ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

முதலில் கொழுக்மொழுக்கென்று இருந்த நம்ம பிரியா பவானி சங்கர் சமீப காலமாக உடற்பயிற்சியில் தீ.வி.ர கவனம் செலுத்தி தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து எலும்பும் தோலுமாக மாறிய புகைப்படம் ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது.

விஜய்யின் 65வது படத்தின் படப்பிடிப்பு இதற்கு பிறகு தானா?- வெளிவந்த தகவல்!!

தளபதி 65…

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பட்டய கிளப்பியது.

இப்பட வெற்றியாக ஓடிக் கொண்டிருக்கும் போதே விஜய்யின் 65வது படம் குறித்து பிரம்மாண்ட தகவல் வந்தது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார் என்பதை ஒரே வீடியோவில் அறிவித்தார்கள்.

அந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதன்பிறகு படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்கள் என்ன ஒரு அப்டேட்டும் இல்லையே என கூறி வந்தனர்.

இந்த நிலையில் படத்தின் நாயகியாக பூஜா ஹெட்ச் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. விஜய்யின் 65வது படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பிறகே தொடங்கவுள்ளதாம்.

பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் தான் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.

உயிருடன் காருக்குள் எ.றி.யும் உ ருவம், வான்டட் லிஸ்டில் துல்கர் சல்மான்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் குருப் பட டீசர்!!

குருப் பட டீசர்…

உயிருடன் காருக்குள் எ.றி.யு.ம் உருவம், வான்டட் லிஸ்டில் துல்கர் சல்மான்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் குருப் பட டீசர்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்.. கறார் காட்டும் தனுஷ் பட நடிகை!!

தனுஷ் பட நடிகை…

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வருவதற்கே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நடிகை தயாரிப்பாளர்களிடம் முரண்டு பிடிப்பதால் பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொ ண்டிருக்கிறார்கள்.

தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தவர் சுரபி. அதுமட்டுமில்லாமல் விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி, ஜெய் நடித்த புகழ் போன்ற படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

வந்த புதிதில் முன்னணி நாயகியாக வந்துவிடுவார் என உசுப்பேத்தியே நிலையில் தொடர்ந்து கிடைத்த சில படவாய்ப்புகளை தவிர்த்து விட்டு முன்னணி நடிகர்களுடன் தான் நடிப்பேன் என்று அடம் பிடித்ததால் வந்தது வினை.

கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளையும் மிஸ் செய்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் சுத்தமாக வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கிலும் இதே நிலைமைதான். இந்நிலையில் தயாரிப்பாளர் ஓருவர் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக அந்த நடிகையிடம் கேட்டுள்ளார். கொஞ்சம் நடிகருடன் நெருக்கமான கதாபாத்திரம் என்பதால் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் என தெரிவித்து விட்டாராம். இதற்காக எதற்கு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும், சில லட்சங்களுக்கு பல நடிகைகள் நடிக்க தயாராக இருக்கிறார்கள் என டாட்டா காட்டி விட்டாராம் அந்த தயாரிப்பாளர்.

இது குறித்து தன்னுடைய வட்டாரங்களில் பட வாய்ப்பே இல்லை என்றாலும் பரவாயில்லை இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய பெயரை கெடுத்துக்கொள்ள மாட்டேன் என கூறினாராம் சுரபி.

பிரபல நடிகர் அருண் விஜய்யின் மகளை பார்த்துளீர்களா? இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே!!

அருண் விஜய்…

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அருண் விஜய், இவர் தொடர்ந்து நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக மாஃபியா என்ற திரைப்படம் வெளியாகி ஹிட்டானது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் சினம், அக்னி சிறகுகள் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

மேலும் ஆரம்பத்தில் இருந்து திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய்க்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை, ஆனால் தல அஜித்திற்கு வில்லனாக இவர் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது.

அதன்பின் தொடர்ந்து சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய், தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் முக்கிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அருண் விஜய் தற்போது அவரின் மனைவி மகளுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)

வலிமை படத்தின் டப்பிங் பணிகளை முடித்த அஜித்!!

அஜித்…

அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார், இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க உள்ளனர். ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக படக்குழு காத்திருக்கின்றனர்.

அனுமதி கிடைக்க தாமதமாவதால், கடந்த சில நாட்களாக, வலிமை படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அதேபோல் நடிகர் அஜித் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு..!

சாந்தனு…

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருக்கும் சாந்தனு, தன்னை பற்றி சமூக வலைத்தளத்தில் வந்த கி.ண்.டல் பதிவுக்கு பதி.ல.டி கொடுத்து இருக்கிறார்.

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகவும் எ.தி.ர்பா.ர்க்.கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது.

இப்படம் வெளியான பிறகு சமூக வலைத்தளத்தில் சில நெட்டிசன்கள் சாந்தனுவின் கதாபாத்திரத்தை ட்ரோல் செய்யும் பதிவுகளை வெளியிட்டு வந்தனர். தற்போது தேசிய விருது பற்றின ஒரு ட்ரோலுக்கு நடிகர் சாந்தனு பதிலளித்துள்ளார்.

அவர் கூறும் பொழுது “ஒருவரை இப்படி கேலி கிண்டல் செய்யும் பொழுது சிலருக்கு அற்பமான மகிழ்ச்சி கிடைக்கிறது போல. இந்த கிண்டல்களை பார்த்து எனக்கு சோர்வாகிவிட்டது.

ஆனாலும் என் மீது தெரிந்தோ தெரியாமலோ கற்களை வீசும் அனைவருக்கும் எனது நன்றிகள். நீங்களே சொல்லிட்டீங்க நடக்காமல் போய்விடுமோ.

ஒரு நாள் நிச்சயம் இது நடக்கும் அப்பொழுது எனது பதில் இதுவாகத்தான் இருக்கும். அன்புடன் பார்கவ்” என்று பெருந்தமையுடன் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் மகன் படத்தின் புதிய அப்டேட்.. என்ன தெரியுமா ?

எம்.ஜி.ஆர்.மகன்…

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எம்.ஜி.ஆர். மகன்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பொன்ராம். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’.

சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இசையை இன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விக்ரம் வேதா ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகர்!!

விக்ரம் வேதா…

மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தின் ரீமேக்கில் பாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்திருக்கிறார்.

மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பாலிவுட்டில் இப்படம் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய்சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக செய்திகள் வெளியானது.

பின்னர் ஒரு சில காரணங்களால் அமீர்கான் இப்படத்தில் இருந்து வெளியேறினார். தற்போது இவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஹிருத்திக் ரோஷனின் 25வது படமான இந்த படத்தில் அவர் விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோடை விடுமுறையில் தொடங்க இருக்கிறார்கள்.