ட்ரெண்ட் ஆகும் நடிகை கீர்த்தி சுரேஷின் கலக்கல் நடனம் !

கீர்த்தி சுரேஷ்….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.

இவர் நடிப்பில் தயாரான பென்குவின்,மிஸ் இந்தியா திரைப்படங்கள் OTT-யில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.

இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே,குட் லக் சகி,மகேஷ் பாபுவின் sarkaaru vaari paata உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ரங் தே, குட் லக் சகி உள்ளிட்ட படங்களின் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. கொரோனாவை அடுத்து இவரது ரங் தே படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்த படம் மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.கீர்த்தி சுரேஷ்.விரைவில் அண்ணாத்த,sarkaaru vaari paata ஷூட்டிங்கில் கீர்த்தி கலந்துகொள்ளுவார் என்று தெரிகிறது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஏதேனும் ஒரு அப்டேட்டை ரசிகர்களுடன் பகிர்ந்து மகிழ்வார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் தனது புதிய நடன வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார், இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

கட்ட மீசை, சிக்ஸ்பேக் உடல் என மிரட்டும் சீயான்60 துருவ் விக்ரம்.. அப்பா எட்டடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாய்கிறாரே!

துருவ் விக்ரம்…

விக்ரம் தனது 60வது படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை யார் இயக்குகிறார்கள், யார் இசையமைப்பாளர் என்கிற விவரத்தை படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்டுள்ளார்.

விக்ரம் நடிக்கும் சியான்60 வது படத்தை பேட்ட, ஜகமே தந்திரம் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள செய்தி அதிகாரப்பூர்வமாக வெளி வந்துள்ளது. இதில் நீண்ட நாட்கள் கழித்து விக்ரம் கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளது போஸ்டரிலேயே தெரிகிறது.

அதே போல் இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தை எழுதி இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். துருவ் விக்ரம் நடித்த முதல் படமே ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தவறியது.

இத்தனைக்கும் அந்த படத்தை பார்த்து பார்த்து ரெடி செய்தவர் விக்ரம் தான். நடிப்புக்கு பாராட்டு கிடைத்தாலும் படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.

இதனால் எப்படியாவது தன்னுடைய மகன் துருவ் விக்ரமுக்கு ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக அவருக்கு வில்லனாக சீயான் 60 படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

மேலும் முந்தைய படங்களில் சாக்லேட் பாய் வேடத்தில் வந்த துருவ் விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் முற்றிலுமாக தன்னுடைய தோற்றத்தை மாற்றி கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் நடித்து வருகிறார்.

அப்பா எட்டடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாய்கிறார் என இப்போது கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. அந்த அளவுக்கு தன்னுடைய தோற்றத்தை கரடுமுரடாக மாற்றியுள்ள துருவ் விக்ரம் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவிக்கு போனாதான் சிவகார்த்திகேயனாக முடியும்.. சன் டிவியிலிருந்து அந்தப் பக்கம் தாவிய சீரியல் நடிகர்!!

முன்னா…

ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பலரும் பின்னர் விஜய் டிவிக்கு வந்த பிறகுதான் அவர்களது மீடியா வாழ்க்கை அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்றது.

அந்த வகையில் பலரைப் பார்த்திருக்கிறோம். சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி அதன் பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது கோலிவுட்டில் சூப்பர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது டிவியில் இருந்து சினிமாவுக்கு வரும் பல நடிகர்களுக்கும் சிவகார்த்திகேயன் தான் ரோல் மாடல். ஆனால் எல்லாருமே சிவகார்த்திகேயன் ஆகிவிட முடியும் என்ற நினைப்பில் வருவதுதான் வேடிக்கையாக உள்ளது.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த முன்னா என்ற நடிகர் தற்போது விஜய் டிவி புதிதாக ஒளிபரப்பும் ராஜபார்வை என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சன் டிவியில் என்னதான் சீரியல்களில் நடித்தாலும் பெரிய அளவு அவர்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைப்பதில்லை.

அதுவே விஜய் டிவியில் நடிக்கும் நடிகர்களுக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகி வருவது கண்கூட தெரிகிறது.

அந்த வகையில் நாமும் அடுத்த சிவகார்த்திகேயன் ஆகிவிடலாம் என்று நினைத்து விஜய் டிவியை நம்பி வந்துள்ளார் முன்னா.

வர்றவங்க போறவங்க எல்லாம் சிவகார்த்திகேயன் ஆகி விடலாம் என்று நினைத்தால் எப்படி என்கிறது சினிமா வட்டாரம்.

கையில் விலங்குடன் க.த்.தியை வைத்து கொ.லை வெ.றி.யுடன் முறைத்து பார்க்கும் தனுஷ்.. வைரலாகும் கர்ணன் போஸ்டர்!!

கர்ணன்..

தனுஷ் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படம் வெளியாக உள்ளது.

முன்னதாக கர்ணன் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக கர்ணன் படத்தின் டீசர் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பே தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் டீசர் சீக்கிரம் வரும் என தெரிவித்திருந்தார். ஆனால் அறிவிப்பு வந்து வாரக்கணக்காகியும் நீண்ட நாட்களாக அறிவிப்பு வராததால் ரசிகர்கள் சோர்வுடன் காணப்பட்டனர்.

இந்நிலையில் மி.ர.ட்டலான போஸ்டருடன் கர்ணன் படத்தின் டீசர் வருகின்ற மார்ச் மாதம் 23 ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கர்ணன் படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை பெருமளவில் எதிர்பார்க்க வைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டீசர் வெளியீட்டு தேதி போஸ்டரிலேயே பல அசுரர்களுக்கு நடுவில் கையில் விலங்குடன் க.த்.தியை வைத்து கொ.லை வெ.றி.யுடன் பார்க்கும் போஸ்டர் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய வசூலை கர்ணன் படம் ஈட்டி கொடுக்கும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

‘பாய்ஸ்’ படத்தை மிஸ் செய்தாரா த்ரிஷா? ஷங்கர் சொன்னது என்ன தெரியுமா?

த்ரிஷா…

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் கிட்டத்தட்ட அனைவருமே புதுமுகங்கள் நடித்து இருந்தனர் என்பதும் குறிப்பாக ஹரிணி கேரக்டரில் நடித்திருந்த ஜெனிலியா இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்திற்காக ஹரிணி கேரக்டருக்கான நடிகையை தேடியபோது த்ரிஷாவின் புகைப்படத்தை ஷங்கரிடம் காட்டியதாகவும்,

ஆனால் அவரை ஷங்கர் ரிஜக்ட் செய்து விட்டதாகவும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

‘பாய்ஸ்’ படத்தின் நாயகியை தேடும் பணியில் இருந்தபோது மிஸ் மெட்ராஸ் நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றிருந்தோம் என்றும், அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற த்ரிஷா,

கிரீடம் சூட்ட வந்து இருந்தார் என்றும் அதனை அடுத்து அவரை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து ஷங்கரிடம் சென்று காட்டிய போது ’இந்த பெண்ணிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது,

வேறு யாரையாவது தேடுங்கள், என்று ஷங்கர் எங்களிடம் கூறியபோது நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவிற்கு திருமணம் முடிந்துவிட்டதா! மாப்பிள்ளை இவரா, புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

பிரியங்கா….

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியலும் ரோஜா தான்.

இந்த சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன் என்பவர் நடிக்க, பிரியங்கா என்பவர் ரோஜா எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முதலில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை பிரியங்கா, ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பிரியங்காவிற்கும், பிரபல தெலுங்கு சீரியல் நடிகர் ராகுல் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் நடந்து முடிந்த அவரது திருமண புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

ஆனால் அது திருமணம் கிடையாதாம், நடிகர் ராகுலுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் மட்டும் தான் நடந்ததாம்.

அதன்பின் சில சொந்த பிரச்சனைகள் காரணமாக, இந்த திருமணம் நிச்சயதாரத்தில் நின்றுவிட்டது என நடிகை பிரியங்காவே தெரிவித்துள்ளராம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 5 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? – வேறு எந்த நிறுவனமும் செய்யாத சாதனை!!

சன் பிக்சர்ஸ்…

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமானது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.

இதன்பின் தயாரிப்பில் இருந்து விலகி, சில ஆண்டுகள் படங்களை விநியோகம் செய்து வந்தது.

ஆனால் மீண்டும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பை துவங்கி வெற்றிகரமாக விளங்கி வருகிறது சன் பிக்சர்ஸ்.

மேலும் தற்போது விஜய்யின் தளபதி 65, ரஜினியின் அண்ணாத்த, தனுஷ் D44, சூர்யாவின் 40வது படம் என நான்கு படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இதுவரை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படங்களின் வசூல் விவரம் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.

எந்திரன் – ரூ. 290 கோடி

சர்கார் – ரூ. 252 கோடி

பேட்ட – ரூ. 220 கோடி

காஞ்சனா 3 – ரூ. 130 கோடி

நம்ம வீட்டு பிள்ளை – ரூ. 74 கோடி

இதன்முலம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட படங்களில், எந்த ஒரு படமும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடையவில்லை.

இதனால் தோல்வி படம் தயாரிக்காத முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது சன் பிக்சர்ஸ்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்.. வைரலாகும் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

கார்த்திக்…

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோரோடு முன்னணி நடிகராக கருதப்பட்டவர் தான் நடிகர் கார்த்திக். இவர் நவரசத்தையும் வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இடம் பெற்றதால் ‘நவரச நாயகன்’ என்ற செல்லப் பெயரையும் பெற்றார்.

இந்நிலையில் மனித உரிமை காக்கும் க.ட்சியின் நிறுவனரும் நடிகருமான எம். கார்த்திக் சனிக்கிழமை மூச்சு திணறலால் சென்னை அடையாறில் உள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அ.திமு.க கூ.ட்டணி க.ட்.சிகளை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொ.ண்ட நிலையில்,

சனிக்கிழமை இரவு அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையிலுள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீ.வி.ர சி.கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு பல்வேறு பரிசோ.தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நடிகர் கார்த்திக்-க்கு கொ.ரோ னா பரிசோ.தனை மேற்கொள்ளப்பட்டு ‘நெகட்டிவ்’ ரிசல்ட் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கார்த்திக் மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து சி.கிச்சை மேற்கொண்டு வருகிறார் .

விரைவில் திருமணம் : விஷ்ணு விஷால் அறிவிப்பு..!

விஷ்ணு விஷால்…

தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், 2009ம் ஆண்டில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடித்துள்ள ‘காடன்’ படம் தமிழ், தெலுங்கில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது தன்னுடைய திருமணத்தைப் பற்றி விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

அவருக்கும் இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுக்கும் சில வருடங்களாகவே காதல் இருந்து வருகிறது. இருவரும் அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

“படப்பிடிப்பிலும் ஒரு படம் முடிவடையும் வரையிலும் ஜுவாலா கட்டா எனக்கு மிகப் பெரும் ஆதரவாக இருக்கிறார். விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். திருமணத் தேதி பற்றி விரைவில் அறிவிக்கிறோம், சீக்கிரமே நான் தெலுங்கு மாப்பிள்ளை ஆகப் போகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஷாலுக்கும் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான இயக்குனரும், நடிகருமான நட்ராஜ் மகள் ரஜினிக்கும் 2010ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2018ல் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு 4 வயதில் ஆர்யன் என்ற மகன் இருக்கிறான்.

விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமணம் அடுத்த மாதம் நடைபெறலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் முன்னணி நாயகி ! யார் அந்த பிரபலங்கள்?

ஸ்ருதி ராஜ்…….

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ருதி ராஜ்.இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் கிடைத்தனர்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரின் மூலம் சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவதரித்தார் ஸ்ருதி.

ஆபீஸ் சீரியலின் வெற்றியை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் நடித்தார்.இந்த சீரியலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து மீண்டும் சன் டிவிக்கு வந்தார் ஸ்ருதி ராஜ்.அபூர்வ ராகங்கள் என்ற தொடரில் நடித்து வந்தார் ஸ்ருதி.இந்த தொடர் 2018-ல் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து 2018 முதல் 2020 வரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு சீரியலில் நடித்து வந்தார்..இந்த சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.விரைவில் ஒரு புதிய தொடருடன் என்ட்ரி கொடுப்பதாக ஸ்ருதி ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த தொடரின் பூஜை நடைபெற்றுள்ளது.இந்த தொடரின் நாயகனாக தெய்வமகள் கிருஷ்ணா நடிக்கவுள்ளார்.

இந்த தொடர் குறித்த பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தொடரின் ஒளிபரப்பு தேதியை சன் டிவி விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)