ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமீரா ரெட்டி.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

சமீரா ரெட்டி……..

ஹிந்தியில் பிரபலமாக இருந்த சமீரா ரெட்டியை 2008ஆம் ஆண்டில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு கூட்டி வந்தார் கௌதம் மேனன். முதல் படமே அதிரி புதிரி வெற்றியைப் பெற்றது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமே தல அஜித்துடன் அசல் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதனைத் தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின் 2013ம் ஆண்டு கன்னட படத்தில் நடித்துவிட்டு பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில், 45 வயதான சமீரா ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் செம கிளாமரான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

ஏனென்றால் சோஷியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டியிடம் ரசிகர் ஒருவர், ‘உங்களுக்கு மிகவும் பிடித்த கவர்ச்சி புகைப்படம் எது?’ என்று கேள்வி கேட்டபோது,

அதற்கு, தன்னுடைய செம கிளாமரான பழைய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, அத்துடன் ‘மீண்டும் இவ்வாறு ஃபிட்டாக வேண்டும் என்ற ஆசை உள்ளது.

எனவே அதற்காக முழு உடற்பயிற்சியை மேற்கொள்ளுவேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சிலர், ’45 வயதில் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஆசை தான்’ என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்……

முடிவுக்கு வந்தது சாய் பல்லவியின் பாடல் சர்ச்சை..!

சாய் பல்லவி…

தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாய் பல்லவியின் பாடல் ஒன்றுக்கு ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. சாய்பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி தெலுங்கு படத்தில் இடம்பெற்ற சாரங்க தரியா பாடல் சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

மங்லி பாடிய இந்த பாடலுக்கு சாய்பல்லவி நடனம் ஆடி நடித்து இருந்தார். இந்த நிலையில் வாரங்கலை சேர்ந்த கிராமிய பாடகி கோமாலி, சாரங்க தரியா பாடல் எனக்கு சொந்தமானது. மேடை நிகழ்ச்சிகளில் இதனை பாடி வந்தேன்.

அந்த பாடலை இயக்குனர் சேகர் கம்முலு படத்தில் பயன்படுத்த என்னிடம் இருந்து வாங்கினார். என்னையே பாடவும் வைத்தார். பின்னர் எனக்கு தெரியாமல் வேறு பாடகியை பாட வைத்து விட்டார். சினிமாவில் கிராமிய பாடகர்களை சுரண்டுகின்றனர்” என்றார். இது சர்ச்சையானது.

இதற்கு பதில் அளித்து சேகர் கம்முலு கூறும்போது, “இந்த பாடலை சிரிஷா என்பவரை தோராயமாக பாட வைத்து படமாக்கினோம். பின்னர் அவர் கர்ப்பமாக இருந்ததால் பாட முடியவில்லை.

அதன்பிறகு மங்லி பாடினார். பாடல் வெளியான பிறகுதான் கோமாலி பற்றி தெரிந்தது. இந்த பாடல் விவகாரத்தில் சிரிஷா, கோமாலி ஆகிய இருவருக்கும் பணம் வழங்கப்படும்” என்றார். இதன் மூலம் சர்ச்சைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை- அவரே வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

பாண்டியன் ஸ்டோர்ஸ்….

பாண்டியன் ஸ்டோர்ஸ் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல். இதில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருமே மக்களிடம் பெரிய வரவேற்பை பெறுகின்றனர்.

ஒரு சின்ன காட்சியில் நடித்தாலும் அந்த நடிகருக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கிறது. அப்படி இந்த சீரியலில் ஐஸ்வர்யா வேடத்தில் நடித்திருந்தவர் வைஷாலி.

நன்றாக தான் நடிப்பார், ஆனால் இவருக்கு பதிலாக தற்போது வேறொரு நடிகையை நடிக்க வைத்துள்ளனர் சீரியல் குழுவினர்.

இதுகுறித்து ரசிகர்கள் வைஷாலி திலகாவிடம் கேள்வி கேட்க, அதற்கு அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏன் நடிக்கவில்லை என பலர் கேட்கிறீர்கள்.

அதற்கு பதில் என்னிடமும் இல்லை, என்னை ஏன் சீரியல் குழுவினர் நடிக்க வைக்கவில்லை என எனக்கே தெரியவில்லை என பதில அளித்துள்ளார்.

பிரபல நடிகையுடன் ஜோடியாக இணைந்த லெஜெண்ட் சரவண அருள் – நயன்தாரா ஒதுக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகையா!!

சரவண அருள்..

பிரபல தொழிலதிபரும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளருமான சரவண அருள், தற்போது கதாநாயகனாக படம் நடித்து வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், விவேக் இவருடன் இணைந்து நடிக்க ஜெடி, ஜெரி இப்படத்தை இயக்கி வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகளின் புகைப்படங்கள் வெளியானது.

இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா என பலருடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

இந்நிலையில் இவர்கள் வேண்டாம் ஒதுக்கிய கதாபாத்திரத்தில், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வஷி என்பவர் நடித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இவர் பாலிவுட்டில் வெளியான பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் 3வது பாடல் வெளியானது – லிரிகள் வீடியோ பாடல்!!

எப்படி இருந்த நாங்க…

இணையத்தை அதிரவைத்த ஸ்ரீதேவி மகளின் போட்டோஷூட்..!

ஜான்வி கபூர்…

இந்தியளவில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் மூத்த நடிகை ஸ்ரீதேவி.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மா.ர.டை.ப்பு காரணமாக ம.ர.ண.ம.டை.ந்தார். இவரின் ம.றைவு இந்திய திரையுலகிற்கு பெரும் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்ப.டுத்தியது.

நடிகை ஸ்ரீ தேவிக்கும், தயாரிப்பாளர் போனி கபூருக்கு பிறந்தவர் தான் இளம் நடிகை ஜான்வி கபூர்.

இந்நிலையில் பாலிவுட்டில் வளர்ந்த வரும் நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர், மிகவும் மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

தற்போது நடிகை ஜான்வி கபூரின் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.

வலிமை படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் படம் தான்.. ஓப்பனாக காரணத்தை சொன்ன கார்த்திகேயா!

கார்த்திகேயா…

தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் தான் வலிமை. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தல அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருப்பதால் இந்தப் படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி என்பவர் நடித்துள்ளார். மேலும் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டியில் கார்த்திகேயா வலிமை படத்தின் வில்லனாக நடிப்பதற்கு விஜய் படம் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக விஜய்யின் படங்கள் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒருகாலத்தில் அடிமட்ட மார்க்கெட்டில் இருந்த விஜய்யின் படங்கள் தற்போது 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் அளவுக்கு மாறியுள்ளன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கொரானா பிரச்சனைகளையும் தாண்டி பெரிய வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதைவிட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா தனக்கு வலிமை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தைரியம் கொடுத்த படங்கள் என்றால் அது மாஸ்டர் விஜய் சேதுபதி கதாபாத்திரமும், நான் ஈ பட சுதீப் கதாபாத்திரமும் தான் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை ஹீரோவுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டதால் இந்த இரண்டு படங்களையும் முன்னோடியாக வைத்துதான் வலிமை படத்தில் நடித்து வருகிறேன் என கார்த்திகேயா சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விரைவில் வலிமை படத்தின் இறுதிகட்ட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் படமாக்க இருப்பதாகவும் அப்டேட் ஒன்றை தல அஜித் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் கார்த்திகேயா. கார்த்திகேயா தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் எனும் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரைசா வில்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து டென்ஷனான ரசிகர்கள்..!

ரைசா வில்சன்…

பிரபல நடிகை ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது நாயகியாக நடித்து வருபவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் படத்தில் பெரிய அளவு பெயரைப் பெற்ற ரைசா வில்சன் அதற்கடுத்த படங்களில் சொல்லிக்கொள்ளும்படி நடிக்கவில்லை.

நடித்த படங்களும் பெரிய அளவில் செல்லவில்லை. தற்போது சினிமாவுக்கு கொஞ்ச காலம் பிரேக் விட்டுவிட்டு தன்னுடைய நண்பர்களுடன் மாலத்தீவு வெளிநாடு ஆகியவற்றை சுற்றிப்பார்க்க பொட்டி எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் ரைசா வில்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ஒருவரின் மடியில் அமர்ந்துகொண்டு இருக்கமாக கட்டிக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஹாட் சிம்பல் போட்டு எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் அந்த புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்க்கும் போதே வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் ரைசா வில்சன் காதலில் விழுந்துள்ளதாக தெரிகிறது.

ரைசா வில்சன் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதில் துளி அளவும் உண்மை இல்லை என்பது இந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.

விஜய் டிவி பிரபலத்திற்கு திருமணம் முடிந்தது – யார் அந்த திருமண ஜோடி தெரியுமா?

யோகேஷ்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்க போவது யார்.

இதில் கலக்கப்போவது யார் சீசன் 7ல் கலந்து கொண்டவர் தான் யோகேஷ்.

இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனை கலக்க போவது யாரு வினோத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமண ஜோடியின் புகைப்படங்களை பார்த்த விஜய் டிவியிலிருந்து பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by vinoth (@vinothkpy)

அஷ்வின்-ஷிவாங்கி இடையே என்ன நடக்கிறது- Liveல் உண்மையை கூறிய பவித்ரா..!

பவித்ரா…

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தான் தொலைக்காட்சி ரசிகர்களின் உயிர் மூச்சாக இருக்கிறது என்றே கூறலாம். சமூக வலைதளம் வந்தாலே அந்நிகழ்ச்சி பற்றி தான் ரசிகர்கள் அதிகம் பேசுகிறார்கள்.

அதிலும் அஷ்வின், ஷிவாங்கி, புகழ் பற்றி தான் அதிக பேச்சே நடக்கிறது.

அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் இருந்து எல்லோருக்கும் மிகவும் பிடித்த பவித்ரா வெளியேறினார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் வந்துள்ளார்.

அதில் ஒரு ரசிகர் அஷ்வின்-ஷிவாங்கி இடையே என்ன தான் நடக்கிறது என்று கேட்டுள்ளார்.

அதற்கு பவித்ரா என்ன கூறினார் கேளுங்க,