கமல் தோளைத் தொட்டு சல்லி தனமான கேள்வி கேட்ட மைக் செட் ஸ்ரீராம்.. கடுப்பாகி ரசிகர்கள்!!

மைக் செட் ஸ்ரீராம்…

சமீபகாலமாக யூடியூப் பிரபலங்களுக்கு தாங்கள் தான் இந்த உலகத்திலேயே பிரபலமானவர்கள் என்ற முற்போக்கு சிந்தனை வந்து விட்டதா என்பது தெரியவில்லை. ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாமல் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என மைக் செட் ஸ்ரீராம் மீது கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

யூடியூபில் சமீபகாலமாக வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதனால் ஒரு சில இளைஞர்கள் தங்களது நட்பு வட்டாரங்களை வைத்துக்கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் சில சேனல்கள் பிரபலமாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் பிளாக் ஷீப், எரும சாணி, மைக் செட், சோதனைகள், பரிதாபங்கள் போன்றவை தமிழில் பிரபலமான யூடியூப் சேனல்களாக வலம் வருகின்றன. இதில் மற்ற சேனல்களை காட்டிலும் மைக் செட் ஸ்ரீராம் வெளியிடும் வீடியோக்களுக்கு அதிக அளவு வரவேற்பும் பார்வையாளர்களும் கிடைத்து வருகின்றன.

இந்தநிலையில் பிளாக் ஷீப் யூடியூப் சேனல் கடந்த சில வருடங்களாக யூடியூபில் பிரபலமானவர்களுக்கு அவார்டு கொடுக்கும் விழாவை நடத்தி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டிற்கான அவார்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் மைக் செட் ஸ்ரீராம் பெரும் சர்ச்சையில் மாட்டியுள்ளார்.

பிளாக் ஷீப் நடத்திய அந்த நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த மைக் செட் ஸ்ரீராம், கமல் தோள்பட்டையை தொட்டு, எவ்வளவோ பிரச்சனைகளை பற்றி பேசுகிறீர்கள், முரட்டு சிங்கிள் பிரச்சனையைப் பற்றி பேசுங்கள் என கேள்வி கேட்டுள்ளார்.

கேள்வி கேட்டதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மரியாதை மிக்க மனிதரை சக நண்பரின் தோளை தொட்டு பேசுவது போல மைக் செட் ஸ்ரீராம் நடந்துகொண்டது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களையும் தாண்டி இந்த செயல் பல சாதாரண மக்களையும் கோபப்படுத்தியுள்ளது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

ஒரு பொது மேடையில் எப்படி ஒருவரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தியதாக பிளாக் ஷீப் குழுவினர் மீதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மைக் செட் ஸ்ரீராம் விளையாட்டாக செய்தது தற்போது அவருக்கு விபரீதமாக முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவின் நடிப்பால் கடுப்பாகி கத்திய நடிகை நயன்தாரா – படப்பிடிப்பில் நடந்த ஷாக்கிங் சம்பவம்!!

நயன்தாரா மற்றும் சமந்தா……..

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக விளங்கி வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா.

இவர்கள் இருவரும் இணைந்து தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதில் சூப்பராக நடித்து அசத்திய சமந்தாவின் காட்சியை பார்த்து, சுற்றி இருந்த கூட்டம் கைதட்டி கரகோஷத்தை எழுப்பியுள்ளனர்.

இதனை பார்த்த நடிகை நயன்தாரா, உடனடியாக கடுப்பாகி சைலென்ஸ என கத்தியுள்ளாராம். தனது காதலன் விக்னேஷ் சிவன் படம் என்றதால் நடிகை நயன்தாரா இப்படி செய்துருக்கிறார் என பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்? 3 குழந்தைகளுடன் நடிகை திவ்யா உன்னியின் தற்போதைய நிலை..!

திவ்யா உன்னி………

சினிமா உலகில் தனக்கென ஒரு பிராண்ட்டை இழந்தால் படவாய்ப்புகள் கிடைக்காமல் அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும் என்பது உண்மை. அதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திருமணம் செய்து விலகினால் அவர்களை கண்டுகொள்ள கூட யாரும் இருக்க மாட்டார்கள் சினிமாவில்.

அப்படியாக, மலையாள திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின், 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர் திவ்யா உன்னி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த திவ்யா உன்னி, டாக்டர் சுதிர் சேகர் என்பவரை கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இதையடுத்து 2016ல் அவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் விவாகரத்தும் பெற்றார்.

இதற்கு பின் ஓராண்டுகளுக்கு பிறகு 2018-ம் ஆண்டு ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், திவ்யா உன்னிக்கு அவரது இரண்டாவது கணவர் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய போட்டோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த திவ்யா உன்னி, சமீபத்தில் தான் மூன்றாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அன்பான கணவர், அழகான 3 குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்கும் திவ்யா உன்னிக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். பரதநாட்டியத்தை முறையாக கற்றுள்ள இவர் அவ்வப்போது மேடை நிகழ்சிகளில் அரங்கேற்றம் செய்து வருகிறார். தவிர, முழு நேர குடும்ப தலைவியாக குடும்பத்தை பார்த்துக்கொண்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Divyaa Unni (@divyaaunni)

 

View this post on Instagram

 

A post shared by Divyaa Unni (@divyaaunni)

விளம்பரத்தில் லட்சத்தில் சம்பளம்! கணவருக்காக தயாரிப்பாளர்களுடன் அசடுவழியும் 39 வயதான் நடிகை?

நடிகை………

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்து சிரிப்பின் ஆச்சர்யம் என்று பேசப்பட்ட நடிகை தான் அவர். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த அம்மணி தற்போது சிறப்பு கதாபாத்திரம், அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரத்தில் தமிழ், தெலுங்கு என நடித்து வருகிறார்.

சமீபத்தில் விளம்பரங்களில் லட்சத்தில் பேசி நடித்து கொடுத்து வருகிறார். அந்தவகையில் அவரின் கணவரும் வில்லன், நண்பர் என கதாபாத்திரம் கிடைத்து நடித்து வருகிறார். ஆனால் ஹீரோவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம்..

சில வருடங்களாக குழந்தை குட்டி என செட்டிலான அந்த நடிகை தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். குணச்சித்திர வேடங்களிலும் முன்னாள் நடிகர்களுக்கு மனைவி வேடத்திலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் மட்டும் அல்லாமல் விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் அந்த நடிகை சமீபகாலமாக சினிமா விழாக்களுக்கு செல்லும் போது அங்கு வரும் தயாரிப்பாளர்களிடம் அசடு வழிந்து தன்னுடைய கணவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்கும் சம்பவம் அதிகமாக அரங்கேறி வருகிறதாம்.

சிவராத்திரி நாளில் ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை !!

ஹரிஜா..

பிரபல யூடியூப் சேனலான எருமை சாணி மூலம் புகழ் பெற்றவர் ஹரிஜா. அச்சேனலில் வரும் முன்னணி நடிகர் விஜய்யுடன் இணைந்து இவர் நடிக்கும் ஒவ்வொரு குறும்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த அடையாளத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “மிஸ்டர் லோக்கல்” திரைப்படம் மற்றும் நடிகர் அதர்வா நடித்த “100”, “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் தன்னுடன் ஒரு சில குறும்படங்களில் நடித்த கல்லூரிகால நண்பர் அமர் என்பவரை ஹரிஜா காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் எருமை சாணி சேனலின் நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை “என்னன்ணு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்” என்ற கேப்ஷனிட்டு வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்தப் புகைப்படம் பதிவிட்ட சில மணிநேரத்தில் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்று இருந்தது.

தற்போது அவர் மகா சிவராத்திரி நாளில் ஒரு ஆண் குழந்தைக்கு தயாகி இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த மகாசிவராத்திரி நாளில் மிகவும் விரும்பப்பட்ட ஒன்றை தெரிவிக்கிறோம்.

எங்கள் வாழ்வின் புது திருப்பம். சிவன் மற்றும் பார்வதியின் சாராம்சம் போல அமர்-ஹரிஜா அன்பின் வடிவம். குட்டி இளவரசருக்கு ஒரு சிறப்பான வணக்கம்” எனப் பதிவிட்டு உள்ளார். ஹரிஜாவின் இந்தப் பதிவை அடுத்து பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஈஷா மையத்தில் சிவராத்திரி திருவிழா: சமந்தாவை கையில் கிள்ளி ஆட வைத்த ஜக்கிதேவ், அதிர்ச்சி வீடியோ!!

சமந்தா…..

கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா தியான மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி தினத்தில் சிவராத்திரி திருவிழா விசேஷமாக கொண்டாடப்படும் என்பது தெரிந்ததே

இந்த விழாவில் பல நடிகர் நடிகைகள் உள்பட திரையுலகத்தினர் பலரும் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலையில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் நடிகைகள் தமன்னா, காஜல்அகர்வால், கங்கனா ரனாவத், அதிதி ராவ் ஹைத்ரி, சமந்தா, ரகுல் ப்ரீத்தி சிங் உள்பட பல நடிகைகள் கலந்து கொண்டனர். இதில் காஜல் அகர்வால் தனது கணவர் கௌதம் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் அதில் ஈஷா யோகா மையத்தின் ஜக்கிதேவ், சமந்தாவை செல்லமாக கிள்ளிய காட்சியை மட்டும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நேற்றிரவு சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள், சங்கீத கச்சேரிகள் நடைபெற்றது என்பதும் சங்கீத கச்சேரியில் பல முன்னணி பாடகர்கள், இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கேரவனில் தேம்பித் தேம்பி அழுத தனுஷ்! தீ போல் பரவும் வீடியோ!

தனுஷ்…..

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் தனுஷ். என்னதான் இவர் பெரிய வீட்டு மருமகனாக இருந்தாலும் அந்த தலை கணத்தை தனது தலையில் ஏற்றாமல் இருப்பதால் தான் தற்போது இவரால் கோலிவுட்டை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலம் அடைய முடிந்தது.

அதே போல் தனுஷின் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்று இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் திரையிடப்பட உள்ளது என்பதும், அந்த படத்திற்காக ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் கேரவனில் தேம்பித் தேம்பி அழுததாக பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அதாவது தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தனுஷ், ஒருகாலத்தில் படாத அவமானமே கிடையாது என்று வீடியோ ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் தன்னை அவமானப் படுத்தாத ஆளே கிடையாது என்று உருக்கமாக பேசியிருக்கிறார் தனுஷ்.

மேலும் ‘காதல் கொண்டேன்’ படத்தின் சூட்டிங் ஆந்திராவில் எடுக்கப்பட்டபோது, அங்குள்ள ஒருவர் இந்த படத்திற்கு யார் ஹீரோ என்று தனுஷிடம் கேட்டாராம். அதற்கு தனுஷ் சுதீப்பை (படத்தின் இரண்டாவது கதாநாயகன்) காட்டி இவர்தான் என்று கூறினாராம். அந்த ரசிகரும் சுதீப்புடன் கை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டாராம்.

பிறகு, அசிஸ்டன்ட் டைரக்டர் தனுஷ் தான் ஹீரோ என்று அந்த ரசிகரிடம் கூற, அங்கிருந்த மொட்டை கூட்டமும் தனுஷை பார்த்து கேலி செய்து சிரித்தார்களாம். அதுமட்டுமில்லாமல், இந்த ஆட்டோக்காரன் ஹீரோ, அந்த ரிக்ஷாகாரன் ஹீரோ என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்.

இதைப்பார்த்த 18 வயசு தனுஷுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல், கேரவனுக்குள் சென்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாராம். இந்த தகவல்களை தற்போது தனுஷ் வீடியோ ஒன்றில் பதிவிட்டு இருப்பதோடு, ஒருவரின் உருவத்தை பார்த்து கேலி செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 8 இயக்குனர்கள்! 52 கோடி சம்பளத்தில் முதலிடத்தை தட்டி தூக்கிய தமிழ் இயக்குனர்!! யார் தெரியுமா?

இயக்குனர்கள்……

ஒரு படம் உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து செயல்பாடுகளையும் மன ஓவியமாக தீட்டி அதனை தத்துரூபமாக படமாகும் பொறுப்புக் கூறியவர் தான் படத்தின் இயக்குனர்.

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர்களின் கடின உழைப்பே படத்திற்கு கிடைக்கும் முழு வெற்றியாகக் கருதப்படும். எனவே தென்னிந்தியாவில் முன்னணி இயக்குனர்கள் யார் யார் மற்றும் அவர்களது சம்பளம் என்பதை அறிந்துகொள்ள சினிமா ரசிகர்கள் எப்பொழுதுமே ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் தென்னிந்தியாவின் டாப் 8 இயக்குனர்களின் சம்பளத்தை பற்றிய விபரம் இதோ!

முதலிடம் இயக்குனர் ஷங்கர்: இவர் தனது சினிமா பயணத்தை, சாதாரண துணை இயக்குனராக எஸ்ஏ சந்திரசேகரிடம் பணியாற்றியதன் மூலம் துவங்கினார். அதன்பின் ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனரானார். அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் சிவாஜி, எந்திரன் என பிளாக்பஸ்டர் படங்களின் மூலம் பட்டையை கிளப்ப தொடங்கிவிட்டார். தற்போது இவர் ஒரு படத்திற்கு 52 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறாராம்.

இரண்டாவது இடம் ஏஆர் முருகதாஸ்: தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின் ரமணா, கஜினி, துப்பாக்கி என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் ஒரு படத்திற்கு 16 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

மூன்றாவது இடம் எஸ்எஸ் இராஜமௌலி: தொடக்கத்தில் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிக் கொண்டிருந்த இராஜமௌலி, அதன்பின் தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய பெருமைக்குரியவர். அதன்பின் தமிழில் நான் ஈ, பாகுபலி சீரிஸ் மூலம் பிரம்மாண்டமான இயக்குனராக உருவெடுத்துள்ளார். தற்போது இவர் ஒரு படத்திற்கு 14 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

நான்காம் இடம் மணிரத்னம்: தமிழ் திரையுலகில் 80களில் மாறுபட்ட தத்ரூபமான இயக்குனராக திகழ்ந்தவர் மணிரத்னம். இவர் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர்புற வாழ் நடுத்தர மக்களின் பின்புலத்தில் தனது படங்களை இயக்குவதன் மூலம் தனித்துவம் பெறுவார். மேலும் இவருடைய படங்களில் இருக்கும் நேர்த்தியான தொழில்நுட்பமும், திரைக்கதையும். சுருக்கமான வசனங்களும் பெயர்பெற்றது, எனவே இவர் ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளம் 5 கோடியாம்.

ஐந்தாவது இடம் கேஎஸ் ரவிக்குமார்: இயக்குனர் விக்ரமனிடம் துணை இயக்குனராக பணியாற்றி, அதன்பின் ‘புரியாத புதிர்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். பெரும்பாலும் இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பார். மேலும் வசூல் ரீதியில் பெரும் வரவேற்ப்பை இவருடைய படங்கள் பெறுவது வழக்கம். எனவே இவர் ஒரு படத்திற்கு சம்பளமாக 5 கோடி வாங்குகிறார்.

ஆறாவது இடம் கேவி ஆனந்த்: திரைப்படம் ஒளிப்பதிவாளராக இருந்து, அதன்பின் ‘கனா கண்டேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் தான் கேவி ஆனந்த். அதன்பின் அயன், கோ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராக பெயர் பெற்றார். குறிப்பாக இவர் ஷங்கர் இயக்கிய ‘முதல்வன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக தனது திறமையை பிரம்மாண்டமாக படைத்திருந்தது அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. எனவே இவர் ஒரு படத்திற்கு சம்பளமாக 5 கோடி வாங்குகிறார்.

ஏழாவது இடம் கொரடலா சிவா: 2013ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘மிர்ச்சி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் கொரடலா சிவா. அதன்பின் ஜனதா கேரேஜ் (janatha garage) என்ற சூப்பர் ஹிட் மலையாள படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். எனவே இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 4 கோடியாம்.

எட்டாவது இடம் இயக்குனர் ஹரி: தமிழ் சினிமாவின் அதிரடி மசாலா படங்களுக்கு பெயர் போனவர் தான் இயக்குனர் ஹரி. கடந்த 2011 வரை கிட்டத்தட்ட 12 படங்களை இயக்கி உள்ளார். குறிப்பாக சிங்கம், சாமி சீரிஸ் இவருடைய பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். இவர் ஒரு படத்திற்கு 4 கோடி சம்பளம் வாங்குவாராம்

எனவே தென்னிந்தியாவின் பிரபல இயக்குனர்கள் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற தகவல்களை அவர்களுடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

47 வயது நடிகரை டார்ச்சர் செய்யும் நடிகை..பிரச்சினையால் புலம்பும் பிரபல நடிகர்!!

நடிகை…….

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பட வாய்ப்புகளுக்கு வேட்டை நடத்தி வருகிறார்.

ஒரு இருபது வருடத்திற்கு முன்பு தமிழ் சினிமா என்றால் அந்த நடிகைதான் குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலம். வடக்கிலிருந்து வந்து தமிழக ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகளில் இவரும் ஒருவர்.

இடுப்புக்கு பெயர் போன அந்த நடிகை மார்க்கெட் இல்லாத சமயத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆகிவிட்டார். தற்போது பழைய நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துக் கொண்டிருப்பதால், நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என அவரும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

உச்ச நட்சத்திரத்துடன் ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் இல்லையாம். இந்நிலையில் ஏற்கனவே சினிமா ரசிகர்களால் ஒதுக்கப்பட்டு தட்டுத்தடுமாறி ரீ-என்ட்ரி கொடுக்க முட்டி மோதிக் கொண்டிருக்கும் 47 வயது நடிகரை தொடர்ந்து டார்ச்சர் செய்து வருகிறாராம் நடிகை.

நானே ரீ-என்ட்ரி கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன், இந்த நேரத்துல நீங்க வேற என்ன படுத்தி எடுக்குறீங்க என வேண்டா வெறுப்பாக அந்த நடிகையை அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டாராம் அந்த நடிகர். நடிகருக்கு ஏற்றவாறு சம்பளத்தை மாற்றி கொள்கிறாராம் நாயகி.

தனக்கு நன்றாகத் தெரிந்த நடிகர்கள் என்றால் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறாராம். இப்போதைக்கு வாய்ப்பு கிடைத்தால் சரி என வலையை வீசியுள்ளார் அந்த நடிகை. வயதானாலும் கும்முனு இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் வயதான தோற்றம் இந்த நடிகை மூஞ்சியில் அப்பட்டமாக தெரிவதால் தயாரிப்பாளர்களும் சமீபகாலமாக சீண்டுவதில்லையாம்.

சமீபத்தில் கூட முன்னணி நடிகர் ஒருவரின் இசை வெளியீட்டு விழாவில் அந்த நாயகி குத்தாட்டம் போட்டார். ஆனால் அந்த நடிகரோ, ஆட்டம் போடுவதோடு சரி, அப்பாயின்ட்மென்ட் கேட்டு வீட்டுபக்கமெல்லாம் வரக்கூடாது என ஸ்ட்ரிக்டாக சொல்லி அனுப்பிவிட்டாராம்.

ஃபர்ஸ்ட் மகன்: செகண்ட் அப்பா: முதல் முறையாக விஜய்க்கு வில்லனான பேட்ட நடிகர்! யார் அந்த பிரபலங்கள்?

தளபதி65……….

விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்தில் அவருக்கு வில்லனாக பேட்ட நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, விஜய், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி65 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு, அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு, தளபதி65 படத்திற்கு பூஜா ஹெக்டே 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும், இந்தப் பட த்திற்கு பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3.5 கோடி வரையில் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கு முன்னதாக விஜய்யின் நண்பன் படத்திற்கு கேமராமேனாக பணியாற்றியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் வெளிநாட்டில், அதுவும் ரஷ்யா, ஜார்ஜியா ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஏப்ரல் மாத த்தில் தொடங்கப்படும் இந்தப் படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி65 படத்தில், அவருக்கு வில்லனாக நடிக்க நடிகர்கள் அருண் விஜய், சியான் விக்ரம், வித்யுத் ஜம்வால், நவாசுதீன் சித்திக் ஆகியோரது பெயர் அடிப்பட்டது. இந்த நிலையில், விஜய்க்கு வில்லனாக நடிக்கும் அந்த மாஸ் நடிகர் குறித்து முக்கியமான உறுதி செய்யப்பட்ட தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் முறையாக நவாசுதீன் சித்திக், தளபதி65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் நவாசுதீன் சித்திக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ள நிலையில், பேட்ட படத்தின்படி, அவரது அப்பா நவாசுதீன் சித்திக் தளபதி65 பட த்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.