90’s களின் மனதில் இடம் பிடித்த பெப்சி உமா நிராகரித்த பிரபல ஹீரோக்களின் படங்கள்…. காரணம் என்ன தெரியுமா ?

பெப்சி உமா……

ஒரு காலத்தில் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மை டியர் பூதம் மற்றும் பெப்சி உமா. இப்போது கூட இந்த இரண்டு நிகழ்ச்சிகளை டிவியில் ஒளிபரப்பினால் உடனே போய் உட்கார்ந்து கொள்ளும் அளவிற்கு பல ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளது இந்த இரண்டு நிகழ்ச்சிகளும்.

அன்றைய காலத்தில் பெப்சி உமா நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதற்கு காரணம் கொஞ்சி கொஞ்சி பேசும் உமாவின் பேச்சு தான். கிட்டத்தட்ட உமாவிற்கு ஆகவே 18 வருடங்கள் பிரபலமாக ஒளிபரப்பானது.

பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான பெப்சி உமா நிகழ்ச்சியை பற்றி தற்போது பேசினால் கூட அனைவருக்கும் ஞாபகம் வந்து விடும் அந்த அளவிற்கு ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

பிரபலமாக இருந்த காலத்தில் பெப்ஸி உமாவிற்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் அனைத்து வாய்ப்புகளையும் தவிர்த்துள்ளார். ஷாருக்கானுடன் ஒரு படத்தில் நடிக்கவும் கூப்பிட்டு உள்ளனர் அதையும் நிராகரித்துள்ளார்.

மேலும் சச்சின்வுடன் பெப்சி விளம்பரத்தில் நடிக்கவும் கூப்பிட்டு உள்ளனர். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த வாய்ப்பையும் தவிர்த்துள்ளார். இவ்வளவு ஏன் சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் கூட நடிப்பதற்கு அன்றைய காலத்தில் அழைப்பு வந்துள்ளது அதையும் கூட இவர் மறுத்துள்ளார்.

இந்த மாதிரி பெப்ஸி உமாவிற்கு ஏராளமான சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இத்தனை வாய்ப்புகள் தவிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2022-ல் விஜய் பிளான் இதுதான்.. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பழைய ஐடியாவை கையிலெடுக்கும் தளபதி..!

தளபதி விஜய்…

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் படமும் குறித்த நேரத்தில் வெளியாகாமல் கொஞ்சம் தடுமாறித்தான் வெளியானது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் அடுத்த முறை அப்படி நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே மாஸ்டர் பிளான் போட்டு வைத்துள்ளாராம் விஜய். அந்தவகையில் 2022ஆம் ஆண்டு விஜய் கேரியரில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட உள்ளதாம்.

விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளனர். தற்போது ரஷ்யாவில் லொகேஷன் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார் நெல்சன்.

அதனைத் தொடர்ந்து தளபதி 66 படத்திற்காக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் விஜய். அதுவும் கைகூடி வந்தால் தளபதி 65 படம் முடிந்த உடனேயே அந்தப் படத்தையும் தொடங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்திற்கும் இப்போதே பேச்சுவார்த்தை விஜய் தொடங்கி விட்டதாக தெரிகிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது 2022 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் குறைந்தது மூன்று படங்களாவது வெளிவந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி65 படம் 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தொடர்ந்து தளபதி 66 சம்மர் ரிலீசை குறி வைத்துள்ளது. மேலும் தளபதி 67 திரைப்படம் 2022 தீபாவளி வெளியீடாக அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

அந்தவகையில் பல வருடங்களுக்கு பிறகு விஜய் நடிப்பில் 3 படங்கள் ஒரே வருடத்தில் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய இடைவேளை விழுந்து விட்டதால் அடுத்தடுத்த படங்களை விரைவில் முடித்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் தளபதி விஜய்.

மேலும் ஒரே வருடத்தில் மூன்று படங்கள் வெளியானால் தற்போது இருக்கும் விஜய்யின் மார்க்கெட்டுக்கு குறைந்தது 600 கோடிக்கு மேல் வசூல் வரும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தளபதி 65 படத்தில் விஜய்யின் அனல் பறக்கும் கதாபாத்திரம்.. எதிர்பார்ப்பை கூட்டிய லேட்டஸ்ட் அப்டேட்!!

தளபதி 65…

தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் பூஜித்து வருகின்றனர். அதேபோல் தளபதி விஜய்யும் தனது ரசிகர்களின் எ.தி.ர்பா.ர்ப்பை பூர்த்தி செய்ய தவறியதே இல்லை.

அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் விஜய் பிரியர்களுக்கு பெரும் தீனியாக அமைந்தது என்றே கூறலாம். அதுமட்டுமில்லாமல் பல மாதங்களாக தொலைந்து போயிருந்த தியேட்டர்களுக்கு மாஸ்டர் திரைப்படம் தான் புத்துயிர் அளித்தது. இந்தப் படம் வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் பல திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு தான் வருகிறது.

அதேபோல் தளபதி அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், புதியதாக படமொன்றில் நடிக்க உள்ளார் என்பதும், இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் ‘தளபதி 65’ படத்தை பற்றிய பல செய்திகள் இணையத்தில் வெளியாகி, தளபதி ரசிகர்களை குஷி ஆக்கியுள்ளது.

அதாவது தளபதி 65 படம் மாஸ்டர் படத்தைப் போலவே வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீசாக உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் தளபதி இ.ன்.டர்நேஷனல் ஸ்.பை ஏஜென்ட் ரோலில் நடிக்க உள்ளாராம்.

இத வைத்து பார்க்கும் பொது கிட்டத்தட்ட து.ப்.பா.க்.கி படத்தின் கதை போல் தெரிகிறதே என்று மற்ற ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் வருகின்ற மே மாதம் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வெளியான ‘தளபதி 65’ படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எ.தி.ர்பா.ர்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்த அப்டேட்கள் தளபதி வெ.றி.யர்களை மேலும் வெ.றி.யூ.ட்டி உள்ளது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் தேதி வெளியானது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

டாக்டர்…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.

இப்படத்திலிருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் தமிழக தேர்தல் காரணமாக டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் மார்ச் 26 இல்லை, என தயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து வெளியானது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் மே மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் மகிழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி – கேக் வெட்டி கொண்டாடியதற்கு காரணம் என்ன?

திவ்யதர்ஷினி…

கடந்த 20 வருடங்கள் தொகுப்பாளினியாக பணிபுரிந்து நம்மை மகிழ வைத்து வருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி.

இவர் தற்போது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், படங்களில் நடிப்பதையும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்ற தொகுப்பாளினி டிடி, பல வீடியோ மற்றும் புகைப்படங்கள் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் மகிழ்ச்சியில், தான் 2 மில்லியன் பின்தொடர்புவர்களை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேக் வெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

“ஒரே ஒரு போட்டோ – ஒட்டுமொத்த இன்ஸ்டா-வும் க்ளோஸ்..” – தங்கசிலை தோற்று போகும் அழகு – தமன்னா வெளியிட்ட புகைப்படம்..!

தமன்னா…

தமிழில் ஆனந்த தாண்டவம் படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதைத்தொடர்ந்து கல்லூரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தொடக்கத்தில் குடும்ப பாங்கான உடையுடன் நடித்த அவர் தற்போது க.வ.ர்.ச்சி உடைகளுக்கு மாறியுள்ளார்.

தெலுங்கு படங்களில் அரை குறை ஆடையில் ஆ.பா.ச.மாக நடிக்கிறார். தமிழ் படங்களில் க.வ.ர்.ச்.சிக்கு எல்லை வைத்து இருந்தார். தெலுங்கில் அதை மீறி உள்ளார். இந்தியில் தற்போது இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அங்கும் இயக்குனர்கள் அரைகுறையில் உரித்தே காட்டுகிறார்களாம். தமன்னா க.வ.ர்.ச்சி.யாக நடிப்பதற்கு விமர்சனங்களும் கி.ள.ம்.பியுள்ளன.

கடந்த சில வருடங்களாக படங்களில் குடும்ப பாங்காக வந்த அவர் தற்போது படவாய்ப்புகளை பிடிப்பதற்காக உடம்பை காட்டுகிறார் என்று சக நடிகைகள் எ.ரி.ச்.சல் படுகிறார்கள்.

இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது என் உடல்வாகுக்கு க.வ.ர்ச்சி உடைகள் பொருத்தமாக இருக்கின்றன. வயிறு, தொடை பகுதிகளை அழகு படுத்தி காட்டுகின்றன. எனவே க.வ.ர்.ச்சி ஆடைகளை அணிகிறேன் என்றார்.

விஜய், அஜித்,சூர்யா, தனுஷ்,விஜய் சேதுபதி, பிரபாஸ், ஆர்யா என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னா இப்போது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடிக்க ஆரம்பித்திருக்க காமெடி கலந்த ஹாரர் திரைப்படமான பெட்ரமாக்ஸ் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது.

மாடர்ன் உடையில் சூப்பர் கியூட் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்…

‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் அப்டேட்..!

அரண்மனை 3…

அரண்மனை பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில்,

தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ‘அரண்மனை 3’ படத்தை வருகிற மே மாதம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரீ-ரிலீசாகும் சிம்புவின் பிளாக்பஸ்டர் ஹிட் படம்.. எது என்று தெரியுமா?

ரீ-ரிலீசாகும் சிம்புவின் படம்…

கொரோனா லாக்டவுனுக்கு பின் மக்கள் திரையரங்குகளுக்கு வர தயக்கம் காட்டினர். அதேபோல் மாஸ்டரை தவிர, லாக்டவுனுக்கு பின் வெளியான எந்த படங்களும் சரிவர ஓடாததால் திரையரங்குகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இதனால், மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைக்கும் நோக்கில் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்கள் மீண்டும் வெளியாகி வரவேற்பை பெற்றன. அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பில்லா படமும் இன்று ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், சிம்பு, ஜோதிகா நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘மன்மதன்’ திரைப்படம், டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் ரிலீசாக உள்ளதாம்.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய சிம்பு தான், இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் அடுத்த வாரம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் விஜய்சேதுபதியின் ரீல் மகள்..!

மகேஷ் பாபு…

தெலுங்கில் காதலர் தினத்தன்று வெளியான படம் உப்பென்னா. இப்படத்தை அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்தார்.

விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்திருந்த இப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். அவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்ததோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்த நடிகை கீர்த்தி ஷெட்டி, அடுத்ததாக மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளராம்.

உப்பென்னா படத்தில் கீர்த்தி ஷெட்டியின் நடிப்பை பார்த்து வியந்த மகேஷ் பாபு, அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் அனில் ரவிபுடி இயக்க உள்ளாராம்.