அகில இந்திய சாதனை பட்டியலில் இடம்பெற்ற ‘குக் வித் கோமாளி’ பவித்ரா! எப்படி தெரியுமா ?

பவித்ரா…..

அகில இந்திய அளவில் வரையப்பட்ட மிகப் பெரிய சுவர் ஓவியங்களில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குகொண்ட பவித்ராவின் ஓவியமும் இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ஸ்டார் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை இணைந்து எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த சுவர் ஓவியத்தை வரையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்

அந்த வகையில் சென்னை லட்சுமி நகர் என்ற பகுதியில் வரையப்பட்ட ஓவியங்களில் பல்வேறு பிரபலங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இடம் பெற்றிருக்கும் ஒரு புகைப்படம் தான் ’குக் வித் கோமாளி பவித்ரா

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பவித்ரா இது குறித்து தான் பெருமைப்படுவதாகவும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய அளவில் மிகப் பெரிய சுவர் ஓவியமாக கருதப்படும் இந்த சாதனை பட்டியலில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒருவரின் படமும் இருந்தது பெருமைக்குரியது என்றும் கூறப்பட்டு வருகிறது.

50 ஆண்டுகளுக்கு முன் இயேசுவாக நடிகர் கமல்ஹாசன்.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகர் கமல்….

தமிழ் சினிமா உள்ளிட்ட 60 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் பெரும் லிஜெண்ட்டரி நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். ஆரம்பகாலத்தில் இவரை பற்றி புகழ்ந்தாலும் சில கிசுகிசு வதந்திகளில் சிக்கியும் வந்தார்.

சில படங்களில் இவர் நடித்திருப்பது பலருக்கும் தெரியாமலே இருந்து பின் கண்டுபிடிக்கப்பட்டது. வெற்றி தோல்வி படங்களில் நடித்திருந்தாலும் அவரின் நடிப்பு பற்றி பலர் பேசப்பட்டு பாராட்டையும் பெற்றவர்.

அந்தவகையில், 1971 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், சிவகுமார் மற்றும் ஜெயலலிதா போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த அன்னை வேளாங்கண்ணி எனும் படத்தில் கமல் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் கமல்ஹாசன் ஜீசஸ் வேடத்தில் நடித்திருப்பார், இது பலருக்கும் தெரியாத ஒரு கதாபாத்திரம் தான். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் சிறுவயதில் நடித்த பிறகு பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறாராம்.

நடிகை ஷகிலாவின் மகளா இது? குக்கூவித் கோமாளி அஷ்வினுடன் வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!!

ஷகிலா மகள்….

மலையாள சினிமாவின் க்ளாமர் குயின் என்று அழைக்கப்பட்டவர் நடிகை ஷகிலா. குடும்ப கஷ்டத்தின் சூழ்நிலையால் தவறான படங்களில் நடிக்க வைத்தது என்று அவரே பல பேட்டிகளில் கூறியிருந்தார்.

தற்போது 40 வயதை தாண்டிய ஷகிலா உடலை குறைத்து தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக்கூ வித் கோமாளியில் பங்கு பெற்று அசத்தி வருகிறார்.

இந்த வயது வரை ஷகிலா திருமணமாகமல் தனிமரமாக வாழ்க்கை போராட்டத்தை கடந்து வந்தார். தனக்கு திருமணமாகவில்லை என்பதற்காக திருநங்கை பெண் ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஷகிலா.

இந்நிலையில் ஷகிலா மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் குக்கூ வித் கோமாளி அஷ்வின்னுடன் எடுத்த புகைப்படம் தான்.

சில மனிதர்களை பார்த்தாலே ப யமாக இருக்கிறது! நிகழ்ச்சியில் நொந்துபேசிய ராட்சசன் பட நடிகர்!

விஷ்ணு…..

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் பலர் தற்போது இருந்து வரும் சூழலில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ வேண்டும் என்று உழைத்து வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

காமெடி கலந்த படங்களாக நடித்து இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு எடுபடாத படங்களால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க ஆரம்பித்தார். இதையடுத்து இயக்குநர் மிஸ்கினின் ராட்சசன் படத்தில் நடித்து நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றார்.

இதையடுத்து நடிகர் சூரியிடன் நில மோ ச டியில் சி க்கி கோர்ட் வரை சென்று வருகிறார். இந்நிலையில், கும்கி படத்தின் இரண்டாம் பாகமா ’காடன்’ என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வந்தநிலையில் அப்படத்தி இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசிய விஷ்ணு, படத்தில் யானையுடன் இணைந்து முதன் முதலில் நடிக்கும்போடு பயன் இருந்தது. கடைசி மூன்று ஆண்டுகளாக என் வாழ்க்கையில் நடக்கின்றதைப் பார்க்கின்ற போது, சில மனிதர்களைப் பார்த்துத்தான் ப ய ப்பட வேண்டுமெனப் புரிந்துகொண்டேன்.

யானைகள் பாசமாக உள்ளது. ஆனால் மனிதர்கள் அவ்விதம் இல்லை . இதை என் அனுபவத்தில் கூறுகிறேன் எனக் கூறியுள்ளார்.

288 படம் நடித்துள்ள சிவாஜி கணேசன்.. ஆனால் அதிக சம்பளம் வாங்கியது ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் தான்! என்ன படம் தெரியுமா?

சிவாஜி கணேசன்……

தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரன், நடிப்பு நாயகன் என பலரும் தற்போது பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நடிப்பு என்றால் என்ன என்பதை தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் அனைவருக்கும் எடுத்துக் காட்டியவர் தான் சிவாஜி கணேசன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உள்வாங்கிக்கொண்டு அதாகவே மாறும் அசாத்திய திறமை கொண்டவர். ஒவ்வொரு படத்திற்கும் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து அதை மக்கள் மனதில் எளிதாக பதிய வைப்பதில் கில்லாடி நம்ம சிவாஜி ஐயா.

இப்படிப்பட்ட சிவாஜி கணேசன் தன்னுடைய வாழ்நாளில் இதுவரை 288 படங்கள் நடித்துள்ளார். ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் பல்வேறு பரிமாணங்களில் நடித்துள்ள சிவாஜி கணேசன் தன்னுடைய வாழ்நாளில் அதிக சம்பளம் வாங்கியது ரஜினி படத்தில் தானாம்.

கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவான படையப்பா படத்தில் ரஜினிக்கு தந்தையாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவாஜி கணேசன். அந்தப் படத்தில் தான் சிவாஜி கணேசன் அதிக சம்பளம் வாங்கினாராம். அதற்கு முன்னர் 200 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் சிவாஜி கணேசனுக்கு அந்த அளவுக்கு சம்பளம் அதுவரை யாருமே கொடுத்தது இல்லையாம். இதை நெகிழ்ச்சி பொங்க தன்னுடைய வட்டாரங்களில் கண் கலங்கியபடி பேசினாராம் சிவாஜி கணேசன்.

படையப்பா படத்திற்கு பிறகு பேசாமல் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்திருக்கலாம் போல என யோசித்தாராம் சிவாஜி. ஹீரோவை விட குணச்சித்திர வேடங்களை தான் ரசிகர்கள் அதிகமாக ரசிக்கிறார்கள் போல என தன்னுடைய கடைசி காலகட்டத்தில் அதைப்பற்றி யோசித்துக் கொண்டே இருந்தாராம் சிவாஜி.

ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்தவர்.. இப்போது செல்வராகவன் பட ஹீரோ..!!

எஸ் ஜே சூர்யா……..

தமிழ் சினிமாவில் சாதித்த பல நடிகர்களும் தங்களுடைய ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் கஷ்டப்பட்டு தான் உயர்ந்துள்ளனர். ஈசியாக சினிமாவில் நுழைந்து சாதித்தவர்கள் குறைவுதான். அப்படி ஒரு நடிகரைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.

தமிழ் சினிமாவில் காட்சிக்கு காட்சி சுவாரசியத்தை கூட்டி படம் பார்ப்பவர்களுக்கு கிளைமேக்ஸ் எப்படி இருக்கப்போகிறது என்பதை காட்டாமல் சஸ்பென்சாக கொண்டு செல்வார்கள். ஆனால் மாஸ் படங்களுக்கு க்ளைமாக்ஸ் என்ன என்பது அனைவருக்குமே தெரியும். எப்படியும் ஒரு ஹீரோ கடைசியில் வில்லனை கொன்று விடுவார்.

காலம் காலமாக அது தான் மாஸ் படங்களில் கிளைமாக்ஸ் காட்சிக்காக இருந்து வருகிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்தவர் தான் எஸ் ஜே சூர்யா. அஜித்துக்கு வாலி என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்த எஸ் ஜே சூர்யா, விஜய்யுடன் குஷி என்ற படத்தில் கூட்டு சேர்ந்தார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வித்தியாசமான முறை ஒன்றை கையாண்டிருந்தார்.

படத்தின் ஆரம்பத்திலேயே படத்தின் கிளைமாக்ஸில் தான் எனவும், இவர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை பார்ப்போம் என ஓப்பனாக சொல்லிவிட்டுத்தான் படத்தையே தொடங்குவார். குஷி படம் மாபெரும் வெற்றி பெற்று மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஹீரோவாக மாறி தன்னுடைய மார்க்கெட்டை இழந்தாலும் மீண்டும் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்து தற்போது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் எஸ் ஜே சூர்யா. சமீபத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் எந்த ஒரு குறையும் வைக்காமல் சென்று கொண்டிருக்கிறது.

இப்படி சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்த எஸ் ஜே சூர்யா தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தாராம். பத்தாவது படிக்கும்போதே சினிமாவுக்காக வீட்டை விட்டு ஓடிவந்து மிகவும் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளதாக சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டார். எஸ் ஜே சூர்யா நடித்த கதாபாத்திரங்களில் உங்களைக் கவர்ந்தது எது? என்பதை கமெண்டுகளில் பதிவு செய்யலாம்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு பிறகு சொந்தமாக விமானம் வாங்கிய பிரபல தயாரிப்பாளர்.. யார் தெரியுமா?

தயாரிப்பாளர்……

தமிழ் சினிமாவில் சில குறிப்பிடப்படும் தயாரிப்பாளர்களே தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வசதியான தயாரிப்பாளர்களாக இருக்கின்றனர். சில தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்தாலும் தன்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக கடன் வாங்கியாவது பந்தா காட்டுவார்கள்.

ஆனால் உண்மையில் தற்போதைக்கு மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என தமிழ் சினிமாவில் தற்போதைக்கு சென்சேஷனல் நடிகர்களாக இருக்கும் அனைவரது படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகின்றனர்.

மேலும் தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களில் சொந்தமாக விமானம் வைத்துள்ள தயாரிப்பாளரும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தான். இவரிடம் இல்லை என்றால் தான் ஆச்சரியம். அந்த அளவுக்கு வியாபாரத்தில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

தற்போது அவரை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களில் சொந்தமாக விமானம் வாங்கியுள்ளவர் ஐசரி கணேஷ். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உரிமையாளர் ஐசரி கணேஷ் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

சில படங்கள் சொதப்பினாலும் பெரும்பாலான படங்கள் அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு வெற்றியையே கொடுத்துள்ளது. இவருக்கு படங்கள் தயாரிப்பது இரண்டாம் பட்சம்தான். மெயின் தொழில் வேல்ஸ் யூனிவர்சிட்டி என்ற கல்லூரி வருமானம்தான்.

தற்போது சினிமாவில் கவனிக்கப்படும் தயாரிப்பாளராக வலம் வருவதால் தனது இமேஜை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சொந்தமாக ஒரு விமானம் வாங்கி விட்டாராம். வாங்கிய விமானத்தை சும்மா நிறுத்தி வைத்திருக்க கூடாது என்பதற்காக துபாய், மாலத்தீவு என ஜாலியாக ரவுண்ட் அடித்து வருகிறாராம்.

இளம் வீரர்களுடன் கபடி விளையாடி அசத்திய நடிகை ரோஜா, இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ..!

நடிகை ரோஜா…

தமிழ் சினிமாவில் 90 களில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர் தான் நடிகை ரோஜா, செம்பருத்தி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார்.

மேலும் தமிழை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். பின் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இதனிடையே திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை தவிர்த்து வரும் ரோஜா, ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நகரி தொகுதியில் கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்ற ரோஜா, அங்கிருந்த இளைஞசர்களுடன் மைதானத்தில் இறங்கி விளையாடியுள்ளார் ரோஜா.

 

View this post on Instagram

 

A post shared by andradam (@andradam4u)

டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு, வெளியான அறிக்கையால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டாக்டர்…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் டாக்டர்.

இப்படத்தின் டீஸர் கூட வெளியாகாத நிலையில், வெளியாகியிருந்த மூன்று பாடல்கள் பெரியளவில் ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் இந்த மாதம் 26 ஆம் தேதி வெளியாகவிருந்த டாக்டர் திரைப்படம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என அறிக்கையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், தமிழகத்தில் நடக்கவுள்ள தே.ர்.தல் காரணத்தினால் இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாகவும்,

படக்குழுவினர்களுடன் கலந்துரையாடி வெளியீடு குறித்த தேதி பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெறித்தனமாக குத்தாட்டம் போடும் கர்ணன் பட இயக்குனர்.. சாண்டி மாஸ்டரை அசரவைத்த வைரல் வீடியோ!!

கர்ணன் பட இயக்குனர்..

தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் ஆரம்பத்தில் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிடம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து உள்ளாராம். பிறகுதான் பரியேறும் பெருமாள் படத்தை புதிய கதைக்களத்தில், எதார்த்தத்தை எடுத்துக்கூறும் வகையில் இயக்கி, தமிழ் சினிமாவை வியக்க வைத்தார் மாரிசெல்வராஜ்.

அதேபோல் இந்தப் படத்திற்காக பல விருதுகளை மாரிசெல்வராஜ் பெற்றுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் ‘கர்ணன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏகபோகமாக உள்ளது.

இந்தநிலையில் மாரி செல்வராஜ் பயங்கரமாக குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் பலரை வாயடைக்க வைத்துள்ளது.

அதாவது மாரி செல்வராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாராம். அப்போதுதான் மாரி செல்வராஜ் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், ‘இன்னும் என்னென்ன வித்தையெல்லாம் கையில வச்சிருக்கீங்க’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து மாரிசெல்வராஜ், சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.