கம்பீரமாக காக்கி உடையில் புல்லட் மீது ஜம்முனு இருக்கும் துல்கர் சல்மான்.. வைரலாகும் சல்யூட் பட பர்ஸ்ட் லுக்!!

துல்கர் சல்மான்…

சில நடிகர்கள் தங்களது மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் பிரபலமான நடிகர்களாக வலம் வருவார்கள். அந்த வகையில் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதேபோல் மற்ற மொழிகளில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகர்களாக வலம் வருவார்கள். அந்த வகையில் தெலுங்கு நடிகர்களைவிட மலையாள நடிகர்களுக்கு தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல புரிதல் உண்டு.

அப்படி தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்த மலையாள நடிகர்களும் இருக்கின்றனர். அதில் முக்கியமானவர் துல்கர் சல்மான். இந்த ஊரடங்கு சமயத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகம் பார்த்த மற்ற மொழி நடிகரின் படம் என்றால் அது துல்கர் சல்மானின் படங்கள் தான்.

துல்கர் சல்மானின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு காவியம் போல் அமைந்து வருகிறது. ஏன் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் கூட வசூலில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்தது தானே.

அந்தவகையில் அடுத்ததாக துல்கர் சல்மான் சல்யூட் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் சல்யூட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துல்கர் சல்மான் அந்த போஸ்டரில் கம்பீரமான போலீஸ் கெட்டப்பில் புல்லட் மீது அமர்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்த படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் என்பவர் இயக்க உள்ளார்.

பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட அனுஷ்கா.. எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் என புலம்பல்..!

அனுஷ்கா….

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா சமீபகாலமாக விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டதாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. சமீபகாலமாக வரும் சோ.த.னை.களால் போதுமடா சாமி என கும்பிடு போடுகிறாராம்.

ஆறடி உயரத்தில் அழகான ஒரு பெண் அரைகுறை ஆடையில் சினிமாவில் வந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அப்படி வந்த உடனேயே ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்தவர் தான் அனுஷ்கா. இவரைப் பார்த்து ஜொள்ளு விடாத ஹீரோக்களே கிடையாது.

அனுஷ்காவை ஒரு படத்திலாவது ஜோடி போட்டு விட வேண்டும் என பல முன்னணி நடிகர்கள் ஏங்கியுள்ளனர். அதற்கு தகுந்தார்போல் தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகளை வாரி வாரிக் கொடுத்து வந்தனர். தமிழிலும் அதே கதைதான்.

ஆனால் ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்றிவிட்டு பின்னர் குறைக்க முடியாமல் தடுமாறிய அனுஷ்காவுக்கு சமீப காலமாக எதிர்பார்த்த அளவு படவாய்ப்புகள் வரவில்லை. முன்னணி நடிகர்களும் சுத்தமாக அனுஷ்காவை ஒதுக்கி விட்டார்களாம்.

 

இதன் காரணமாக சினிமாவை விட்டுவிட்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம் என மாப்பிள்ளை தேடியதும் கைகூடவில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் அனுஷ்காவுக்கு தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

ஆனால் அதில் ஒரு சிக்கல். ஆரம்பத்திலிருந்தே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட பிரபல நடிகையாக வலம் வந்த அனுஷ்காவுக்கு தற்போது புதுமுக நடிகர்களின் படங்களிலேயே வாய்ப்பு கிடைத்து வருகிறதாம்.

ஒரு காலத்தில் எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என தன்னுடைய வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம். படமே இல்லை என்றாலும் பரவாயில்லை புதுமுக நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கறார் காட்டுகிறாராம் அனுஷ்கா.

என்னிடம் பி.ச்.சை கேட்கிறாய்! திருமணத்தை நிறுத்திவிடுகிறேன்… நடிகர் ஆர்யா தன்னை மோ.ச.டி செய்த ஆதாரத்தை வெளியிட்ட ஈழப்பெண்..!

ஆர்யா…

ஆர்யா தன்னை காதலித்து ஏ.மா.ற்.றி ப.ண.மோ.ச.டி செ.ய்.தார் என இலங்கை தமிழ்ப்பெ.ண் ப.ர.ப.ரப்பை கி.ள.ப்பிய நிலையில் அந்த பு.கா.ரை வா.பஸ் வாங்கும்படி வி.டு.க்.க.ப்ப.ட்ட மி.ர.ட்.டல் குறித்த ஆ.தா.ரம் வெளியாகியுள்ளது.

இ லங்கையை சேர்ந்த தமிழ் பெ.ண் விட்ஜா. ஜேர்மனி கு.டி.யு.ரிமை பெற்ற இவர் அந்த நா.ட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார்.

இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செ.ய்.து கொ.ள்.வ.தா.க கூறி ரூ. 70,40,000 பெற்றதாக தெரிகிறது. பின்னர், தி ரும.ணம் செ.ய்.து கொ.ள்.ள ம.று.த்.ததோடு, ப.ண.த்.தையும் திருப்பி கொ.டு.க்.கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தான் ஏ.மா.ற்.ற.ப்.ப.ட்டதாக ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் கு.டி.ய.ர.சுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன் லைன் வழியாக பு.கா.ர் அ.ளி.த்துள்ளார்.

இந்த பு.கா.ர் தொடர்பாக தீ.வி.ர வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது.

இந்த நி.லையில் தன் மீது கொ.டு.க்.க.ப்ப.ட்ட பு.கா.ரை திரும்ப பெற வேண்டும் என ஆர்யா மி.ர.ட்.டி.ய.தாக ஒரு சாட்டிங்கை பா.தி.க்.கப்.பட்ட பெ.ண் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக எங்க வீட்டு மாப்பிள்ளை ஷோவில் பங்கேற்ற சமயத்தில் ஆர்யாவிடம் செ.ய்.த சாட்டிங் ஹிஷ்டரிகளையும் ஈழப்பெ.ண் வெ.ளி.யி.ட்டுள்ளார்.

அதில் பிரபல ஹீரோ நீ, என்னிடம் பிச்சை கேட்கிறாய், உங்கள் ஊழியர்கள் பி.ச்.சை.க்காரன் என நினைக்கிறார்களோ இ.ல்.லையோ, நான் நினைக்கிறேன் என அந்த பெ.ண் கேள்வி எழுப்ப தனக்கு நிறைய க.ட.ன்கள் இருப்பதாகவும் அதற்காக தான் இந்த ஷோவில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்யா.

அதே போல திருமணம் செ.ய்.வதாக கூறி ஏ.மா.ற்.றிவிட்டு சா.யி.ஷா.வை திருமணம் செ.ய்.வது குறித்து கேட்ட போதும் அப்பா எடுத்த முடிவு என்று ந.ழு.விய ஆர்யா,

எனக்கு கடனுக்கு தேவையான மொத்த பணத்தையும் கொடுத்தால் சாயிஷா திருமணத்தை தான் உடனடியாக நி.று.த்.தி விடுவதாகவும் ஆசை வார்த்தைகளை ஆர்யா கூறியது தெரியவந்துள்ளது.

அவர்கள் தான் என்னை செதுக்கினார்கள் – அசோக் செல்வன்!!

அசோக் செல்வன்….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அசோக் செல்வன், தன்னுடைய வெற்றிக்கு துணையாக இருப்பவர்கள் பற்றி கூறிருக்கிறார்.

சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இவர் நடிப்பில் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான தீனி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக அசோக் செல்வன், நித்யா மேனன், ரீதுவர்மா மூவரின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்துவருகிறது.

மகளிர் தினத்தை முன்னிட்டு அசோக் செல்வன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஓ மை கடவுளே படத்துக்கு முன்பு ஒரு வெற்றிக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. அதுதான் தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணமாக அமைந்தது.

என் வாழ்க்கையில் அம்மாவும் அக்காவும் என்னை செதுக்கியவர்கள். அம்மா மீது அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டோம்.

அம்மா என் மீது நம்பிக்கை வைத்தார். ஓ மை கடவுளே படத்தை தயாரித்து அக்கா என் வாழ்க்கையின் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார்.

என்னுடைய இந்த வெற்றிக்கு காரணமே அம்மாவும் அக்காவும் என் மீது வைத்த நம்பிக்கை தான். பெண்கள் மீது எனக்கு பெரிய மரியாதை வர காரணமே இவர்கள் தான்’. இவ்வாறு அவர் கூறினார்.

ரியல் ஹீரோ – பிரபல நடிகரை புகழும் ஆத்மிகா..!

ஆத்மிகா…

தமிழில் மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆத்மிகா, பிரபல நடிகரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டார். தற்போது இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார்.

அ.ர.சியல் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து ஆத்மிகா கூறும்போது, ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் நான் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறேன்.

என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதை. விஜய் ஆண்டனி திறமையாக நடித்திருக்கிறார். அவர் ரியல் ஹீரோ. கொரோனா காலக்கட்டத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடனே முதல் ஆளாக படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று கூறினார்.

தன்னை நம்பி படக்குழுவினர் காத்திருப்பதை அறிந்து விஜய் ஆண்டனி எடுத்த முடிவு மிகவும் பாராட்டுக்குறியது’ என்றார்.

மீண்டும் விக்ரமுடன் இணையும் பிரபல நடிகை… யார் தெரியுமா?

பிரபல நடிகை…

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு ‘சீயான் 60’ என அழைத்து வருகிறார்கள். ‘கோப்ரா’ படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

விக்ரமுடன் முதன்முறையாக அவருடைய மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

படத்தின் இருநாயகிகளில் ஒருவராக வாணி போஜன் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில்,

நீண்ட தேடலுக்குப் பிறகு தற்போது சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக ‘பிதாமகன்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விக்ரமுடன் நடனமாடியிருந்தார் சிம்ரன்.

அத்துடன் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி – சம்பளம் தர மறுத்த படக்குழு..!

விஜய் ஆண்டனி…

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

விஜய் ஆண்டனி கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருக்கும் “கோடியில் ஒருவன்” படத்திலும் நடித்துள்ளார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். அ.ர.சியல் தி.ரி.ல்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது.

இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனி எடிட்டராக அவதாரம் எடுத்துள்ளார். ஆனால் படக்குழுவினர் இதற்கு சம்பளம் தர மறுத்துள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும்போது, ‘கோடியில் ஒருவன் திரைப்படத்தின் எடிட்டிங் பணிகளை விஜய் ஆண்டனிதான் கவனிக்கிறார். முதல் பாதியை பார்த்துவிட்டேன்.

இரண்டாம் பாதியை பார்க்க ஆவலாக இருக்கிறேன். விஜய் ஆண்டனியின் இந்த திறமை பிரமிக்க வைக்கிறது. நடிகர், இசையமைப்பாளர் என்று தன்னுடைய திறமைகளை நிரூபித்த விஜய் ஆண்டனி இந்த படத்தில் எடிட்டிங் திறமையையும் நிரூபிக்க இருக்கிறார். இதற்காக நாங்கள் சம்பளம் கூட தரவில்லை’ என்றார்.

க த்தியில் ர.த்.தம் சொட்ட நிற்கும் கவின்.. 6 முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட லிப்ட் பட மோஷன் போஸ்டர்..!

லிப்ட்…

க.த்.தியில் ர.த்.தம் சொட்ட நிற்கும் பிக்பாஸ் கவின்.

6 முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட லிப்ட் பட மோஷன் போஸ்டர்.

யானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் – காடன் டிரெய்லர்!

காடன் டிரெய்லர்…

யானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் வெளியானது காடன் டிரெய்லர்.

நான் மட்டும் விஜய்யின் 50வது படம் பண்ணிருந்தா மரண மாஸா இருந்திருக்கும்.. 11 வருடம் கழித்து புலம்பும் இயக்குனர்!!

புலம்பும் இயக்குனர்…

விஜய்யின் 50வது படத்தை நான் தான் இயக்கி இருக்க வேண்டும் என ஒரு இயக்குனர் புலம்பிக் கொண்டிருக்கும் போது, விஜய்யே 50வது படத்தை ஏன் தான் பண்ணினோமோ என யோசித்திருப்பார். அந்த அளவுக்கு அந்த படம் அவரது மார்க்கெட்டை பதம் பார்த்தது.

எல்லா நடிகர்களுக்குமே 25வது படம், 50வது படம் என்பதெல்லாம் ஒரு மைல் கல் போல. அந்த படங்களை எப்படியாவது சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என ஏற்கனவே வெற்றி கொடுத்த இயக்குனர்கள், பிரமாண்ட இயக்குனர்கள் என பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால் விஜய் அப்படியே நேர்எதிர். புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டார். இத்தனைக்கும் விஜய் 50வது படம் இயக்க பல இயக்குநர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் விஜய் எப்படி ராஜ்குமார் என்பவரை தேர்ந்தெடுத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.

விஜய் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரது 50வது படம் என்கிற மைல்கல் வந்தது. கண்டிப்பாக தனது 50-வது படத்தில் விஜய் சூப்பர் ஹிட் இயக்குனருடன் ஜோடி செய்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென புதுமுக இயக்குனருடன் சேர்ந்து சுறா எனும் படத்தை கொடுத்தார்.

விஜய்யின் சினிமா கேரியரில் அப்படி ஒரு தோல்வி படத்தை அவர் அதற்கு முன்னர் பார்த்திருக்கவே மாட்டார். ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாகி அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

ஆனால் முதல் முதலில் விஜய்யின் 50-வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு என்பவருக்கு தான் கிடைத்ததாம். விஜய்க்காக பிரம்மாண்டமான ஆக்ஷன் கதையை எழுதிக் வைத்திருந்தாராம்.

ஆனால் கடைசி நேரத்தில் விஜய்யின் அப்பா உள்ளே புகுந்து இயக்குனரை மாற்றி, தயாரிப்பாளரை மாற்றி வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டாராம். ஒருவேளை 50வது படத்தை நான் இயக்கியிருந்தால் கண்டிப்பாக இன்று பேசப்படும் இயக்குனராக வலம் வந்திருப்பேன் என உருக்கமுடன் கூறியுள்ளார். இருபது வருடங்களுக்கு மேலாக அசிஸ்டன்ட் டைரக்டராக வலம் வரும் முத்துவடுகு தற்போது வரை ஒரு படம் கூட இயக்கவில்லை என்பது சோகமான விஷயம்.