போலீஸ் கெட்டப்பில் மிரள விடும் யாஷிகா.. வில்லனாக அவதாரம் எடுக்கும் சூப்பர் ஹிட் இசையமைப்பாளர்!!

யாஷிகா…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் தான் மாடல் அழகியும் நடிகையுமான யாஷிகா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்தபின்பு, யாஷிகாவிற்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.

இதுவரை இவர் நடித்து வந்த படங்களில் எல்லாம் கவர்ச்சிப்புயலாகவே சிறு சிறு வேடங்களில் களம் இறங்கிய யாஷிகா, தற்போது ‘சல்பர்’ என்ற படத்தில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கன்ட்ரோல் ரூமிற்கு வந்த அழைப்பின் மூலம்,

க.ட.த்.தல் வ.ழ.க்கு ஒன்றை கண்டுபிடிக்கும் பொறுப்புள்ள அதிகாரியாக நடிப்பதால் இதுவரை பார்க்காத யாஷிகாவை வித்தியாசமான கோணத்தில் இந்தப் படத்தின் மூலம் பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் யாஷிகா ஆனந்திற்கு வில்லனாக பிரபல இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கவுள்ளார்.

இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’, ‘ஜூங்கா’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதைப்போல் நடிப்பிலும் ஆர்வமுடைய சித்தார்த் விபின், ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வில்லனாக நடிப்பதற்கு இவர் தற்போது கூத்துப்பட்டறை மூலம் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளாராம்.

மேலும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் காமெடியனாக நடித்த சித்தார்த் விபின், தற்போது வில்லனாக யாஷிகாவுடன் இணைந்து நடிக்கும் வித்தியாசமான காம்போவில் உருவாகவிருக்கும் சல்பர் படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மகன்..மகள் எப்படி பட்டவர்கள்..? இளைய தளபதி விஜய் சொன்ன பதில்.. அரிதான வீடியோ..!

இளைய தளபதி விஜய்…

இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என சொல்லலாம். இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார்.

இளையதளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் கரோனாவுக்குப் பின்பு வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. ஓடிடியிலும் ரிலீஸானது. இளையதளபதி விஜய் தன் ரசிகை சங்கீதாவை திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் புது ஜோடி போலவே ரொமாண்டிக்காக வாழ்ந்து வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்னும் மகனும், திவ்யா ஷாஷா என மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே தளபதியின் படங்களில் தலைகாட்டி இருக்கிறார்கள்.

இதில் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலிலும், திவ்யா ஷாஷா தெறி பட கிளைமேக்ஸ் காட்சியிலும் நடித்திருப்பார். அடிப்படையில் பேட்மிட்டன் வீராங்கணையான தளபதியின் மகள் திவ்யா ஷாஷா வெளிநாட்டில் படித்துவருகிறார். இப்போது இவர்களைப் பற்றி அதிகம் தெரிந்தாலும் முன்பெல்லாம் விஜய் வாரிசுகள் யாரும் வெளி உலகில் மீடியா வெளிச்சம் படாமலேயே வாழ்ந்தனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவி விஜயிடம். ‘உங்கள் குழந்தைகள் சஞ்சய், திவ்யாவை வெளியில் காட்டுவதில்லையே ஏன்? அவர்கள் இருவரின் கேரக்டர் எப்படி எனக் கேட்டார்.

அதற்கு தளபதி விஜய், ‘அவுங்களுக்கு என் குழந்தைங்கன்னு எந்த முக்கியத்துவமும் கிடைக்கக் கூடாது. ஸ்கூலில் சுதந்திரமா இருக்கட்டும்ன்னு தான் வெளியில் தலைகாட்டுறதில்லை. சஞ்சய் அடிக்கடி மாறிட்டே இருப்பர். திடீர்ன்னு என் பேன்னு சொல்லுவாரு. திவ்யாவைப் பொறுத்தவரை எல்லா வீட்டிலும் செகண்ட் பேபி நார்ட்டி கேர்ளாகத்தான் இருப்பார்கள். அப்படித்தான் திவ்யாவும் நார்ட்டி கேரள்தான்.’’என்றார்.

ஜெயம் ரவி படத்தில் அறிமுகமான காமெடி நடிகர் சுமனின் மனைவி யார் தெரியுமா ..? இளம் நடிகைகளை மிஞ்சும் பேரழகி ..!!

சுமன் ஷெட்டி..

காமெடி நடிகர் சுமன் ஷெட்டி நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் அவரது தோழனாக நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, கு த்து மற்றும் 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். விஷாலின் ச ண் டக்கோழி, அஜித்தின் வரலாறு, தனுஷின் படிக்காதவன் போன்ற படங்களில் முக்கியமான கதா பாதிரங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான விளம்பரம் என்ற படத்துடன் சேர்த்து மொத்தம் 14 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இவர் பி றவியிலேயே பெரிய பணக்காரர். ஐதராபாத்தில் உள்ள உள்ள ஒரு பணக்கார வீட்டில் தான் இவர் பிறந்தார். இருந்தாலும், இவர் பேசும் ஸ்லாங் மற்றும் பாடி ஸ்டைல் இவரை சினிமாவுக்கு கொண்டு வந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு நாக பவானி என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் 2015-ம் ஆண்டு “சொம்பு சின்ன சத்தியம்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

தொடர்ந்து தெலுங்கு படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் இவரது திருமண புகைபடங்கள் சில இதோ உங்கள் பார்வைக்கு.

2015 ஆம் ஆண்டு இவர் நடித்த்து வந்த சொம்பு சின்ன சத்தியம் திரைப்படத்தின் அதில் இவரின் படத்தில் காட்சியில் இருந்து சில பு கைப்படங்கள் வைரல் ஆகி இருந்த்தது அதில் நடிகையுடன் இருக்கும் புகைப்படம் இவர் ஆரம்பத்தில் தமிழ் திரைப்படத்தில் இருந்த தோற்றத்தை விட இப்போது வித்தியாசமாக உள்ளர்.

36 வயதான வி.வா.கரத்தான பெண் நான்: டிடி வெளியிட்ட அசத்தல் காணொளி- வை.ரலாகும் வீடியோ..!

திவ்யதர்ஷினி…

பிரபல நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான DD எனும் திவ்யதர்ஷினி மகளிர் தினத்தன்று வெளியிட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் டிடி சில சார்ட்டுகளை கையில் வைத்துள்ளார். அவற்றில் “36+ல் வி.வாகரத்து”, “36 +ல் குழந்தையின்மை”, “36+ல் மூ.ட்டு வ.லி”, “ஆனாலும் 36+ல் சந்தோஷம்”,

“ஏனென்றால் எல்லோருடைய டைம்லைனும் வெவ்வேறானவை”, “ஆக, உங்கள் சந்தோஷத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமானால் உங்களுடைய டைம்லைனை நீங்கள் என்ஜாய் பண்ணுங்க”, “Happy Womens Day” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த பலரும் DD யின் இந்த வீடியோக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர், வாழ்வில் முடங்கி கிடக்கும் பெண்கள் பலருக்கும் இது சிறந்த Motivation எனவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

கிளாமராக போஸ் கொடுத்துள்ள நீலிமா ராணி புகைப்படம்.. செம ஹாட்!

நீலிமா ராணி…

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு பேத்தியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பாண்டவர்பூமி போன்ற சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் நீலிமாராணி நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை நீலிமா ராணி தான் தயாரித்து கொண்டிருக்கிறாராம்.

அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம்.

இந்தநிலையில் நீலிமா ராணி தற்போது தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் அந்தப் புகைப்படத்தில் பார்ப்போர் அனைவரையும் தனது கண்களால் சொக்க வைத்துள்ளார் நீலிமா.

அதாவது வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காமனான விஷயம் என்றால் அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான்.

இப்போதுதான் சோசியல் மீடியா. ஆனால் அப்போதெல்லாம் எதுவும் இல்லை. வீட்டிலேயே போட்டோ ஷூட் நடத்தி அதை ஒவ்வொரு அலுவலகமாக கொடுக்க வேண்டும். அப்படி பட வாய்ப்புக்காக கிளாமர் உடையில் நீலிமா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா… வைரலாகும் வீடியோ..!

சாய் தன்ஷிகா…

மகளிர் தினத்தை முன்னிட்டு சாய் தன்ஷிகா நடித்து வரும் யோகி டா படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார்.

சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன.

தற்போது இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற ஒரு ஆக்‌ஷன் காட்சியை சிறப்பாக செய்துள்ளார்.

பெண்களால் எதையும் சாதிக்க இயலும் என்பதை வலுயுறுத்தவே பெண்கள் தினமான நேற்று இக்காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்களுக்காக புதிய அவதாரம் எடுத்த நடிகர் நகுல்.. என்ன தெரியுமா ?

நகுல்…

2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நகுல், ப்ரிஸ்லி பிலிம்ஸ் தயாரிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சதுஷன் இயக்கும் இப்படத்திற்கு அஷ்வத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இசையில் ஆர்வம் கொண்ட நடிகர் நகுல், அஷ்வத் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடி இருக்கிறார்.

தன்னுடைய ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் அவரை பாடச் சொல்லி கேட்டுகொண்டதற்கு இணங்க இப்பாடலை பாடியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சீன் போடும் விஜய் டிவி VJ.. இனி நடிச்சா ஷங்கர், முருகதாஸ் படம் தானாம்!

பிரபல விஜே…..

சிவகார்த்திகேயனுக்கு பிறகு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் அடுத்த சிவகார்த்திகேயன் என பெயரெடுத்து சினிமாவில் நுழைந்தவர் தான் அந்த பிரபல விஜே.

இசை சேனலில் பணியாற்றியவர் அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குபவராக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அதே சேனலில் எவர்கிரீன் சீரியல் ஒன்றில் நடித்தார்.

ஆரம்பம் என்பதால் அடக்க ஒடுக்கமாக இருந்த அந்த விஜே சமீபத்தில் அதே சேனலில் நடத்திய பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மக்கள் பேராதரவு எனக்கு கிடைக்கும், நான்தான் டைட்டில் வின்னர் ஆவேன் என பல கனவுகளுடன் உள்ளே நுழைந்தார். ஆனால் அங்கு நடந்த ஆட்டமே வேறு.

யாரும் எதிர்பார்க்காத வகையில் வேறு ஒரு நடிகர் பெரிய முதலாளி பட்டத்தை வாங்கி சென்று விட்டார். இந்த நடிகருக்கு கிடைத்தது என்னமோ மூன்றாவது இடம்தான். அப்போது பார்க்கணுமே, இவரது முகத்தில் ஈ ஆடவில்லை. பொறாமையும் வயிற்றெரிச்சலும் முகத்தில் அப்படியே அப்பட்டமாக தெரிந்தது.

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய மார்க்கெட் இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது என தன்னை சார்ந்தவர்களிடம் பந்தா காட்டி கொள்கிறாராம்.

ஏற்கனவே யூடியூப் நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள மற்றொரு படம் தற்போது வரை ரிலீசாகாமல் தடுமாறி வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக அந்த விஜே வீட்டை நோக்கி சில புதிய தயாரிப்பாளர்களும் புதிய இயக்குனர்களும் கதையுடன் சென்றுள்ளனர். ஆனால் பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய மார்க்கெட் முன்னணி நடிகர்கள் ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டதாகவும், இனி நடித்தால் முருகதாஸ், ஷங்கர் போன்ற பெரிய பிரபலமான இயக்குனர்களுடன் மட்டும்தான் என இளம் இயக்குநர்களை ஒதுக்கி வைக்கிறாராம். இதை அறிந்த தயாரிப்பாளர்கள், ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என வச்சி செய்ய ரெடியாக காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ரஜினி படத்தில் அவரை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர்தான்.. !! முழு விபரம் உள்ளே !!

ரஜினி……

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெம்பர் ஒன் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ரஜினி ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அப்பேர்ப்பட்ட மார்க்கெட்டை கொண்ட ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரு நடிகை இருக்கிறார் என்றால் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றுதான். சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே ரஜினியின் மார்க்கெட் தாறுமாறாக இருந்தது.

வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர். அதுமட்டுமில்லாமல் அன்றைய காலத்தில் முன்னணி நடிகர்களாக வந்த அனைவரையும் தன்னுடைய அசுர வளர்ச்சியால் மிரள வைத்தார்.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் 1978ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இளமை ஊஞ்சலாடுகிறது. இளையராஜா இசை அமைத்த இந்த படத்தை ஸ்ரீதர் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் நாயகியாக ஜெயசித்ரா என்பவர் நடித்தார். இந்த படத்திற்காக ரஜினிகாந்துக்கு சுமார் 75,000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் அவரைவிட 25,000 அதிகமாக வாங்கினாராம் ஜெயசித்ரா. அப்போதே அவருக்கு ஒரு லட்சம் கொடுத்ததாக கூறுகிறார்கள்.

அப்போதே இந்த செய்தி பல பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை என அப்போதே மிகப் பெரிய புகழை பெற்றார் ஜெயசித்ரா.

முதல் முறையாக விருது வாங்குன அஸ்வின்: அழ வைத்த புகழ்! காரணம் என்ன தெரியுமா?

அஸ்வின் குமார்……….

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வினுக்கு Behindwoods Gold Icons என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் அதிக பிரபலமானவர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி பட த்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அஸ்வின் குமார். இதைத் தொடர்ந்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற தொடரின் மூலம் நாயகனாக வலம் வந்தார். இவருடன் இணைந்து பவானி ரெட்டி நடித்திருந்தார்.

இந்த தொடரில் இவர்கள் இருவரும் தான் முக்கியமான கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2ஆவது சீசனில் குக்காக கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இருவரது கெமிஸ்டரி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இருவரும் திருமணம் செய்தால் கூட நன்றாக இருக்கும் என்று கூட ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும், Behindwoods Gold Icons என்ற தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், தொலைக்காட்சியில் அதிக பிரபலமானவர் என்பதற்கான Behindwoods Gold Icons விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், கவின், அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் இணைந்து நடனமாடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் போது அஸ்வினிடம், காதலி உன்னை விட்டுவிட்டு சென்றால், உனது உணர்ச்சி எப்படியிருக்கும் என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய புகழ் கேள்வி எழுப்பியுள்ளார். அதனை தத்ரூபமாக நடித்துக் காண்பித்த அஸ்வினின் கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியுள்ளது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மற்றொரு தொகுப்பாளினி மணிமேகலை இப்படி விருது வாங்கிய அஸ்வினை அழ வைத்துவிட்டாயா என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஷிவாங்கியுடன் இணைந்து டான்ஸ் மற்றும் பாடல் பாடி அசத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.