‘தோனி’ படத்தின் நாயகிக்கு திருமணமா? மாப்பிள்ளை இந்த ஹீரோ தான்!

தோனி’ படத்தின் நாயகிக்கு திருமணமா?

தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகியாக நடித்த திஷா பதானி பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிகில் உள்பட பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் ஜாக்கி ஷெராப். இவருடைய மகன் டைகர் ஷெராப், நடிகை திஷாவை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இருவரும் இணைந்து ‘தோனி’யின் வாழ்க்கை வரலாறி திரைப்படத்தில் நடித்த போது தான் காதல் பற்றிக் கொண்டது என்றும் இதனை அடுத்து தற்போது இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் விரைவில் திஷா பதானி டைகர் ஷெராப் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஜாக்கி ஷெராப் கூறிய போது தனது மகன் யாரை திருமணம் செய்துவைக்க சொன்னாலும் தான் ஒப்புக்கொண்டு திருமணம் செய்து வைக்க தயார் என்று கூறியுள்ளார்.

பைக் ஓட்ட தெரியாமல் ஓட்டி கீழே விழுந்த அஜித் பட நடிகை.. ஷாக்கிங் வீடியோ.!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்…

எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் நேர்கொண்ட பார்வை.

இப்படத்தில் மிகவும் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், இளம் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இவர் நடிப்பில் சமீபத்தில் மாறா எனும் திரைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் புல்லட் பைக் ஒன்றை ஓட்டி பழகியுள்ளார்.

அப்போது தீ டீரென தடுமாறிய நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், பைக்கில் இருந்து தவறி கீழே விழு ம் ஷாக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

எனிமி படத்தை வாங்கத் தயங்கும் விநியோகஸ்தர்கள்… காரணம் இதுதானா..!

எனிமி…

சக்ரா படத்தின் தோல்வியால் விஷால் நடிப்பில் அடுத்து உருவாகும் எனிமி படத்தின் மார்க்கெட் மதிப்பு குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படம் ரிலிஸாவதற்கு முன்னதாக பல தடைகளை சந்தித்து கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் சமாளித்து விஷால் படத்தை ரிலீஸ் செய்தார்.

அதனால் இந்த படம் ரிலீஸானதே விஷாலுக்கு மிகப்பெரிய சக்ஸஸ் என்று சொல்லப்பட்டது. ஆனால் ரிலீஸான படம் திரையரங்குகளில் வசூலில் சுணங்கியது.

கிட்டத்தட்ட 12 கோடிக்கு விற்கப்பட்ட தமிழக திரையரங்க உரிமை வசூலில் பாதியை கூட கொடுக்கவில்லையாம்.

இதனால் விஷால் விநியோகஸ்தர்களுக்கு 6.5 கோடி ரூபாய் வரை கொடுக்க வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் விஷால் அப்செட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தோல்வி விஷாலின் அடுத்தப்படமான எனிமி வியாபாரத்தில் தொய்வை ஏற்படுத்தியுள்ளதாம். சக்ரா வசூலித்த தொகையைக் கணக்கில் கொண்டு எனிமி படத்தைக் குறைந்த விலைக்கு விநியோகஸ்தர்கள் கேட்கின்றனராம்.

நாய் மேய்க்கும் பிக்பாஸ் சம்யுக்தா… இவங்க நிலைமை என்ன இப்படி ஆகிப்போச்சே..!

சம்யுக்தா…

மாடல் அழகியான சம்யுக்தா சண்முகநாதன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்ளுக்கு நன்கு பரீட்சியம்னார்.

இவர் தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழி. அவர் கொடுத்த சிபாரிசின் அடிப்படையில் தான் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

36 வயதாகும் இவருக்கு கார்த்திக் என்கிற கணவர் இருக்கிறார். ஒரு குழந்தை உள்ளது. ஆனால், அம்மணி யங் மம்மியாக அழகு மாறாமல் அப்படியே இருக்கிறார்.

பிக்பாஸுக்கு பின்னர் சம்யுக்தா விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இரண்டு ராஜபாளையம் நாய் பிடித்துக்கொண்டு வித்தியாசமான மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

பிரபல நடிகரின் வ ழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க கால அவகாசம்!

திலீப்…

பிரபல மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் திலீப். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னணி ந டிகையைக் க.ட.த்.தப்ப.ட்டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.யப்.பட்ட வ.ழ.க்கில் கை.து செ.ய் யப்பட்டு மு க்கிய கு.ற்.ற.வா.ளி.யா.கச் சே.ர்.க்க.ப்பட்டுள்ளார்.

இந்த வ.ழ.க்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தனி நீதிமன்ற வி.சா.ர.ணை.யில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் வி.தித்த கா.லக்கெ.டு.வுக்கும் வி.சா.ர.ணை.யை மு.டி.க்க.வில்லை.

எனவே மேலும் 6 மாதம் கால அவகாசம் கேட்டு தனி நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் ம.னுதா.க்.க.ல் செய்திருக்கிறது.

இம்மனு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வி.சா.ர.ணை.க்கு வந்தது.அப்போது உயர்நீதிமன்றம் இவ்வ.ழ.க்கை மு.டிக்க மேலும் 6 மாத கால அ.வகா.சம் கொடுத்துள்ளது.

ஆனால் இக்கால அவகாசம் நீட்டிக்கப்பட ,மாட்டாது எனக் கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே இவ்வ.ழ.க்கில் 2 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரிஷ்யம் 3 கதை… ஜீத்து ஜோசப்பின் இமெயில் நிரம்பிய சோகம்!

திருஷ்யம் 3…

ஜீத்து ஜோசப் இயக்கிய திருஷ்யம் 2 படம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் நேற்றுமுன்தினம் வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை நேற்று தொடங்கியுள்ளார் இயக்குனர். இது சம்மந்தமாக நடிகர் வெங்கடேஷ் மற்றும் படக்குழிவினரோடு இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழிலும் இந்த படம் பாபநாசம் 2 என்ற பெயரில் ரீமேக் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘திருஷ்யம் மூன்றாம் பாகத்துக்கான க்ளைமேக்ஸ் தயாராகி விட்டது. அது மோகன்லாலுக்கும் பிடித்து விட்டது.’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் யாரோ ஜீத்து ஜோசப் மூன்றாம் பாகத்துக்காக கதையை தேடிக் கொண்டு இருக்கிறார் என அவரின் இமெயில் முகவரியோடு கிளப்பிவிட இப்போது பலரும் அவருக்கு கதை யோசனை சொல்லி இமெயில் அனுப்பி வருகின்றனராம். தான் யாரிடமும் சென்று கதைக் கேட்கும் எண்ணத்தில் இல்லை என்றும் தன்னுடைய இமெயில் பாக்ஸ் நிரம்பி விட்டதாகவும் அவர் புலம்பி தள்ளி வருகிறார்.

எனக்கு ரஷ்மிகா மந்தனா தான் வேணும்.. அடம் பிடித்து 3வது முறையாக ஜோடி போடும் இளம் நடிகர்!!

ரஷ்மிகா மந்தனா…

நடித்தால் ரஷ்மிகா மந்தனா கூடதான் நடிப்பேன் என இளம் நடிகர் ஒருவர் அடம்பிடித்து மூன்றாவது முறையாக அவருடன் ஜோடி போட உள்ள செய்தி தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கன்னட சினிமாவில் அறிமுகமான ரஷ்மிகா மந்தனாவை சிவப்பு கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டது தெலுங்கு சினிமா. தற்போது ரஷ்மிகா நடிக்காத படமே கிடையாது என்னும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார்.

மகேஷ் பாபுவுடன் சரிலெரு நீகேவரு என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக ரஷ்மிகா ஜிம் ஒர்க் அவுட் செய்த வீடியோ எல்லாம் வெளியாகி வைரலானது.

அதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் ரஷ்மிகாவின் மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தெலுங்கு சினிமாவின் மற்ற நடிகைகளுக்கு பொறாமை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க ரஷ்மிகா மற்றும் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படத்தில் ஜோடி போட்டு நடிக்கவுள்ளனர்.

இதற்காக விஜய் தேவர்கொண்டா ரஷ்மிகா தான் வேண்டும் என அடம் பிடித்ததாக கூறுகின்றனர். ஏற்கனவே இருவருக்குள்ளும் காதல் இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்து நிலையில் விஜய் தேவர்கொண்டா இப்படி அடம்பிடிப்பதை உறுதி செய்துள்ளது என்கிறார்கள் அக்கட தேச சினிமா காரர்கள்.

சோம கேசரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பிக்பாஸ் பிரபலங்கள்..!

சோமசேகர்…

தமிழில் பிக்பாஸ் 4வது சீசன் கடந்த ஜனவரி மாதமே முடிந்துவிட்டது. ஆனால் பிக்பாஸ் போட்டியாளர்களின் கொண்டாட்டம் நிற்கவில்லை.

அடுத்தடுத்து அவர்களுக்கு ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துவிடுகிறது.

அப்படி தான் இப்போது ஒரு கொண்டாட்டத்தில் அவர்கள் இறங்கியுள்ளார்கள்.

சோமசேகரின் பிறந்தநாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடி.. வேற லெவல் என புகழ்ந்து தள்ளிய தல அஜித்..!

வலிமை…

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் இருந்து, ரசிகர்கள் வரை பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரே திரைப்படம் தல அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் வலிமை தான்.

இப்படத்தின் First லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று தான், தற்போது வரை தல அஜித்தின் ரசிகர்கள் பல இடங்களில் வலிமை அப்டேட் வேண்டும் என கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் லட்ச கணக்கில் காத்துகொண்டு இருக்கும் தல அஜித்தின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி விரைவில் காத்துகொண்டு இருக்கிறது.

ஆம் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடி ஆகிவிட்டதாம். இந்த மோஷன் போஸ்டரை தல அஜித் பார்த்துவிட்டு சூப்பராக இருக்கிறது என்று கூறியுள்ளாராம்.

மேலும் தல அஜித் இதனை எப்போது வெளியிட வேண்டும் என்று நான் கூறும் வரை பொறுத்திருங்கள் என்று படக்குழுவிடம் தெரிவித்துள்ளாராம். இதனால் தல அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அப்டேட் விருந்து காத்துகொண்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி-யில் கோடிக்கணக்கில் விலைக்குப்போன டாக்டர் திரைப்படம்.. எவ்வளவு தொகைக்கு தெரியுமா?

டாக்டர்…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்திக் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியா அருள் மோகன் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இருந்து மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வரும் மார்ச் மாதம் அன்று வெளியாக காத்திருக்கும் இப்படம் ஓடிடியில் சுமார் ரூ. 10 கோடி வரை விலைக்கு போயுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் பிரபல ஓடிடி தளத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரூ. 10 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.