இரண்டாவது காதலனுடன் சுற்றி திரியும் ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் ரொமான்டிக் செல்பி!

ஸ்ருதிஹாசன்…

கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன்னிடம் ரசிகர் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகின்றன.

ஏற்கனவே ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலே என்பவரை காதலித்து அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டனர்.

அதன்பின்பு ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு ஸ்ருதிஹாசன் டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞன் சாந்தனு என்பவரை சில நாட்களாக காதலித்து வருகிறார். இதைப் பற்றி அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும்போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தன்னுடைய காதலனுடன் சென்னை திரும்பிய உள்ள நிலையில், அவர்கள் இருவரும் ஷாப்பிங் செய்யும் புகைப்படமானது சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவி வருகிறது.

ஏனென்றால் ஸ்ருதிஹாசனும் சாந்தனுவும் பொது இடத்தில் ரொமான்டிக் போஸ் கொடுக்கும் புகைப்படமும், அத்துடன் ஸ்ருதிஹாசனின் நெருங்கிய தோழியான டிசைனர் அமிர்தாவும் உடனிருக்கும் புகைப்படமும் தற்போது ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஸ்ருதிஹாசன் இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு அத்துடன் காதலனுடன் முதல் முதலாக நேற்று சென்னை வந்துள்ளேன் என்பதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

விஜய் மற்றும் ரஜினி என்னை பார்த்து நடுங்குவதற்கு காரணம் இதுதான்.. வெளிப்படையாக கூறிய கௌதம் மேனன்!!

கௌதம் வாசுதேவ் மேனன்…

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே காதல் காவியம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அவரது படத்தில் பெண்கள் அழகாக காட்டுவது மட்டுமில்லாமல் ரொமன்ஸ் காட்சிகளிலும் அழகாக காட்டியிருப்பார்.

இதுவரைக்கும் சிம்பு, சூர்யா மற்றும் அஜித் போன்ற நடிகர்களுடன் படங்களில் கௌதம் மேனன் பணியாற்றியுள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று விடும் .

சமீபகாலமாக கௌதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குவது பற்றி பேசினாலே நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடுங்கி விடுகின்றனர். அந்த அளவிற்கு இவர் இயக்கும் படங்கள் வெளிவருவதற்கு பல பி.ர.ச்ச.னைகளை சந்தித்து வருகின்றன.

சமீபத்தில் கௌதம் மேனனிடம் பல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ஏன் விஜய் மற்றும் ரஜினியை வைத்து படங்களை இயக்கவில்லை என கேட்டபோது அதற்கு கவுதம் மேனன் நான் தயாராக தான் உள்ளேன், ஆனால் அவர்கள் தான் தயாராக இல்லை என கூறினார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் மற்றும் ரஜினி என் படத்தில் நடித்தால் அது அவர்கள் படமாக இருக்காது. கண்டிப்பாக என்னுடைய படமாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கூறுவார்கள். அதனாலேயே அவர்கள் என்னுடைய படத்தில் நடிப்பதற்கு பயப்படுகிறார்கள் என கூறினார்.

திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா விஜயகுமார்… ஹீரோ யார் தெரியுமா?

வனிதா விஜயகுமார்…

வனிதா விஜயகுமார் பனங்காட்டு படைக் கட்சியின் தலைவர் ஹரி நடிக்கும் புதிய படத்தில் வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பனங்காட்டு படை என்ற க.ட்.சியை நடத்திவருபவர் ஹரி. இவர் தன் உடல் முழுவதும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து பார்ப்பவர்களை ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு செல்ல வைக்கும் விதமாக தன்னைக் காட்டிக் கொள்பவர்.

அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் அவர் பிரபலமாக இருந்து வந்த நிலையில் இப்போது ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு ‘2K அழகானது ஒரு காதல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளார். விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா.

அதன் பின்னர் சில படங்களில் நடித்துள்ள அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

கோப்ரா படத்தில் இர்பான் பதானின் கதாபாத்திரம்… ரகசியத்தை வெளியிட்ட படக்குழு!

கோப்ரா…

விக்ரம் உள்ளிட்ட பலர் நடிக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு இப்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் பாதிக் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்ட நிலையில் மீதிக் காட்சிகளையும் அங்கேயே படம் பிடிக்க வேண்டிய கடடாயத்தில் படக்குழு இருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அங்கு செல்வது தாமதமாகிக் கொண்டே வந்தது.

இதனால் அந்த காட்சிகளை செட் போட்டு இங்கேயே படமாக்கலாம் என தயாரிப்பாளர் கூறினாலும் இயக்குனர் பிடிவாதமாக இருந்தார். அதையடுத்து இப்போது கோப்ரா படக்குழு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு இப்போது பெருவாரியானக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் படத்தில் நடிகராக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் படத்தில் பிரஞ்சு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம்.

அஜித்தின் படத்தை புகழந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அதுவும் என்ன சொன்னார் தெரியுமா..?

ரஜினிகாந்த்…

எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்ற படம் நேர்கொண்ட பார்வை.

இப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தல அஜித்தை பற்றியும், நேர்கொண்ட பார்வை படத்தையும் சூப்பர் ரஜினிகாந்த் பேசியுள்ளாராம்.

இதில் ” நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ட்ரைலர் சூப்பரா இருக்கு. ஹீரோ சூப்பரா பன்னிருக்காரு. இயக்குனரும் சூப்பர் ” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினாராம்.

மறைத்து வைத்திருந்த சீக்ரெட்டை வெளியிட்ட தனுஷ் பட நாயகி!

ரிச்சா கங்கோபாத்யாய்…

தமிழ் திரையுலகின் இரு துருவங்களாகிய சிம்பு மற்றும் தனுஷூடன் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ரிச்சா ரிச்சா கங்கோபாத்யாய்.

சிம்புவுடன் இவர் நடித்த ‘ஒஸ்தி’ திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியான இரண்டே வாரத்தில் தனுஷுடன் இவர் நடித்த ‘மயக்கம் என்ன? திரைப்படம் வெளிவந்தது.

இரண்டு படங்களும் வசூல் அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் அதன்பின் ரிச்சாவுக்கு வேறு தமிழ்ப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலரான ஜோ என்பவருடன் ரிச்சாவுக்கு 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பதை ’இத்தனை நாளாக சிறிய ரகசியத்தை மறைத்து வைத்திருந்தோம்.

நானும் என் கணவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம். லங்கீலா ஜூன் மாதம் பிறக்க உள்ளார்.

இதயம் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். எங்களால் காத்திருக்க முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

சிம்புவும் தனுஷும் மோதிக்கொள்ள காரணம் இதுதான்.. ஏமாறுவது என்னமோ ரசிகர்கள் தான்!

சிம்பு மற்றும் தனுஷ்…

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலிருந்தே குறிப்பிட்ட இரண்டு நடிகர்களுக்குள் எப்போதும் போட்டிகளில் இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜித் ஆகியோரைச் சொல்லலாம். அந்த வகையில் தற்போது அதிக ரசிகர்களை கொண்டவர்களாக இருப்பவர்கள் சிம்பு மற்றும் தனுஷ்.

சிம்பு ஒரு கட்டத்தில் தனுஷை விட முன்னிலையில் இருந்தார். ஆனால் தன்னுடைய சோம்பேறித்தனத்தால் தனக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த பெரிய இடத்தை இழந்தார்.

சிம்புவிட்ட அந்த இடைவெளியை பயன்படுத்தி கொண்ட தனுஷ் அடுத்தடுத்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது சிம்புவை விட பல மடங்கு வியாபாரத்தில் உயர்ந்து நிற்கிறார். இதுவே இருவருக்கும் போட்டிகளை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே தங்களது படங்களில் இருவரையும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் சிம்பு ஈஸ்வரன் படத்தில் அசுரன் படத்தில் நடித்த தனுஷை வம்புக்கு இழுத்தார்.

ஆனால் அதற்கு முன்பே பட்டாசு படத்தில் தனுஷ், அப்பா பெயரை பின்னாடி பயன்படுத்துவது பெரிதல்ல, அப்பா பெயரை காப்பாற்றுமாறு நடந்து கொள்ளவேண்டும் என வசனம் பேசியிருப்பார்.

சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் டீசரில் கூட சரிடா மூடிட்டு போடா என்ற வசனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக இரு ரசிகர்களும் அடித்துக் கொண்டனர். ஆனால் உண்மையில் இது எல்லாமே ஒரு வியாபார தந்திரம். இருவரது ரசிகர்களையும் உசுப்பேற்றி ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் அதைப் பயன்படுத்தி நன்றாக கல்லா கட்ட போடப்பட்ட பிளான் தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இது தெரியாமல் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ரசிகர்கள் அடித்துக் கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை. சிம்பு மற்றும் தனுஷ் இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகர் அமிதாப் பச்சன்.!

அமிதாப் பச்சன்…

நடிகர் அமிதாப் பச்சன் தான் கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் 80 வயதிலும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தனது அன்றாட நிகழ்வுகளை வெளியிட்டு எழுதி வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களாக அவர் எந்த பதிவையும் எழுதாத நிலையில் திடீரென நேற்று ‘மருத்துவப் பி.ர.ச்.சனை… அ.று.வை சி.கி.ச்சை… அதனால் எதுவும் எழுத முடியவில்லை ‘ என ஒரு டிவீட்டைப் பகிர்ந்திருந்தார்.

ஆனால் என்ன அ.று.வை சி.கிச்.சை, உ.ட.ல் நிலை எப்படி இருக்கிறது என்று அறிவிக்காததால் ரசிகர்கள் கு.ழ.ப்.பம.டைந்தனர். இந்நிலையில் இப்போது அதுகுறித்து விளக்கமாக அறிவித்துள்ள அமிதாப் ‘இந்த வயதில் கண்ணில் அ.று.வை சி.கி.ச்சை என்பது சி.க்.க.லானது.

நடந்ததும், நடப்பவையும் நன்மைக்கே என நம்புவோம். எழுதவோ, படிக்கவோ முடியவில்லை. மறதியான ஒரு நிலையில் அமர்ந்திருக்கிறேன். கண்கள் மூடி இருப்பதால் இசைக் கேட்க முயல்கிறேன். ஆனாலும் திருப்திகரமாக இல்லை’ எனக் கூறியுள்ளார்.

திருஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்… அடுத்த அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்!

திருஷ்யம் 2…

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியானது. வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை உடனே தொடங்கியுள்ளார் இயக்குனர். இதையடுத்து இன்று அந்த படத்தின் பூஜை தொடங்கியுள்ளது. மேலும் படப்பிடிப்பு மார்ச் 5 ஆம் தேதி முதல் நடக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

பக்கா சைக்கோவாக நடித்துள்ள SJ சூர்யா.. வைரலாகும் நெஞ்சம் மறப்பதில்லை Sneak Peek வீடியோ..!

நெஞ்சம் மறப்பதில்லை…