சிம்புவின் ஒஸ்தி பட நடிகையா இது.‌? வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் கலக்கலான புகைப்படம், குவியும் லைக்ஸ்!!

ரிச்சா கங்கோபாத்யாய்………..

டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றார்.

அதன்பின் இந்தியா வந்து ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். ராணாவின் லீடர், பிரபாஸின் மிர்ச்சி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்தார். தனுசுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா .

இதையடுத்து இவர் திரையுலகை விட்டு நீங்கி தன்னுடன் அமெரிக்காவில் எம்பிஏ படித்த சக மாணவர் ஜோ லாங்கெல்லா என்பவரை இரண்டு வருடங்களாக காதலித்து அதன்பின் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ரிச்சா தனது கணவனுடன் இருக்கும் புகைப்படத்துடன்,

‘எங்களுடைய குழந்தை ஜூன் மாதம் இவ்வுலகில் காண வருகிறது. அதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

எனவே இவருடைய இந்த ட்விட்ர் பதிவால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

படப்பிடிப்பை முடித்து, ரஷ்யாவிலிருந்து சென்னை திரும்பிய கோப்ரா பட வில்லன்.. அதிரவிட்ட அப்டேட்ஸ்!!

சியான் விக்ரம்…….

சியான் விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் தான் ‘கோப்ரா’. இந்தப் படத்தில் 12 வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக கோப்ரா படக்குழு குழுவினர் அனைவரும் ரஷ்யா சென்றுள்ளனர். இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

ஆகையால் படப்பிடிப்பிற்காக இரண்டு வாரம் ரஷ்யா சென்ற இர்பான் பதான் படப்பிடிப்பை முழுவதும் முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

இந்தப் படத்தில் இர்பான் பதான், பிரஞ்சு இன்டர்போல் அதிகாரியாக ‘அஸ்லான் எல்மாஸ்’ என்ற கேரக்டரில் நடிக்கின்றார் என்ற சீக்ரெட்டான தகவலை ஏற்கனவே படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளனர்.

அதைப்போல் கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் விரைவில் சியான் விக்ரமின் ‘கோப்ரா’ ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் விக்ரமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது.

அதை கண்டிப்பாக கோப்ரா படம் சரி செய்யும் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. கண்டிப்பாக கோப்ரா படம் விக்ரமுக்கு செம கம்பாக் படமாக இருக்க போகிறது என்பது மட்டும் உறுதி.

அழகை காட்டி ரசிகர்களை மயக்கிய கீர்த்தி சுரேஷ்.. இப்போது வைரலாகும் புகைப்படம்!!

கீர்த்தி சுரேஷ்…….

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் கோலிவுட்டில் கால்பதித்த குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பை பெற்றார். இவரது நடிப்பில் வெளியான ‘மகாநதி’ திரைப்படம் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் திருமணம் நடக்கப் போவதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் வதந்தி ஒன்று தீயாக பரவி வருகிறது.

தற்போது கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்ததோடு, ரசிகர்களை மெர்சல் ஆக்கியுள்ளது.

அதாவது கீர்த்தி சுரேஷ் எவ்வளவு பிஸியான நடிகையோ, அந்த அளவிற்கு சோசியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருப்பார். இதனால் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் உள்ள உறவை மெயின்டெயின் செய்து வருகிறார் கீர்த்தி.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது உடல் எடையை குறைத்து, ஸ்லிம்மாக குட்டி ட்ரெஸ்ஸில் கிறங்க வைக்கும் சிரிப்பில் போஸ் கொடுத்து போட்டோ ஷூட்களை நடத்தி உள்ளார், அதை சமூக வலைதளங்களில் தற்போது தெறிக்க விடுகின்றார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதோடு, பார்ப்போர் அனைவரின் நெஞ்சையும் கொள்ளை அடித்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு அவருடைய ரசிகர்கள் ‘என்ன ஷேப்பு, செம்ம ஸ்ட்ரக்ச்சர்’ போன்ற கமெண்டுகளை தட்டி விடுகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்……

தனுஷின் ‘படிக்காதவன்’ படத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வடிவேலு.. முறுக்கு மீசையுடன் கெட்டப்பு தாறுமாறு!!

வடிவேலு……….

தமிழ் சினிமாவில் 2009ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான அதிரடியும் நகைச்சுவையும் கலந்த திரைப்படமான தனுஷின் ‘படிக்காதவன்’ படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் காமெடி நடிகராக விவேக் நடித்திருப்பார். ஆனால் விவேக்கிற்கு முன்பு வைகைப்புயல் வடிவேலு தான் இந்த படத்திற்கு கமிட்டாகி இரண்டு நாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளாராம்.

அப்போது வடிவேலு ஸ்கிரிப்டில் இல்லாததையும் டைமிங்க்கு ஏற்றாற்போல் நடிப்பதால், அவருடைய அந்த நடிப்பு மற்ற நடிகர் நடிகைகளை தூ க் கி சாப்பிடும் அளவுக்கு இருந்ததால் பீதியடைந்த தனுஷ்,

‘அண்ணா ஸ்கிரிப்ட்டில் இருப்பதை மட்டும் நடியுங்கள்’ என்று வடிவேலுடன் தனுஷ் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாராம். இதனால் கோபமடைந்த வடிவேலு தனுஷின் மூஞ்சிக்கு நேராகவே, ‘இதில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை’ என்று இயக்குனரிடம் தெரிவித்து கிளம்பி விட்டாராம்.

அதன் பின்புதான் அந்த வாய்ப்பு விவேக்குக்கு கிடைத்ததாம். இந்நிலையில் படிக்காதவன் திரைப்படத்தில் தனுஷுடன் வடிவேலு நடித்த ஒருசில காட்சியின் புகைப்படமானது தற்போது சமூக வலைதளங்களில், அவருடைய ரசிகர்களால் வியந்து பார்க்க வைக்கிறது.

ஒருவேளை ‘படிக்காதவன்’ படத்தில் வடிவேலுடன் தனுஷ் இணைந்து நடித்திருந்தால் வித்தியாசமான காம்பினேஷனில் காமெடி படம் உருவாகி இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இந்த வாய்ப்பை இருவரும் தவற விட்டு விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

உங்க ரேட் எவ்வளவு? மோ ச மான புகைப்படத்தை பதிவிட்டதால் சி க் கித் தவிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ பட வில்லனின் மகள்!!

இமைக்கா நொடிகள்……

லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட்டடித்த படம் தான் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில் வி.ல்ல.னாக ந.டி.த்.து மி.ர.ள வி ட் டிருப்பார் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப்.

இவருடைய மகள் ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடை அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு க.டு.ம் விமர்சனத்திற்கு உள்ளானார்.

இதைத்தொடர்ந்து சிலர் இவருக்கு தொடர்ந்து க.ற்.ப.ழி.ப்.பு மி.ர.ட்.ட.லும் வி.டு.த்து.ள்ளனர். அதுமட்டுமில்லாமல் ‘உங்க ரேட் எவ்வளவு?’

என்று கேட்டவருக்கு ப.தி.லடி கொடுத்த ஆலியா, ‘என்னுடைய மோ.ச.மா.ன உ.டை புகைப்படத்திற்கு இ.ழி.வான மற்றும் அருவருப்பான கருத்துக்களை பெற்று வருகிறேன்.

என்னுடைய புகைப்படத்தை நீ.க்.கி.விட்டு அதன்பின் உங்களுடைய அ.வ.தூறான. கருத்தை பு.ற.க்கணிக்க முடிவு செய்தாலும், இதைப் பற்றி உங்களுடன் பேச வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய நாட்டில் பெண் பா.லி.ய.ல் ரீ.தி.யா.க து.ன்.புறு.த்.த.ப்.பட்டு, பின்பு அவர்களுக்காக மெ.ழு.கு.வ.த்தி ஏ.ற்.றி ஊ.ர்.வ.லம் செ.ய்.வா.ர்கள்.

ஆனால் அந்தப் பெ.ண் உ.யி.ரோ.டு இருக்கும்போது, அவளை பா.து.காக்.க த.வ.றி வி.டு.கிறோம். ஆகையால் இது போன்ற கே.வ.ல.மா.ன செ.ய.லை நிறுத்திவிடுங்கள்’ என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் குட்டி ஐஸ்சுவா இது.? நம்பவே முடியல, மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!

ஸ்ரேயா சர்மா…….

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா சர்மா.

அந்தப் படத்தில் உள்ள பாடல்களை இன்று வரை நம்மால் எப்படி மறக்க முடியாதோ, அதேபோல்தான் அந்தப்படத்தின் ஐஸ்வர்யா ரோலையும் மறக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு செம க்யூட்டான ரியாக்சன்களை அள்ளித் தெளித்து இருப்பார் ஸ்ரேயா.

மேலும் ஸ்ரேயா சிறுவயதிலிருந்தே பெரிய ஹீரோயினாக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்ததால், முட்டி மோதி விடாமுயற்சியுடன் தெலுங்கில் ‘காயகுடு’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதால் ஸ்ரேயா மேலும் சில வாய்ப்புகளை டோலிவுட்டில் பெற்றார்.

அதை தொடர்ந்து ஸ்ரேயா நாகார்ஜுனாவின் தயாரிப்பில் ‘நிர்மலா கான்வென்ட்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் டோலிவுட்டின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனால் தற்போதும் ஸ்ரேயா சர்மாவிற்கு தெலுங்கில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இருப்பினும் படவாய்ப்புகள் குறைந்து இருப்பதால் ஸ்ரேயா சர்மா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ரேயா சர்மா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டு இருக்கும்புகைப்படத்தில் செம கிளாமராக காட்சியளிக்கிறார். இதைப் பார்க்கும் ரசிகர்கள், ‘தேனில் முக்கிய எடுத்த ஆப்பிள் போலவே இருக்கிறீர்களே!’ என்று வர்ணித்து வருகின்றனர்.

விஜய்யுடன் இணையும் சிவகார்த்திகேயன்.. தளபதி 65 வெறித்தனமான அப்டேட்!

சிவகார்த்திகேயன்…..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் தளபதி ரசிகர்கள் வெ றித்த னமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்ததோடு, விஜய்க்கு பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்ற பெயரையும் பெற்றுத்தந்தது.

இந்தப்படத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு திரை விருந்தை படைத்தார். அதேபோல் தளபதி விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 65வது படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் ஏற்கனவே நெல்சன் இயக்கிய படங்களில் சிவகார்த்திகேயன் பாடல் எழுதி சூப்பர் ஹிட் அடித்தது. அதாவது கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ பாடல், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’, ‘சோ பேபி’ ஆகிய பாடல்கள் அனைத்தும் சிவகார்த்திகேயன் எழுதியதே.

அதேபோல் நெல்சன் அடுத்ததாக இயக்கும் தளபதி 65 படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல் எழுத உள்ளாராம். எனவே விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் தளபதி 65 படத்தில், தளபதி விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இணையப் போவதை அறிந்த அவர்களது ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

கொட்டும் மழையில் புல்லட்டில் பறக்கும் அருள்நிதி.. ஆர்வத்தை தூண்டும் டைரி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

அருள்நிதி…

சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் தமிழ் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அருள்நிதி. அருள்நிதி நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும்.

அந்த வகையில் சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் படம் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக டைரி என்ற த்ரில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அருள்நிதி.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே ஒரு விதமான எதிர்பார்ப்பும் இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது. போஸ்டரே பல்லாயிரம் கதைகளை கூறுகிறது.

தற்போது டைரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அருள்நிதி யூடியூப் எருமசாணி புகழ் விஜய் இயக்கத்தில் ஒரு கல்லூரி படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப்படமும் காமெடி கலந்த த்ரில்லர் என கூறுகின்றனர். இப்படி படத்திற்கு படம் தன் நடிப்பை வழங்கி வருகிறார் அருள்நிதி. அதுமட்டுமில்லாமல் திரில்லர் படங்களுக்கு அருள்நிதி தான் சரியான தேர்வு என பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முடிவு செய்துவிடுகின்றனர்.

அந்த அளவுக்கு திரில்லர் படங்களில் தன்னுடைய நடிப்பால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை ரசிகர்களுக்கும் புகுத்துவதில் அருள்நிதி கில்லாடிதான். இன்னிசை பாண்டியன் இயக்க பொல்லாதவன் ஆடுகளம் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் டைரி படத்தை தயாரித்துள்ளார்.

தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹேக்டே.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய நடிகை..!

பூஜா ஹேக்டே…

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்தின் மேல் பெரிதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஆம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து கதாநாயகியாக யார் நடிக்க போகிறார் என்று கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.

இதில் பூஜா ஹேக்டே, ரஷ்மிகா மந்தனா என இருவரின் பெயர்கள் பெரிதும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹேக்டே முதல் முறையாக தளபதி 65 படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் ” அந்த படத்தில் நான் நடித்தால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். நான் எனது திரையுலக பயணத்தை தமிழில் இருந்து தான் ஆரம்பித்தேன். இந்த விஷயம் நடக்கும் என நான் நம்புகிறேன் என்று ” நடிகை பூஜா ஹேக்டே கூறியுள்ளாராம்.

விக்னேஷ் சிவன் படத்தில் கதாநாயகி ஆகும் ஜோனிடா காந்தி!

ஜோனிடா காந்தி…

பிரபல பாடகியான ஜோனிடா காந்தி விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

இயக்குனராக அறியப்பட்ட நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இப்போது தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் உருமாறியுள்ளார். தனது ரௌடி பிக்சர்ஸ் மூலமாக ராக்கி, கூழாங்கல் மற்றும் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களை வாங்கியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை தயாரித்து வரும் அவர் இப்போது வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் எனும் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினாயக் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் நடித்த கே கே நடிக்கிறார். கதாநாயகியாக பிரபல பாடகியான ஜோனிடா காந்தி நடிக்க உள்ளார்.

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டாக்டர் படத்தின் செல்லம்மா படத்தின் பாடல் வீடியோவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.