வலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

வலிமை…

எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் படம் வலிமை.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை ஹுமா குரேஷி மற்றும் வில்லனாக தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் First லுக் கூடிய விரைவில் வெளியாகும் என வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தல அஜித்தின் வலிமை படம் வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வெளியாக வாய்ப்புகள் அதிகம் என சில தகவல் வெளியாகியுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக..

முன்னாடி ஓபன்னாக விட்டு புகைப்படம் வெளியிட்ட யாஷிகா..!

யாஷிகா ஆனந்த்…

தமிழ் சினிமாவின் தற்போது க.வ.ர்.ச்.சி நடிகை என்றால், அனைவரது நினைவுக்கும் வருவது யாஷிகா ஆனந்த்.

இவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் இருக்கிறது.

ஏனென்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் க.வர்.ச்சி நாயகியாக வலம் வர தொடங்கிய யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எ.திர்.பார்ப்பது க.வ.ர்.ச்சிதான்.

அதற்கு ஏற்றார் போல் இவர் பெரிய, சிறிய நடிகர் என பாரபட்சம் காட்டாமல் நடித்து வருகிறார். இதனாலேயே இவருக்கு எக்கச்சக்க படவாய்ப்புகள் வந்து சேர்கிறது. தற்போது கூட எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

எனவே யாஷிகா ஆனந்த் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், க.வ.ர்ச்.சி நடிகையாகவும் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் முன் பக்கமாக ஜன்னல் வைத்து க.வ.ர்.ச்சியை கண்ணா பின்னான்னு காட்டும் அளவுக்கு போட்டோ ஷூட்டை நடத்தி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் கண்ணிமைக்காமல் பார்ப்பது மட்டுமல்லாமல், எக்கச்சக்க கமெண்ட்டுகளையும் தட்டி விடுகின்றனர்.

கல்யாணத் தேதியை குறித்த நயன்தாரா.. தலைகால் புரியாத கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்..!!

நயன்தாரா-விக்னேஷ் சிவன்…

குறைந்தது இதுவரை சமூகவலைதளத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு பத்து முறையாவது திருமணம் செய்து வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை இருவரது கல்யாணம் பற்றிய செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கும்.

ஆனால் மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து நயன்தாரா கடவுள் மற்றும் ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்ததாக தகவல்கள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜோசியர் என்ன சொன்னாலும் அதை தவறாமல் செய்து வருகிறாராம்.

அப்படி ஒரு ஜோசியர் விக்னேஷ் சிவனை விட உன்னை புரிந்து கொள்ளும் வேறு ஆண்மகன் கிடைக்கப்போவதில்லை என அந்த ஜோசியர் சொன்ன பிறகுதான் விக்னேஷ் சிவனை கணவராக மாற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்தாராம் நயன்தாரா.

நயன்தாராவின் வாழ்க்கையில் காதல் சர்ச்சைகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. ஒருவேளை ஜோசியக்காரர் மாற்றி கூறியிருந்தால் விக்னேஷ் சிவனை கழட்டி விட்டு போகவும் கொஞ்சம் கூட யோசித்திருக்கமாட்டார் நயன்தாரா.

இருவருக்கும் திருமணம் நடக்குமா என பல வருடமாக கனவு கண்டுகொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு தற்போது அந்த கனவு பலிக்கும் நேரம் வந்துவிட்டதாம். சமீபத்தில் நயன்தாரா ஒரு ஜோசியரிடம் தன்னுடைய கல்யாணத்துக்கான தேதியை கேட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவரும் மார்ச் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியை குறித்து கொடுத்து விட்டாராம். இந்த செய்தி விக்னேஷ் சிவனுக்கு சொல்ல, தலைவனுக்கு ஏகபோக சந்தோசம். இந்த முறையாவது சொன்னபடி திருமணம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

த்ரிஷ்யம் 3 கிளைமாக்ஸ் ரெடி.. த்ரிஷ்யம் 2 ரிலீஸான இரண்டாவது நாளே தூது விட்ட இயக்குனர்!!

த்ரிஷ்யம்…

2013ஆம் ஆண்டு த்ரிஷ்யம் என்ற படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு எல்லா இடத்திலும் சூப்பர் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் த்ரிஷ்யம் 2 படம் வெளியானது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் முதல் பாகத்தை விட சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் தற்போது திரிஷ்யம் 2 படமும் அனைத்து மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளது.

ஹாலிவுட் படங்களில் ஒரு கதையை பல படமாக எடுப்பது போல தற்போது மலையாள சினிமாவில் த்ரிஷ்யம் படத்தை பல படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அந்த வரிசையில் அடுத்ததாக த்ரிஷ்யம் 3 திரைப்படம் விரைவில் உருவாக உள்ளது.

அதற்கேற்றாற்போல் த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் சமீபத்திய பேட்டியில் திரிஷ்யம் 3 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் உருவாக்கி விட்டதாகவும், அது மோகன்லாலுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைக்கு கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டுமே உருவான நிலையில் அதனை எப்படி விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்ற திரைக்கதையை இனிமேல் தான் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் ஜீத்து ஜோசப். இந்நிலையில் தற்போதைய த்ரிஷ்யம் 3 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.

கொஞ்சம் கூட யாருமே எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் காட்சிகளை வைத்து மொத்த பேரையும் கவர்ந்து விட்டார் ஜீத்து ஜோசப். த்ரிஷ்யம் 3 படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றியடையும் என நம்பலாம். த்ரிஷ்யம் 3 படம் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம்.

456 கோடி வசூல் கொடுத்த மெகாஹிட் இயக்குனருடன் கூட்டு சேர்ந்த விஜய் சேதுபதி.. மாஸ்டருக்கு பிறகு பவானி வேறலெவல்!!

விஜய் சேதுபதி…

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்க்கு மார்க்கெட் உயர்ந்ததோ இல்லையோ விஜய் சேதுபதிக்கு மாஸ்டர் படம் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியுள்ளது. பவானி கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு தெற்கிலிருந்து வடக்கு வரை தயாரிப்பாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.

அதே சமயத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பண்ணா திரைப்படத்தில் ராயணம் கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்தது. இதனால் விஜய் சேதுபதிக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் சம்பளமும் தாறுமாறாக உயர்ந்து விட்டது.

தற்போது தமிழில் பத்து படங்களில் ஹீரோவாகவும், தெலுங்கில் சில படங்களில் வில்லனாகவும் மேலும் ஹிந்தியில் இரண்டு படங்களும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மேலும் ஹிந்தியில் இருந்து ஒரு பெரிய பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரேஷி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் அந்தாதூன். தற்போது இந்த படத்தை தமிழில் பிரசாந்த் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்.

அந்தாதுன் ஹிந்தி படத்தை ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கியிருந்தார். தற்போது அடுத்ததாக ஸ்ரீ ராம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளார்களாம். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் மூன்றாவது பாலிவுட் படம் ஆக மாறியுள்ளது.

போகிற போக்கை பார்த்தால் உலக அளவில் புகழ்பெற்ற தனுசை விரைவில் ஓரங்கட்டி விடுவார் போல விஜய் சேதுபதி. தனுஷ் பல வருடங்களாக இந்தி சினிமாவில் இருந்தாலும் தற்போது வரை வெறும் மூன்று படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்திற்கு பிறகு வெறும் ஒரே மாதத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

5 நாட்களுக்கு கோடியில் சம்பளம் கேட்ட பிரபலம்.. பிசாசு-2 படத்தின் மொத்த பட்ஜெட்டே அவ்வளவுதான்!!

பிசாசு 2…

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தான் நடிக்க வேண்டும் என்ற பார்வையை மாற்றி, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பினை வெளிக்காட்டி தற்போது உச்ச நாயகனாக விளங்குபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் தற்போது தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என ஒரு ரவுண்ட் அடித்து வருகிறார். இந்நிலையில் சைக்கோ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு பிறகு தற்போது மிஷ்கின் தன்னுடைய முந்தைய சூப்பர் ஹிட் படமான பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை பிசாசு2 என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

எனவே விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகளை ஐந்து நாட்களில் எடுத்து முடிக்க மிஷ்கின் முடிவு செய்துள்ளாராம். அதற்கு விஜய் சேதுபதிக்கு ரூ. 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்ட உள்ளதாம்.

அதாவது படத்தின் பட்ஜெட்டின் 50 சதவீத தொகையை விஜய்சேதுபதிக்கு சம்பளமாக கொடுக்க உள்ளதால், படக்குழு திக்குமுக்காடி உள்ளது.

இருப்பினும் விஜய்சேதுபதியை இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வைக்க வேண்டும் என்பதில் இயக்குனர் மிஷ்கின் தெளிவாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

விஜய்யிடம் எஸ் ஏ சந்திரசேகர் வைத்த கோரிக்கை.. அப்பாவை கெஞ்ச வைக்கும் தளபதி!!

தளபதி விஜய்…

தளபதி விஜய்யின் சினிமா கேரியரை பொருத்தவரையில் துப்பாக்கி படம் வரை விஜய்க்கு எல்லாமுமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தான். விஜய்யின் ஹீரோ ஆசையை நிறைவேற்ற நஷ்டமானாலும் பரவாயில்லை என ஆரம்ப கட்டத்தில் பல படங்களை எடுத்தார் எஸ் ஏ சந்திரசேகர்.

பூவே உனக்காக படத்திற்கு பிறகுதான் விஜய் அடுத்தடுத்து வெளி தயாரிப்பு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அப்போதும் விஜய்க்கு எந்த மாதிரி கதை அமைய வேண்டும் என்பதை எஸ் ஏ சந்திரசேகர் தான் முடிவு செய்வாராம். ஏன் துப்பாக்கி படம் கூட எஸ் ஏ சந்திரசேகர் உறுதி செய்த கதை தான்.

ஏ ஆர் முருகதாஸிடம் விஜய்க்காக ஒரு கதையை ரெடி செய்யும்படி சொல்லி அதை வாங்கி விஜய்யை அதில் நடிக்க வைத்து மிகப் பிரம்மாண்ட வசூல் நாயகனாக மாற்றிவிட்டார். ஆனால் துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் தானாகவே கதை தேர்வுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இது சம்பந்தமாக அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்கள் நடந்துள்ளன.

இடையில் மகனுக்கு முதலமைச்சர் ஆசையை காட்டி மகனை படாதபாடு படுத்திவிட்டார் எஸ் ஏ சந்திரசேகர். சமீபத்தில் கூட விஜய் எஸ்ஏ சந்திரசேகர் ஆரம்பிக்கும் கட்சிக்கு தன்னுடைய ரசிகர்கள் எந்த ஒரு ஆதரவும் கொடுக்கக் கூடாது என விஜய் அறிக்கை விட்டது நினைவிருக்கலாம். சமீபகாலமாக விஜய்க்கும் எஸ்ஏ சந்திரசேகரும் சண்டை முற்றி விட்டதாக தெரிகிறது.

இதனால் அப்பாவை வீட்டுப் பக்கமே சேர்ப்பதில்லையாம் விஜய். சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ் ஏ சந்திரசேகர் விஜய்யை பார்த்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது எனவும், அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். விஜய் தன்னை சந்திப்பதை நிராகரித்த வருகிறார் எனவும் கூறியுள்ளார்.

விஜய் சினிமாவில் இத்தனை உயரம் வளர்வதற்கு உதவி செய்த என்னையே விஜய் மறந்து விட்டாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் இப்படி மாறுவதற்கு அவரைச்சுற்றி உள்ள ஒரு கூட்டம் தான் காரணம் எனவும் இக்கு வைத்து பேசியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர். மாய வலையில் இருந்து மீண்டு வந்து அப்பாவை அணைத்துக்கொள்ளடா மகனே என எஸ் ஏ சந்திரசேகர் ஒரே புலம்பலாம்.

விக்ரமின் முரட்டு ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி சேர்ந்த சிம்பு..!

சிம்பு…

கடந்த சில மாதங்களாகவே வாரத்திற்கு ஒரு படத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு உடல் எடையை குறைத்த பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதை பார்த்து முன்னணி நடிகர்களே ஆச்சரியப்படுகிறார்களாம்.

ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டிய சிம்பு தற்போது அதே தயாரிப்பாளர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறார். இதனால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் முன்னாடி போல் ஏனோதானோ என படம் நடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

அதனால் தன்னுடைய ஒவ்வொரு பட இயக்குனரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் சுமாரான வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, ராம் இயக்கத்தில் ஒரு படம் என ஒவ்வொரு படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது சிம்பு விக்ரமின் சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் கூட்டு சேர்ந்துள்ளார். விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து 2016ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் இருமுகன். இந்த படத்தை இயக்கியவர் ஆனந்த் சங்கர்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இதுவரை அரிமா நம்பி, நோட்டா போன்ற படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. அடுத்ததாக விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி படம் விரைவில் வெளியாக உள்ளது. எனிமி படத்திற்கு பிறகு ஆனந்த் ஷங்கர் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் சிம்பு காட்டில் இனி அடைமழை தான். சிம்பு இனி தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை குவித்து சில வருடங்களிலேயே முன்னணி இடத்தைப் பிடித்துவிடுவார் என கோலிவுட் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறதாம்.

அழகான லுக்! கண்ணை பறித்த சாய் பல்லவி! பலரும் எதிர்பார்த்த போஸ்டர் இதோ!

சாய்பல்லவி…

ரவுடி பேபி பாடல் ஒலிக்கும் இடங்களில்லெல்லாம் நடிகை சாய்பல்லவியின் நினைவு ரசிகர்களுக்கு வந்து போகும் தானே. விசேஷ வீடுகளில் மேள வாத்தியம், பேண்ட் இசைக்குழுவினர் கூட இப்பாடலை தவறாமல் வாசிக்கிறார்கள்.

தமிழில் இப்பாடல் போல தெலுங்கிலும் நானி காரு பாடலுக்கு அவர் நடனம் மிகவும் ஃபேமஸ். தெலுங்கு சினிமாவில் சாய் பல்லவிக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்து வருகின்றன.

அடுத்ததாக நடிகர் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். இப்படத்திலிருந்து #SarangaDariya என்ற பாடல் லிரிக் வீடியோ வரும் ஃபிப்ரவரி 28 ல் வெளியாகவுள்ளது.

சைதன்யாவின் மனைவி நடிகை சமந்தா இதனை வெளியிடுகிறார். இதில் சாய்பல்லவியின் நடனத்தை காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இப்பாடலுக்கான போஸ்டரில் சாய் பல்லவியின் அழகான லுக் பலரையும் ஈர்த்துள்ளது.

மாஸ்டர் படத்தில் செய்ததை வலிமைக்கும் செஞ்சுடுங்க.. ஆடர் போட்ட அஜித்!!

வலிமை……….

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் வலிமை. இன்னும் பத்து நாள் மட்டுமே ஷூட்டிங் பாக்கியுள்ளதால் படத்தின் வேலைகள் அரக்கப்பரக்க நடந்து வருகின்றன.

ஆனால் அஜித் மட்டும் எந்த ஒரு அவசரமும் இல்லாமல் பொறுமையாக காய் நகர்த்தி வருகிறாராம். மேலும் நீண்ட நாட்கள் கழித்து தான் நடிக்கும் படம் வெளிவருவதால் கண்டிப்பாக ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.

அந்த வகையில் அஜித் முதல் முறையாக ரிலீஸ் விவகாரத்தில் தலையிட்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் வலிமை படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும், அப்டேட் எப்போது கொடுக்க வேண்டுமென்பதில் விஜய் படம் போலவே செயல்பட உள்ளாராம்.

எப்போதுமே அஜித் படம் அப்டேட்டுகள் முன்னறிவிப்பின்றி வெளியாகும். ஆனால் இந்த முறை சரியாக நேரம் குறித்து முன்னரே ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வலிமை படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்த உள்ளார்களாம். மேலும் மாஸ்டர் படம் ரிலீஸ் விவகாரத்தில் கையாண்ட அனைத்து முறைகளையும் அஜித் வலிமை படத்தில் பயன்படுத்திக்கொள்ள உள்ளாராம்.

அந்த வகையில் படம் ரிலீஸாகி அடுத்த பதினைந்தாவது நாளில் ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என அஜித் கூறியுள்ளதாக தெரிகிறது.

மாஸ்டர் படம் வெளியான அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடதக்கது. இந்நிலையில் வலிமை படத்தையும் அதேபோல் ரிலீஸ் செய்வதற்காக முக்கிய ஒடிடி தளங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

அதேபோல் இதுவரை இல்லாத அளவுக்கு வலிமை படத்தின் விளம்பரங்கள் எக்கச்சக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வலிமை படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் தன்னுடைய மார்க்கெட்டை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக இருப்பது தெரியவருகிறது.