நடிச்ச 14 படத்தில் மூனு தான் ஓடுச்சு.. ஆனாலும் 9 படம் ரிலீஸுக்கு வெயிட்டிங்.. எப்படி ஜிவி?

ஜிவி பிரகாஷ்…

சமீபகாலமாக படங்கள் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ. மொக்கை படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு கூட எப்படி ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது தெரியாமல் கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் மண்டையை பிய்த்துக் கொள்கிறார்களாம்.

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர்கள் பலர் தற்போது சினிமாவில் இல்லை. புதிய புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இளம் நடிகர்கள், ஓரளவு பிரபலமான நடிகர்கள் ஆகியோரை வைத்து கொண்டு வருடத்திற்கு மூன்று நான்கு படங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இதுவரை 14 படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் மூன்று படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்களே வெற்றி படங்கள். நாச்சியார் படம் நடிப்புக்கு பெயர் வாங்கினாலும் வியாபார ரீதியாக தோல்வி தான்.

இப்படி 14 படங்களில் நடித்து வெறும் மூன்று படங்கள் மட்டுமே வெற்றி கொடுத்த ஜிவி பிரகாஷுக்கு மட்டும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கிறது என பலரும் யோசித்து வருகிறார்களாம். ஜிவி பிரகாஷ் இசை அமைப்பதில் கில்லாடிதான். ஆனால் நடிப்பில் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்.

பெரும்பாலும் ஜிவி பிரகாஷின் படங்களில் 18+ வசனங்களும் காட்சிகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. படத்தில் குறைந்தது ஒரு உதட்டோடு உதடு முத்தம் காட்சியாவது வைத்து நடித்து வருகிறார். இதனாலேயே குடும்பத்தோடு ஜிவி பிரகாஷ் படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை. இளம் ரசிகர்களின் வரவேற்பும் திரையரங்குகளை பொருத்தவரை குறைவுதான்.

இருந்தும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, 4ஜி, ஜெயில், காதலை தேடி நித்தியானந்தா, காதலிக்க யாரும் இல்லை, பேச்சிலர், டிராப் சிட்டி போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. அதில் ஒன்று ஹாலிவுட் படம். இப்படி தோல்வி படங்கள் பல கொடுத்தாலும் வாய்ப்புகள் அதிகமாக வைத்திருக்கும் ஜிவி பிரகாஷ் குடும்பங்களை கவரும் வகையில் படம் நடித்தால் அவரது வளர்ச்சி இன்னும் நன்றாக இருக்குமே என்பதே தாழ்வான கருத்து.

விஸ்வரூபம் எடுக்கும் விஜய் டிவி.. விழி பிதுங்கி நிற்கும் சன் டிவி.. நம்பர் 1 இடத்துக்கு ஆப்பு!

விஜய் டிவி-சன் டிவி…

சமீபகாலமாக சன் டிவி நிறுவனம் ரசிகர்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகள் செய்யாதது அவர்களுக்கு பெரும் பி.ன்.னடைவை கொடுத்துள்ளதாம். மேலும் பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த சாதனை விரைவில் ப.றி.போ.கும் அ.பா.ய.ம் உள்ளதாம் சன் டிவி.

ஒரு காலத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விதவிதமான நிகழ்ச்சிகளை வழங்கியது சன் டிவி நிறுவனம். தங்க வேட்டை, டீலா நோ டீலா, அசத்தப்போவது யாரு, பெப்ஸி உங்கள் சாய்ஸ் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆனால் சமீபகாலமாக முற்றிலும் சன் டிவி சீரியல் ம.ய.மாக மாறிவிட்டது. காலை முதல் இரவு வரை எந்நேரமும் சன் டிவியில் சீரியல் தான். இதனாலேயே ரசிகர்கள் ஒரு கட்டத்தில் சன் டிவி வெ.று.த்.து ஒ.து.க்.கி விட்டனர்.

சீரியல்களாவது சுவாரசியமாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் குப்பையாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து சன் டிவி நிறுவனம் தன்னுடைய சன் மியூசிக் சேனலில் டிக் டாக் மற்றும் யூடியூப் பிரபலங்கள் போன்றவர்களை வைத்து ஒ.ப்பே.ற்.றி கொ.ண்.டி.ரு.க்கிறது.

ஒரு காலத்தில் சன் மியூசிக் என்றாலே ரசிகர்களுக்கு அப்படி ஒரு குஷியாக இருக்கும். ரியோ ராஜ், அஞ்சனா, மணிமேகலை போன்றோர் கலகலப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தனர். விஜய் டிவி சன் டிவியின் இந்தச் சரிவை பயன்படுத்தி தொடர்ந்து நல்ல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து வருகிறது.

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, பிக் பாஸ், காமெடி ஷோ என வெரைட்டியாக மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். இதனாலேயே சமீபகாலமாக விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் பல மடங்கு உயர்ந்து விட்டதாம். விரைவில் சன் டிவியின் நம்பர் ஒன் இடம் விஜய் டிவியிடம் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக டெலிவிஷன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விளங்காத இயக்குனருடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேரும் தனுஷ்..!

தனுஷ்…

தனுஷ் தொடர்ந்து நல்ல நல்ல இயக்குனர்களுடன் சிறந்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திடீரென பழைய சுமாரான மாஸ் இயக்குனருடன் சேர்ந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

படத்திற்கு படம் தனுஷின் மார்க்கெட் வேற லெவலில் எகிறிக் கொண்டிருக்கிறது. மேலும் கண்டெண்ட் திரைப்படங்களை வைத்துக்கொண்டு 100 கோடி வசூல் செய்வதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அதனை அசுரன் படத்தின் மூலம் அசால்டாக செய்தவர்தான் தனுஷ்.

அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படம் ரெடியாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. கர்ணன் படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை பெரிய அளவில் எதிர்பார்க்க வைக்கிறது.

மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற கேங்க்ஸ்டர் படம் ரெடியாகி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. மே 1 ஆம் தேதி வெளியாக போவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்படி அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனது சுமாரான வெற்றிப்படம் கொடுத்த பாலாஜி மோகன் என்பவருடன் மீண்டும் இணைந்துள்ளது தனுஷ் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தனுஷை வைத்து மாரி என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தாலும் அதைத் தொடர்ந்து வெளியான மாரி 2 திரைப்படம் படு குப்பையாக இருந்தது. தற்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தயவுசெய்து தனுஷ் இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

மீண்டும் தளபதி விஜய்யுடன் இணையும் இயக்குனர் அட்லீ..! மறைமுகமாக அவர் அளித்துள்ள பதில்..!

தளபதி விஜய்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி 66 படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி இப்போதே பெரியளவில் பேசப்பட்டு வருகிறது, அதில் இயக்குனர்கள் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் பெயர்கள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இயக்குனர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யின் வீடியோ ஒன்றை பதிவிட்டு ஹார்ட் சிம்பல் போட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் தளபதி 66 படத்தை நீங்களே தான் இயக்க வேண்டும் என கூறிவருகின்றனர்.

ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. கர்ணனுக்கு அப்புறம் தானா?

தனுஷ்…

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் ப.ஞ்.சா.ய.த்து இன்னமும் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் ஜகமே தந்திரம் ரிலீஸ் வி.வ.கா.ரத்தில் தனுஷ் அ.தி.ரு.ப்தியில் இருப்பதுதான்.

தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் முதல் முறையாக உருவான படம் ஜகமே தந்திரம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் எ.தி.ர்பா.ர்ப்பில் இருந்தனர். கே.ங்.ஸ்.டர் கதையில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

விஜய்யின் மாஸ்டர் படம் வெளியான போது கூட தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விரைவில் ஜகமே தந்திரம் படத்தை திரையரங்குகளில் கொ.ண்.டாடுவோம் என்ற தகவலை ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொ.ண்.டார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் தியேட்டரில் வெளியிட்டால் ஜகமே தந்திரம் படம் எ.தி.ர்பா.ர்.த்த கலெக்சன் வருமா என யோசித்த படத்தின் தயாரிப்பாளரான ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகுமார் நேரடியாக ஜகமே தந்திரம் படத்தை கிட்டத்தட்ட 55 கோடிக்கு நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு விற்றுவிட்டார்.

இது தனுஷுக்கே பெரும் அ.தி.ர்.ச்.சி தான். இது சம்பந்தமாக தயாரிப்பாளரிடம் கருத்து வே.று.பா.டு.கள் ஏற்பட்டது. இதனால் தற்போது வரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் டீசரை கூடவே ப.கி.ர்ந்து கொ.ள்.ளா.மல் இருக்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் வருகின்ற மே 1ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாம். கடந்த வருடம் மே மாதம் 1ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவிருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் சரியாக ஒரு வருடம் கழித்து அதே தேதியில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பே ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

8 வருஷத்திற்கு முன்பே பெட்ரோல் விலை உயர்வை கிண்டலடித்துள்ள சிவகார்த்திகேயன்.. செம நக்கல் பதிவு!

சிவகார்த்திகேயன்…

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக உயர்ந்திருக்கிறார்.

விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே காமெடி சரவெடி பட்டையை கிளப்பும். அதிலும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்காதவர்களே கிடையாது.

அப்படி அனைவரையும் தன்னுடைய காமெடி நடிப்பை ரசிக்க வைத்து தற்போது பக்கா கமர்சியல் ஹீரோவாக மாறியுள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த 2012ஆம் ஆண்டு பெட்ரோல் உயர்வைக் க.ண்.டி.த்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் கடைக்காரர் பெட்ரோல் எவ்வளவு என்று கேட்பது போலவும், அதற்கு பைக் ஓனர், இரண்டு ரூபாய்க்கு கொஞ்சம் பெட்ரோலை பைக் மேல் தெளித்து விடு, வண்டியை கொ.ளு.த்.திவி.ட்டு போகிறேன் என்று நக்கல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தற்சமயம் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் இந்த பதிவு ரசிகர்களிடையே செம வரவேற்பு பெற்று 8 வருடம் கழித்து மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் அன்று கொடுத்த கவுண்டர் இன்று வேலை செய்கிறது என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

வழக்கம்போல் இந்த பதிவையும் சிந்திக்காமல் சிரித்து விட்டு கடந்து செல்லும் இளைய தலைமுறையினர் ஒரு முறை சிந்தித்து இந்த பதிவில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய ஆண் நண்பருடன் நடிகை ஸ்ருதிஹாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம், என்ன செய்து கொண்டு இருக்கிறார் பாருங்க..!

ஸ்ருதி ஹாசன்…

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர்.

இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார், கடந்த சில வருடங்களாக இவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

தற்போது இவர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் பிரபாஸின் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது புதிய ஆண் நண்பரான Santanu உடன் புதிய பாடல் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்! வெளிநாட்டு பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மாஸ்டர்…

மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13 ல் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதை அம்சம் கொண்ட படமாக வெளியானது இளைஞர்களை கொண்டாடவைத்தது.

விஜய் ரசிகர்களுக்கு சொல்லவா வேண்டும். படத்திற்கு சிறப்பு வரவேற்பு அளித்தார்கள்.

தியேட்டர் மூலம் ரூ 240 கோடி வசூலை அள்ளிய மாஸ்டர் ஆன்லைன் ஓடிடி தளத்திற்கும் நல்ல விலைக்கு போனது.

அதிலும் அதிகமானோர் படத்தை பார்த்தனர். இதன் மூலம் நல்ல லாபத்தை தயாரிப்பு நிறுவனம் பெற்றது. வெளிநாட்டிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம்! காமெடி நடிகை, பிக்பாஸ் பிரபலத்தின் வீடியோ!

வாத்தி கம்மிங் …

தளபதி விஜய்யின் படத்தின் பாடல்கள் தூள் கிளப்பிவிடும். மேள தாளங்களோடு ஃபாஸ்ட் பீட் பாடல் போல அமைந்துவிடும், விஜய்யுடன் அதற்கு நன்றாக நடனமாடியிருப்பார்.

அவரின் படங்களில் அப்படியான பாடல்கள் எடுத்து சொல்லி வந்தால் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன், சர்கார் படத்தில் சிம்டாங்காரன், பிகில் படத்தில் சிங்கப்பெண்னே என சமீபத்தில் வந்த படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

இவ்வருடத்தில் ஆரம்பமான ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகி ஹிட் சாதனை செய்துவிட்டது. இதில் வாத்தி கம்மிங் பாடல் வேற லெவல் எனலாம்.

தற்போது நடிகையும் காமெடி பிரபலமுமான Jamie வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடும் நடனத்தை பாருங்கள்..

அதே போல தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 மெஹபூப் இப்பாடலுக்கு ஆடிய நடனத்தின் வீடியோ இதோ..

தனுஷின் ஜகமே தந்திரம் பட டீஸரில் குக் வித் கோமாளி பிரபலம்- எத்தனை பேர் நோட் பண்ணீங்க?

ஜகமே தந்திரம்…

தமிழ் சினிமா நிறைய டான்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்போது நமக்கு முதலில் நியாபகம் வருவது பாபா பாஸ்கர் மாஸ்டர் தான்.

ஏனெனில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலாட்டா, காமெடி, அட்டகாசமான சமையல் என காட்டி மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்து வருகிறார்.

தற்போது இவர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருப்பது தெரிகிறது.

இப்பட டீஸரில் ஒரு பாடலில் பாபா பாஸ்கர் வந்திருக்கிறார்.