நடிகர் விக்ரம் நடிப்பில் மிக பெரிய அளவில் உருவாகவிருந்த திரைப்படம் தான் மஹாவீர் கர்ணா, இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி எ.தி.ர்.பா.ர்.ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அந்த படத்தில் இருந்து நடிகர் விக்ரம் விலகிக்கொ.ண்.டதால், தற்போது சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா என்ற பெயரில் அந்த படத்தை மீண்டும் பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளனர்.
மேலும் அந்த படத்தை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உருக்கவுள்ளதாக நேற்று வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி நடிகர் விக்ரம் அப்படத்தில் இருந்து விலகியுள்ளதால், பாலிவுட் நட்சத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் தற்போது டாப் 5 இடத்தில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் தனுஷ்.
ஆம் இவர் நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட படங்களில் விரைவில் வெளியாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் தனக்கு சொந்தமாக புதிய வீடு ஒன்றை தனது மாமனார் நடிகர் ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் ஏரியாவில் கட்ட பூஜை போட்டார்.
இந்நிலையில் இந்த வீட்டின் முழு மதிப்பு 80 கோடி என தெரிவிக்கின்றனர். ஆம் நடிகர் தனுஷ் தனது சொந்தமான வீட்டிற்காக 80 கோடி வரை செலவு செய்து கட்டி வருகிறாராம்.
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் 50% இருக்கைகளுடன் திரையரங்கில் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
இந்நிலையில் அப்படத்தை தொடர்ந்து தனுஷின் கர்ணன் திரைப்படமும் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. மேலும் அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் மாஸ்டர் படம் குறித்து கூறியுள்ளார்.
ஆம், கர்ணன் படத்தை மக்கள் எப்போது கூட்டம் கூட்டம் திரையரங்கிற்கு வருகின்றனரோ அப்போது தான் அப்படத்தை வெளியிடுவேன் என உறுதியாக இருந்தேன்.
அதனை பூர்த்தி செய்யும் வகையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இதனால் தான் கர்ணன் படத்தை வெளியிட முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.
ஒய் நாட் ஸ்டுடியோஸ், சஷிகாந்த் தயாரிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.
இப்படத்தின் டீசர் நேற்று காலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும், படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.
இதன்குறித்து சமீபத்தில் தான் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து ஜகமே தந்திரம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என உங்களை போல் நானும் நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வெளியான ஜகமே தந்திரம் படத்தின் டீசரில் தனுஷின் பெயரை குறிப்பிடாமல் வெளியாகியுள்ளது.
ஆம் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ், தயாரிப்பாளர் சஷிகாந்த் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என முன்னணி பிரபலங்களின் பெயரை குறிப்பிட்டிருந்த நிலையில், படத்தின் ஹீரோ தனுஷின் பெயரை என போடவில்லை என்று கடுப்பில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன திரைப்படம் தான் மாஸ்டர்.
மாஸ்டர் பட பாடல்கள், டீசர் என இப்படம் சம்மந்தப்பட்ட அனைத்துமே இந்தியளவில் செம ட்ரெண்டானது. சமீபத்தில் வாத்தி கமிங் பாடலுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நடனமாடியது பெரிய அளவில் வைரலானது.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு விஜய்யின் மாஸ்டர் பட டீஸர் வெளியானது, இப்படத்தின் டீஸர் வெளியான நாள் முதலே பல சாதனைகள் படைத்து வந்தது.
அந்த வகையில் தற்போது மாஸ்டர் டீசர் பாகுபலி படத்தின் தெலுங்கு ட்ரைலர் பார்வையாளர்களை விட அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இதனால் தென்னிந்திய அளவில் அதிக பார்வையாளர்கள் பெற்றுள்ள டீஸர் என்ற சாதனையை படைத்துள்ளது மாஸ்டர்.
2012ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்ற டெட் படத்தின் தமிழ் ரீமேக்கான டெடி திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளதாம்.
ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் கடந்த வருடமே உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருந்த திரைப்படம் டெடி. ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் தியேட்டரில் வெளியிடாத முடியாத நிலைமை ஏற்பட்டது.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தற்போது நேரடியாக ஹாட் ஸ்டார் என்ற ஓடிடி இணையதளத்தில் வருகின்ற மார்ச் மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
நீண்ட நாட்களாக வெற்றி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஆர்யாவுக்கு டெடி திரைப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் திடீரென ஹாட்ஸ்டார் தளத்திற்கு சென்றது அவருக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான்.
இருந்தாலும் ரீமேக் படம் என்பதால் இதுவே நல்ல சாய்ஸ் எனவும் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாராம். ஆனால் அடுத்ததாக ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை படம் கண்டிப்பாக தியேட்டரில் தான் வரவேண்டும் என உறுதியாக உள்ளாராம்.
மேலும் மார்ச் 12ஆம் தேதி வெளியாகும் டெடி படத்தை வருகின்ற தமிழ் புத்தாண்டுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்ப பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். சரியாக ஒரு மாத இடைவெளி இருப்பதால் படக்குழுவினர் ஓகே சொல்லி விடுவார்கள் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
தற்போது, உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் திரைப்படமான லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கவனிக்கப்படும் ஹீரோ மற்றும் இயக்குனராக வலம் வந்த அருண்பாண்டியன் கடந்த சில வருடங்களாக நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டு படங்களை விநியோகம் செய்யும் வேலையை செய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவரது உறவினர் மகள் ரம்யா பாண்டியன் என்பவரும் கவனிக்கப்படும் நாயகியாக உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹெலன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அருண்பாண்டியன்.
அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வர முடியவில்லை. அவர் நடித்த படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் எப்படியாவது தன்னுடைய மகளை முன்னணி நாயகியாக உயர்த்திவிட வேண்டும் என இந்த முடிவை எடுத்துள்ளார் அருண்பாண்டியன்.
மலையாளத்தில் வெளியான ஹெலன் திரைப்படம் தந்தை மற்றும் மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம். தற்போது அதே படத்தை தமிழுக்கு ஏற்றவாறு சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து அன்பிற்கினியாள் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர்.
அன்பிற்கினியாள் படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அருண்பாண்டியன் நடிப்பு இந்த ட்ரெய்லரில் வேறு அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனது தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்புகுமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யை தயாரிக்க போகிறது.
அதே போல் தளபதி 65 படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை தயாரிக்க போவது மெர்சல் படம் தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் என சில தரப்பில் இருந்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தளபதி 66 படத்தின் தயாரிப்பாளரிடம் தளபதி விஜய், இப்படத்தை அட்லீ இயக்கட்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு பக்கம் விஜய்யின் முடிவு இப்படியிருக்க, விஜய்யின் ரசிகர்கள் அட்லீ வேண்டாம் என்றும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்ற நிலையில், இது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தான்.
எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்த்து பார்ப்போம் தயாரிப்பாளரிடம் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக.