சீரியலில் நடிக்க வந்த பிக்பாஸ் புகழ் அபிராமி- எந்த தொலைக்காட்சி, சீரியல் தெரியுமா?

அபிராமி…

திரைப்படங்களை தாண்டி மக்களிடம் அதிக வரவேற்பு பெறுவது சீரியல்கள் தான். அதிலும் இந்த கொரோனா லாக் டவுன் தொலைக்காட்சியை அதிக மக்களை பார்க்க வைத்துள்ளது.

லாக் டவுன் முடிந்ததில் இருந்து புத்தம் புதிய சீரியல்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அப்படி புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் சில்லுனு ஒரு காதல்.

இந்த சீரியலில் தற்போது கதாநாயகன்-நாயகி திருமணம் நடக்க இருக்கிறது. அந்த திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார் பிக்பாஸ் புகழ் நடிகை அபிராமி.

அந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

திடீரென்று கமிஷனர் ஆப்பிஸுக்கு சென்ற தல அஜித், என்ன காரணம் தெரியுமா?

அஜித்…

தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் வேண்டி வந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் தல அஜித் பொது இடத்தில் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த செயலை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று தல அஜித் Rifle Shooting பயிற்சிக்காக Rifle Club செல்ல நினைந்து கமிஷனர் ஆப்பிஸுக்கு சென்றுள்ளார்.

மேலும் அங்கிருந்த Rifle Club வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பின்னர் தான் அவருக்கு தெரியவந்துள்ளது.

இதனிடையே தல அஜித்தை கண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துள்ளனர், அவரும் முகம் சுழிக்காமல் அனைவருடன் செல்பி எடுத்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவிக்கும் அவரது மகன்களுக்கும் என்னானது?- முகத்தில் என்ன இது, புகைப்படம் பாருங்க!!

ஜெயம் ரவி…

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு நுழைந்தவர் நடிகர் ஜெயம் ரவி.

ஆரம்பத்தில் தனது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் நடித்துவந்த அவர் பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார்.

அடுத்தடுத்து தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து இப்போது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இப்போது ஜெயம் ரவியின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

அவரும், அவரது மகன்களும் முகத்தில் ஏதோ பூசியிருக்கிறார்கள், முதலில் பார்க்க என்ன இது என பயந்தாலும் பின் அவர்கள் முகத்திற்கு ஏதோ பூசி உள்ளது நன்றாக தெரிகிறது.

தளபதி விஜய்யாக மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் வீடியோ..!

டேவிட் வார்னர்…

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

50 % இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய்யாக அவர் மாறியுள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஆம், தொடர்ந்து Faceapp மூலமாக பிரபல இந்திய நடிகர்களாக அவர் மாறி பதிவிட்டு வரும் வீடியோவை தொடர்ந்து தற்போது இந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த நடிகை நயன்தாரா.. அதற்கு முக்கிய காரணம் அவரின் முன்னாள் காதலர் தானா?

நயன்தாரா……

தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஷாருக்கானின் படத்தில் நடிக்கவும் நயன்தாராவிற்கு வாய்ப்பு தேடி வந்தது.

ஆம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் இடம் பெரும் ஒரு குத்து பாட்டிற்கு நடனமாட நடிகை நயன்தாராவை இயக்குனர் அணுகியுள்ளார்.

ஆனால் இந்த பாட்டிற்கு நடன இயக்குனராக நயன்தாராவின் முன்னாள் காதலர் இருந்ததால், நடிகை நயன்தாரா இப்படத்தில் ஒப்பந்தமாக முடியாது என்று அதிரடியாக கூறிவிட்டாராம்.

இதன்பின் அந்த குத்து பாடலுக்கு நடிகை ப்ரியாமணி நடமாடி வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடு இரவில் போன் செய்து விசாரித்த தளபதி விஜய்..! முக்கிய நடிகர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..!!

தளபதி விஜய்……

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் எஸ்.ஜெ.சூர்யா தளபதி விஜய் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

ஆம், எஸ்.ஜெ.சூர்யா ஸ்பைடர் படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது இரவு 11 மணிக்கு தளபதி விஜய் தொலைபேசியில் அழைத்துள்ளாராம். மேலும் அவர் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ட்ரைலரை பார்த்ததாகவும்.

பின் “எஸ்.ஜெ.சூர்யாகிட்ட விஜய் அவருக்கு பெரிய ரசிகர்னு சொல்லிடுங்க” என கூறினாராம்.

மாஸ்க் கூட அணியாமல் பொது இடத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட தல அஜித்..! வெளியான சமீபத்திய புகைப்படங்கள்..!!

தல அஜித்……

தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அப்டேட்டுக்காக ரசிகர்கள் அனைவரும் வேண்டி வந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் தல அஜித் பொது இடத்தில் வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த செயலை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது தல அஜித் கருப்பு நிற கேப் மற்றும் ஷர்ட்டில் பொது இடத்தில் திடீரென்று காணப்பட்டுள்ளார். அவரை கண்ட ரசிகர்கள் பலரும் சூழ்ந்து அவருடன் செல்பி எடுத்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது நடிகர் கவுண்டமணி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா! இதோ….

கவுண்டமணி…..

ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்து வெளியான ’16 வயதினிலே’ எனும் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் கவுண்டமணி.

இதன்பின் நெற்றிக்கண், வைதேகி காத்திருந்தாள், ஜப்பானில் கல்யாணராமன், கன்னி ராசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி கதாபாத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

கவுண்டமணி தற்போது திரையில் நடிக்கவில்லை என்றாலும், அவரின் காமெடிய ஒவ்வொரு நாளும் மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை மகிழவைத்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் கவுண்டமணி திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது கவுண்டமணி அவருக்கு ஒரு படத்திற்கு 35 லட்சம் சம்பளம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ரசிகர் செய்த செயல்! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சம்பவம்! தேடி வந்த அதிசயம்!

மாஸ்டர்………

மாஸ்டர் கொண்டாட்டம் தொடர்ந்து வருகிறது. விஜய்க்கு பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விஜய்க்கு எப்போதும் ஆதரவாக அவர்கள் இருந்து வருகிறார்.

அண்மைகாலமாக சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் டிவிட்டரில் ஏதாவது சொல்ல அந்த விசயம் பெரும் கவனத்தை பெற்று விடுகிறது.

அப்படியாக திருப்பூரை சேர்ந்த விஜய் ரசிகர்கள் வாத்தி ரெய்டு என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதில் தன் தங்கச்சிகாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இவ்விசயம் அம்மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு சென்று உடனே அந்த நபரின் தங்கைக்கு பள்ளி தேர்வு எழுத ஆவண செய்துள்ளார்.

 

அஜித்தின் வலிமை பட இயக்குனரை சந்தித்த லோகேஷ் கனகராஜ்- புகைப்படத்துடன் இதோ!!

லோகேஷ் கனகராஜ்…..

விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அப்பட வெற்றியை தொடர்ந்து லோகேஷ், கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அந்த வேலைகள் நடந்து வர லோகேஷ் மற்றொரு டாப் ஹீரோ படத்தின் இயக்குனரை நேரில் சந்தித்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை வலிமை பட இயக்குனர் வினோத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை லோகேஷ் ஷேர் செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு வினோத் அண்ணாவை சந்தித்தேன் என பதிவு செய்துள்ளார்.

இதோ டுவிட்டரில் அவர் போட்ட பதிவு,