குக் வித் கோமாளி சிவாங்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தேடிபோய் வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்!!

சிவாங்கி……

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நடிகர்களை விட யூடியூப் மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் அதிகமாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஒரு ரியாலிடி ஷோவாக உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து பலரும் சினிமாவுக்கு வர ஆரம்பித்து விட்டனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ஒரு நிகழ்ச்சியில் எந்த ஒரு போட்டியாளரையும் வெறுக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் மற்றும் சிவாங்கி போன்றோர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். மேலும் சினிமாவிலும் களமிறங்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில் புகழ் ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகளை பெற்றுள்ளார்.

தற்போது அதே வரிசையில் சிவாங்கியும் முன்னணி நடிகரின் பட வாய்ப்பு ஒன்றை பெற்றுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, விஜய் டிவியில் படிப்படியாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தான்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்ற போது கண்டிப்பாக என்னுடைய அடுத்தப் படத்தில் இதிலிருந்து ஒருவருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என கூறியதன் அடிப்படையில் தற்போது சிவாங்கிக்கு அடுத்ததாக நடிக்கும் டான் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்த சிவகார்த்திகேயன் நீண்ட நேரம் சிவாங்கி பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மனதார சிவாங்கியை தங்கச்சியாக ஏற்றுக் கொண்டார் என்பதும் கூடுதல் தகவல்.

ஓவரா கண்டிஷன் போட்ட கணவர்.. திருமணமான பத்தே நாளில் பொட்டியை தூ க் கிட்டு கிளம்பிய நடிகை!!

ரச்சனா நாராயணகுட்டி……

சமீபகாலமாக சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு சீக்கிரமாக திருமணம் ஆகிறதோ இல்லையோ, வெகு விரைவில் விவாகரத்து நடைபெற்று விடுகிறது. இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகளை விவாகரத்து வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல. மொத்த உலக சினிமாவிலுள்ள நடிகைகளின் நிலைமை இப்படித்தான். ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்வது, பிறகு கணவரின் கண்டிஷன் தாங்க முடியவில்லை என பாதியிலேயே பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவது.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் நடிப்பில் வெளியான லைப் ஆப் ஜோசுகுட்டி என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் தான் ரச்சனா நாராயணகுட்டி. மலையாளத்தில் பிரபல நடிகையான இவருக்கு தற்போது வயது 37 ஆகிறது. துணை நடிகையாக மலையாள சினிமாவில் நீண்ட நாட்களாக நடித்து வந்தவர் 2013ஆம் ஆண்டு ஜெயராம் நடிப்பில் வெளியான லக்கி ஸ்டார் படம் தான் நாயகியாக முதல் படம். ஆனால் வெற்றி படம் என்றால் அது லைஃப் ஆப் ஜோசுகுட்டி தான்.

ஆங்கில டீச்சராக இருந்து பின்னர் சீரியலில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை பயன்படுத்தி தற்போது மலையாள சினிமாவில் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வரும் ரச்சனா நாராயணகுட்டி 2011ம் ஆண்டு குடும்பத்தினரால் பார்க்கப்பட்ட மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் அர்ச்சனாவுக்கு நடனத்தின் மீது பெரிய ஆர்வம் இருக்கிறதாம். இதனால் சினிமாவில் நடனம் கற்றுக்கொடுக்க நடிகர்கள் மற்றும் நடிகைகள் கூட பழக வேண்டி இருந்ததாம். ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்களே. அப்படித்தான். நான் நடனம் சொல்லிக் கொடுக்கப் போகிறேன் என நாயகி கூற, வீட்டிலேயே இரு என கணவன் சொல்ல, வந்தது பஞ்சாயத்து. முடிவு விவாகரத்து.

திருமணமான 10 நாளிலேயே விவாகரத்து வரைக்கும் போனது அனைவருக்குமே வருத்தம்தான். இதன் மூலம் ரோசம் உள்ளவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது. இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்த்திருந்தால், ஒருவேளை இருவரும் புரிந்து கொண்டிருப்பார்களோ என்னமோ.

காதலருடன் நெருக்கமாக கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட மடோனா செபாஸ்டின்.. 7 வருட காதலாம்!!

மடோனா செபாஸ்டின்…….

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் தான் மடோனா செபாஸ்டின். அடிப்படையில் பாடகியான இவர் நாயகியாகவும் தடம் பதித்தார்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழில் மடோனா செபாஸ்டின் நடித்த காதலும் கடந்து போகும், கவன், ஜூங்கா, பவர் பாண்டி, வானம் கொட்டட்டும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அடுத்ததாக சசிகுமாருடன் கொம்பு வச்ச சிங்கம்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார் மடோனா செபாஸ்டின்.

28 வயதான மடோனா செபாஸ்டினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் மடோனா கடந்த 7 வருடமாக ராபி ஆபிரகாம் என்பவரை காதலித்து வருகிறாராம். இந்நிலையில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் மடோனா செபாஸ்டின் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டதாம். இன்னும் சில தினங்களில் காதலர்தினம் வர உள்ளதால் தொடர்ந்து ரசிகர்களின் பேவரைட் நடிகைகள் தங்களுடைய உண்மையான காதலரை வெளிக்காட்டி வெறுப்பேற்றி வருகின்றனர்.

இப்பவே இப்படி என்றால் இன்னும் காதலர் தினத்தன்று எப்படி எல்லாம் போஸ் கொடுத்து புகைப்படம் எடுப்பார்களோ தெரியவில்லையே என சிங்கிள்ஸ் நொந்து போயுள்ளார்களாம்.

நானும் சாதி படம் எடுத்துக்காட்டவா? வெற்றிமாறன், முத்தையா போன்றோரை குத்திக் காட்டிய மாரி செல்வராஜ்!!

மாரி செல்வராஜ்…….

தமிழ் சினிமாவில் மாஸ் கமர்ஷியல் திரைப்படங்கள், காதல் திரைப்படங்கள் என தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி படம் எடுக்கும் வழக்கமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அதில் பெரும் பங்கு இயக்குனர் பா ரஞ்சித் பட்டறையில் இருந்து வரும் இயக்குனர்களுக்கு கோலிவுட்டில் அந்த முத்திரையை குத்திவிட்டனர். அதுமட்டுமில்லாமல் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறனுக்கும் அந்த பெயர் இருந்து வருகிறது.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஜா தி யினரை மையப்படுத்தி படம் எடுக்கும் முன்னணி இயக்குனர்களை பொதுமேடையில் தா க் கிப் பேசியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூக்கி வைத்துப் பேசுவது, அதே போல் ஒரு சிலர் சமூகத்தினரை மிகவும் தரை மட்டத்தில் வைத்து அமுக்குவதும் சமீப காலமாக சினிமாவில் அதிகரித்து வருகிறது என குற்றம்சாட்டி உள்ளார் மாரி செல்வராஜ்.

நானும் அவர்களைப் போல் படம் எடுக்கவா, அப்படி படம் எடுத்தால் நீங்கள் எல்லாம் காணாமல் போய் விடுவீர்கள் என்பது போல போட்டு பொலந்து கட்டியுள்ளார். இதனால் கோலிவுட் வட்டாரத்தில் சில ச ல சலப்புகள் ஏற்பட்டுள்ளதாம்.

ஆனால் பரியேறும் பெருமாள் படமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் என்பதை அவரே மறந்துவிட்டார் போல. தற்போது முன்னணி இயக்குனர்களை தா க் கி ப் பேசிய மாரி செல்வராஜை பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

போஸ்டருடன் விஜய் தேவர்கொண்டாவின் லைகர் பட ரிலீஸ் அப்டேட் வெளியானது- அட நம்ம ஊரு ஜாக்கி சான்!!

விஜய் தேவர்கொண்டா………

விஜய் தேவர்கொண்டா இன்றையை இளசுகளின் யூத் சென்சேஷன். அர்ஜுன் ரெட்டி என்ற படம் வாயிலாக தெலுங்கு சினிமா என்ற எல்லையை கடந்து நம் இந்திய அளவில் தன் கொடி நாட்டிவிட்டார். மனிதர் நிற்பது, நடப்பது, பேசுவது என அனைத்துமே இன்று ட்ரெண்டிங் சமாச்சாரம் தான்.

பூரி ஜகன்னாத் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாகும் 10 வது படம் லைகர் (LION + TIGER = LIGER) . பூரி ஜகன்னாத், சார்மி மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஷூட் செய்யப்பட்டு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் டப் செய்து 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பேச்சு குறைபாடு உடைய மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் ரோலில் விஜய் நடித்துள்ளார். இப்படத்தில் அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி போன்றவர்கள் முக்கிய ரோலில் நடிக்கும் ப்ரொஜெக்ட்.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் திரை அரங்கில் செப்டம்பர் 9 ரிலீசாகிறது என்ற அறிவிப்புடன் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. விஜய் தேவர்கொண்டாவின் ரசிகர்கள் இந்த போஸ்டரை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

காதலர் தினத்தன்று இரட்டை அப்டேட்டை வெளியிடும் ருத்ர தாண்டவம் படக்குழு!

திரௌபதி……..

‘திரௌபதி’ படத்தினை இயக்கியதன் வாயிலாக மிகவும் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் ஜி. மோகன். குறிப்பிட்ட சமூகத்தை சாடி, நாடக காதல் என்ற கான்செப்ட்டை பதிவு செய்த படம். தனது முதல் படமாக ப்ரஜின் நடிப்பில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கியவர்.

மோகன் தனது திரௌபதி படத்தின் ஹீரோ ரிச்சர்ட் ரிசி உடன் இணைந்து பணிபுரியும் அடுத்த ப்ராஜெக்ட் தான் ருத்ர தாண்டவம். இப்படத்தில் நாயகியாக டிவி சணல் புகழ் தர்ஷா குப்தா நடிக்கிறார். போலீஸ் வேடத்தில் நம் ஹீரோ நடிப்பது மட்டுமே, இதுவரை வெளியான தகவல்.

ரிச்சர்ட் ரிசி மற்றும் ஜி மோகனுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அமோகமாக இருப்பதால், இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகம். இந்நிலையில் பிப்ரவரி 14 அன்று காலை 9 மணிக்கு பர்ஸ்ட் லுக்கும், மாலை 6 மணிக்கு வில்லன் யார் என்ற அப்டேட்டும் வெளியிடப்போவதாக டீம் அறிவித்துள்ளனர்.

நடக்ககாதலை துகிலுரித்த இயக்குனர் காதலர் தினத்தன்று பட அப்டேட் வெளியிடுவதில் என்ன சூட்சமம் இருக்கும், படத்தின் ஜானர் என்னவாக இருக்கும் என இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

போஸ் கொடுத்த நீலிமா ராணி.. 37 வயதில் தாறுமாறாக ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!!

நடிகை நீலிமா ராணி…

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் தேவர் மகன், பாண்டவர் பூமி, கஜினிகாந்த் போன்ற சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் நீலிமா ராணி ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை தயாரித்து கொண்டிருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நாயகியாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் நீலிமா.

இந்த நிலையில் நீலிமா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறது.

அதாவது திருமணத்திற்கு பிறகும் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நீலிமாராணி, சோசியல் மீடியாக்களிலும் பயங்கர ஆக்டிவாம். அதே போல் இவர் அவ்வப்போது பயங்கரமாக போஸ் கொடுத்த புகைப்படங்களையும் பதிவிடுவாராம்.

அந்த வகையில் தற்போது நீலிமா சமூகத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது. மேலும் இந்தப் புகைப்படங்களில் நீலிமா கவர்ச்சிக் காட்டாமல், சேலை கட்டியிருந்தாலும், தனது லுக்காலே ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த எவராலும் நீலிமாவுக்கு 37 வயது என்றால் யாராலும் நம்பவே முடியாது என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.

அஞ்சலி படத்தில் நடித்த 5 குழந்தைகள் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? இதில் ஒருத்தர் அஜித்தின் வெற்றி பட இயக்குனர்!!

அஞ்சலி….

ரகுவரன் நடிப்பில் வெளியானது அஞ்சலி, இப்படத்தில் ரேவதி மற்றும் ஷாமிலி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தில் 5 சிறு வயது குழந்தைகள் நடித்து இருப்பார்கள்.

அஞ்சலி படம் ஓடியதற்கு ஒருபக்கம் ரகுவரன் காரணமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்த சிறு குழந்தைகள் நடித்த காட்சிகள் மூலம் தான் ரசிகர்கள் அதிகம் இப்படத்தினை ரசிக்க ஆரம்பித்தனர். இப்படம் வெளியாகி 30 வருடங்களை கடந்துவிட்டது. அஞ்சலி படத்தில் நடித்த குழந்தைகள் தற்போது என்னவானார்கள் தெரியுமா.?

தருண்: அஞ்சலி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தருண். இவர் புன்னகை தேசம், மீரா மற்றும் எனக்கு 20 உனக்கு 18 போன்ற தமிழ் படங்களில் மட்டும் நடித்து உள்ளார். தெலுங்கிலும் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி உள்ளன.

பேபி ஷாமிலி: விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய ராஜநடை என்ற படத்தின் மூலம் ஷாலினியின் தங்கை ஷாமிலி தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். அதன் பிறகுதான் இவர் அஞ்சலி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கதாநாயகியாக நடித்து வெளியான திரைப்படம் வீர சிவாஜி.

ஆர்த்தி: என்ன கனவுகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார் ஆர்த்தி. அதன்பிறகு இவர் அஞ்சலி படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடியனாக நடித்து வெளியான மலைக்கோட்டை, தாமிரபரணி, படிக்காதவன் மற்றும் குருவி என பல படங்கள் அடுக்கி கொண்டே போகலாம்.

விஷ்ணுவர்த்தன் மற்றும் கிருஷ்ணா: விஷ்ணுவர்த்தன் மற்றும் கிருஷ்ணா இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும். அஞ்சலி படத்தில் காலனியில் தங்கி இருக்கும் குழந்தைகளின் கதாபாத்திரத்தில் விஷ்ணுவர்த்தன் மற்றும் கிருஷ்ணாவும் நடித்துள்ளனர்.

ஆனால் விஷ்ணுவர்த்தன் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி அஜித் உட்பட பல நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். கிருஷ்ணா நடிப்பில் கவனம் செலுத்தி கழுகு, யாக்கை மற்றும் மாரி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ரிச்சர்ட்: அஞ்சலி படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரிச்சர்ட். அதன் பிறகு திரௌபதி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட நடிகர்கள் அனைவருமே அஞ்சலி படத்தில் குழந்தைகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் தற்போது நடிகர்களாக பல படங்களில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கால்மேல் கால்போட்டு போஸ் கொடுத்த ராஷ்மிகா.. சூடான இணையதளம்!

ரஷ்மிகா…..

பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்களின் மூலம் முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. அடுத்ததாக இவர் தமிழக ரசிகர்களை குறி வைத்துள்ளார். அதற்காக தளபதி 65, சூர்யா40 போன்ற பல வாய்ப்புகளைப் பெறுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம்.

சமீபகாலமாக ரஷ்மிகா மந்தனா மீது தெலுங்கு நடிகைகள் மிகவும் பொறாமையில் இருந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் ரஷ்மிகா மந்தனா.

சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் மிஷன் மஞ்சு என்ற படத்தில் ரஷ்மிகா மந்தனா அறிமுகமாக உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியானதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் பிரபலங்களுடன் சேர்ந்து ரஷ்மிகா மந்தனா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் நடிக்கும் டாப் டக்கர் என்ற சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த பாடலில் ரஷ்மிகா மந்தனா இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி அடித்துள்ளாராம். அதில் குட்டை பாவாடையில் கால்மேல் கால்போட்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

விஜய்யுடன் 7 வது முறையாக கூட்டணி போட துடிக்கும் பிரபல தயாரிப்பாளர்.. பலத்த யோசனையில் தளபதி!

தளபதி விஜய்…..

தளபதி விஜய்யை வைத்து ஏற்கனவே ஆறு படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர் 7வது முறையாக எப்படியாவது விஜய்யின் கால்ஷீட்டை வாங்கி விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு கோலிவுட் வட்டாரங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறாராம்.

தளபதி விஜய்யின் தற்போதைய சினிமா உயரம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும். படத்திற்கு படம் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் தன்னுடைய மார்க்கெட்டை விரிவு படுத்தி வருகிறார். கடைசியாக வெளியான மாஸ்டர் படம் கூட பல மாநிலங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

மேலும் விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை ஓரம்கட்டி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது விஜய்யை வைத்து படம் தயாரிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. அந்த வகையில் தளபதி விஜய்யின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமான பூவே உனக்காக படத்தை கொடுத்தவர் தான் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி.

அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா போன்ற படங்களை தயாரித்துள்ளார். ஆனால் ஜில்லா படத்தின் போது விஜய்க்கும் சௌத்ரிக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சூப்பர் ஹிட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி சௌத்ரி விரைவில் 100 வது படத்தை தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் ஆர்பி சௌத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், முன்னரெல்லாம் கதைக்காக விஜய் இருந்தார், ஆனால் தற்போது விஜய்யின் வளர்ச்சியை பார்க்கும் போது அவருக்காக கதை எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் அதற்கான பட்ஜெட்டும் தேவைப்படுகிறது. இருந்தாலும் ஏற்கனவே ஆறு முறை அவருடன் இணைந்துள்ளதால் ஏழாவது முறை கண்டிப்பாக விஜய்யுடன் கூட்டணி போடுவேன் என உறுதியாக தெரிவித்துள்ளார் ஆர்பி சௌத்ரி. விஜய்க்கு இந்த விஷயம் தெரிந்தும் மௌனம் காத்து வருகிறாராம்.