ஒரு நடிகையை தொட்டால் ஒரு வீடு பரிசு.. மஜாவாக வாழ்ந்த பிரபல நடிகர்!!

எம் ஆர் ராதா…….

சினிமாவில் நடிகர் நடிகைகள் தங்களுக்குள் ரகசிய உறவுகள் வைத்துக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் பாலிவுட் சினிமாவுக்கு பிறகு அதிகம் சர்ச்சைகள் கிளம்பும் சினிமா என்றால் என்றால் அது நம்ம கோலிவுட் தான்.

அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை சில நடிகர்கள் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் தான். இவ்வளவு ஏன் எம்ஜிஆருக்கு இரண்டு மூன்று மனைவிகள் இருந்தனர். நம்ம ஜெமினி கணேசன் பற்றி சொல்லவா வேண்டும். காதல் மன்னன்.

அவரைத் தொடர்ந்து சினிமாவில் வில்லன் நடிகராக இருந்தாலும் நடிகைகளுக்கு மிகவும் பேவரிட் நடிகராக இருந்தவர் நடிகர் ராதாரவியின் தந்தை எம் ஆர் ராதா. இவரின் ர த்த க்கண் ணீர் படம் எல்லாம் இன்றும் பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும்.

அப்படிப்பட்ட எம் ஆர் ராதா பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி. எம்ஆர் ராதாவை பொருத்தவரை ஒரு பெண்ணை தொட்டு உறவு கொண்டாடி விட்டால் அவருக்கு பரிசாக சொந்தமாக வீடு எழுதிக் கொடுத்து விடுவாராம்.

இப்படி எம் ஆர் ராதா எழுதிக்கொடுத்த வீடுகள் பல உள்ளதாம். இதனை பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் யூடியூப் பக்கத்தில் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். எம் ஆர் ராதாவின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.

பொம்பள சவகாசம் குலநாசம் என என்னதான் பழமொழிகள் சொல்லிக் கொண்டிருந்தாலும் பெண்கள் என்றால் கிறங்கும் ஆண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த காலத்தில் அதுவெல்லாம் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது, ஆனால் இப்போதோ பெரிய சர்ச்சையாகி விடுகிறது.

வாய்ப்பு கேட்டப்போ அசிங்கப்படுத்திட்டு வலியப்போய் கெஞ்சும் தயாரிப்பாளர்கள்.. மாஸ் காட்டும் குட்டி பவானி!!

மகேந்திரன்………

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கியவர் தான் மகேந்திரன். ஆனால் அவர் இளம் கதாநாயகனாக வலம் வர நினைத்தபோது தமிழ் சினிமாவே அவரை பார்த்து ஏளனமாக சிரித்தது.

அதுமட்டுமில்லாமல் பல தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு கேட்டு போகும்போது பலவந்தமாக அசிங்கப்படுத்தினார்கள். உனக்கெல்லாம் ஹீரோ ஆசை வந்திருச்சா என முகத்துக்கு நேர் கேட்டு சங்கடப்படுத்தி விட்டார்களாம்.

குழந்தை நட்சத்திரமாக அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முதல் சாய்ஸாக இருந்த மகேந்திரன் வளர்ந்த பிறகு காணாமல் போய் விட்டாரே என்ற கவலை அனைவருக்குமே இருந்தது. ஆனால் மாஸ்டர் என்ற ஒற்றை படத்தின் மூலம் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்துள்ளார் மாஸ்டர் மகேந்திரன்.

இதற்காக மகேந்திரன் லோகேஷ் கனகராஜுக்கு கோயில் கட்டி கும்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மாஸ்டர் படத்திற்கு பிறகு மகேந்திரனின் வளர்ச்சியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தினமும் குறைந்தது இரண்டு தயாரிப்பாளர்களாவது மகேந்திரன் வீட்டின் முன்பு காத்துக் கிடக்கிறார்களாம்.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், மகேந்திரன் வாய்ப்பு கேட்டு சென்ற போது அசிங்கப்படுத்திய அதே தயாரிப்பாளர் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மீண்டும் அவரிடம் கால்சீட் கேட்டதுதானாம். இதையெல்லாம் நினைத்து மகேந்திரன் மனதிற்குள்ளேயே சிரித்து கொள்கிறாராம்.

வந்தது 15 நிமிடமாக இருந்தாலும் அடுத்த பதினைந்து வருடத்திற்கு மாஸ்டர் பர்பாமன்ஸ் நின்று பேசும். மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள சில படங்கள் வெளியாக உள்ளன. மேலும் தான் நடிக்கும் படங்களுக்கான கதையை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து வருகிறாராம் மகேந்திரன். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.

பிரபாஸ் கேஜிஎப் இயக்குனர் கூட்டணியில் இணைந்த கொ டூ ர வில்லன்.. எ தி ர்பார்ப்பை இ ரட் டிப்பாக்கிய சலார்!!

பிரபாஸ்……..

இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நடிகர்களின் படங்களில் பிரபாஸ் படங்கள் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், ஆதி புரூஸ் போன்ற படங்கள் ரெடியாகிக் கொண்டிருக்கின்றன.

இதில் ராதே ஷ்யாம் மற்றும் ஆதி புரூஸ் ஆகிய இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதனை தொடர்ந்து கேஜிஎப் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் என்ற இயக்குனருடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பயங்கர அடிதடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்தப் படமும் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம். மேலும் இந்த படத்தில் முதன்முதலாக பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.

அதிரடி படங்களுக்கு வில்லன் கதாபாத்திரங்கள் எப்பவுமே முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் சலார் படத்தில் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தார்களாம்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது கன்னட சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மது குருசாமி என்பவர் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இதனை அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். கேஜிஎப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கே ஜி எஃப் 2 படம் விரைவில் வெளியாக உள்ளது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

பட வாய்ப்பு இல்லாததால் ஹோட்டலை கவனித்துக்கொள்ளும் ஜீவா பட நடிகை.. சும்மா கல்லா கட்டுதுல்ல!!

நடிகை ராதா………..

80 காலகட்டத்தில் அனைவருக்கும் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அந்த காலத்தில் ராதா உடன் ஜோடி போட்டு நடிப்பதற்கு பல நடிகர்களும் போட்டி போட்டு முன்னிலையில் வரிசை கட்டி நிற்பார்கள்.

அந்த அளவிற்கு இவர் கூட படங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசை பல நடிகர்களுக்கு இருந்தது. ஒரு காலத்திற்குப் பிறகு இவருக்கு மவுசு குறைய சினிமா விட்டு விலகி பிரபல தொலைக்காட்சிகளில் நடுவராக பணிபுரிந்து வந்தார்.

அதிலும் இவர் குறிப்பாக உச்சரிக்கும் அடி தூள் எனும் வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்காததில் ஒன்றாகும். தொலைக்காட்சிகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு குறைய திருவனந்தபுரத்தில் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றை கட்டி அதனை கவனித்து வருகிறார்.

ராதாவுக்கு மவுசு குறைய அவரது மகளான கார்த்திகாவை சினிமாத்துறையில் அனுப்பி வைத்தார்.

கோ எனும் படத்தில் ஜீவாவுடன் முதலில் ஜோடியாக நடித்தார். இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

ஆனால் அதன் பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் வரவில்லை. இதனால் ராதா தொடங்கி வைத்த ஹோட்டலை தற்போது இவரும் கவனித்து வருகிறார் என சினிமா வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கேட்ட ஒரு சில சினிமா வாசிகள் ராதாவாவது ஒரு காலத்திற்கு அதிகமான படங்கள் நடித்தார். ஆனால் அவரது மகள்கள் ராதா நடித்த அளவிற்கு கூட அதிகமான படங்களில் நடிக்கவில்லை என கூறி வருகின்றனர்.

ஆர்த்தி வசதியான வீட்டு பெண்! அவளால் அழகான என் வாழ்க்கை… காதல் மனைவி குறித்து உருகிய சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன்………

தமிழ்த்திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தனது தாய் மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். மற்ற தம்பதிகளுக்கு முன்னுதாரணமாக இத்தம்பதியினர் வாழ்ந்து வருகிறார்கள்

மனைவி குறித்து சிவகார்த்திகேயேன் கூறுகிறார், என் தாய்மாமா மகள் தான் என்றாலும் ஆர்த்தியுடன் நான் அவ்வளவாக பேசியதில்லை.

நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்துவிட்டு, மாமா பெண்ணைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன் என்று என் அம்மா சொன்னார். ஆர்த்தி வசதியான வீட்டு பெண், ஆனால் திருமணமாகும் போது எனக்கு பெரிய வசதியில்லை. ஆனால் வசதியை அவர் எப்போதும் வெளிகாட்ட மாட்டார்.

என் மகள் ஆராதனா பிறந்தநாள் எங்களால் மறக்க முடியாது. பெண் குழந்தையாக இருந்தால் கூடுதல் சந்தோஷம் என நான் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், நான் நினைத்தபடியே ஆராதனா கிடைத்தாள்.

எங்களது திருமண வாழ்க்கையை ஆராதனாவுக்கு முன், பின் எனப் பிரிந்துக்கொள்ளலாம். முன்பு நான் மட்டுமே இருந்தேன். இப்போது ஆர்த்தி குழந்தை வளர்ப்பில் பயங்கர பிஸி.

சமையல் செய்வதில் திறமைசாலியான ஆர்த்தி திருமணமான புதிதில் என் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ஒரே நேரத்தில் 12 பேருக்குச் சமைத்துக் கொடுத்து அசத்தினார். மட்டன், சிக்கன் என ஆர்த்தி எதைச் சமைத்தாலும் அது பிரமாதமாக இருக்கும்.

திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு என்னால் வர முடியாது என்று சொல்லிவிட்டேன். எல்லாம் சினிமா பாணியில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தத்தான்.

இதையடுத்து வீட்டின் சுவர் ஏறி குதித்து, பால்கனி கதவு வழியாக வீட்டுக்குள் கேக் எடுத்துச் சென்றேன். என்னைப் பார்த்ததும் பயந்து அழுதுவிட்டார். அவர் அழ ஆரம்பித்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அதிலிருந்து அவரை சர்ப்ரைஸ் செய்வதை நிறுத்திவிட்டேன்.

எனது வருமானவரி தொடர்பான வேலைகளை ஆர்த்தி தான் கவனித்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு நான் அனைத்து வரியையும் சரியாகக் கட்டியுள்ளேன் என்று வருமான வரித் துறையில் ‘தங்கச் சான்றிதழ்’ கொடுத்தார்கள். நான் மட்டுமே பார்த்திருந்தால் கூட, சரியாகப் பார்த்துக் கட்டியிருப்பேனா என்று தெரியவில்லை.

வீட்டில் குழந்தை வளர்ப்புக்கு இடையே வருமான வரிகளை அவர் சரிபார்ப்பது எளிதான விடயமல்ல!

எங்கள் வீட்டு விடயங்கள் எல்லாவற்றையும் கவனித்து கொள்வது ஆர்த்தி தான், வீட்டில் என்ன நடக்கிறது என்ற டென்ஷன், பிரஷர் எதுவுமே இல்லாமல் படப்பிடிப்புக்கு நான் போய்வர ஆர்த்திதான் காரணம்.

முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவர் என்னிடம் கேட்டுக்கொள்வார். என்னை இந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போ, இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று இதுவரை ஆர்த்தி சொன்னதில்லை. என் நிலை அறிந்து அதற்கேற்றார் போல செயல்படுவார் ஆர்த்தி என கூறியுள்ளார்.

அனிருத் வலையில் விழுந்த கீர்த்தி சுரேஷ்.. எல்லாத்துக்கும் இந்த ஒரு போட்டோ தான் காரணமா.?

கீர்த்தி சுரேஷ்….

கோலிவுட்டில் முன்னணி இளம் இசையமைப்பாளர் அனிருத். இவரது இசையமைப்பில் வெளியாகும் ஒவ்வொரு பாடலும் தனித்துவம் வாய்ந்ததாக இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் இவரது இசையமைப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தன. அது மட்டுமில்லாமல் விஜய், விஜய் சேதுபதி பேக்ரவுண்ட் பிஜிஎம்களிலும் இறங்கி, தரமாக வேலை பார்த்திருப்பார் அனிருத்.

தற்போது இவரது கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றனவாம். அவ்வளவு ஏன் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்திற்கு கூட அனிருத் தான் இசையமைப்பாளர்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் திருமணம் நடக்கப் போவதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் வதந்தி ஒன்று தீயாக பரவி வருகிறது.

அதாவது தேசிய விருது பெற்ற நடிகை என்ற பெருமையுடன், கெத்தாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் கீர்த்தி சுரேஷும் அனிருத்தும் நீண்டகால நெருங்கிய நண்பர்களாம்.

அதேபோல் சமீபத்தில் அனிருத் பிறந்த நாள் பார்ட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கீர்த்தி, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். அன்று தான் கீர்த்திக்கும் அனிருத்துக்கும் ஆரம்பித்தது இந்த வதந்தி பிரச்சனை. அதிலிருந்து தொடர்ந்து இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகின்றன.

மேலும் இந்த விஷயத்தில் கடுகளவு கூட உண்மை இல்லை என்று அடித்துக் கூறுகிறது கீர்த்தி சுரேஷின் நெருங்கிய வட்டாரம். இதற்கு மிக முக்கிய காரணம் கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே வேறு யாரோ ஒருவரை காதலித்து வருவது தான் என்றும் சொல்லப்படுகிறது.

எனவே, ‘எள்ல கொடுத்தா எண்ணெயா மாத்துற’ நெட்டிசன்கள், இந்த ஒரு போட்டோவை வைத்து கீர்த்தி- அனிருத் பற்றி பரப்பும் வதந்திகளுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. எப்போ இதுக்கு ஒரு எண்டு கார்டு கிடைக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நயன்தாரா விக்னேஷ் இணைந்து தயாரித்து விருது வாங்கிய திரைப்படம்.. தென்னிந்தியாவிலேயே முதல் விருதாம்!!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்………

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்களது காதல் கதை அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து சினிமாவில் செய்து வரும் சாதனைகள் தெரியுமா.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்துரவுடி பிக்ச்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தி தற்போது ஒரு சில படங்களை தயாரித்து வருகின்றனர்.

முதலில் லாபத்திற்காக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது விருது வாங்கக்கூடிய ஒரு சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து தயாரித்து வருகின்றனர்.

பி.எஸ் வினோத் ராஜ் இயக்கி யுவன் சங்கர் ராஜா இசையமைத்த கூழாங்கல் திரைப்படத்தை தயாரிக்கும் உரிமையை கைப்பற்றினர். கூலாங்கல் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்வு ஆகியது.

சில தினங்களுக்கு முன் விருது விழாவில் கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட்டது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்று உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் டைகர் விருது வாங்கும் முதல் திரைப்படம் என பெருமையாகவும் கூறியுள்ளார்.

ம றை ந் த சித்ரா வீட்டில் தினசரி நடக்கும் அந்த விஷயம் !! வெளிவந்த புகைப்படத்தை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள் !!

சித்ரா……..

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களினியாக இருந்து, அதன்பின் சின்னத்திரை நடிகையாக தனது திரையுலக பயணத்தை துவங்கியவர் வி.ஜெ. சித்ரா.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் அவருக்கு சமீபத்தில் நடந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

சித்ரா என்றாலே நாம் அனைவருக்கும் விஜய் டிவி மற்றும் மக்கள் டிவி தான் ஞாபகத்துக்கு வரும்.ஆனால் சித்ரா சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரில் நடித்திருக்கிறார்.அங்கிருந்து திரைப்பயணத்தை தொடங்கிய அவருக்கு இப்படி ஒரு முடிவு அமைந்துவிட்டது.

இந்தநிலையில் நடிகை சித்ரா மறைந்ததில் இருந்து அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் என நிறைய வெளியாகிக் கொண்டிருக்கிறது. சித்ராவிற்கு அவரது வீட்டில் பெரிய புகைப்படம் வைத்து சாமி கும்பிட்டுள்ளனர்.

அப்புகைப்படம் வெளியாக ரசிகர்கள் உங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க முடியவில்லை என கண்ணீருடன் பதிவு செய்கின்றனர்.

குரங்கிடம் இருந்து கற்றுக்கொண்ட நிக்கிகல்ராணி.. வித்தியாசமான முறையில் கற்றுக்கொண்ட பாடம்!!

பிரபலங்கள்……..

பிரபலங்கள் பொருத்தவரை  தனக்கு விருப்பமான பிராணிகளை பல ரூபாய் கொடுத்து வாங்கி வளர்த்து வருகின்றனர். ஆனால் நிக்கி கல்ராணி மற்ற பிரபலங்களை விட வித்யாசமாக குரங்குகளை வளர்த்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் டார்லிங் என்ற படத்தின் மூலம் அறிமுகம் நிக்கி கல்ராணி. இந்த படத்தின் மூலம் ஓரளவிற்கு ரசிகர் வட்டம் உருவானதால் ஒரு சில படங்களில்  நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத நிக்கி கல்ராணிக்கு அடுத்தடுத்த  படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தற்போது தடுமாறி வருகிறார். ஒருபக்கம் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற கவலை இருந்தாலும் அந்த கவலையில் இருந்து வெளிவர நிக்கிகல்ராணி பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்.

அதில் ஒன்று தான் குரங்கு வளர்க்கும் முயற்சி கிட்டத்தட்ட 6, 7  குரங்குகளை இவரது கண்ட்ரோலில் வைத்து வளர்த்து வருகிறார். அதுமட்டுமில்லாமல்  நடிப்பிற்கு எப்படி  முக்கியத்துவம் கொடுப்பார் அதை விட ஒரு மடங்கு அதிகமாக அந்த குரங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் வளர்க்கும் குரங்குகளுக்கு ஃப்ரூட் மற்றும் பால்,பழம் என அனைத்து உணவுகளையும்  செல்ல பிராணியான குரங்குகளுக்கு கொடுத்து வருகிறாராம். குரங்குகளிடம்மிருந்து நிக்கி கல்ராணி ஒரு சில விஷயங்க
ளை கற்றுக் கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது இவர் வளர்க்கும் குரங்குகள் பலவித முகபாவனைகள் உடன் சேட்டைகள் செய்து  வருகிறதாம்.  அந்த முகபாவனைகளை நிக்கி கல்ராணியும்  செய்து பார்த்து  வருகிராறாம்

இந்த தகவல் அறிந்த சினிமா வாசிகள் குரங்கிடம் இருந்து நிக்கி கல்ராணி முகபாவனை மட்டுமல்ல நடிப்பை கூட கற்றுக் கொள்கிறார் என கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நிக்கி கல்ராணிக்கு நடிப்பு குரு என்றால் அவர் வழக்கும் குரங்கு தான் எனவும் சுட்டி தனமாக பேசி வருகின்றனர்.

நாட்டாமை படத்தில் குஷ்புவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் இவரா? அவங்களும் பெரிய கைதான்!

நாட்டாமை…….

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கே எஸ் ரவிகுமார் என்ற பெயர் மிகப் பிரபலமாக ஆரம்பித்தது நாட்டாமை படத்திற்கு பிறகு தான். அதற்கு முன்பு நான்கு படங்கள் பண்ணியிருந்தாலும் நாட்டாமை படம் அவருக்கு பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத வசூல் சாதனைகளை குவித்த திரைப்படங்களில் நாட்டாமை படம் முக்கிய இடத்தைப் பெறும். சரத்குமார் இரட்டை வேடங்களில் அசத்தியிருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நாட்டாமை படம் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது. நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள்.

இதில் குஷ்பு கதாபாத்திரத்திற்கு முதன்முதலாக பரிந்துரை செய்யப்பட்டவர் நடிகை லட்சுமி தானாம். லட்சுமி பழங்காலத்து நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரும் நடிப்பில் ஓன்றும் ஏப்பை சாப்பை கிடையாது.

எப்பேர்ப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் தூக்கி சாப்பிட்டு விடுவார். அப்படிப்பட்ட லட்சுமியிடம் கதை சொல்லச் சென்ற இடத்தில்தான் எதேர்ச்சையாக குஷ்புவை சந்தித்தாராம் கேஎஸ் ரவிக்குமார்.

அப்போது குஷ்பு அந்த கதாபாத்திரத்தை பற்றி கேட்க கேஎஸ் ரவிக்குமார் சொன்னவுடன் அந்த கதாபாத்திரம் பிடித்துப்போய் உடனடியாக நானே நடிக்கிறேன் என ஒத்துக் கொண்டாராம்.

அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் கொட்ட பாக்கு கொழுந்து வெத்தலை குஷ்புவை மறந்து விடுவார்களா என்ன.