புடவையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அனு இமானுவேல் புகைப்படங்கள்!!

அனு இமானுவேல்…….

மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல் அனு இமானுவேல் தமிழில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பல தமிழ் ரசிகர்களின் மனதில் கால்பதித்தார்.

மேலும் தமிழில் நடித்துள்ள அனைத்து படங்களிலும் குடும்ப குத்து விளக்காக தோன்றியிருக்கும் அனு, தெலுங்கில் அப்படி இல்லையாம். தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் கவர்ச்சி தூக்கலாக காட்டி, பல ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் அனு இமானுவேல்.

இந்த நிலையில் தற்போது அனு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

தற்போதுள்ள நடிகைகளுக்கு சோஷியல் மீடியாக்கள் மிக முக்கிய பொழுதுபோக்காக மாறியதோடு, ரசிகர்களுடன் இணைந்திருக்கும் புது யுக்தி ஆகவும் மாறி இருக்கிறது. அந்த வகையில் அனு இமானுவேல் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தற்போது அனு இமானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. ஏனென்றால் இந்த புகைப்படத்தில் அனு சேலை கட்டி இருந்தாலும், கிளாமரை தெளித்துவிட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ‘தமிழ்ல கொஞ்சம் கவர்ச்சியா காட்டுமா’ என்று கூறிய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

விசித்திரமான நோயால் அட்டகாசம் செய்யும் அசோக் செல்வன்.. வைரலாகும் தீனி பட டிரைலர்!!

தீனி பட டிரைலர்…

விரைவில் ஹீரோவாகும் விஜய் டிவியின் மகேஷ் சுப்ரமணியம்.. சிக்ஸ்பேக் புகைப்படத்திற்கு குவியும் வாய்ப்புகள்!!

மகேஷ் சுப்பிரமணியம்…

பார்த்தாலே ஹீரோவாக இருப்பாரோ என யோசிக்க தோன்றும் அளவுக்கு தன்னுடைய தோற்றத்தால் அனைவரையும் மிரள வைத்து தற்போது வெள்ளி திரையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை பிரபலம் தான் மகேஷ் சுப்பிரமணியம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர் மகேஷ் சுப்பிரமணியம். அப்போதிலிருந்தே இளம்பெண்களுக்கு இவர் மீது ஒரு கண் இருந்து வருகிறது.

ஜிம் பாடி, ஹீரோவுக்கு ஏற்ற வசீகரம் என அனைத்துமே கொண்டவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். பகல் நிலவு சீரியல் ஹீரோயினாக ஷிவானி நாராயணன் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அதே விஜய் டிவியில் சிவானி நாராயணனுக்கும் ஜோடியாக கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்து வில்லன் இமேஜில் இருந்து ஹீரோ இமேஜுக்கு மாறினார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல ரியாலிட்டி ஷோக்களில் தன் திறமையை நிரூபித்து வருகிறார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் அடுத்ததாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் மகேஷ் சுப்பிரமணியம். சமீபத்தில் மகேஷ் சுப்பிரமணியம் வெளியிட்ட சிக்ஸ் பேக் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீட்டிங் செய்த மாஸ்டர் தயாரிப்பாளர்.. பெயரை கெடுக்கவே இப்படி செய்யறீங்களா என கோபத்தில் விஜய்!

மாஸ்டர்…

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி பெரிய வெற்றியை பெற்றது திரைப்படம் மாஸ்டர். படத்தின் மீது ஏற்பட்ட கலவையான விமர்சனம் படத்தின் வசூலுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

தற்போது வரை 200 கோடிகளுக்கும் மேல் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளார். இத்தனைக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் வெளியான மாஸ்டர் படம் இவ்வளவு பெரிய வசூலை அள்ளிக் கொடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் தியேட்டர்காரர்கள் மாஸ்டர் படத்தை வைத்து நன்றாக சம்பாதித்து விட்டார்கள். ஆனால் வேண்டுமென்றே நஷ்டக் கணக்கை காட்டி தயாரிப்பாளரை ஏமாற்றி விட்டார்களாம். இதனால் விஜய்யும் தியேட்டர்காரர்கள் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இப்படி ஒரு சூழ்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ முறையான அனுமதி பெறாமல் ஒரு விஷயத்தை செய்துள்ளது அவரை கைது செய்யும் அளவிற்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் மேடைக்கு வரும் போது ஒரு குறிப்பிட்ட விஜய் சேதுபதி படத்தின் பாடலை ஒலிபரப்பி உள்ளனர். ஆனால் அதன் உரிமை நோவாக்ஸ் என்ற நிறுவனத்திடம் உள்ளதாம்.

முறையாக அனுமதி பெறாமல் அந்த பாடலை ஒளிபரப்பு அதற்காக தற்போது நோவாக்ஸ் நிறுவனம் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ மீது கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளனர். போலீசில் அதை சரியாக விசாரிக்காததால் தற்போது கோர்ட் மூலமாக அந்த கேஸ் சிபிசிஐடி விசாரணைக்கு சென்ற உள்ளதாம். ஒரு சின்ன விஷயத்தை கூட கவனித்து செய்யாமல் கோட்டைவிட்ட சேவியர் பிரிட்டோ மீது விஜய் அதிருப்தியில் உள்ளாராம்.

வெற்றிமாறன், சூரி படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கேட்ட சம்பளம்.. மயக்கம் போட்டு விழுந்த தயாரிப்பாளர்!!

விஜய் சேதுபதி…

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன் நடிகர்களுக்காக கதை எழுதாமல் கதைக்கான நடிகர்களை தேர்வு செய்து படம் இயக்கி வருகிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

முன்னதாக தனுஷை வைத்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் அட்டகத்தி தினேசுக்கு பொருந்தும் விசாரணை என்ற கதையை தேர்ந்தெடுத்து சூப்பர் ஹிட் படமாக எடுத்தார். அதே போல் தான் தற்போது காமெடி நடிகர் சூரியை வைத்து அவருக்கு தகுந்த ஒரு கதையை தேர்வு செய்து அவரை கதாநாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. சத்தியமங்கலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. முன்னதாக பாரதிராஜா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நிலையில், திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார்.

அதில் சூரிக்கு அப்பா கதாபாத்திரமாம். தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஆனால் விஜய் சேதுபதி பழகியவர்கள், நண்பர்கள் என்று பார்க்காமல் சம்பள விஷயத்தில் உஷாராக இருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

வெற்றிமாறன் மற்றும் சூரி கூட்டணியில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளார். இதைக் கேட்ட தயாரிப்பாளருக்கு மயக்கமே போடும் நிலைமை ஏற்பட்டு விட்டதாம்.

என்னதான் நட்பாக இருந்தாலும் சம்பளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதி என அவரைப் பிடிக்காதவர்கள் கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் உண்மையில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

குட்டி ஸ்டோரி ட்ரைலர்.. ஆபாச வசனம், படுக்கையறை காட்சிகளில் மாட்டிய விஜய் சேதுபதி!!

குட்டி ஸ்டோரி…

தற்போதெல்லாம் தமிழ்சினிமாவில் ஆந்தாலஜி படங்களுக்கான வரவேற்பு அதிக அளவில் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தான் ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘புத்தம் புது காலை’, ‘பாவ கதைகள்’ போன்ற ஆந்தாலஜி திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டடித்தன.

தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி திரைப்படம் உருவாகி, இந்த மாதம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, அமலாபால், கௌதம்மேனன், அதிதி பாலன், மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ‘குட்டி ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் பலரின் ஆர்வத்தை எக்கச்சக்கமாக தூண்டியுள்ளது.

அதாவது வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி, கௌதம் மேனன், AL விஜய் ஆகியோர் இயக்கியுள்ள ‘குட்டி ஸ்டோரி’ படம் வெளியாக உள்ளதாம். அதேபோல் இரு நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ட்ரெய்லரில் இளமையான லுக்கில் கௌதம்மேனன், ஒல்லியான விஜய்சேதுபதி, கள்ளக்காதலில் ஈடுபட்ட அதிதி பாலன், அமலா பால், மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால் என அனைவரும் தோற்றமளிப்பதால் இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் இதில் அதிக அளவு கவனத்தை ஈர்ப்பது விஜய் சேதுபதி தான் என்கின்றனர் சிலர். அதுமட்டுமில்லாமல், நலன் குமாரசாமி மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கி இருப்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு எதிர்பார்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

மாஸ்டர் ரெக்கார்டு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மாஸ்டர்…

பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 13 ல் வெளியான மாஸ்டர் படம் இந்த வார இறுதியில் 25 ம் நாளை எட்டுகிறது.

சிக்கலான இந்த கொரோனா சூழ்நிலைக்கு நடுவிலும் படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டது.

லோகேஷ் கனகராஜ் இசையில் படம் கேங்ஸ்டர் கதையாக ஹீரோ விஜய்க்கு இணையாக வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார்.

அனிருத் இசையில் பாடல்களும் அனைவரையும் ஆடவைத்தன. அதிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய்யின் நடனம் வேற லெவல் எனலாம். தற்போது இப்பாடல் 25 மில்லியன் பார்வைகளை Youtube ல் பெற்று சாதனை படைத்துள்ளது.

ரூ. 32 கோடி ஜாக்பாட் வென்ற நடிகர் ஆர்யாவின் சகோதரி.. அடித்தது மாபெரும் அதிர்ஷ்டம்..!!

ஆர்யாவின் சகோதரி….

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்ட முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஆர்யா.

நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு கத்தார் நாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி சீட்டின் முதல் பரிசு 15 மில்லியன் திர்காம் ஆகும். அதாஅதன் மதிப்பு இந்திய அளவில் ரூபாய் 32 கோடி.

இந்த லாட்டரியின் குலுக்கல் சமீபத்தில் நடைபெற்றள்ளது. இதில் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவுக்கு முதல் பரிசாக ரூ.32 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது.

இதனை அடுத்து அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக ரூபாய் 32 கோடி வென்றுள்ளது வைரலாகி வருகிறது.

27 கிலோ குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை விஷ்யூலேகா.. புகைப்படத்தை பார்த்த வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

விஷ்யூலேகா ராமன்…

ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான நீதானே என் போன் வசந்தம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை விஷ்யூலேகா ராமன்.

இப்படத்தை தொடர்ந்து இவருக்கு அடையாளம் சொல்லும் வகையில் காக்கி சட்டை, மாஸ், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்கா உள்ளிட்ட படங்களை அமைந்தது.

திருமத்திற்கு பிறகும் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை விஷ்யூலேகா.

ஏற்கனவே உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை விஷ்யூலேகா,

காவல்துறை அதிகாரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார் என கூறப்படுகிறது.

இதுவரை இல்லாத உச்ச கட்ட Glamour உடையில் அனுபமா..! – ரசிகர்கள் ஷாக்..!

அனுபமா பரமேஸ்வரன்…

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தனது க.வ.ர்.ச்.சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரேமம் படத்தின் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், அதன் பிறகு கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பின்னர் அவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இடையில் சில காலம் இந்திய கிரிக்கெட் வீரர் பூம்ராவோடு அவர் காதலில் இருப்பதாகவும் கி.சுகி.சுக்கப் பட்டது. சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் அனுபமா அடிக்கடி தன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.

அவை எல்லாமே இது வரை ஹோம்லியாக இருந்தன. இந்நிலையில் முதல் முறையாக தனது க.வ.ர்ச்.சியான புகைப்படத்தை அனுபமா பகிர்ந்துள்ளார்.

தனது ப.டு.க்.கையறையில் இரவு உடையில் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொ.ண்.டு க்யூட்டான போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.