அஜித் நடித்ததில் அவரது மகனுக்கு பிடித்த இரண்டு படங்கள் எது தெரியுமா?

ஆத்விக்…

நடிகர் அஜித் நடிப்பில் தயாராகி வருகிறது வலிமை என்கிற திரைப்படம்.

இந்த வருடத்தில் அதுவும் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி படம் வெளியாகலாம் என தெரிவிக்கின்றனர், ஆனால் உறுதி இல்லை.

இந்த நேரத்தில் தான் அஜித்தே சில ரசிகர்களிடம் இப்பட அப்டேட் இம்மாத இறுதியில் வெளியாகும் என கூறியுள்ளார்.

தற்போது அஜித்தின் மகன் ஆத்விக் ஒரு பேட்டியில் தனது அப்பா நடித்த படங்களில் பிடித்த படம் என்ன என்று கூறியுள்ளார்.

அவருக்கு பிடித்த படங்கள் மங்காத்தா மற்றும் விஸ்வாசம் படம் தானாம்.

வலிமை படப்பிடிப்பில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.. யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா!

வலிமை…

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் மிகவும் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் எச். வினோத்.

தல அஜித்தின் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளத்தில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர் இந்த நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் படத்தின் கதாநாயகி பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா என படக்குழு பலரும் இருக்கின்றனர்.

ரீமா சென் கணவரை பார்த்திருக்கிறீர்களா.? இணையத்தில் வட்டமிடும் குடும்ப புகைப்படம்!!

ரீமா சென்……….

தமிழ் சினிமாவில் தன் அழகால் ஒரு காலத்தில் அனைத்து ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் ரீமா சென். இவர் மின்னலே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி படம் மாபெரும் வெற்றி பெற்றதால் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

அதன் பிறகு விஜய், விக்ரம் போன்ற உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு சில காலங்கள் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் வராமல் இருந்தது.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் ரி என்றி கொடுத்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் அடுத்தடுத்து ரீமாசென் பட வாய்ப்புகள் வராமல் தமிழ் சினிமாவை விட்டு விலகினார்.

சினிமா விட்டு விலகிய ரீமாசென் தற்போது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தன் கணவர் மகனுடன் சுற்றுலா சென்ற ரீமாசென் ஒரு புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையாமல் உள்ளாரே ரீமா சென் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

காருக்குள் இருக்கும் விஜய்க்கு முத்தமிட்ட ரசிகர்.. தளபதி மும்முரமாக என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? தீயாய் பரவும் காட்சி!!

விஜய்……

சென்னை பனையூர் வீட்டிற்கு விஜய் வந்தபோது அவர் இருந்த காரின் கண்ணாடிக்கு ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விஜயின் பனையூர் வீடு மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகமாக இயங்கி வருகிறது.

இன்று விஜயின் கார் அங்கு வந்தது. உடனே ரசிகர்கள் காரை சூழ்ந்து கொண்டனர். பல ரசிகர்கள் அவரை கண்ணாடி வழியாக பார்த்து ஆனந்தம் அடைந்தனர்.

ஒரு கட்டத்தில் விஜய் தனது கையை கண்ணாடியில் வைத்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் கைகளில் கண்ணாடிக்கு வெளியே இருந்தபடியே முத்தமிட்டார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. எப்போதும் ரசிகர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்பவர்களின் விஜயும் ஒருவர் என்பதை இன்றைய தினமும் நிரூபித்து விட்டார்.

விஜய் டிவி ஜாக்லினுக்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை நம்ம ரக்சன் இல்லையாமே!!

ஜாக்லின்…….

விஜய் டிவியில் எந்த அளவுக்கு ரியாலிட்டி ஷோக்கள் புகழ் பெறுகிறதோ அதே அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் பணியாற்றிய தொகுப்பாளர்களுக்குள் காதல் சர்ச்சைகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் பணியாற்றிய பலருக்கும் திருமணமாகி விவாகரத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரியாலிட்டி ஷோக்களில் கிங் என்றால் அது விஜய் டிவிதான். மற்ற சேனலை காட்டிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். ஏன் சீரியல்கள் கூட இளம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது.

அந்த வகையில் தொகுப்பாளராக பணியாற்றி தற்போது சீரியல்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் ஜாக்லின். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அப்போது குண்டாக இருப்பார். இதனாலேயே வரும் போட்டியாளர்கள் ஜாக்லினை கலாய்த்து கைதட்டல்கள் வாங்கிவிடுவார்கள்.

ஆனால் சமீபகாலமாக ஜாக்லின் ரேஞ்சே வேற மாதிரி ஆகிவிட்டது. ஹீரோயின் ஆன பிறகு கஷ்டப்பட்டு ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்து தற்போது சிக்குன்னு செவத்த குட்டி மாதிரி ஆகிவிட்டார்.

இந்நிலையில் ஜாக்லின் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். அதற்காக எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அழகான, நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என ஜாலியாக பேசியுள்ளார்.

ஜாக்லின் ஜாலியாக பேசினாலும் ஆரம்ப காலகட்டங்களில் உடன் தொகுப்பாளராக பணியாற்றிய ரக்ஷன் என்பவருடன் காதல் கிசுகிசுக்களில் மாட்டினார். இந்த செய்தி பல பத்திரிகைகளில் வெளியானது. ஆனால் அதன் பிறகு ஏற்கனவே ரக்சனுக்கு திருமணமாகி விட்டது என சமீபத்தில் ஒரு பிரச்சனையில் மாட்டியபோது அவரே ஓப்பனாக தெரிவித்துவிட்டார் என்பதும் கூடுதல் தகவல்.

43 வயதில் அடையாளம் தெரியாமல் மாறிய அஜித் பட நடிகை பிரியங்கா.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

பிரியங்கா திரிவேதி…………..

அஜித் நடிப்பில் வெளியான ராஜா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி . இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வெற்றி பெறாததால் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.

இப்படத்தின் தோல்வியால் அடுத்தடுத்து தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் போனதால் தெலுங்கு மற்றும் ஹிந்தி, பெங்காலி போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு இவருக்கு திருமணம் நடந்து முடிந்தால் சினிமாவை விட்டு சிலகாலம் விலகி இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது கன்னட மொழியில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

2021 ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த ஆண்டாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு கன்னட மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வெற்றி கொடுத்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ் சினிமாவில் கூட நடிக்க வந்து விடுவார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

சூர்யா, ஜோதிகாவிற்காக கதை எழுதும் பிரபல இயக்குனர்.. சில்லுனு ஒரு காதல் பார்ட்-2.?

சூர்யா- ஜோதிகா………

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடி என்று அழைக்கப்படும் கப்பிள்ஸ் தான் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடிப்பதை முழுவதுமாக நிறுத்தியதோடு குடும்ப பெண்ணாகவே மாறிவிட்டார். இதனால் ஜோதிகாவின் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர்.

தற்போது ஜோதிகா ஸ்ட்ராங்கான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார். அதேபோல் ஜோதிகா தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த படம் தான் ‘36 வயதினிலே’. இதனைத் தொடர்ந்து ஜோதிகா பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பூவரசம் பீப்பீ மற்றும் சில்லுக்கருப்பட்டி புகழ் இயக்குனரான ஹலிதா சமீம், சூர்யாகாகவும் ஜோதிகாவிற்காகவும் ஸ்க்ரிப்ட் எழுதிக் கொண்டிருப்பதாக பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளாராம்.

அதாவது சூர்யா, ஜோதிகா ஆகியோரின் கெமிஸ்ட்ரி எப்பொழுதுமே வேற லெவலில் இருக்கும். இதனால் இருவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மெகா ஹிட் அடித்தது. மேலும் ரசிகர்கள் பலரும் திருமணத்திற்கு பிறகு கூட சூர்யாவும் ஜோதிகாவும் சேர்ந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது எதுவும் இதுவரை நிறைவேறாமலே இருந்தது.

தற்போது பிரபல இயக்குனரான ஹலிதா சமீம் பேட்டி ஒன்றில் இது பற்றி,  சில்லுக்கருப்பட்டி படத்தோட 50வது நாள் வெற்றி வெற்றியை கொண்டாட சூர்யா வீட்டிற்கு போனதாகவும், அப்போது சூர்யா ‘நாங்க சேர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என்று சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதை ஹலிதா சூர்யா சும்மா சொன்னதா நினைச்சாங்கலாம்.

இதனைத் தொடர்ந்து சூர்யா ஒரு பேட்டியிலும், ஜோதிகா ஒரு விருது நிகழ்ச்சியிலும் தங்களுக்கான கதை ரெடியாயிட்டு இருக்குன்னு சொன்னப்பதான் சூர்யாவும் ஜோதிகாவும் சீரியசா இந்த விஷயத்தை சொல்லி இருக்காங்கன்னு தனக்கு தெரிந்ததாக கூறியிருக்கிறார் ஹலிதா. இறுதியாக பேசிய ஹலிதா, ‘ ரெண்டு பேருக்கும் ஏத்த மாதிரியான ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரம் அதை வெற்றிகரமாக முடித்து, அவங்கள திரைக்குக் கொண்டு வருவேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் இந்தத் தகவலை அறிந்த சூர்யா-ஜோதிகா ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனராம். இந்த ஸ்கிரிப்ட் வழக்கம்போல கிராமத்து கதாபாத்திரமாக இருக்குமா.? இல்ல சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா.? என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

இரவு பார்ட்டியில் பிக் பாஸ் ரம்யா பாண்டியன், பாலாஜி, சம்யுக்தா, ஷிவானி.. புகைப்படத்தை பாருங்க!!

பிக் பாஸ் சீசன் 4…….

பிக் பாஸ் சீசன் 4 மூலம் நண்பர்களாக சந்தித்து கொண்டவர்கள் ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா, மற்றும் ஷிவானி.

பிக் பாஸ் முடிந்த பிறகு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்று முடிந்ததுள்ளது.

அந்த நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயற்று கிழமை அன்று மதியம் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கு பிறகு மீண்டும் பிக் பாஸ் பிரபலங்கள் சிலர் இரவு பார்ட்டியில் சந்தித்துள்ளனர்.

ஆம் ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா, ஷிவானி, மற்றும் ஆஜீத் என 5 நபர்கள் இரவு பார்ட்டியில் சந்தித்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)

காத்ரினா கைப்புடன் நடிக்கும் விஜய் சேதுபதி… தேதிகளை ஒதுக்கி படப்பிடிப்புக்கு தயார்!

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்……..

ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது.

இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளார்.

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் நாயகியாக காத்ரினா கைப் நடிக்கிறார்.

இப்போது ஏகப்பட்ட படங்களில் பிஸியாக நடித்துவரும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பதற்காக ஏப்ரல் மாதம் தேதி ஒதுக்கியுள்ளாராம்.

வலிமை படப்பிடிப்பில் இருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.. யார்யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா! இதோ பாருங்க!!

வலிமை…………….

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் மிகவும் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் எச். வினோத்.

தல அஜித்தின் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளத்தில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர் இந்த நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் படத்தின் கதாநாயகி பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா என படக்குழு பலரும் இருக்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..